நாம்

அண்மைக்காலமாக அதிகரித்து வரும் தமிழர் வாழ்வும் அதன் வரலாற்றுத் தொன்மைகள் பற்றிய புரிந்துணர்வும், இவற்றில் குறிப்பாக மனிதர்களின் வாழ்வையே குறிவைத்து வியாபாரமாக்கி மனிதகுலத்தை திட்டமிட்ட அழிவுக்குக் கொண்டு செல்லும் வியாபார உலகிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள எடுக்கும் முயற்சியில், மருத்துவ மூலிகைகள் இன்று அதிகம் பேசப்படுகின்றன.

ஆனால் இவற்றின் பெருமைகளும் பிரயோசனங்களும் ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் பேசப்படுவது போன்ற புரிந்துணர்வுடன் இன்றும் இந்திய பிராந்திய சூழலில் பேசப்படாமல் இருக்கின்றன. இந்திய பிராந்திய சூழலில் இவற்றிற்கு தடைபோடுபவர்களாக மேற்கத்தைய மருந்து கொம்பனிகள், பல தடைகளையும் தவறான வழிநடத்தல்களையும் செய்கின்றதை நாம் நன்றாக புரிந்து கொண்டு, எமது பாரம்பரிய மருத்துவ மூலிகைளை எமது மக்களிடம் எடுத்தியம்பும் பணியாக புத்தகங்கள், இணையத்தளங்கள், சமூகவலைத்தளங்களில் இருந்து தொகுக்கப்பட்டவைகளை ஒன்று குவிக்கும் ஓர் பணியாக இங்கு பதிவிடுகின்றோம்.

அண்மைக்காலமாக மேற்கத்தைய நாடுகளில் இம் மருத்துவ மூலிகைகளுக்கும் இந்திய பாரம்பரிய கறிகளுக்கும் வழங்கப்படும் முக்கியத்துவத்தை எமது இந்திய பாரம்பரிய மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதிலும் நாம் அக்கறையுடன் இருக்க விரும்புகின்றோம்.

மேற்கத்தைய நாடுகளில் அண்மைக்காலமாக மஞ்சள், இஞ்சி, உள்ளி, தேங்காய், கறிவேப்பிலை மற்றும் இதர மூலிகைகள், கறிகளுக்கு பயன்படும் வாசனைத் திரவியங்களின் முக்கியத்துவத்தை ஜரோப்பிய நாடுகளில் பாவனைக்கு உந்தும் பல நடவடிக்கைகளையும் அவதானிக்கின்றோம். அவற்றுடன் மருந்துகளில் பல இந்திய பாரம்பரிய மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளையும் அவதானித்து இருக்கின்றோம். இவை எமக்கு மேலும் ஆர்வத்தை கொடுத்து இப்பணியை தொடர உற்சாகம் தந்துள்ளது.

பொதுவாக உடல்ரீதியான பிரச்சனை இருப்பவர்கள், மருந்துகள் பாவிப்பவர்கள் இத்தொகுப்புகளை நோய்களுக்கான முற்றுமுழுதான தீர்வாக எடுத்துக்கொள்ளாது மருத்துவரின் ஆலோசனையுடன் மூலிகை மருத்துவத்தை அணுகும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

இயற்கையை விட்டு நாம் தூர வந்துவிட்டோம் அதனால் நோய்களின் பாதிப்புக்கு உள்ளாகின்றோம் என்பதை உணர்ந்தவர்கள் இதனை புத்தகவடிவில் தரும்படி கேட்டுக் கொண்டதற்கு இணங்க இப்பதிவின் தொகுப்புக்களை புத்தகமாக தயாரித்தும் வழங்குகின்றோம்.  நன்றி.

sothy kumary

 

thamil.co.uk
தேவகுமாரி சோதிலிங்கம்
devakumary@btinternet.com