கீல்வாதத்தைத் தடுக்க

%e0%ae%95%e0%af%80%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8dகீல்வாதம் என்பது இரத்த ஓட்டத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாவதால் ஏற்படும் ஒரு நோயாகும். இப்படி யூரிக் அமிலம் அதிகமாகும் போது, அவை யூரிக் அமில உப்புக்கள் படிகங்களாக மூட்டுப் பகுதிகள், தசைநாண்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள இழையங்களில் tissues படியும். இப்படி நாள் கணக்கில் படியும்போது, அப்பகுதியில் வீக்கத்துடன், கடுமையான வலி மற்றும் சிவக்கவும் செய்யும்.

பொதுவாக இந்த பிரச்சனையால் பெண்களை விட 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். கீல்வாதம் முற்றிய நிலையில் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுவதோடு, இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலங்கள் சிறுநீரகங்களில் படிந்து சிறுநீரக கற்களை உண்டாக்கும்.

கீல்வாதம் 75 சதவீதம் பெருவிரலைத்தான் தாக்கும். இருப்பினும், அது கணுக்கால், குதிக்கால், கால் மற்றும் கை விரல்கள், மணிக்கட்டு, முழங்கை போன்ற இடங்களையும் பாதிக்கும். இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு ஒருசில உணவுகளின் மூலம் அதிகரிக்கும். எனவே யூரிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டாம்.

கீல்வாதத்தைத் தடுக்கும் சில எளிய இயற்கை வழிகள்

தினமும் 3-4 பற்கள் பூண்டை பச்சையாக உட்கொண்டு வருவதன் மூலம், கீல்வாதத்தின் தாக்கத்தில் இருந்து நல்ல தீர்வு கிடைக்கும்.

கீல்வாதம் இருப்பவர்கள் தினமும் 12 செர்ரிப் பழங்களை உட்கொண்டு வருதன் மூலம், கீல்வாத வலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

ஒரு குவளை நீரில் 3-4 தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும்1 தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இந்த கலவையை செய்து குடிப்பதன் மூலம் கீல்வாத பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

திராட்சையை அதிகம் உட்கொள்வதன் மூலம், யூரிக் அமிலத்தால் ஏற்படும் விளைவைத் தடுக்கலாம். ஏனெனில் இதில் விட்டமின் C ஏராளமாக உள்ளது. இது யூரிக் அமில படிகங்களை கரைத்து வெளியேற்றி, கீல்வாதத்தில் இருந்து விடுதலை தரும்.

பீன்ஸை அதிகமாக உட்கொண்டு வருவதன் மூலம், கீல்வாத வலி மற்றும் வீக்கத்தில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

கடுகைப் பொடி செய்து, அத்துடன் ட்ரிடிகம் பொடி சேர்த்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் முன் அக்கலவையை கீல்வாத வலி உள்ள இடத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்தால், வலி நீங்கும்.

எப்சம் உப்பை சுடுநீரில் போட்டு கலந்து, வெதுவெதுப்பான நிலையில் அந்நீரில் பாதிக்கப்பட்ட பகுதியை சிறிது நேரம் ஊற வைக்க, நல்ல நிவாரணம் கிடைக்கும்.

-tamil.boldsky.com