ஔவையார்

ஔவையார் எனும் பெயரில் மூன்று அம்மையார் வாழ்ந்ததாக சரித்திரம் சொல்கிறது

1)சங்க காலத்து ஔவையார்

இவர் அதியமான் நெடுமான் அஞ்சி என்பவரிடம் நெல்லிக்கனி பெற்றவர்.
இவர் பாடிய பாடல்கள், அகநாநூறு, நற்றினை, குறுந்தொகை.

2)பத்தாம்நூற்றாண்டு ஔவையார்

இவர் கம்பர் காலத்தவர். சைவ வைனவ சமயங்கள் பிரபலமாய் இருந்த காலத்தில் தமிழ் நாட்டில் ஏழை பணக்காரன் பார்காமல் அன்பாய் பழகியவர். இவர் இயற்றிய நூல்
ஔவைக்குறள் – 310 குறள்பாக்கள்
வீட்டு நெறிப்பால் – 100 குறள்
திருவருட்பால் – 100 குறள்
தன்பால் – 110 குறள்
திருக்குறள் தந்த திருவள்ளுவருக்கு இவர் சகோதரி என்ற கருத்தும் உள்ளது.

ஔவையார்3)பதினாறாம் நூற்றாண்டு ஔவையார்

இவரால் இயற்றப்பட்ட நூல்கள்;
ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை,கல்விஒழுக்கம், நல்வழி.

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் 07/05/2016, சனிக்கிழமை திறக்கப்பட்ட ஔவையார் சிலை, பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் என்பதை அறிந்தும் தெளிந்தும் கொள்ளவும்.

-அம்பிளாந்துறையூர் அரியம்