2,000 ரூபாயில் ஒரு வீட்டுத் தோட்டம்

2,000 ரூபாயில் ஒரு வீட்டுத் தோட்டம்”காய்கறிகள் விலை விண்ணை முட்டுகிறது. அதை வாங்கினாலும், இரசாயன உரங்களில் விளைந்த அவற்றால் என்னென்ன கேடுகள் வருமோ என்று அஞ்சியே உண்ண வேண்டியுள்ளது. ‘ஆர்கானிக்’ என்று கடைகளில் விற்கப்படும் காய்கறிகள் வாங்கினால், எந்தளவுக்கு நம்பகமானது என்ற கேள்வி எழுகிறது. இதற்கெல்லாம் தீர்வு வீட்டில், மாடியில் நாமே தோட்டம் போட்டு காய்கள் வளர்ப்பதுதான்.

”நம் முன்னோர்களுக்கு 70 வயதில் வந்த நோய்கள் எல்லாம், நமக்கு 30 வயதிலேயே எட்டிப் பார்க்கின்றன. காரணம், நம் உணவில் கலந்திருக்கும் இரசாயனங்கள். இதற்கு மாற்று வழி, இயற்கை வழி விவசாயம். ‘ஆனால், அதை எல்லோரும் செய்ய முடியுமா?’

”தேங்காய் நாரால் ஆன மெத்தை போன்ற அமைப்பு 7 கிலோ, தவிட்டு படுக்கை 7 கிலோ, மண்புழு உரம் 7 கிலோ, இயற்கை விதைகள் (கீரை வகைகள், தக்காளி, கத்திரிக்காய், மிளகாய், வெண்டை, முள்ளங்கி, அவரை, பூசணி, வெள்ளரிக்காய், முருங்கை, பீர்க்கங்காய்) 5 கிராம்கள், விதை படுக்கை, வளர்ப்பு பைகள், வேப்பம் புண்ணாக்கு, மருந்து தெளிப்பான், வேப்பம் எண்ணெய், அமுதகரைசல் ஆகியவற்றோடு கையேடு மற்றும் சில பண்ணைக் கருவிகள் அடங்கியதுதான் இந்த நேச்சர் கேர் ஃபார்மிங் கிட். இதை வாங்குபவர்களுக்கு, தோட்டம் வளர்ப்பதற்கான வழிமுறைகளை இலவசமாகவே கற்றுத் தரப்படுகிறது.

வீட்டுத்தோட்டத்துக்கு முதலில் மண்ணை நன்கு கிளறி, காற்று செல்லும் வகையில் தயார் படுத்தவேண்டும். மாடித் தோட்டத்துக்கு வளர்ப்பு பைகளில் தேங்காய் நார் படுக்கை இடவேண்டும். இது தண்ணீரை நன்கு உறிஞ்சி மண்ணை ஈரப்பதமாக வைத்திருக்கும். அடுத்து அரிசி தவிடு. இதில் பொட்டாசியம், பாஸ்பரஸ், நைட்ரஜன் போன்றவை தேவைக்கதிகமாகவே இருப்பதால், இது சிறந்த இயற்கை உரம். மேலும் சூரிய ஒளி நேராக மண்ணில் படாமலும் தடுக்கும். அடுத்து மண்புழு உரம். இது மண்ணை வளப்படுத்துவதோடு மண்புழு மண்ணைக் கிளறிக்கொண்டே இருப்பதால் காற்றோட்டமாகவும் இருக்கும்.

இப்படி மண்ணை தயார் செய்துவிட்டு, விதைகளை இடவேண்டும். வளர்ந்த பிறகு வேப்பெண்ணெய், வேப்பம்புண்ணாக்கு ஆகியவை பூச்சி விரட்டியாக பயன்படுத்தப்படும். அடுத்தது வளர்ச்சி ஊக்கியாக அமுதக் கரைசல் இடவேண்டும். இது, மாட்டுச் சாணம், கோமியம் (மாட்டு மூத்திரம்) மற்றும் வெல்லம் கலந்தது. ஒரு லிட்டர் அளவுக்கு இந்தக் கரைசலை தருவதுடன், அதை தயாரிக்கும் வழிமுறைகள் பற்றியும் எடுத்துக் கூறுவதால், அடுத்த முறை சுயமாக தயாரித்துக் கொள்ளலாம்”

-இயற்கை மருத்துவம்