விராலி

விராலி-thamil.co.ukவிராலி.

மூலிகையின் பெயர் – விராலி
பயன்தரும் பாகங்கள் – இலை மற்றும் பட்டை.
வளரியல்பு விராலி தமிழகமெங்கும் புதர் காடுகளில் வளர்கிறது. இது வளர்ச்சியைத் தாங்கி வளரக்கூடியது. இதை விவசாயிகள் விராலிமாறு என்று சொல்வர். இது காம்புள்ள சாறற்ற மேல் நோக்கிய இலைகளையும், சிறகுள்ள விதைகளையும், கசப்பான பட்டையும் கொண்ட குறுஞ்செடி. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள்

விராலி, காய்ச்சல் தணித்தல், உடல் உரமாக்கல், வீக்கம் கட்டிகளைக் கரைத்தல் சதை நரம்புகளைச் சுருங்கச் செய்தல் ஆகிய பயன்களையுடையது.

20 கிராம் விராலி இலையை இடித்துக் கால் லிட்டர் நீரிலிட்டு ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டியதில் 20 மில்லியைச் சிறிது பால் கலந்து சாப்பிட்டு வர நுரையீரல் நோய்கள், கணச்சூடு, இருமல், சளி ஆகியவை தீரும்.

விராலிவிராலி இலையை வதக்கிக் கட்டிகள் மீது கனமாக வைத்துக்கட்டி வரக் கட்டி அமுங்கி விடும் அல்லது உடைந்து விரைவில் ஆறும். வீக்கம் கரையும்.

விராலிப் பட்டையை உலர்த்திப் பொடித்து ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து உண்டுவரச் சளி, சளிக் காச்சல், மூறைக்காச்சல், மலேரியா முதலிய நோய்கள் தீரும்.

விராலிப் பட்டையை அரைத்துப் பற்றிட வீக்கங்கள் விரைவில் கரையும்.

-மூலிகைவளம்