விஷ்ணுகிரந்தி

விஷ்ணுக்கிரந்திமூலிகையின் பெயர் – விஷ்ணுகிரந்தி
தாவரவியல் பெயர் – EVOLVULUS ALSINOIDES
தாவரக்குடும்பம் – CONVOLVULACEAE
வேறு பெயர் – விஷ்ணுக் காந்தி, விஷ்ணு கரந்தை, அபராசி, பராசிதம்
பயன்படும் பாகங்கள் – செடிமுழுதும்.

வளரியல்பு – விஷ்ணுக்கிரந்தி எல்லா இடங்களிலும் தானே வளரக்கூடியது. இது தரையோடு படர்ந்து வளரும் சிறுசெடி. இதன் தாயகம் தென் அமரிக்கா. இதன் தண்டு நீளம் 20 – 70 செ.மீ. வரை வளரும். முழுமையான சிறு இலைகளைக் கொண்டது.

விஷ்ணுகிரந்தி-thamil.co.ukவட்டமான சிறு மலர்களை உடையது. இதன் பூ விட்டம் 6 – 8 மில்லி மீட்டர் இருக்கும். இதன் காய் சிறிதாக உருண்டையாக இருக்கும். அதில் நான்கு விதைகள் இருக்கும்.

பொதுவாக நீலநிறமாகவும் அரிதாக வெண்ணிற, செந்நிற மலர்களும் காணப்படுவதுண்டு. தமிழகமெங்கும் தரிசு நிலங்களில் தானே வளர்கிறது. விதை மூலமும், பக்கவேர்கள் மூலமும் இனவிருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள்

விஷ்ணுகிரந்தி நோய் நீக்கி உடல் தேற்றுதல், காய்ச்சல் போக்குதல், கோழையகற்றுதல், வியர்வை பெருக்குதல், தாது பலமளித்தல் மலச்சிக்கலைப் போக்கும்.

விஷ்ணுகிரந்தி-thamil.co.ukஇதன் எண்ணெய் பெண்கள் முடி வளர உபயோகிப்பர்.

இதன் வேர் குழந்தைகளின் காய்ச்சலைப் போக்கும். மன அமைதியைக் கொடுக்கும்.

இதன் இலையை சிகரெட்டாகச் செய்து புகையை உள் இழுத்தால் தொடர் இருமல், ஆஸ்மா குணமாகும்.

விஷ்ணுகிரந்தி இலையை பொடி செய்து வெந்நீரில் கலந்து குடிக்க இருமல் குணமாகும்.

இது தொழுநோயைக் குணப்படுத்தும்.

விஷ்ணுக்கிரந்தி சமூலம், பற்படாகம், கண்டங்கத்திரி வேர், தூதுவளை வகைக்கு 30 கிராம் சிதைத்து 1 லிட்டர் நீரில் போட்டு கால் லீட்டராகக் காய்ச்சிக் காலை, மாலை 50மி.லி. கொடுக்கச் சுரம் வலகும். 2, 3 வேளையாகக் கொடுக்க விடாத காய்ச்சல் தீரும்.

விஷ்ணுக்கிரந்தி மலர்பற்படாகம் நீக்கி ஆடாதொடை சேர்த்து மேற்கண்டவாறு சாப்பிட என்புருக்கிக் காய்ச்சல் தீரும்.

இதன் சமூலம் அரைத்துக் கொட்டைப் பாக்களவு தயிரில் கொடுக்க இரத்த பேதி, சீதப் பேதி தீரும். காரம், புளி நீக்க வேண்டும்.

இதன் சமூல விழுது நெல்லிக்காயளவு ஓரிரு மண்டலம் கொள்ளக் கண்ட மாலை தீரும்.

விஷ்ணுக்கிரந்தி, ஓரிதழ்தாமரை, கீழாநெல்லி சமன் அரைத்துப் பாக்களவு காலை, பகல், இரவு உணவுக்கு முன் உண்டு பால் குடித்து வர நரம்பு தளர்ச்சி, இந்திரி ஒழுக்கு, மறதி, வெட்டைச் சூடு தணிந்து உடல் பலம் உண்டாகும்.

விஷ்ணுக்கிரந்தி 5 கிராம் சமீலத்தைப் பால் விட்டு மையாய் அரைத்துப் பாலில் கலக்கி வடிகட்டிக் காலை, மதியம், மாலை 3 வேளையும் கொடுத்து வரச் சீதபேதி, காய்ச்சல், மேகம், என்புருக்கி, இரைப்பு, இருமல், ஈளை, வாத,பித்தத் தொடர்பான நோய்கள் அனைத்தும் தீரும்.

விஷ்ணு கரந்தை கற்பம்
விஷ்ணு கிரந்தி அல்லது விஷ்ணு கரந்தை செடியை அரைத்து, பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் நாற்பது நாட்களில் உடல்சூடு நீங்கி,கண் பிரகாசமாகி, சுவாசம் கட்டுப்படும். அதன்பிறகு, நாற்பது நாள்கள் தேன் கலந்து சாப்பிட யோகம் சித்தியாகும்.

‘போமென்ற வெள்ளை விஷ்ணுகரந்தை தன்னை
பிடுங்கிவந்து நிழலிலுலர்தா யுணர்த்தி கொண்டு
ஏமென்று இடித்து சூரணமே செய்து
எழிலான மண்டலம் தான் தேனில் உண்ணு
சாலமென்ற சாவுபொய்யாம் சதுர்முகவன் படைப்பு
தப்பியே சதாகோடி தரிந்திருக்கும்
காமென்ற கருவூரார் கொண்ட கற்பம்
காரணமாம் அடியாருக்கு கருதினாரே. ‘
– சித்தர் பாடல்

கருத்து : வெள்ளை விஷ்ணுகரந்தை கொண்டுவந்து (சமூலமாக) சூரிய நிழலில் உலர்த்தி பின் சூரணம் செய்து மண்டலம் (48 நாள்) காலை மாலை சுத்தமான தேனில் திரிகடி அளவு சேர்த்து உண்ணவேண்டும். அப்படி உண்டால் சாவு பொய்யாகும் என்றும் பிரமன் படைத்த விதியை மீறி சதாகோடி ஆண்டுகள் இருக்கலாம் என்றும் இது கருவூரர் உண்டு வந்த கற்பம் என்றும் போகர் கூறுகிறார். சித்தர் பாடல்களில் வசிய கர்ம பிரயோகங்களுக்கு பயன்படும் மூலிகைகளில் முக்கியமானது விஷ்ணுகிராந்தி ஆகும்.

-mooligaivazam