கிராம்பு CLOVES

மூலிகையின் பெயர் – கிராம்பு
Botanical name – Syzygium aromaticum
வேறுபெயர்கள் – அஞ்சுகம், உற்கடம், கருவாய்க்கிராம்பு, சோசம், திரளி, வராங்கம்
பயன்படும் பாகங்கள் – மொட்டு, இலை, தண்டு
A Cloves treeகிராம்பு tree

இது இந்தோனேசியாவில் தோன்றிய தாவரம் எனக் கூறப்படுகிறது எனினும் பெருவாரியாக இந்தியாவிலும் இலங்கையிலும் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் கேரளம், தமிழ்நாடு, வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் விளைகிறது.

கிராம்பு ஒரு நறுமணம் மிக்க ஒரு மருத்துவ மூலிகையாகும். சமையல்களில் சுவை சேர்க்கவும் பதப்படுத்தவும் பயன்படுகிறது. அசைவ சமையலில் கிராம்பின் பங்கு மிகுதியானது.

கிராம்பு -thamil.co.ukநாம் பயன்படுத்தும் கிராம்பு என்பது செடியின் மொட்டுக்களாகும். அது பார்ப்பதற்கு நகம் போல் இருந்ததால் பிரெஞ்சுக்காரர்கள் நகம் என்ற பொருளில் கிளாவ் என்று பிரெஞ்சு மொழியில் அழைத்தார்கள். ஆங்கிலம், ஸ்பானிஷ், லத்தீன் மொழிகளிலும் ‘கிளாவ்’ என்றே அழைக்கப்படுகிறது. இந்தியில் இதனை ‘லவங்கம்’ என்று அழைக்கிறார்கள்.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்
கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கல்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோபிளேவின், நயாசின், விட்டமின் C மற்றும் A போன்றவை உள்ளன.

இலவங்கம்கிராம்பின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. இதிலிருக்கும் சுறுசுறு தன்மையானது வாய்க்கு புத்துணர்வைக் கொடுக்கிறது.

ஒவ்வொரு வீட்டின் சமையல் கூடங்களிலும் சீரகம், சோம்பு, கடுகு, வெந்தயம், பட்டை, கிராம்பு ஏலம் என ஒரு மருத்துவக் களஞ்சியமே அடங்கியிருக்கும். இவற்றை அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடும் நாம் அதன் மருத்துவ பயன்களைப் பற்றி ஏனோ தெரிந்துகொள்ளவில்லை. ஆனால் நம் முன்னோர்கள் இவற்றைப் பற்றி நன்றாக தெரிந்திருந்ததால்தான் அவற்றை தினமும் உபயோகப்படுத்தவே இவற்றை சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் வைத்தார்கள்.

கிராம்பு இலவங்கம்இது மூலிகை வகையில் சாதுர் சாதம் எனப்படும். சாதுர் சாதம் என்பது ஏலம், லவங்கம், இலவங்க பட்டை, சிறு நாகப்பூ எனும் நான்கு மணமுள்ள பொருள்களைக் குறிக்கும்.

இதன் செய்கைகள்
இசிவகற்றி, அகட்டுவாய்வு அகற்றி, பசித்தூண்டி

‘பித்த மயக்கம் பேதியொடு வாந்தியும்போம்
சுத்த விரத் தக்கடுப்புத் தோன்றுமோ மெத்த
இலவங்கங் கொண்ட வருக் கேற் சுகமாகும்
மலமங்கே கட்டுமென வாழ்த்து.
சுக்கிலநட் டங்கர்ண சூர்வியங்க லாஞ்சனந்தாட்
சிக்கல்விடாச் சர்வா சியப்பிணியுமக்குக்குட்
டங்கப் பவோடு தரிபடருந் தோன்றிலில்
வங்கப்பூ வோடுரைத்து வா’     -அகத்தியர் குணபாடம்

பல் வலி, தேள்கடி, விஷக்கடி, கோழை, வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றைக் குணமாக்கப் பயன்படுகிறது.

வயிற்றில் சுரக்கும் சீரண அமிலத்தைச் (Hcl) சீராக்கும். ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை ஊக்குவிக்கும். இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

கிராம்பு, வெற்றிலை, மிளகு இவற்றை மென்று தின்று மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும்.

இரத்தத்தை நீர்த்துப் போகச்செய்யும், இரத்தத்திலுள்ள கொழுப்பைக் குறைக்கும்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் உ‌ள்ளவ‌ர்க‌ள் ‌கிரா‌ம்பை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று வ‌ந்தா‌ல் அ‌ந்த தொ‌ல்லை‌யி‌ல் இரு‌ந்து ‌விடுபடலா‌ம்.

திராட்சைச் சாறுடன் கிராம்பு, மிளகு பொடியாக அரைத்து நீருடன் பருகிவர சிறுநீரகக் கோளாறு நீங்கும்.

துளசிச் சாற்றுடன் தேன், கிராம்புத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

உடலைப் பருமனடையச் செய்யவும், வளர்ச்சிதைமாற்றப் பணிகளுக்கும், சூட்டைச் சமப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் உதவும்.

பித்தம் அதிகம் உள்ளவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மென்று சாறு இறக்கினால் பித்தம் குறையும்.

சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

எலுமிச்சைச் சாற்றுடன் கிராம்பு, ஓமம் பொடியாக்கி குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும்.கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும். சொத்தைப்பல் மற்றும் பல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கிராம்பே உடனடி நிவாரணி.

கிராம்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயே கிராம்பு தைலம் என்று அழைக்கப்படுகிறது. இது நல்ல மணமுள்ளதாக இருக்கும். நாவில் பட்டால் உடனே சிவக்கும். இந்த கிராம்பு தைலத்தை பஞ்சில் நனைத்து பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் பல்வலி குறையும்.

வசம்புடன் கிராம்பு வைத்து நீர் தெளித்து விழுதாக அரைத்து தேமல் மீது தடவிவர, தேமல் மறையும். கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குணமாகும்.

கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

வயிற்றில் புண் இருந்தால் வாயிலும் புண்கள் உண்டாகும். இவர்கள் கிராம்பை அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

சுக்கு, கிராம்பு இவற்றை எடுத்து கஷாயம் போட்டு மூன்றுவேளை பருகி வந்தால் கை, கால், மூட்டு வலி குணமாகும்.

கிராம்பை நீர்விட்டு அரைத்து நெற்றியிலும் மூக்குத் தண்டின் மீதும் பற்று போட்டு வந்தால் தலையில் கட்டிய நீர் இறங்கி தலைபாரம் குறையும். ரசனையுள்ள தஞ்சைகாரர்கள் வெற்றிலையுடன் கிராம்பையும் சேர்த்து போட்டுக் கொள்வார்கள். பாடகர்களுக்கும் தொண்டை கரகரப்பை நீக்கும் உடனடி நிவாரணி கிராம்பு.

பெயரிலேயே தெரியும் இது ஒரு பூ கிராம் பூ!
ஆனால் தலையில் வைக்க முடியாத தலை சிறந்த பூ!

-tamilheritage.org

 

12 Uses For Cloves – A Wonder Spice With The Highest Antioxidant Value

On the ORAC (Oxygen Radical Absorbance Capacity) scale used by the National Institute on Aging in the National Institutes of Health (NIH) to assess the antioxidant value of foods, clove has the highest ORAC score. Besides it’s ability to prevent cancer, clove has incredible purification and protection properties within.

Cloves are a very common spice widely used all over the world. It is renowned for its rich aroma and flavour.

1) Consuming a couple of cloves can help to cleanse your body from harmful toxins and microbes. This will help to boost your health.

2) Cloves help to protect the damage caused to your body’s cells and help to stimulate energy in every part of your body.

3) Cloves help give you quick relief from toothache. Just place a piece of clove on the affected area, and gain instant relief.

4) The presence of eugenol, in cloves gives it a lovely aroma and helps in numbing dental pain and clearing out bacteria in the mouth.

5) You can also use cloves as a mosquito repellent. Clove can effectively help to ward off mosquitoes.

6) Cloves also have great anti-inflammatory properties. Use cloves to treat inflammation and infections.

7) If you are troubled with digestion problems, chew on a couple of cloves.

8) Cloves also aid with cardiac and diabetes health.

9) Due to its purification properties, cloves help in purifying your blood.

10) Ayurveda suggests making a tea to lessen, or prevent, colds and flu. It is also used as an expectorant, making it easier to cough up phlegm. Cloves are a natural painkiller and also attack germs, so they’ll help you get rid of that sore throat.

11) Sometimes used as an aphrodisiac, cloves can also help men from reaching orgasm too early.

12) Cloves treats scrapes and bruises. They are pretty strong and can sting, so the best bet is to probably make a poultice with a little olive oil.

Just add cloves to your diet in the form of curries, soups and main dishes to gain maximum benefits.

-curejoy.com