குடல் புழுக்களை விரட்டும் யானை திப்பிலி

மூலிகையின் பெயர் – யானை திப்பிலி
தாவரவியல் பெயர் –  piper chab
தாவரகுடும்பம் –  Piperaceae

திப்பிலிஉடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்பொழுதும், இனிப்பு சார்ந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும்போதும், வேறு சில புழுக்கள் மற்றும் கிருமிகள் சுகாதாரமற்ற நீர் மற்றும் கெட்டுப்போன உணவுகள் மூலமாக உடலில் நுழையும் பொழுதும், தங்களை காத்துக் கொள்வதற்காக குடல் புழுக்களும் பெருகுகின்றன. இதனால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன.

தோலில் தடிப்பு, அரிப்பு, மலவாயில் எரிச்சல் மற்றும் வெடிப்பு, மலச்சிக்கல் அல்லது கழிச்சல், தலையில் பொடுகு, வாயில் புண்கள் மூக்குத்துளை ஓரங்களில் அரிப்பு, முகம் மற்றும் கன்னப்பகுதிகளில் ஒரு வித வெளுப்பு, வாயில் துர்நாற்றம், மலம் கழிக்கும்பொழுதும், அபானவாயு பிரியும்பொழுதும் துர்நாற்றம், புழுக்கள் இனப்பெருக்க பாதையில் தொற்றை ஏற்படுத்தி வெள்ளைப்படுதல், மாதவிலக்கு திரவம் மற்றும் வெள்ளையில் சிறுசிறு புழுக்கள் வெளியேறுதல்.

Piper chabaசிறுநீர்ப்பாதையில் அரிப்பு, மலவாயைச் சுற்றி துளைகள் ஏற்பட்டு பவுத்திரம், மூலம் உண்டாதல், சில நேரங்களில் அந்த துளைகளிலும் புழுக்கள் வெளியேறுதல் மற்றும் ஆசனவாய் வெடிப்பு ஆகியன புழுக்களால் உண்டாகின்றன. அது மட்டுமின்றி தொடை இடுக்கு மற்றும் வயிற்றுப்பகுதிகளில் நெறி கட்டுதல், சிறு சுரம், அடிக்கடி குமட்டல், வாந்தி போன்ற சில தொல்லைகளுக்கும் வயிற்றுப்புழுக்கள்தான் காரணம்.

அவசியமற்ற குடற்புழுக்களை நீக்கி, வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும் மூலிகைதான் யானை திப்பிலி. கொடிகளின் உலர்ந்த பூ தண்டுகளே யானை திப்பிலி என்று வழங்கப்படுகின்றன.

நாட்டு மருந்துக்கடைகளில் யானை திப்பிலி விற்பனை செய்யப்படுகின்றன. இதன் தண்டுகளில் பைப்பரின், பைப்பலார்டின், பைப்பலோரின்ஸ் மற்றும் பலவித ஒத்த பியூட்டைல் அமைடுகள் காணப்படுகின்றன.

இவை குடல் பகுதியிலுள்ள மென்மையான சளிச்சவ்வு படலத்தை தூண்டி, குடற்புழுக்களை வெளியேற்றுகின்றன. அது மட்டுமல்லாமல் குடற்பாதையில் உறுத்தலை ஏற்படுத்தும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகளையும் நீக்குகின்றன.

Piper-chabaயானை திப்பிலி, அரிசி திப்பிலி, வேப்பிலை, சுக்கு, சீந்தில் தண்டு, நிலவேம்பு, சுண்டை வற்றல் ஆகியவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து, சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, பின் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். 10 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டியபின் வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்துவர, வயிற்றுப்புழுக்கள் வெளியேறும்.

புழுத்தொல்லையினால் ஏற்பட்ட தோல் தடிப்பு, வெள்ளை நிற மாவு படிதல், மலவாய் அரிப்பு, பலவிதமான வயிற்று உபாதைகள் நீங்க யானைத்திப்பிலியை இளவறுப்பாக வறுத்து, பொடித்து 1 கிராம் அளவு எடுத்து தேனுடன் குழப்பி, 3 முதல் 7 நாட்கள் சாப்பிட்டுவர வயிற்றுப்புழுக்கள் மலத்துடன் வெளியேறும்.

Piper Longum

Piper Longum

திப்பிலி (Piper Longum) என்பது மிளகு சாதியைச் சேர்ந்த புதர் போல் வளரும் பல பருவச் செடியாகும். இது ஒரு மூலிகைத் தாவரமாகும். இந்தச் செடியிலிருந்து கிடைக்கும் மிளகு கல்கத்தாவிலிருந்து ஏற்றுமதியாகிறது. மருந்துப் பயிர்களில் மிகவும் அதிக அளவில் இந்திய மருத்துவ முறையில் பயன்படுத்தப்படுவது திப்பிலியாகும். மிளகு மற்றும் வெற்றிலை வகையைச் சார்ந்த இது பைப்பர் லாங்கம் (Piper longum) என்ற தாவரப் பெயரால் அழைக்கப்படுகிறது

கொடிவகையைச் சார்ந்த திப்பிலி ஒரு நீண்டகாலப் பயிராகும். நிறைய கிளைகளுடன் அதிக உயரம் வளராமல் இரண்டு அல்லது மூன்று அடி அகலம் வரை வளரும். செடிகள் உறுதியான வேர்களைக் கொண்டிருக்கும். பூக்கள் மிகவும் சிறியதாகவும், இரண்டு முதல் ஐந்து செ.மீ அகவமானதாகவும் இருக்கும். இலைகள் 5 முதல் 9 செ.மீ நீளமாகவும் 3 முதல் 5 செ.மீ அகலமானதாகவும் இருக்கும். பூக்கள் மிகவும் சிறியதாகவும், இரண்டு முதல் ஐந்து செ.மீ நீளம் உள்ள சரத்தில் நெருக்கமாக இருக்கும். ஆண் மற்றும் பெண் பூக்கள் தோன்றும் காய்கள் தான் மருத்துவரீதியாகப் பயன்படுகின்றன. திப்பிலியின் காய்களில் வெற்றிலைப் போன்ற காரத்தன்மை அடங்கியுள்ளதால் வாசனையும் இருக்கும். கருமிளகைக் காட்டிலும் திப்பிலியின் காய்களில் காரத்தன்மை மிகுந்திருக்கும்.

திப்பிலியின் காய்கள் உணவுப் பொருட்களில், மருந்துப் பொருட்கள்,  மதுபான வகைகள் மற்றும் வாசனைப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன. உலர்ந்த திப்பிலியிலிருந்து நீராவி வடிப்பு மூலமாக எண்ணெய் பிரிக்கப்படுகிறது. காசநோய் கிருமிகளை எதிர்க்கும் தன்மை திப்பிலிக்கு உண்டு. இந்திய மருத்துவத்தில் பல்வேறு நோய்களைத் தாக்கும் மருந்துப் பொருளாக தொன்றுதொட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சித்த மருத்துவத்தில் திப்பிலியானது சுக்கு மிளகோடு “திரிகடுகம்” எனப்பெயர் பச்சைத் திப்பில் கபத்தை உண்டாக்கும். ஆனால் உலர்ந்த திப்பலியோ கபத்தை அகற்றுவதற்கு பயன்படுகிறது.

திப்பிலிக் காய்களில் பைப்பரின் (piperine) மற்றும் லாங்குமின் (Longumin) மருந்து வேதிப்போருட்கள் உள்ளன. தவிர ரெஸின், புரதம், கொழுப்பு, தாது உப்பு, சுண்ணாம்பு, இரும்பு, தையமின், நியாசின் ஆகிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன. உலர்ந்த காய்களில் 0.27 சதம் லாங்குமின் வேதிப்பொருள் உள்ளது. இந்த மருந்துப் பொருள் உடலில் ஏற்படும் தசை வலி, வயிற்றப் போக்கு, தொழுநோய் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. முக்கியமாக இருமல், கபம், சுவாசக்குழல் அடைப்பு, மார்புச்சளி ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

திப்பிலிச் செடியில் இருந்து எடுக்கப்பட்ட வேர், 3 வருடங்களுக்குப் பிறகு ‘கண்ட திப்பிலி’ என்ற மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. கனிகள், முதிராத பூக்கதிர்த் தண்டை உலர்த்தி ‘அரிசித் திப்பிலி’ என்ற பெயருடன் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். திப்பிலி பண்டைக் காலம் தொட்டே இருமல், காசநோய்,தொண்டைக்கட்டு, காய்ச்சல், கோழை, சளி முதலிய நோய்களுக்குப் பயன்படும் மருந்தாகும். சுக்கு, மிளகு திப்பிலி மூன்றும் சேர்ந்ததே திரிகடுகம் என்னும் மருந்தாகும்.

திப்பிலி இருமல், இரைப்பு, தொண்டைப்புண், தொண்டைக் கட்டு இவற்றைக்குணமாக்கும். காது, மூக்கு சம்பந்தப்பட்ட கப நோய்களையும் போக்கும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

உபயோகிக்கும் முறை

திப்பிலிப்பொடி, கடுக்காய்ப்பொடி சம அளவு எடுத்து தேன்விட்டு குழைத்து1/2 தேக்கரண்டி அளவு காலை, மாலை என இருவேளை உண்டுவந்தால் இளைப்பு நோய் நீங்கும்.

திப்பிலிப் பொடியை பசுவின் பாலில் விட்டு காய்ச்சி அருந்தி வந்தால் இருமல், வாய்வுத் தொல்லை, மூர்ச்சை, முப்பிணி நீங்கும்.

திப்பிலியை பொடியாக்கி 1:2 விகிதம் வெல்லம் கலந்து உட்கொள்ள விந்து பெருகும். நெய்யுடன் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும்.

திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் எடுத்து தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், தொண்டைக் கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு குணமாகும். இரைப்பை, ஈரல் வலுப்பெறும்.

திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் குணமாகும்.

திப்பிலியை இடித்துப் பொடியாக்கி 1 தேக்கரண்டியளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், கபம், வாய்வு நீங்கும். செரிமானம் அதிகரிக்கும்.

திப்பிலி 50 கிராம், கரிசலாங்கண்ணி இலை 25 கிராம், 1/2 லிட்டர் நீரில் போட்டு நீரைச் சுண்டக் காய்ச்சிய பின் நிற்கும் திப்பிலியையும் தழையையும் இள வறுப்பாய் வறுத்துப் பொடித்த எடைக்குச் சமமாகப் பொரிப்பொடி சேர்த்து அதே அளவு சர்க்கரை கூட்டி 5 கிராம் அளவு 2 வேளை தொடர்ந்து சாப்பிட்டுவர இருமல், களைப்பு நீங்கும்.

திப்பிலி 10 கிராம், தேற்றான் விதை 5 கிராம் சேர்த்துப் பொடியாக்கி கழுநீரில் 5 கிராம் எடை அளவைப் போட்டு 7 நாள் காலையில் குடித்துவர வெள்ளை, பெரும்பாடு நீங்கும்.

திப்பிலிப் பொடி, கடுக்காய்ப் பொடி சம அளவாக எடுத்துத் தேன் விட்டுப் பிசைந்து இலந்தைப் பழ அளவு இருவேளை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டுவர இளைப்பு நோய் குணமாகும்..

திப்பிலிப் பொடி 10 கிராம் அரை மி.லி.பசுவின் பால் விட்டு காய்ச்சி 2 வேளை குடித்துவர இருமல், வாய்வு, மூர்ச்சை, முப்பிணி குணமாகும்.

திப்பிலி 200 கிராம், மிளகு, சுக்கு வகைக்கு 100 கிராம், சீரகம் 50 கிராம், பெருஞ்சீரகம் 50 கிராம், அரத்தை 50 கிராம், இலவங்கப்பட்டை 25 கிராம், ஓமம் 50 கிராம், தாளீசபத்திரி, இலவங்கப்பத்திரி, திரிவலை, இலவங்கம்,ஏலம், சித்திர மூலம் வகைக்கு 50 கிராம் இவற்றை இளவறுப்பாய் வறுத்துப் பொடித்து 1 கிலோ சர்க்கரை கலந்து தேன்விட்டுப் பிசைந்து அரை தேக்கரண்டியளவு 40 நாட்கள் 2 வேளை சாப்பிட்டு வர இளைப்பு, ஈளை, இருமல், வாய்வு குணமாகும்.

திப்பிலியைத் தூள் செய்து அரை தேக்கரண்டியளவு எடுத்து தேன் கலந்து 2 வேளையாக 1 மாதம் சாப்பிட்டு வர தேமல் குணமாகும்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இத்தாவரத்தில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் காணப்படுகிறது. இதில் நீண்ட சங்கிலி அமைப்புடைய ஹைடிரோகாபன்கள், மனோ மற்றும் செஸ்க்யூடெர்பின்கள், கெரியோஃபில் லென் போன்றவை உள்ளன. மேலும் பிபிரோலேக்டம் போன்றவையும் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

கனிகளும் வேரும் மருத்துவத்தில் பயன்படுகின்றன. நாட்டு மருந்து கடைகளில் அதிகம் கிடைக்கும் திப்பிலி மூச்சு உறுப்புகளின் நோய்கள், வயிற்றுப்போக்கு, தோல்நோய்கள், பித்தநீர்ப்பை நோய்கள், வலிகளை போக்குவதற்காக பயன்படுத்தப்படுகிறது.

சளித் தொல்லையை குணப்படுத்தும்

சிறிதளவு எடுத்து தேனில் கலந்து இரு வேலையும் கொடுத்தால் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள தொண்டை கட்டு, கோழை, குரல் கம்மல், உணவில் சுவையின்மை ஆகியவை தீரும். இதை சிறிதளவு எடுத்து வெந்நீரில் போட்டு காய்ச்சி வடித்து குடித்தாலும் அனைத்து வியாதிகளும் நீங்கும். தேனுடன் கலந்த பொடி சளி, இருமல், ஆஸ்துமா, விக்கல் ஆகியவற்றை குணப்படுத்தும்.

திப்பிலி கனி, வேர் மற்றும் மிளகு, இஞ்சி ஆகியவை சமஅளவு கலந்த கலவை குடல்வலி, உப்புசம், இருமல் மற்றும் தொண்டை கரகரப்பு போக்க வல்லது.

குடல்புழுவை அகற்றும்

மிளகுடன் கலந்த திப்பிலி பொடி மயக்கம் மற்றும் உணர்வின்மைகளில் உணர்வு தூண்டும் மூக்குப்பொடியாக செயல்படுகிறது.

குழந்தை பெற்ற பெண்களுக்கு இளம் சூடான நீரில் திப்பிலி பொடியை கலந்து கொடுப்பதால் இரத்தப்போக்கு, காய்ச்சல் குணமாகும்.

குழந்தைகளின் குடல் நோயில் புழு அகற்றுவியாக திப்பிலி செயல்படுகிறது.

திப்பிலி பொடியாகவும் கிடைக்கும். சிறிதளவு எடுத்து தேனில் கலந்து இரு வேளையும் கொடுத்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள தொண்டை கட்டு, கோழை, குரல்கம்மல், உணவில் சுவையின்மை ஆகியவை தீரும். இதை சிறிதளவு எடுத்து வெந்நீரில் போட்டு காய்ச்சி வடித்து குடித்தாலும் மேற்கூறிய அனைத்து வியாதிகளும் நீங்கும்.

திப்பிலி சூப்

கண்டந்திப்பிலி – 5 கிராம்
தக்காளி – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 100 கிராம்
மிளகுத்தூள் – ஒரு கரண்டி
மிளகாய் வற்றல் – 4
பூண்டு – 4 பல்
இஞ்சி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை இரண்டு கப் நீரில் வேகவைத்துக் கொள்ளவும். கண்டதிப்பிலி, மிளகாய் வற்றல் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும். வேகவைத்த தக்காளி, பூண்டு, இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் அடித்து வடிகட்டிக் கொள்ளவும். அத்துடன் கண்டதிப்பிலி பொடியை உப்பு கலந்து சிறிது நேரம் கொதிக்க விடவும். கொதித்த பின்பு இறக்கி வைத்து மிளகு தூள் சேர்த்து சூப் பறிமாறவும்.

-இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்
-karainagar

தொகுப்பு – thamil.co.uk