கோயில்கள்

கோயில்கள்“… எனது முன்னோர்களால் கட்டப்பட்ட எல்லாக் கோயில்களிலும் கருவறைக்கு மேல் பொற்கலயம் வைக்கவும்;

தாமரையும் அல்லியும் (பகலிரவு மலர்ந்த மலர் உள்ள தடாகமாக இருந்திடும்) நிறைந்த பளிங்கு போல் தெளிந்த நீருடைய பொய்கை எல்லாக் கோயில்களிலும் இடம் பெறவும்;

கொடிய பலநோய்களைப் போக்கும் மூலிகைகளும் நறுமணமிக்க மலர்களும் பசுமை மாறாமல் வளரும் நந்தவனம் எல்லாக் கோயில்களிலும் இடம் பெறவும்;

எல்லாக் கோயில்களிலும் ஆறுகாலப் பூசையின்போதும் புலமைமிக்க அருட்செல்வர்கள் உயிரும் உடலும் நலமுறும் சத்தாந்தக் கருத்துரைகளை அருள்வாக்காகச் சொற்பொழிவாற்றும் பழக்கம் நடைமுறைக்கு வந்திடவும்;

எல்லாக் கோயில்களிலும் எல்லாத் திருவிழாக்களும் முறைப்படி இனிதே நிறைவேறிடவும் உலகெங்கும் சித்தாந்தக் கருத்துக்களைப் பரப்புதற்குரிய அறிவும், புலமையும், பயிற்சியும் பெற்ற தொண்டர்களை உருவாக்கும் குருகுலக் கல்வி எல்லாக் கோயில்களிலும் முறையாக நடந்திடவும்;

எல்லாக் கோயில்களும்

பல்கலைக் கழகமாக,
திருமண மண்டபமாக,
மனமகிழ் மன்றமாக,
கலைவளர் கூடமாக,
மருத்துவமனையாக,
உயிரின் நலம் பேணும் தெய்வீகக் கலைகளைத் தவத்திலாழ்ந்து பயிலும் தவப் பள்ளியாக… ”

ஞானாச்சாரியார் ‘அன்பு சித்தர்’

-induism