கருப்பைக் கோளாறுகளுக்கு நிலக்கடலை

நிலக்கடலை-thamil.co.ukகருப்பைக் கோளாறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் நிலக்கடலை

முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற உயர்ரக பருப்பு வகைகளில் மட்டும்தான் நமது உடலுக்குத் தேவையான சத்துக்கள் இருப்ப‍தாக மக்க‍ள் மத்தியில் ஒரு தவறான கருத்து நிலவுகிறது. உண்மையில் நிலக் கடலையில்தான் மேற்சொன்ன‍ எல்லா உயர்ரக பருப்பு வகைகளில் இருக்கும் சத்துக்களை விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குத்தான் உண் டு.

இந்நிலக்கடலையில் பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பொஸ்பரஸ், கல்சியம், பொட்டாசியம், துத்த நாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது.

குறிப்பாக பெண்கள் இந்த நிலக்கடலையை உட்கொள்ள வேண்டும். அவ்வாறு உட்கொள்ளும் பட்சத்தில் பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தைபேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.

மேலும் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கருப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

இவை மட்டுமல்ல‍ நீரழிவு நோய் பெண்களுக்கு வராமல் தடுப்பதிலும் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாப்பதிலும் இதன்பங்கு மகத்தானது.

-விதை2விருட்சம்