தமிழிசையின் நுட்பங்கள், மேளகர்த்தா இராகங்களும் அவற்றின் நுட்பமான அமைப்பு முறைகளும் : சிறீ சிறீஸ்கந்தராஜா

இசைத்தமிழ் வரலாறு – இசையமுதம்
பழந்தமிழ் இசை – மூன்றாம் பாகம்- தமிழிசையின் கூறுகள் – அறிமுகம்!

தமிழிசையின் நுட்பங்கள்

தொடர் – 44ஏழுவகையான தமிழிசைகளும் அவற்றுக்கான தமிழ் எழுத்து குறியீடுகளும்:
குரல் – ஆ – ச
துத்தம் – ஈ – ரி
கைக்கிளை – ஊ – க
உழை – ஏ – ம
இளி – ஐ – ப
விளரி – ஓ – த
தாரம் – ஒள – நி
“சரிகம பதநி யென்றேலெழுத் தாற்றானம்
வரிபந்த கண்ணினாய் வைத்துத் – தெரிவரிய
ஏழிசையுந் தோன்று மிவற்றுள்ளே பண்பிறக்கும்
சூழ்முதலாஞ் சுத்தத் துளை”

சிகண்டி முனிவரின் இப்பாடல் மூலம் அறியத் தருவதாவது
“குரல்” என்பது வண்டின் ஓசை அதுவே – ச
“துத்தம்” என்பது கிளியின் கொஞ்சல் ஓசை அதுவே – ரி
“கைக்கிளை” என்பது குதிரையின் கனைத்தல் ஓசை அதுவே – க
“உழை” என்பது யானையின் பிளிறல் ஓசை அதுவே – ம
“இளி” என்பது தவளையின் கத்தல் ஓசை அதுவே ‘ப’
“விளரி” என்பது பசுவின் கதறல் ஓசை அதுவே – த
“தாரம்” என்பது ஆட்டின் கத்தல் ஓசை அதுவே – நி

ஒவ்வொரு வகை இசையும் எமது உடலின் எந்ததெந்தப் பாகத்திலே பிறக்கின்றன என்பதையும் நுணுகி ஆராய்ந்து கூறியிருக்கின்றார்கள்.

“குரலடு மிடற்றில் துத்தம் நாவில்
கைக்கிளை அண்ணத்தில் சிரத்தில் உழையே
இளி நெற்றியினில் விளரி நெஞ்சினில்
தாரம் நாசியில் தம்பிறப்பென்ப”
என்று பின்கல நிகண்டு என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.

மிடற்றிலே பிறப்பது “குரல்”
நாவிலே பிறப்பது “துத்தம்”
அண்ணத்திலே பிறப்பது “கைக்கிளை”
சிரசிலே பிறப்பது “உழை”
நெற்றியிலே பிறப்பது “இளி”
நெஞ்சிலே பிறப்பது “விளறி”
மூக்கிலே பிறப்பது “தாரம்”
இப்படிப் பிறக்கும் இசையைத்தான் ஏழுசுரங்களுக்குள் அடக்கிவைத்தார்கள். ஏழுவகைத் தமிழ் இசையையும் அவற்றின் பண்புகள் தகுதிகளுக்கேற்ப மேலும் நான்காகப் பகுத்துள்ளனர். (இடம், செய்யுள், குணம், காலம்)

இடம்
இடம் என்பது நிலத்தைக் குறிப்பது.  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை  எனும் ஜவகை நிலங்களாகும்.

இவற்றிகுரிய பண்களாவன முறையே குறிஞ்சிப்பண், சாதாரி, செவ்வழி, மருதம், பாலை எனும் ஜந்து பண்களாகும்.

செய்யுள்
செய்யுள் என்பது பாடல்பற்றிய இசையைக் குறிக்கின்றது.  எந்த வகைப் பாடலுக்கு எந்த இசை பொருத்தமானது என்பதை ஆராய்ந்து அதற்கேற்ற முறையில் எவ்வளவு நுட்பகாக வகுத்துள்ளனர்.

வெண்பாவிற்கு – சங்கராபரணம்
அகவப்பாவிற்கும், தாழிசைக்கும் – தோடி
கலிப்பாவிற்கு – பந்துவராளி
கலித்துறைக்குப் – பைரவி
விருத்தப்பாவிற்கு – கல்யாணி, காம்போதி, மத்தியமாவதி என்பன,
உலாப் பாடலுக்கு – சௌட்டிரம்,
பிள்ளைத்தமிழுக்கு – கேதாரகௌளம்,
பரணிக்குக் – கண்டாரவம்
என்று பல்வகைச் செய்யுள்களுக்கும் இசைவகுத்துள்ளனர்.

குணம்
துன்பம் அல்லது துக்கத்திற்கு – ஆகரீ, நீலாம்பரி, பியாகடம், வராளி, புன்னாகவராளி
இன்பம் அல்லது மகிழ்ச்சிக்கு – காம்போதி, சாவேரி, தன்னியாசி
போருக்கு – நாட்டை என்னும் பண்கள் உரியவையாகின்றன.

காலம்
காலம் பற்றிய இசை என்பது வெவ்வேறு காலங்களுக்கும் வேளைகளுக்கும உரியதான பண்களை வகுக்கின்றது.
வசந்தகாலத்திற்கு – காம்போதி, தன்னியாசி
மாலைநேரத்திற்கு – கல்யாணி, காபி, காம்போதி,
நள்ளிரவுக்கு – ஆகரி
அதிகாலையில் – இந்தோளம், இராமகலி, நாட்டை, பூபாளம்
நண்பகலுக்கு – சாரங்கயம், தேசாட்சரி என்றும் வகுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறாக இசைத்தமிழுக்கு மிகநுட்பமாக இலக்கணம் வகுத்து, முறைப்படி பகுத்து, சிறப்புறத் தொகுத்து நம்முன்னோர்கள் நமக்கு தந்து சென்றிருக்கின்றார்கள். தமிழிசையைத் தத்தெடுத்த வடவர்களால் தமிழ்ப் பெயர்கள் மாற்றப்பட்டன. மாற்றப்பட்ட பெயர்களையே தென்னிந்திய மொழிகளெல்லாம் வழக்கப்படுத்திக் கொண்டன.

அரசியல் செல்வாக்கினாலும், வடமொழி மோகங்கொண்ட தமிழர்களாலும் அந்தப் பெயர்களே தமிழ்மொழியிலும் இடம்பிடித்தன. தமிழ் இசைப் பெயர்கள் வழக்கொழிந்தன. தமிழிசையின் மகத்துவத்தைத் தரணியெங்கும் பரப்பிடத் தமிழர்களாகிய நாம் முயற்சிசெய்ய வேண்டும்.

தமிழிசையின் நுட்பங்கள்
தமிழிசை என்பது வெறும் வாய்ப்பாட்டு இசை மட்டுமல்ல.  தமிழிசைக்குப் பயன்படும் இசைக்கருவிகள் கூட  தமிழ் மொழிக்கும் தமிழ்மக்களுக்குமே சொந்தமாக இருந்தது. இன்று இந்தியா முழுவதும் ஏன் உலக நாடுகளுக்கும்  இது பரவியிருக்கின்றன. இவை யாவற்றுக்கும் சான்றுகளாக குழல், யாழ், முழவு என்னும் மூன்று கருவிகளே அடிப்படையாக உள்ளன.

பதின்மூன்றாம் நூற்றாண்டில் சாரங்க தேவர் (கி.பி. 1210 – 1241) என்பவரால் இயற்றப்பட்ட “சங்கீத ரத்னாகரம்” என்ற நூலே குறிப்பிடத்தக்க வடமொழியில் இயன்ற இசையிலக்கண நூலாகும். தமிழ்நாட்டில் வளர்ந்திருந்த இசையை நன்கு பயின்ற பின்னர் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது.

இந்தளம், காந்தாரப்பஞ்சமம், நட்டராகம், பஞ்சமம், தக்கராகம், தக்கேசி, நட்டபாடை, கெளசிகம், செவ்வழி,செந்துருத்தி, தேவாரவர்த்தினி, காந்தாரம், குறிஞ்சி, மேகராகக்குறிஞ்சி முதலிய தமிழ்ப்பண்களையே சாரங்க தேவர் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

13-ம் நூற்றாண்டுக்குப் பின் தமிழ்நாட்டிலேயே இசை இலக்கண நூல்கள் வடமொழியில் எழுதும் வழக்கம் ஏற்பட்டு விட்டது. மிகவும் நுட்பமாகத் திட்டமிட்டு இசைத்துறைக் கலைச் சொற்களை வட சொற்களாகக் காட்ட ஆரியர் முற்பட்டனர்.

தமிழ்நாட்டில் பிறந்து தமிழையே தாய்மொழியாகக் கொண்டிருந்தும் ஆரியர் தாம் பயின்ற இசை முறைகளையும் இசையிலக்கணங்களையும் தமிழ் மொழியில் எழுதாது வஞ்சகமாய் வடமொழியிலேயே எழுதி வைத்தனர்.

17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சை மன்னரிடம் அமைச்சராய் இருந்த கோவிந்த தீட்சிதர் “சங்கீத சுதா” என்னும் இசை நூலை வடமொழியில் இயற்றினார்.  இவருடைய இரண்டாவது மகன் வேங்கடமகி இராகங்களைப் புதியதொரு முறையில் வரிசைப்படுத்தி “சதித்தண்டிப் பிரகாசிகை” என்னும் நூலை எழுதினார்.

தமிழ்நாட்டில் வழங்கி வந்துள்ள இசைமுறையை சில திரிபுகளுடன் எழுதி வைத்துள்ளார். எனினும் அதை தமிழில் எழுதாமல் வடமொழியிலேயே எழுதினார். இதில் இசைத்துறையில் வழக்கிலிருந்த தமிழ்சொற்களையும் இராகங்களின் தமிழ்ப் பெயர்களையும் பெருமளவில்இருட்டடிப்பு செய்துவிட்டார். இது பற்றி இசைப்பேரறிஞர் மு.ஆபிரகாம் பண்டிதர் தனது “கருணாமிர்த சாகரம்” என்னும் இசை நூலில் குறிப்பிடுவதாது :

“பூர்வீக தமிழ் மக்களின் சுரங்களையும் சுருதிகளையும்  இராகம் உண்டாக்கும் விதிகளையும் அனுசரித்து பாடிவந்த 12,000 ஆதி இசைகளும் அவற்றின் பரம்பரையிலுதித்த இராகங்களும் பாடப்படும் வேறு பெயர்களால் அழைக்கப்பட்டும் அந்நிய பாஷைச் சொற்களால் உருவமைந்தும் நாளது வரையும் வழங்கி வருகின்றன.

தமிழில் வழங்கும் அநேக வார்த்தைகளைத் தங்கள் பாஷையில் முதன்முதலில் இருந்ததாக மற்றவர் நினைக்கும்படி காலாகாலங்களில் மாற்றி, மாற்றியதற்கிணங்க நூல்களும், புராணங்களும், கட்டுக்கதைகளும் செய்து பரப்பி வந்தார்கள். சமஸ்கிருத பாஷையின் அநேக வார்த்தைகள் தமிழில் வந்து வழங்க தலைப்பட்டன.  இதை விவேகிகள் அறிவார்கள். அதிகம் சொல்ல இங்கு அவசியம் இல்லை.

இயல் இசை நாடகமென்னும் முத்தமிழில் உள்ள இசைத் தமிழாகிய சங்கீதத்தை தென்னாட்டிலிருந்தே மற்றவர்கள் கொண்டு போனார்கள் என்பது பற்றியும் வடபாஷைக்காரரும் தமிழ்நாட்டிலிருந்தே இசைத்தமிழைக் கொண்டு போயிருக்க வேண்டும் என்பது பற்றியும் இங்கு எழுத நேரிட்டது”. கடந்த 200 ஆண்டுகளுக்குள்ளாகத்தான் ஆரியர் தென்னிந்திய இசைமுறைக்கு “கருநாடக சங்கீதம்” என்ற பெயரைச் சூட்டியுள்ளனர்.

20-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தமிழ்நாட்டு நடனக்கலைக்குப் “பரத நாட்டியம்” என்று புதிய பெயரைச் சூட்டினர். அதுவும் நிலை பெற்றுவிட்டது. அதேபோலவே சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் தமிழிசை முறைக்கு “கருநாடக சங்கீதம்” என்ற பெயரிட்டு  நிலை நிறுத்தியுள்ளனர்.

ச,ரி,க,ம,ப,நி ஏழிசைக் குறீயீடு எழுத்துக்கள்.  சரிகமபதநி ஏழும் தமிழ் எழுத்துக்களே.

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு வடமொழியில்  “சங்கீத ரத்னாகரம்” எனும் இசை நூலை எழுதிய சாரங்கதேவர்தான் தமிழிசை முறையில் சரிகமபதநி  என்னும் ஏழு தமிழ் குறியீடுகளுக்கும் வடமொழிப் பெயர்களை வலிந்து கொடுத்து அந்த ஏழு சுரங்களும் வடமொழியிலிருந்து வந்தன எனும் பெரும்புரட்டை ஏற்படுத்தினர்.

கீர்த்தனை வகை இசைப்பாடல்கள் தேவார காலத்தில் தோன்றியது.  கீர்த்தனத்தில் நிரவல் விருத்தி முதலிய இசையமைப்புகள் எல்லாம் தேவாரப் பாடல்களைக் கொண்டே அமைந்தவை.

ஆதி மும்மூர்த்திகள்!
தியாகையர் (1767-1847), சியாமா சாஸ்திரிகள் (1762-1827), முத்துசாமி தீட்சிதர் (1776-1835) ஆகிய இம்மூவருமே கருநாடக இசை மும்மூர்த்திகள் என்று போற்றப் படுகிறார்கள். இம்மூவரும் திருவாரூரில் பிறந்தவர்கள். இம்மூவருடைய சங்கீதமும் அன்னிய மொழிகளில்தான் அமைந்துள்ளன.

பரந்துபட்ட மக்களுக்கு புரியாத மொழிப்பாடல்களே.  ஆகையால் இவர்களுடைய சங்கீதம் வாழ்க்கையில் சமூகத்தில் மேல்நிலையில் உள்ளவர்களுக்கே உரியதாய் இருந்து வந்துள்ளது.

இராமப்பிரமத்தின் புதல்வரான தியாகையர் தெலுங்கு நாட்டுக்குப் போனதில்லை. தெலுங்கு பாட்டையும் கேட்டதில்லை. கேட்டதெல்லாம் தமிழ்நாட்டில் தமிழ்ப்பாட்டுகள். ஆறுகாலங்களிலும் நாதஸ்வர வாத்திய இசை, தேவார இசை மட்டுமே. அவருக்கு முன்பு தமிழ்நாட்டில் வாழ்ந்த சங்கீத வித்துவான்களுடைய இசையையும் இவர் கேட்டிருந்தார். இவ்வாறு பெற்ற இசையறிவை தெலுங்கு இசைப்பாடல்களாக இயற்றினார்.

இம்மூர்த்திகளுக்கும் மிக முந்திய காலத்தில் தமிழிலேயே கீர்த்தனைகளை இயற்றி தமிழிசையை வளர்த்தவர் மூவராவார். சீர்காழி முத்துதாண்டவர் (1525-1625), சீர்காழி அருணாசலக் கவிராயர் (1711-1779), மாரிமுத்தாப்பிள்ளை (1712-1787).

இவர்கள் கீர்த்தனங்களும் பதங்களும் அக்காலத்தில் மிகவும் பிரபலமானவை.  தற்போதைய மும்மூர்த்திகளுக்கு முன்னோடிகளாவார். இன்றைய கருநாடக இசையில் கையாளப்பட்டுவரும்  பல்லவி, அநுபல்லவி, சரணம் என்னும் அமைப்புடைய கீர்த்தனை வடிவத்தை முதன்முதலில் ஏற்படுத்தியவர் முத்துத்தாண்டவரே ஆவார்.

தமிழிசையின் கூறுகள் – அறிமுகம்!- தமிழிசையின் நுட்பங்கள்
பழந்தமிழ் இசைப்பண்கள்

தொல்காப்பியம்
தொல்காப்பியம்இசைத்தமிழ், தொடர்பான செய்திகளை இந்நூல் ஆங்காங்குக்கூறுகிறது. தமிழிசை பற்றிய நூல்களில், இன்று கிடைக்கப் பெறுகின்ற மிகத் தொன்மையான நூல் தொல்காப்பியம் ஆகும்.

தொல்காப்பியர் காலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டளவினது என்பது அறிஞர்கள் கருத்து.  இந்நூலின் காலக் கணிப்பு தமிழர் இசையின் தொன்மையை உறுதிப்படுத்தும்.

இசையைத் தொழிலாக கொண்ட மக்கள் உபயோகப்படுத்தும் இசைக்கருவிக்குப் பறை என்றும்,  இன்பமாக பொழுது போக்கும் மக்கள் பயன்படுத்தும் இசைக்கருவி யாழ் என்றும் குறிப்பிடுகிறார்.

பொருளதிகாரம் அகத்திணை 18ம் நூற்பாவில் தமிழர் வாழ்க்கை நெறியின் அடிப்படைப் பண்பாட்டுக் கருவூலங்கள் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது. இந்நூலில் தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, யாழ் ஆகிய கருப்பொருள்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த ஏழும் தமிழர் பண்பாட்டுக் கருப்பொருள்கள். ஏழு கருப்பொருளில் ஒன்று யாழ். மற்றொன்று பறை.

யாழ்
சகோட யாழ்-thamil.co.ukதொல்காப்பியம் கூறும் ‘யாழ்’ என்னும் சொல் பழந்தமிழர் வகுத்த பண்ணிசையைக் குறிக்கும். இது மிடற்றிசை (குரலிசை), நரம்புக் கருவியிசை (யாழ் என்னும் தந்திக் கருவி இசை) காற்றுக் கருவியிசை (குழல் கருவியிசை) ஆகியவற்றின் முறைகளும் மரபுகளும் பற்றியதாகும்.

பண்வகைகளை “யாழின் பகுதி” எனவும், இசைநூலை “நரம்பின் மறை” எனவும் தொல்காப்பியர் குறித்துள்ளார். பண்டைநாளில், நரம்புக் கருவியாகிய யாழினை அடிப்படையாகக் கொண்டே பண்களும் அவற்றின் திறங்களும் ஆராய்ந்து வகைப்படுத்தப்பட்டன என அறியலாம்.

பறை
பறை-thamil.co.ukதொல்காப்பியர் கூறும் “பறை” என்னும் சொல் தாளம் பற்றியதாகும். அதாவது தாளத்தைக் கொட்டிக் கொடுக்கும் பல்வேறு தாளக்கருவிகளின் முறைகளும் மரபுகளும் பற்றியதாகும்.

நிலத்தை ஐந்தாக வகுத்துக் கொண்ட தமிழர் அந்தந்த நிலத்துக்குரிய இசையை உருவாக்கினர். தொல்காப்பியர் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களுக்கும் உரிய தொழில் இசையையும, இன்ப இசையையும் தெளிவாக வகுத்து வைத்துள்ளார். பண் இசைப்பதற்குரிய பொழுதையும் வரையறை செய்துள்ளார்.

பண்கள்
தமிழிசை என்பது:
22 அலகு (சுருதி)
12 தானசுரம் (Semitones)
நாற்பெரும்பண்
ஏழ்பெரும்பாலை (அடிப்படை இராகங்கள்)
மற்றும் 82 பாலை (மேளகர்த்தா) என்ற அடிப்படையில் அமைந்தது.

அரிகாம்போதி
நடன பைரவி
இருமத்திமத்தோடி
சங்கராபரணம்
கரகரப்பிரியா
தோடி
கல்யாணி
ஆகிய ஏழ் பெரும் இராகங்களே பழந்தமிழ் இசையில் 2000 ஆண்டுகட்கும் முன்னர் தோன்றிய ஆதி ஏழ்பெரும் இராகங்கள் ஆகும்.

பண்களுக்கு ஆதியில் “யாழ்” என்றும்,  பின்னர் “பாலை” என்றும், இன்று “மேளகர்த்தா இராகம்” என்றும் வழங்கி வருகின்றது.

தமிழ் இசையின் சிறப்பான பாலைகளான ஏழ்பெரும் பாலைகள் முறையே,
செம்பாலை (அரிகாம்போதி)
படுமலைப்பாலை (நடபைரவி)
செவ்வழிப்பாலை (இருமத்தி மத்தோடி)
அரும்பாலை (சங்கராபரணம்)
கோடிப்பாலை (கரகரப்பிரியா)
விளரிப்பாலை (தோடி)
மேற்செம்பாலை (கல்யாணி)
என சிலம்பு அரங்கேற்றுக்காதையில் இளங்கோவடிகள் குறிப்பிட்ட வரிசை முறையை அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப் பண்கள் இசைக்கப்பட்டன.

ஆம்பல் பண், காஞ்சிப் பண், காமரம், குறிஞ்சிப் பண், செவ்வாழி பண், நைவனம், பஞ்சுரம், படுமலைப்பண், பாலைப்பண், மருதப்பண், விளரிப்பண் ஆகிய பண்கள் முழுமையாகவும் அவற்றின் பிரிவுகளாகவும் இசைக்கப்பட்டுள்ளன.

பண்டைய தமிழகத்தில் பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொரு இசைகளிருந்ததாக (ராகம்) சிலப்பதிகாரம் கூறுகிறது.

பிங்கலந்தையில் 103 தாய்ப்பண்களும் (மேளகர்த்தா இராகங்கள்) பன்னீராயிரம் பண்களும் குறிப்பிடப்படுகின்றன.

ஆபிரகாம் பண்டிதர் எழுதிய கருணாமிர்த சாகரம் என்னும் நூலில் ஒவ்வொரு பாலைக்கும் (இராகத்திற்கும்) பிறக்கும் பண்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஏழிசையும் சுரங்களும்
“குரலே துத்தம் கைக்கிளை உழையே
இளியே விளரி தாரம் என்றிவை எழுவகை யிசைக்கும்
எய்தும் பெயரே”

தமிழிசையில் ஏழிசைச் சுரங்களாக குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் ஆகியவற்றைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. தமிழிசையில் ஏழு சுரங்களும் பறவை, விலங்கினங்களின் குரல்களோடு ஒப்பிடப்பட்டு விளக்கப்படுகிறது.

தமிழர் ஏழிசையை இயற்கை ஒலிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தனர்.
“வேண்டிய வண்டும் மாண்டகு கிளியு
குதிரையும் யானையும் குயிலும் தேனுவும்
ஆடும் என்றிவை ஏழிசை ஓசை”

தமிழிசையில் ஐந்திசை கொண்ட (Penta Tonic) பண்கள் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன.
“கிளை எனப்படுவ கிளக்கும் காலைக்
குரலே இளியே துத்தம் விளரி
கைக்கிளை என ஐந்தாகும் என்ப”
என சிலப்பதிகாரம் உரையிற் கூறப்படும் இச்சூத்திரத்திற்கு ஏற்ப குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளை, ச, ப, ரி, க, ம என்ற ஐந்து சுரங்கள் கிடைக்கின்றன. இந்தச் சுரங்கள் மோகனம் என்ற அழகிய பண்ணை உருவாக்குகின்றன.

தமிழ் – வடமொழி – ஒலி
குரல் – சட்சம் – மயிலின் ஒலி
துத்தம் – ரிஷபம் – மாட்டின் ஒலி
கைக்கிளை – காந்தாரம் – ஆட்டின் ஒலி
உழை – மத்திமம் – கிரவுஞ்சப் பறவையின் ஒலி
இளி – பஞ்சமம் – பஞ்சமம்
விளரி – தைவதம் – குதிரையின் ஒலி
தாரம் – நிஷாதம் – யானையின் ஒலி

இச்சுரங்கள் மேலும் பன்னிரண்டாக விரிகின்றன
1. குரல் – சட்சம் (ஷட்ஜம்) – ச
2. மென்துத்தம் – சுத்தரிஷபம் ரிஷபம் – ரி1
3. வன்துத்தம் – சதுஸ்ருதி ரிஷபம் – ரி2
4. மென்கைக்கிளை – சாதாரண காந்தாரம் – க1
5. வன்கைக்கிளை – அந்தர காந்தாரம் – க2
6. மெல் – உழை சுத்த மத்திமம் – ம1
7. வல் – உழை பிரதி மத்திமம் – ம2
8. இளி – பஞ்சமம் – ப
9. மென் விளரி – சுத்த தைவதம் – த1
10. வன் விளரி – சதுஸ்ருதி தைவதம் – த2
11. மென்தாரம் – கைசகி நிஷாதம் – நி1
12. வன்தாரம் – காகலி நிஷாதம் – நி2

சிலப்பதிகாரம் ஊர்காண் காதையில் பின்வரும் பாடல் உள்ளது
“ச ரி க ம ப த நி யென்று ஏழெழுத்தால் தானம்
வரிபரந்த கண்ணினாய் வைத்துத் – தெரிவரிய
ஏழிசையும் தோன்றும் இவற்றுள்ளே பண்பிறக்கும்
சூழ்முதலாம் சுத்தத் துளை” ஏழு சுரங்களுக்கு தமிழிசையில் நமக்கு கிடைத்த முதல் வாக்கியங்கள் இவையே.

ச – ப வரிசையை
குரல் – இளி என தமிழிசையில் குறிப்பிட்டு வந்துள்ளனர்.

“அகநிலைக்குரிய நரம்பின திரட்டி
நிறை, குறை கிழமை பெறுமென மொழிப”
மேற்கூறிய சிலப்பதிகார வரிகள்படி, சுர வரிசையை குறை, நிறை எனவும் பகுத்துள்ளனர் எனத் தெரிகிறது.

ஏழு சுரங்களையும் குறை, நிறை உள்ளவையெனப் பாகுபடுத்தி அவற்றை மேலும் 12 சுரங்களாக விரித்துள்ளனர். ஆங்கில எழுத்துக்கள் மூலம் சுலபமாக இவற்றைக் குறிக்க முடியும்.

ச – ஷட்ஜம் – குறை, நிறை கிடையாது – S
ரி – சுத்தரிஷபம் -குறை – R2
ரி – சதுசுருதிரிஷபம் – நிறை. – R3
க – சாதாரண காந்தாரம் -குறை – G2 = R3
க – அந்தரகாந்தாரம் – நிறை – G3
ம – சுத்தமத்யமம் – குறை -M1
ம – பிரதிமத்யமம் – நிறை – M2
ப – பஞ்சமம் -P
த – சுத்த தைவதம் – குறை – D1
த – சதுசுருதி தைவதம் – நிறை – D2=N1
நி – கைசிகி நிஷாதம் – குறை – D3=N2
நி – காகலி நிஷாதம் – நிறை- N3
இதில் ச-ப எனும் ஒலி நிலைகளில் நிறை/குறை நிலைகள் கிடையாது. ஷட்ஜம் முதல் நிஷாதம் வரையிலான சுரக்கோர்வையை ஸ்தாயி எனக்கூறுவர். தமிழிசை மரபில் இதற்கு மண்டிலம் என்றும் பெயருண்டு.

“வட்டம் என்பது வகுக்கும் காலை
ஓர் ஏழ் தொடுத்த மண்டிலம் ஆகும்”– சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை.

முதல் மண்டிலத்தின் அலைவரிசை 240 ஹெர்ட்ஸ் எனக்கொண்டால், இரண்டாவதை 480 ஹெர்ட்ஸ் எனப் பண்டைய தமிழிசையில் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு இரட்டித்த குரல் என்றும் பெயர்.இப்படியாக ஏழு சுரங்கள் பன்னிரண்டாகப் பிரிவது போல், இந்தப் பன்னிரண்டும் நுண்ணிய சுரங்களாய் மேலும் இருபத்திரண்டு ஆகப் பிரிக்கலாம்.

மேளகர்த்தா இராகங்களின் மிகநுட்பமான அமைப்பு முறைகளை நோக்குவோம்.

ஒவ்வொரு தாய் ராகத்திலும், எல்லா சுரங்களும் இருத்தல் அவசியம். ஆரோஹணம் (ஏறுநிரல்),அவரோஹணம் (இறங்குநிரல்). இவை இரண்டிலும் சுரங்கள் வரிசைப்படி இருக்க வேண்டும்.

மேல் ச, கட்டாயம் இருத்தல் வேண்டும். அதாவது ஒரு ச, ப இருத்தல் வேண்டும். இரண்டு “ம” க்களில் (மத்யமம்) ஒன்றாவது இருத்தல் வேண்டும். இரண்டு ரி, க வில் ஒன்றாவது இருத்தல் வேண்டும். ஒரு த, நி இருத்தல் வேண்டும்.

 

மேளகர்த்தா இராகங்களும் அவற்றின் நுட்பமான அமைப்பு முறைகளும்

இசைத்தமிழ் வரலாறு -தொடர் – 49சிலப்பதிகாரம் ஊர்காண் காதையில் பின்வரும் பாடல் உள்ளது
“ச ரி க ம ப த நி யென்று ஏழெழுத்தால் தானம்
வரிபரந்த கண்ணினாய் வைத்துத் – தெரிவரிய
ஏழிசையும் தோன்றும் இவற்றுள்ளே பண்பிறக்கும்
சூழ்முதலாம் சுத்தத் துளை”

ஏழு சுரங்களுக்கு தமிழிசையில் நமக்கு கிடைத்த முதல் வாக்கியங்கள் இவையே. ச – ப வரிசையை, குரல் – இளி என தமிழிசையில் குறிப்பிட்டு வந்துள்ளனர்.

“அகநிலைக்குரிய நரம்பின திரட்டி
நிறை, குறை கிழமை பெறுமென மொழிப” 
மேற்கூறிய சிலப்பதிகார வரிகள்படி, சுர வரிசையை குறை, நிறை எனவும் பகுத்துள்ளனர் எனத்தெரிகிறது.

ஏழு சுரங்களையும் குறை, நிறை உள்ளவையெனப் பாகுபடுத்தி அவற்றை மேலும் 12 சுரங்களாக விரித்துள்ளனர். ஆங்கில எழுத்துக்கள் மூலம் சுலபமாக இவற்றைக் குறிக்க முடியும்.

ச – ஷட்ஜம் – குறை, நிறை கிடையாது – S
ரி – சுத்தரிஷபம் -குறை – R2
ரி – சதுசுருதிரிஷபம் – நிறை. – R3
க – சாதாரண காந்தாரம் -குறை – G2 = R3
க – அந்தரகாந்தாரம் – நிறை – G3
ம – சுத்தமத்யமம் – குறை -M1
ம – பிரதிமத்யமம் – நிறை – M2
ப – பஞ்சமம் -P
த – சுத்த தைவதம் – குறை – D1
த – சதுசுருதி தைவதம் – நிறை – D2=N1
நி – கைசிகி நிஷாதம் – குறை – D3=N2
நி – காகலி நிஷாதம் – நிறை- N3

இதில் ச-ப எனும் ஒலி நிலைகளில் நிறை/குறை நிலைகள் கிடையாது. ஷட்ஜம் முதல் நிஷாதம் வரையிலான சுரக்கோர்வையை ஸ்தாயி எனக்கூறுவர். தமிழிசை மரபில் இதற்கு மண்டிலம் என்றும் பெயருண்டு.

“வட்டம் என்பது வகுக்கும் காலை
ஓர் ஏழ் தொடுத்த மண்டிலம் ஆகும்”
சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை.

முதல் மண்டிலத்தின் அலைவரிசை 240 ஹெர்ட்ஸ் எனக் கொண்டால், இரண்டாவதை 480 ஹெர்ட்ஸ் எனப் பண்டைய தமிழிசையில் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு இரட்டித்த குரல் என்றும் பெயர்.

இப்படியாக ஏழு சுரங்கள் பன்னிரண்டாகப் பிரிவது போல், இந்தப் பன்னிரண்டும் நுண்ணிய சுரங்களாய் மேலும் இருபத்திரண்டு ஆகப் பிரிக்கலாம்.

மேளகர்த்தா இராகங்களின் மிகநுட்பமான அமைப்பு முறைகளை நோக்குவோம். ஒவ்வொரு தாய் ராகத்திலும், எல்லா சுரங்களும் இருத்தல் அவசியம். ஆரோஹணம் (ஏறுநிரல்), அவரோஹணம் (இறங்குநிரல்) இவை இரண்டிலும் சுரங்கள் வரிசைப்படி இருக்க வேண்டும்.

மேல் ச, கட்டாயம் இருத்தல் வேண்டும். அதாவது ஒரு ச, ப இருத்தல் வேண்டும்.
இரண்டு “ம” க்களில் (மத்யமம்) ஒன்றாவது இருத்தல் வேண்டும்.
இரண்டு ரி, க வில் ஒன்றாவது இருத்தல் வேண்டும்.
ஒரு த, நி இருத்தல் வேண்டும்.

மேளகர்த்தா ராகசக்கரம்
மேளகர்த்தா இராகங்கள் கருநாடக இசையின் இராகங்களில் ச – ரி – க – ம – ப – த – நி என்ற ஏழு சுரங்களையும் கொண்டவையாகும். வேறுபாடுள்ள சுரங்கள் மாறுவதாலேயே வித்தியாசங்கள் ஏற்படுகின்றன. தாய் இராகம், கர்த்தா இராகம், சம்பூர்ண இராகம், மேள இராகம், ஜனக இராகம் என்ற பெயர்களாலும் இதனை அழைக்கப்பர்.

பன்னிரண்டு சுருதிகளைக் கொண்டு உருவாகும் தாய் இராகங்கள் மொத்தம் 32 தான். இவையே மேள இராகங்கள் என்று கூறப்பட்டன.

மேளகர்த்தா இராகங்களின் வரலாறு

தொடர் – 471550 இல் ராமாமாத்தியா இயற்றிய “சுவரமேளகலானிதி” என்னும் நூலில் இருந்து இதன் வரலாறு தொடங்குகின்றது. ராமாமாத்தியா விசயநகரப் பேரரசில் அவைப் புலவராக இருந்த கள்ளிநாதரின் பேரர் எனக் கருதப்படுகின்றார். இவரே மேளகர்த்தா என்னும் முறைக்குத் தந்தை என்று கருதப்படுகின்றார்.

மேளம் என்பது முறைப்படி அடுக்கப்பட்ட கட்டமைப்பு என்னும் பொருள் கொண்டது. பின்னர் கோவிந்த தீட்சதர் “சங்கீதசுதா” என்னும் நூலை ஆக்கினார்.

கடைசியாக கோவிந்த தீட்சதரின் மகன் வேங்கடமகி, 17ம் நூற்றாண்டில் எழுதிய “சதுர்த்தண்டிப் பிரக்காசிகை” என்னும் நூலில்தான் தற்பொழுது பரவலாக அறியப்படும் மேளகர்த்தா இராகம் அமைப்பு கூறப்பட்டுள்ளது. அவருக்குப்பின் வாழ்ந்த கோவிந்தாச்சாரியார் என்பவர் இயற்றிய “சங்கிரக சூடாமணி” என்னும் நூலில் இருந்தும் மேளகர்த்தாக்களின் வரலாறு அறிய முடிகின்றது.

72 மேளகர்த்தாக்களையும் மூன்று பிரிவுகளாக வெங்கடமகி பிரித்திருக்கிறார். தனது காலத்தில் பிரசித்தமாக இருந்த 19 மேள கர்த்தாக்களை கல்பித மேளகர்த்தக்கள் என்றும், மிகுதி 53 மேளகர்த்தாக்களை கல்ப்யமான மேளகர்த்தாக்கள் என்றும், பிற்காலத்தில் பிரசித்திமாக வரக்கூடியவற்றை கல்பயிஷ்யமான மேளகர்த்தாக்கள் என்றும் பிரித்திருக்கிறார். அனைத்து மேளகர்த்தாக்களுக்கும் அவர் பெயர்கள் கொடுக்கவில்லை.

நூறு வருடங்களுக்குப்பின் தஞ்சை துளசி மகாராஜாவினால் எழுதப்பட்ட “சங்கீத சாராம்ருதம்” எனும் விடயம் காணப்படுகிறதே தவிர 72 மேளகர்த்தாக்களுக்கு பெயர்கள் காணப்படவில்லை.

கிரம, ஸம்பூர்ண, ஆரோகண, அவரோகண முறையுடன் கூடிய மேளங்களைக் குறிக்கும் கனகாங்கி – ரத்னாங்கி பெயர் தொகுதியானது சங்கீத சாராம்ருதத்திற்கு பிற்காலத்தில் ஏற்பட்டது. கோவிந்தாச்சாரியார் இயற்றிய “சங்கிரக சூடாமணி” எனும் சமஸ்கிருத இசை நூலில் முதன் முதலில் இப்பெயர்த் தொகுதியைக் காண்கின்றோம்.

கருநாடக இசையில் 72 மேளகர்த்தாச் சக்கரத்தின் அமைப்பு முக்கியமானது. இந்த அமைப்பைக் கொண்டு எந்தவொரு இலக்கம் உள்ள மேளகர்த்தா இராகத்தின் அடையாளப் பண்பையும் (இராக லட்சணத்தையும்) எளிதில் அறிந்து கொள்ளலாம்.

இந்த 72 மேளகர்த்தாச் சக்கரம் கர்நாடக சங்கீதத்திற்கு மகுடம் போன்றது என்பர். இம் முறையை வேங்கடமகி தாம் இயற்றிய சதுர்த்தண்டிப்பிரகாசிகை என்னும் நூலில் விளக்கியுள்ளார்.

ஒரு கட்டையில் (ஸ்தாயியிலுள்ள) 12 சுரங்கள் உள்ளன என்பது பல நாட்டு இசைக்கும் பொதுவானது. இந்த 12 சுரங்களைக் கொண்டு பின்னி விரிவாக்கப்பட்டிருக்கும் 72 மேளகர்த்தாக்கள், பிற நாட்டு இசை இலட்சண, இலட்சிய கலைஞர்களும் போற்றும் ஒன்றாகும்.

வேங்கடமகி என்பவர் தமது “சதுர்த்தண்டிப் பிரகாசிகை” என்னும் நூலில் 12 சுருதித் தானங்களையே 16 ஆக மாற்றி (ரி, க,த, நி ஆகியவற்றை முறைமீறி ஒவ்வொன்றும் 3 பகுதிகளாகக் கொண்டு) 72 மேளகர்த்தா இராகங்களாக ஆக்கினார்.

இன்றைய மரபில் 72 மேளகர்த்தா இராகம் என்பதே பெருவழக்கு ஆகும். இவற்றிலிருந்து பிறந்த இராகங்கள் (ஜன்னிய இராகங்கள்) தோன்றுகின்றன.

72 மேளகர்த்தாக்களும் 16 பெயர்களுடன் 12 சுரத்தான அடிப்படையில் அமைந்துள்ளன. இந்த 72 மேளகர்த்தா ராகங்களை,  பனிரெண்டு குழுக்களாக பிரித்துள்ளனர். ஆக மொத்தம் 12 சக்கரங்கள். ஒவ்வொன்றிலும் ஆறு ராகங்கள் இருக்கும்.

ஜனக இராகங்கள் அல்லது தாய் இராகங்கள் ஐந்து விதிகளைத் தழுவி அமைக்கப்பட்டுள்ளது.
1. சம்பூர்ண ஆரோகணம் அவரோகணம் அல்லது ஏழுசுர ஏறுவரிசை இறங்கு வரிசை.
2. கிரம சம்பூர்ண ஆரோகண அவரோகணம் அல்லது வரிசைப்படியான ஏறு இறங்கு வரிசைகள்.
3. ஆரோகணத்தில் வரும் சுரத்தானங்களே அவரோகணத்திலும் வருதல்.
4. ஆரோகண அவரோகணம் அஷ்டகமாக அமைந்திருத்தல்.
5. மத்தியஸ்தாயி ஷட்ஜத்திலிருந்து மேல்ஸ்தாயி ஷட்ஜம் வரை சுரங்கள் ஒழுங்காகச் செல்லுதல்.

72 மேளகர்த்தாச் சக்கரம் இரு சரிசமமான பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் வரும் 36 மேளகர்த்தாக்களுக்கு பூர்வ மேளகர்த்தாக்கள் என்றும் இரண்டாம் பாகத்தில் வரும் 36 மேளகர்த்தாக்களுக்கு உத்தர மேளகர்த்தாக்கள் என்றும் பெயர்.

1-36 மேளகர்த்தாக்களில் சுத்த மத்திம சுரமும், 37- 72 மேளகர்த்தாக்களில் பிரதி மத்திம சுரமும் வருவதால் பூர்வ மேளகர்த்தாக்களை சுத்த மத்திம மேளகர்த்தாக்கள் என்றும், உத்தர மேளகர்த்தாக்களை பிரதி மத்திம மேளகர்த்தாக்கள் என்றும் அழைப்பர்.

பூர்வ பாகத்திலும், உத்தர பாகத்திலும் மேளகர்த்தா இராகங்கள் ஒரே விதமான வரிசை முறைப்படி வருகிறன.

72 மேளகர்த்தாக்களும் 12 சிறிய சக்கரங்களாக வகுக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு சக்கரத்திலும் இருக்கும் ராகங்களில் தைவதமும், நிஷாதமும் மட்டுமே மாறுபடும்.

இந்தப் பன்னிரண்டு சக்கரங்களுக்கும் கீழ்க்கண்டவாறு பெயர்கள் இடப்பட்டுள்ளன. இந்தப் பெயர்கள் அந்தச் சக்கரத்தின் எண்ணைக் குறிக்கும் குறியீட்டுச் சொற்கள்.

இசைத்தமிழ் வரலாறு- தொடர் – 48சுத்த மத்திம இராகங்கள் (பூர்வ மேளகர்த்தாக்கள்)
01 – இந்து (நிலவு , ஒரே நிலவு)
02 – நேத்ரம் (இரு கண்கள்)
03 – அக்னி (மூன்று வகை வேள்வித் தீ, முத்தீ).
04 – வேதம் (நான்கு வேதங்கள்)
05 – பாணம் (மன்மதனின் ஐந்து பாணங்கள்)
06 – ருது (ஆறு ருதுக்கள், அதாவது பருவ காலங்கள்)

பிரதி மத்திம இராகங்கள் (உத்தர மேளகர்த்தாக்கள்)
07 – ரிஷி (சப்த ரிஷிகள்)
08 – வசு (அஷ்ட வசுக்கள்)
09 – பிரம்மா (நவ பிரம்மாக்கள்)
10 – திசி (பத்து திசைகள் – எட்டுடன் மேல் கீழ் சேர்ந்து)
11 – ருத்ரர் (ஏகாதச ருத்ரர்கள்)
12 – ஆதித்யர் (துவாதச ஆதித்யர்கள்).

இந்தப் பன்னிரண்டு சக்கரங்களுக்கும் உரிய இராகங்கள் எவையெனப் பார்ப்போம். தொடர்ந்து இந்த வகை இராகங்களின் விரிவுகள், அமைப்பு முறைகள் பற்றியும் தொடர்ந்து வரும் தொடர்களில் காண்போம்.

சுத்த மத்திம இராகங்கள் (பூர்வ மேளகர்த்தாக்கள்)

இந்து (நிலவு , ஒரே நிலவு)
01 – கனகாங்கி
02 – ரத்னாங்கி
03 – கானமூர்த்தி
04 – வனஸ்பதி
05 – மானவதி
06 – தானரூபி

நேத்ரம் (இரு கண்கள்)
07 – சேனாவதி
08 – ஹனுமத்தோடி
09 – தேனுகா
10 – நாடகப்பிரியா
11 – கோகிலப்பிரியா
12 – ரூபவதி

அக்னி (மூன்று வகை வேள்வித் தீ, முத்தீ)
13 – காயாகப்பிரியா
14 – வகுளாபரணம்
15 – மாயாமாளவகெளளை
16 – சக்கரவாகம்
17 – சூர்யகாந்தம்
18 – ஹாடகாம்பரி

வேதம் (நான்கு வேதங்கள்)
19 – ஐந்காரத்வனி
20 – நடபைரவி
21 – கீரவாணி
22 – கரகரப்பிரியா
23 – கெளரிமனோகரி
24 – வருணப்பிரியா

பாணம் (மன்மதனின் ஐந்து பாணங்கள்)
25 – மாரரஞ்சனி
26 – சாருகேசி
27 – சரசாங்கி
28 – ஹரிகாம்போஜி
29 – தீரசங்கராபரணம்
30 – நாகாநந்தினி

ருது (ஆறு ருதுக்கள், அதாவது பருவ காலங்கள்)
31 – யாகப்பிரியா
32 – ராகவர்த்தனி
33 – காங்கேயபூஷணி
34 – வாகதீச்வரி
35 – சூலினி
36 – சலநாட

பிரதி மத்திம இராகங்கள் (உத்தர மேளகர்த்தாக்கள்)

ரிஷி (சப்த ரிஷிகள்)
37 – சாலகம்
38 – ஜாலவர்ணவம்
39 – ஜாலவராளி
40 – நவநீதம்
41 – பவானி
42 – ரகுப்பிரியா

வசு (அஷ்ட வசுக்கள்)
43 – கவாம்போதி
44 – பவப்பிரியா
45 – சுபபந்துவராளி
46 – ஷட்விதமார்க்கிணி
47 – சுவர்ணாங்கி
48 – திவ்யமணி

பிரம்மா (நவ பிரம்மாக்கள்)
49 – தவளாம்பரி
50 – நாமநாராயணி
51 – காமவர்த்தனி
52 – ராமப்பிரியா
53 – கமனாச்ரம
54 – விஷ்வம்பரி

திசி (பத்து திசைகள் – எட்டுடன் மேல் கீழ் சேர்ந்து)
55 – சியாமளாங்கி
56 – சண்முகப்பிரியா
57 – சிம்மேந்திரமத்திமம்
58 – ஹேமவதி
59 – தர்மவதி
60 – நீதிமதி

ருத்ரர் (ஏகாதச ருத்ரர்கள்)
61 – காந்தாமணி
62 – ரிஷ்பப்பிரியா
63 – லதாங்கி
64 – வாசஸ்பதி
65 – மேசைகல்யாணி
66 – சித்ராம்பரி

ஆதித்யர் (துவாதச ஆதித்யர்கள்)
67 – சுசரித்ர
68 – ஜோதிஸ்வரூபிணி
69 – தாதுவர்த்தனி
70 – நாசிகாபூஷணி
71 – கோசலம்
72 – ரசிகப்பிரியா

தமிழிசையின் கூறுகள்கருநாடக இசையின் இராகங்கள் ச- ரி- க- ம- ப- த- நி ஆகிய ஏழு சுரங்களையும் கொண்டவையாகும். சுரங்கள் மாறுவதாலேயே மேளகர்த்தா இராகங்கள் உருவாக்கப் படுகின்றன. இதைத் தாய் இராகம், கர்த்தா இராகம், சம்பூர்ண இராகம், மேள இராகம், ஜனக இராகம் என்ற பெயர்களாலும் அழைப்பர்.

ச – சட்சம்
ரி – ரிஷபம்
க – காந்தாரம்
ம – மத்யமம்
ப – பஞ்சமம்
த – தைவதம்
நி – நிஷாதம்

இந்த ஏழு சுரங்களும் பிரக்ருதிஸ்வரம், விக்ருதிஸ்வரம் என இரு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. பிரக்ருதிஸ்வரம் என்றால் பேதமற்ற சுரங்களான சட்சம் பஞ்சமம் ஆகும். விக்ருதிஸ்வரங்கள் என்றால் பேதமுள்ள சுரங்களான ரிஷபம், காந்தாரம், மத்யமம், தைவதம், நிஷாதம் ஆகிய சுரங்கள் ஒவ்வொன்றும் மாறுகின்றன.

ரி, க, ம, த, நி ஆகிய ஜந்து (5) சுரங்களும் ஒவ்வொன்றும் இரண்டு சுரங்களாக மாறும்போது பத்து சுரங்களாகின்றன. இவற்றுடன் பிரக்ருதி சுரங்களாகிய சட்சம், பஞ்சமம் ஆகிய இரண்டு சுரங்களும் சேரும்போது அவை பன்னிரண்டு சுரங்களாகின்றன.

ச – ஷட்ஜம் – குறை, நிறை இல்லை
ரி – சுத்தரிஷபம் -குறை
ரி – சதுசுருதிரிஷபம் – நிறை.
க – சாதாரண காந்தாரம் -குறை
க – அந்தரகாந்தாரம் – நிறை
ம – சுத்தமத்யமம் – குறை
ம – பிரதிமத்யமம் – நிறை
ப – பஞ்சமம் – குறை, நிறை இல்லை
த – சுத்த தைவதம் – குறை
த – சதுசுருதி தைவதம் – நிறை
நி – கைசிகி நிஷாதம் – குறை
நி – காகலி நிஷாதம் – நிறை

வேங்கடமகி என்பவர், தமது சதுர்த்தண்டிப் பிரகாசிகை என்னும் நூலில், 12 சுருதித் தானங்களையே பதினாறாக (ரி,க, த,நி) ஆகியவற்றை ஒவ்வொன்றும் மூன்று பகுதிகளாகக் கொண்டு 72 மேளகர்த்தா இராகங்களை ஆக்கினார். இன்றைய மரபில் 72 மேளகர்த்தா இராகம் என்பதே பெருவழக்கு ஆகும். இவற்றிலிருந்து பிற பிறந்த இராகங்கள் (ஜன்னிய இராகங்கள்) தோன்றுகின்றன.

72 மேளகர்த்தாக்களும் 16 பெயர்களுடன் பன்னிரண்டு சுரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன.

16 சுரங்கள் வருமாறு (துணை)

ச – சட்சம் – வேறுபாடில்லை
————————
ரி1 – சுத்த ரிஷபம்
ரி2 – சதுஸ்ருதி ரிஷபம்
ரி3 – ஷட்ஸ்ருதி ரிஷபம்
————————
க1 – சாதாரண காந்தாரம்
க2 – அந்தர காந்தாராம்
க3 – சுத்த காந்தாரம்
————————
ம1 – சுத்த மத்தியமம்
ம1 – பிரதி மத்தியமம்
————————
ப – பஞ்சமம் – வேறுபாடில்லை
————————
த1 – சுத்த தைவதம்
த2 – சதுஸ்ருதி தைவதம்
த3 – ஷட்ஸ்ருதி தைவதம்
————————
நி1 – கைஷகி நிஷாதம்
நி2 – காகலி நிஷாதம்
நி3 – சுத்த நிஷாதம்
————————

சில சுரங்களை வேறு சுரங்களாக நினைத்துக் கொண்டு அதாவது அந்த சுரஸ்தானத்தில் பாடுதல் கருநாடக சுர வகைக்கு மட்டுமே உள்ள ஒரு சிறப்பு அம்சமாகும்.
ரி3 = க1
க3 = ரி2
த3 = நி1
நி3 = த2

சட்சம் : ரிஷபம் முதல் நிஷாதம் வரையிலுள்ள 6 ஸ்வரங்களையும் பிறப்பிக்க முன்னோடியாக இருப்பதால் முதல் சுரம் சட்சம் எனப்பட்டது. (வடமொழியில், ஷட் – ஆறு)

ரிஷபம் : இதயத்திலிருந்து வெளிப்படுவதாலும், பசுக் கூட்டங்களில் ரிஷபம் பலமுடையதாக இருத்தல் போல், சுரக் கூட்டங்களில் இரண்டாமிடத்தில் கம்பீரமாக இருப்பதாலும், இரண்டாம் சுரம் ரிஷபம் எனப்பட்டது.

காந்தாரம் : காந்தர்வ சுகத்தைப் பிரதிபலிக்கும் தன்மை வாய்ந்ததால், மூன்றாம் சுரம் காந்தாரம் எனப்பட்டது.

மத்திமம் : ஏழு சுரங்களின் மத்திய நிலையை வகிப்பதால் நான்காம் சுரம் மத்திமம் எனப்பட்டது.

பஞ்சமம் : ஏழு சுரங்களின் வரிசையில் ஐந்தாம் இடத்தைப் பெறுவதால், ஐந்தாம் சுரம் பஞ்சமம் எனப்பட்டது. (வடமொழியில் பஞ்ச – ஐந்து)

தைவதம் : தெய்வ சம்பந்தமானதாலும், தைரியத் தன்மையை அடைந்துள்ளதாலும் ஆறாம் சுரம் தைவதம் எனப்பட்டது.

நிஷாதம் : ஷட்ஜம் முதல் ஆறு சுரங்களும் தன்னிடம் முடிவு பெற்றதால், ஏழாவது சுரம் நிஷாதம் எனப்பட்டது.

ஜன்னிய இராகங்கள்
மேளகர்த்தா ராகங்ககளிலிருந்து பிறந்த இராகங்கள் ஜன்னிய இராகங்கள் ஆகும். மேளகர்த்தா இராகங்களை தாய் இராகங்கள் என்றும் ஜன்னிய இராகங்களை செய் இராகங்கள் என்று அழைப்பர். ஒவ்வொரு ஜனக (மேளகர்த்தா) இராகத்துக்கும் அநேக ஜன்னிய இராகங்கள் இருக்கின்றன.

ஜன்னிய இராகங்களில் ஆரோகணத்திலோ, அவரோகணத்திலோ அல்லது இரண்டிலுமோ ஒரு சுரம் அல்லது இரண்டு சுரங்கள் குறைந்திருக்கும். இத்தகைய இராகங்களை வர்ஜ இராகங்கள் என்றும், விளக்கப்பட்ட சுரங்களை வர்ஜ சுரங்கள் என்றும் அழைக்கப்படும்.

ஒரு சுரம் விலக்கப்பட்டு வந்தால் ஷாடவ இராகம் என்றும், இரண்டு சுரங்கள் விலக்கப்பட்டு வந்தால் ஒளடவ இராகம் என்றும் அழைப்பர். மூன்று சுரங்கள் விலக்கபட்டு வரும் இராகங்களும் உண்டு.

இசைத்தமிழ் வரலாறு – இசையமுதம் : தொடர் 44 – 50
சிறீ சிறீஸ்கந்தராஜா
05/12/2014 – 09/01/2015

தொகுப்பு – thamil.co.uk