மூக்கிரட்டை

மூக்கிரட்டை-thamil.co.ukமூலிகையின் பெயர் – மூக்கிரட்டை
தாவரப்பெயர் – BOERHAAVIA DIFFUSA
தாவரக்குடும்பம் – NYCTAGINACEAE
வேறு பெயர்கள் – மூக்குறட்டை, சாட்டரணை, மூச்சரைச்சாரணை முதலியன
பயன்தரும் பாகங்கள் – இலை, தண்டு, வேர் விதை முதலியன.

வளரியல்பு – மூக்கிரட்டை தரையோடு படர்ந்து வளரும் சிறுகொடி. இலைகள் மேல்புறம் பச்சையாகவும் கீழ்புறம் வெழுத்து சாம்பல் நிறத்திலும் நீள்வட்டமாக எதிர் அடுக்கில் இருக்கும். செந்நிறச் சிறு பூக்களையும் சிறு கிழங்கு போன்ற வேர்களையும் உடைய கொடி. இது தமிழகமெங்கும் தோட்டங்களிலும், தரிசு நிலங்களிலும் தானே வளர்கிறது. சாலையோரங்களிலும், வாய்கால் போன்ற இடங்களிலும் காணப்படும் கழைக்கொடி.  சிறிது வேர் இருந்தாலே ஈரம் பட்டவுடன் தளைத்துவிடும். இதன் தாயகம் இந்தியா பின் பசிபிக்கிலும், தென் அமரிக்காவிலும் பரவிற்று. இது செப்டம்பர் முதல் டிசம்பர் மாதங்களில் பூத்துக்காய்க்கும். விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள்
ஒருபிடி வேரும், 4 மிளகும் 100 மி.லி. விளக்கெண்ணையில் வாசனை வரக் காய்ச்சி ஆறவிட்டு வடிகட்டி வைத்துக் கொண்டு
6 மாதக் குழந்தைக்கு 15 மி.லி.
அதற்கு மேல் 30 மி.லி. வாரம் 1
அல்லது 2 முறை கொடுத்துவர மலச்சிக்கல், மூலச்சூடு, நமைச்சல், சொறி சிரங்கு, மலக்கழிச்சல், வாந்தி,செரியாமை ஆகியவை தீரும். மாலையில் வசம்பு சுட்ட கரியைப் பொடி செய்து தேனில் உட்கொள்ளவும்.

ஒருபிடி வேர், மிளகு 4, உந்தாமணிச்சாறு 50 மி.லி. ஆகியவற்றை 100 மி.லி. விளக்கெண்ணையில் காய்ச்சி வாரம் 2 முறை மேற்கண்ட முறையில் சொன்னவாறு கொடுத்து வர குழந்தைகளுக்குக் காணும் காமாலை, கப இருமல், சளி, மாந்த இழுப்பு, அடிக்கடி சளி, காய்ச்சல் வருதல் குணமாகும்.

ஒருபிடி மூக்கிரட்டை வேர், அருகம்புல் 1 பிடி, மிளகு 10 எண்ணிக்கை இவற்றைச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 3 வேளையாகத் தினமும் குடித்து வர கீல்வாதம், ஆஸ்மா, கப இருமல், மூச்சுத் திணறல் தீரும்.

வேர் ஒரு பிடி, அருகம்புல் ஒரு பிடி, கீழாநெல்லி ஒரு பிடி, மிளகு 10 சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி தினம் 2 வேளை சாப்பிட்டு வரக் காமாலை, நீர் ஏற்றம், சோகை, வீக்கம், நீர்கட்டு, மகோந்தரம் தீரும்.

மூக்கிரட்டை-thamil.co.ukஇலையைப் பொறியல், துவையலாக வாரம் 2 முறை சாப்பிட்டு வரக் காமாலை, சோகை, வாயு நோய்கள் வராமல் தடுக்கலாம்.

வேரை உலர்த்திப் பொடித்துக் காலை, மாலை ஒரு சிட்டிகை தேனில் கொள்ள மாலைக் கண், கண்படலம், பார்வை மங்கல் ஆகியவை குணமாகும்.

கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து கழற்சிக் காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் உட்கொள்ள மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து தீரும்.

இலையைத் தொடர்ந்து பயன்படுத்தி வரப் பொலிவும் இளமையும் வசீகரமும் உண்டாகும்.

இதன் இலைகளை சுத்தம் செய்து நன்கு அரைத்து நெல்லிக் காயளவு எடுத்து கால் ஆழாக்கு கருங்குறவை அரிசியில் சேர்த்து சமைத்து அந்த மாவை அடையாகத் தட்டி வாணலியில் அதிக எண்ணெய்யிட்டு அதை வேகவைத்து வேளைக்கு ஒரு அடை வீதம் காலை, மாலை 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும். அப்போது தவிர்க்க வேண்டியவை காரம், மீன், கருவாடு, ஆகியவை.

மூக்கிரட்டைப் பட்டை வேர்-20 கிராம், மாவிலங்கு மரப்பட்டை-20 கிராம், வெள்ளைச் சாரணை வேர்-20 கிராம் மூன்றையும் பொடியாக இடித்து முதல் நாள் இரவில் 250 மி.லி. தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். 50 மி.லி. வரும் வரை கொதிக்க வைத்து இறக்கி வைத்து ஆறவிட்டு வடிகட்ட வேண்டும். இத்துடன் 60 மி.லி. கிராம் நண்டுக்கல் பற்பம் சேர்க்க வேண்டும். தினமும் பல் துலக்கியதும் இதை அருந்திவர 2,3 மாதங்களில் முகவாத நோய் நிரந்தர குணம் ஏற்படும்.

மூக்கிரட்டை பெயரில் மட்டும் அல்ல குணத்திலும் வித்தியாசமான மூலிகைத் தாவரம். தரையில் கொடியாகப் படர்ந்து வளரும் இந்தத் தாவரத்தை மூக்குறட்டை, மூச்சரைச்சாரனை, சாட்டரணை என்றும் சொல்வார்கள். மூக்கிரட்டையின் வேரை உலர்த்திச் சுத்தப்படுத்தி, பொடி (சூரணம்) செய்து மருத்துவத்துக்குப் பயன்படுத்தலாம். வேர்ச் சூரணமும் வேர்ப்பட்டைச் சூரணமும் தனித்தனியாக மருந்துக்குப் பயன்படுகிறது.

மூக்கிரட்டை வேர்ப்பட்டைச் சூரணம் 20 கிராம், மாவிலங்க மரப்பட்டைச் சூரணம் 20 கிராம், வெள்ளைச் சாரணை வேர்ச்சூரணம் 20 கிராம் ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கலந்து 250 மி.லி. தண்ணீரில் இட்டு இரவில் ஊறவைத்துவிட வேண்டும். காலையில் அதனை 50 மி.லி. ஆகும் வரை நன்கு கொதிக்கவைத்து, பின்னர் ஆறவைத்து வடிகட்டி கஷாயத்தைத் தனியே எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தக் கஷாயத்தில் 60 மி.லி. நண்டுக்கல் பற்பம் சேர்த்து தினமும் காலை பல் துலக்கியதும் வெறும் வயிற்றில் உட்கொண்டுவர 60 முதல் 90 நாட்களுக்குள்ளாக முகவாத நோயில் இருந்து நலம் பெறலாம்.

மூக்கிரட்டை வேர்ச் சூரணத்தை காலை, மாலை இரு வேளை ஒரு சிட்டிகை அளவு எடுத்து, தேனுடன் சேர்த்துத் தினமும் சாப்பிடலாம். இதனால், மங்கலான பார்வை தெள்ளத் தெளிவாகும். மாலைக்கண் நோய் தீரும்.

மூக்கிரட்டை வேர், அருகம்புல், கீழா நெல்லி ஆகிய மூன்றையும் தலா ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு, அதில் 10 மிளகை பொடித்துச் சேர்த்து அரை லிட்டர் தண்ணீரில் இட்டு கால் லிட்டர் ஆகும் வரை நன்கு கொதிக்கவிட வேண்டும். சூடு தணிந்த பின் வடிகட்டி, அந்தக் கஷாயத்தை தினம் காலை, மாலை இரு வேளை உட்கொண்டால், காமாலை, வீக்கம், நீர்க்கட்டு, நீர் ஏற்றம், சோகை போன்ற நோய்களில் இருந்து குணம் பெறலாம்.

மூக்கிரட்டை வேரும் அருகம்புல்லும் தலா ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அதில் 10 மிளகைப் பொடிசெய்து சேர்த்துக் கொள்ளவும். இந்தக் கலவையை அரை லிட்டர் தண்ணீரில் கலந்து கால் லிட்டர் ஆகும் வரை நன்கு கொதிக்கவைக்க வேண்டும். ஆறிய பின் வடிகட்டி, அந்தக் கஷாயத்தை தினமும் மூன்று வேளைக்கு உட்கொள்ள வேண்டும். இதனால் கப இருமல், ஆஸ்துமா போன்ற நோய்கள் குணமாவதோடு கீழ் வாதமும் மூச்சுத் திணறலும் தீரும்.

மூக்கிரட்டை கீரையின் விதைகள் ஆண்களின் இயலாமையை போக்க வல்லது. மேலும் விறைப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்வது. விந்தணுக்களின் எண்ணிக்கையையும், ஆரோக்கியத்தையும் பெருக்க வல்லது. ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகளுக்கு ஆரோக்கியத்தையும் பலத்தையும் தரவல்லது.

தோல் நோய்களுக்கு ஓர் நல் மருந்து. குறிப்பாக அரிப்புடன் கூடிய தோல் நோய் மற்றும் ‘கினியாவார்ம்’ என்னும் படை நோயைக் குணப்படுத்த வல்லது.

சிறுநீரகக் கோளாறுகளான சிறுநீரக வீக்கம், சிறுநீரக கற்கள், சிறுநீரகப் பழுது ஆகியவற்றை குணப்படுத்த வல்லது.

பித்தப்பையை சரியாக இயங்க வைப்பது. அதிக மாதவிடாய் ஒழுக்கைத் தணிக்க கூடியது. ஈரல் கட்டிகளைத் தடை செய்ய வல்லது ரத்தத்தில் உள்ள “யூரிக்” அமிலத்தை கட்டுக்குள் வைக்க உதவுவது. மூக்கிரட்டை வாதத்தையும் (வாயு) சீதத்தையும் (குளிர்ச்சி) கட்டுப்படுத்த உதவுவது.

இதனால் வாயுப் பிடிப்பால் ஏற்படும் வலிகளையும் சீத மிகுதியால் ஏற்படும் சளி, இருமல், ஆஸ்துமா நோய்களும் குணமாகும்.

மூக்கிரட்டைக் கீரையைச் சுத்தம் செய்து சமைத்தோ அல்லது சமூலத்தை (இலை, கொடி, வேர், காய் அனைத்தும்) சுத்திகரித்து நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு மூன்று முதல் ஐந்து கிராம் வரை அந்தி சந்தி என இருவேளை ஒரு மண்டலம் சாப்பிடுவதால் மூக்கை அடிப்படையாக கொண்ட சுவாசப் பிணிகள் அகலும்.

மூக்கிரட்டைச் சமூலத்தை தினம் இருவேளை சாப்பிட்டு வருவதால் மலச்சிக்கல் முற்றிலும் நீங்கி உடல் அழகும் இளமையும் பெறும்.

மூக்கிரட்டை வேரைக் குடிநீராக்கிக் குடிப்பதால் (5 கிராம் முதல் 10 கிராம் வரை) கீல்வாதம், இரைப்பு நோய், காமாலை, நீர்க்கட்டு, பெருவயிறு, சோகை ஆகியன குணமாகும்.

மூக்கிரட்டை கீரையின் வேரை சிதைத்து சிற்றிமணக்கு எண்ணெயில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு வெறும் வயிற்றில் உள்ளுக்கு கொடுக்க கழிச்சலை உண்டாக்கும். இதனால் உடலில் தேங்கிக் கிடக்கும் நச்சுக்கள் மலத்துடன் வெளியேறுவதால் உடலில் ஏற்படும் தோல் நோய்கள், நமைச்சல், வாத நோய்கள் அத்தனையும் போகும். இதை உள்ளுக்குள் கொடுக்கும் போது வயது, எடை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உபயோகிப்பது நலம். முதலில் சோதனைக்காக சிறிதளவு கொடுத்துபின் அளவைத் தீர்மானிக்கலாம். சில வாரங்கள் இதைத் தருவது நலம் பயக்கும்

-தமிழும் சித்தர்களும்
-மூலிகைவளம்
BOERHAAVIA DIFFUSABotanical name – Boerhaavia diffusa

Description – Boerhaavia diffusa is a subscandent or diffuse, herbaceous. Stems divaricately branched, slender cylindric and pubescent, purplish. Opposite pairs of leaves at each nodes, very unequal green and glabrous and somewhat pink in colour. Small pink or purple flowers in umbels with long pedicels. Fruits glandular along the ribs, highly viscid and 1 seeded.

Chemical Constituents– Root contains alkaloid punamavine, C-methylflavone, rotenoid analogues boeravinone A, B, C, D, E, F, anuno acids, fatty acids, hentriacontanes, beta-sitosterol. Plant contains crystalline acid.

Uses – The drug is a diuretic, laxative, expectorant and stomachic. It is useful in oedema. Anaemia, jaundice, ascites, anasarca, scanty urine and inflammation. The whole plant, particularly the roots, leaves and seeds. The active principle of the herb is the alkaloid Punarnavine. The plant is diuretic, aphrodisiac, Cardiac-Stimulant, and useful in all types of inflammations. The hot poultice made by the whole plant is applied to Ulcers, abscesses and skin diseases. It is recommended for asthma in small doses. Large dose brings vomiting.

-ayurvediccommunity.com