கற்றாழை Aloe

குமரிக் கற்றாழை மூலிகையின் பெயர்  – குமரி
வேறு பெயர்கள்   சோற்றுக் கற்றாழை, கன்னி, தாழை.
தாவரப்பெயர் –  Aloe barbadensis Linn, Liliaceae, Aloevera, Aloeferox, Aloeafricana, Aloe, spicata, Aloe perji.

வளரும்தன்மை சதைப்பற்றுடன் கூடிய தடிப்பான அடுக்குமடல் கொண்ட செடிவகை. கற்றாழை மடல்கள் இருபுறமும் முள்போல் சொரசொரப்பான ஓரங்களைக் கொண்டிருக்கும், பக்கக் கன்றால் உற்பத்தியைப் பெருக்கும். இலையில் உணவை சேமித்து வைக்கும் ஒரு வகையான செடி,  நீர் இல்லாத இடத்தில்கூட வளரக்கூடியன.

குமரி என்ற பெயருக்கு இரண்டு வகையான காரணங்கள்.
1.உலகிலே முதன் முதலில் மனிதர்கள் தோன்றியதாக கருத்தப்படும் லெமூரியா கண்டம் எனப்படும் குமரி கண்டம் என்று வரலாற்று ஆய்வாளர் கூறுகின்றனர். குமரி கண்டம் என பெயர் வருவதற்கு குமரி என்ற கற்றாழை அதிகம் இருந்ததே காரணம்.
2.இளம் பெண்களுக்கு குமரி என்ற இன்னுமொரு பெயரும் உண்டு. இளம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தொடர்பான நோய்களுக்கு கற்றாழை நல்ல மருந்து.

பயன்படும் உறுப்புக்கள் – இலை மற்றும் வேர்.

பயன்படுத்தும்முறை: தோலை சீவி உள் இருக்கும் சோற்றை 7 முறை தண்ணீரில் கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். கற்றாழை சோற்றில் Aloin என்ற வேதிப்பொருள் இருக்கின்றது. நன்கு கழுவாது சாப்பிடும்பொழுது வயிற்றுப்போக்கு ஏற்படும்.

மருந்துகள்: 1.குமரி இளகம்  2.மூசாம்பர மெழுகு  3. கற்றாழை மணப்பாகு

கற்றாழைமருத்துவ பயன்கள்

தோல் நீக்கிய சோற்றை ஏழு முறை கழுவி கசப்பு நீக்கி குழம்பாகச் சமைத்துண்டால் தாதுவெப்பு அகன்று தாகந்தணியும், மலச்சிக்கல் போகும்.

தோல் நீக்கிய சோறு கசப்பில்லாத வகையும் உள்ளது. ஒரு வகை இனிப்புக் கூழ் மூலநோயிக்கு மருந்தாகும். சோற்றை கரண்டியளவு உள்ளுக்கு சாப்பிட்டு வர வெப்ப நோய்கள் யாவும் தீரும். அடிபட்ட வீக்கங்களுக்கு வைத்து கட்டி வர வீக்கம் தீரும் (குமரி பூச்சு).

கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின்சாறு பயன்படுகிறது.

இதன் ஜெல் தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும். முக அழகு சாதனமாகப் பயன்படுகிறது.

இலை மஞ்சள் நிறத் திரவமும் (கரியபோளம்) தேனும் கலந்துண்டால் இருமல் சளி போகும். வயிற்றில் உள்ள நாக்குப்பூச்சிகளை வெளியேற்றுகிறது.

எரிசாராயத்துடன் கலக்கி முடிக்குப் போட முடிவளரும், நிறம் கருமையடையும்.

முக அழகு கொடுக்கும் எல்லா களிம்புகளிலும் கற்றாழை சேர்க்கப்படுகிறது. கற்றாழை சோற்றை நன்றாக மிக்சியில் அரைத்து முகத்தில் பூசி வரலாம். முகம் பளபளப்பாக மாறி விடும். இதனை குமரி களிம்பு என்பர்.

குமரி பக்குவம் – இளம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தொடர்பான நோய்களுக்கு கற்றாழை சோற்றை சர்க்கரையுடன் கலந்து நன்றாக மிக்சியில் அரைத்து கரண்டியளவு சாப்பிட தீரும்.

குமரி எண்ணெய் – கற்றாழை சோற்றை எண்ணெய் சேர்த்து தைலம் பண்ணி தலைக்கு தேய்த்து வர முடி நன்றாக கருமையாக வளரும். தூக்கம் சிறப்பாக வரும்.

மூசாம்பரம் – கற்றாழையைக் கீறும்போது வடியும் பாலினை காயவைத்து கிடைக்கும் பொருளுக்கு மூசாம்பரம் என்று பெயர். இதனை இரத்த கட்டிற்கு நீரில் அரைத்து போட தீரும். மூட்டு வீக்கத்திற்கு மூசாம்பரத்தை நீரில் அரைத்து போட தீரும்.

ஜெல்லைப் பதப்படுத்தி குளிர்பானமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

வேரை சுத்தம் செய்து பால் ஆவியில் அவித்து உலர்த்திப் பொடி செய்து 15 மில்லி பாலுடன் கொடுக்க சூட்டு நோய்கள் தீரும். ஆண்மை நீடிக்கும்.

அற்புத மூலிகை சோற்றுக் கற்றாழை..!

சோற்றுக் கற்றாழை என்றழைக்கப்படும் குமரி ஒரு மகா மூலிகை ஆகும். எந்த வைத்திய முறையிலும் கையாளப்படும் அற்புத மூலிகை. இந்த சோற்றுக் கற்றாழை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பொடியாக மாற்றப்பட்டு மீண்டும் நம் நாட்டிற்கே இறக்குமதி செய்யப்பட்டு அல்சருக்கான அல்லோபதி மாத்திரைகளிலும், சித்த, ஆயுர்வேத, யூனானி மருந்துகளுக்கும் உபயோகிக்கப்படுகின்றன.

சோற்றுக் கற்றாழை முடி உதிர்வதைத் தடுப்பதோடு, சிறுநீரகம் மற்றும் மண்ணீரல், கல்லீரல் ஆகியவற்றில் உள்ள விஷங்களை நீக்குகிறது. எயிட்ஸ் ஐயும் குணமாக்கும் வல்லமை உள்ளது. cancer என்னும் புற்றுநோயை குணப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.

“பொல்லாமே கங்க பம்பு ழுச்சூலை குஷ்டரச
மல்லார்மத் தம்பகந்த ரங் குன்ம-மெல்லாம்விட்
டேகு மரிக்கு மெரிச்சற் கிரிச்சமு
மாகு மரிக்கு மருண்டு.”

நறுங் கற்றாழைக்கு வாத மேகம், கப கோபம், கிருமிக் குத்தல் (மூலக் குத்தல் ), பெரு வியாதி (குஷ்டம், பால்வினை நோய்கள்), மூலம், உன்மத்தம், பகந்தரம், வயிற்று நோய், தினவுள்ள பித்த கிரிச்சரம் (அரிப்பும், பின் கடுப்பும் உள்ள மூத்திரக் கடுப்பு) ஆகிய வியாதிகள் மருண்டு ஓடும் என்று பொருள். மேலும் மது மேகத்தால் (சர்க்கரை வியாதியில்) அவதிப்படுபவர்களுக்கு 48 நாட்கள் இந்த சோற்றுக் கற்றாழையை எடுத்து அதனுள் இருக்கும் சதையை மட்டும் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி 7 தடவைக்குக் குறையாமல் தண்ணீரில் கழுவி சீனாக் கற்கண்டோடு கூட்டிச் சாப்பிட மதுமேகம் ஓடியே போகும்.

இந்த சோற்றுக் கற்றாழைச் சோற்றை திரிபலாதிச் சூரணத்துடன் கலந்து கட்டித் தோலாந்தரமாக தொங்கவிட்டு, அதிலிருந்து வடியும் நீர் குமரிச் செய நீர் என்றழைக்கப்படும். அது பல மருந்துகள் தயாரிக்க முக்கிய பொருளாகும். மேலும் அயக்காந்தம், மண்டூரம் முதலியவற்றைச் செந்தூரமாக்குவற்கு இதைவிடச் சிறந்த மூலிகை இல்லை. (இந்த வகை கற்றாழைக்க குமரி கற்றாழை என்றும் பெயருண்டு).

உஷ்ண பிரச்சனைகளைப் போக்கும் கற்றாழை
கற்றாழை-thamil.co.uk.உஷ்ண வாயு தொடர்பான பிணிகளை மிகவும் துரிதமாகவும், பூரணமாகவும் இது குணப்படுத்தும் கற்றாழை எங்கும் காணக் கிடைக்க கூடியது. கோடைகாலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்பு, நீர்தாரை எரிச்சல், மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் காந்தல் போன்ற பாதிப்புகளுக்கு சோற்றுக்கற்றாழையின் உள்ளேயுள்ள சோறு போன்ற கலவையை எடுத்து சுத்தமான நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பிறகு அதற்குச் சமமான அளவில் பனங்கற்கண்டினை அத்துடன் சேர்த்து காலை, மாலை இருவேளைகளிலும் உண்டு வரவேண்டும். இதனால் உடல் உஷ்ணமும், எரிச்சலும் குறையும்.

வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாகி, கண்கள் சிவந்து விடும். அப்போது, கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதி வெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடி கண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டை வைத்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும். இப்போது கண் எரிச்சல், குறைவதோடு, சிவந்த நிறமும் மறைந்து விடும்.

இதை இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் செய்து வந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கும். நன்றாக சதைப்பற்றுள்ள கற்றாழை மடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சதை பகுதியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். இந்த துண்டுகளைப் பலமுறை தண்ணீர் விட்டு கழுவவேண்டும். அவற்றின் வழுவழுப்புத் தன்மையும் நாற்றமும் அகலும் வரை கழுவி சுத்தம் செய்ய வேண்டியது முக்கியம்.

வாய் அகன்ற பாத்திரம் ஓன்றை எடுத்து அதில் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் கற்றாழைத் துண்டுகளைப் போட்டு பனங்கற்கண்டு அரை கிலோ, வெள்ளை வெங்காயம் கால் கிலோ ஆமணக்கு என்ணெய் ஆகியவற்றை சேகரித்து கொள்ள வேண்டும். வெங்காயத்தை மட்டும் இடித்து சாறு எடுத்து மற்ற பொருட்களோடு கலந்து அடுப்பிலிட்டுச் சிறு சிறு தீயாக எரிக்க வேண்டும்.

சாறு சுண்டி சடசடப்பு அடங்கும் வரை வைத்திருந்து பிறகு இறக்கி சூடு ஆறிய பிறகு கண்ணாடி ஜாடியொன்றில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். வயிற்றில் ரணம், மாந்தம், வயிற்றுவலி, புளியேப்பம், பொருமல், மற்றும் உஷ்ண வாயு தொடர்பான பிணிகள் தோன்றினால் வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை,கொடுத்து வர நல்ல முறையில் குணம் தெரியும். கற்றாழை உடல் முதல் உள்ளம் வரை அனைத்தையும் குணப்படுத்தும் சிறந்த மருந்து.

அனைத்து நோய்களுக்கும் தீர்வு தரும் சோற்று கற்றாழை

1. சோற்றுக் கற்றாழையின் சாற்றையோ அல்லது உள்ளிருக்கும் கூழ்ப்பகுதியையோ தினமும் அளவோடு சாப்பிடுவதால் கண் பார்வை தெளிவு பெறும்.

2. சோற்றுக் கற்றாழை உள்ளுக்குச் சாப்பிடுவதாலும் மேலுக்கு உபயோகப்படுத்துவதாலும் பெண்கள் மற்றும் ஆண்களின் சிறுநீர்த் தாரையில் உள்ள எரிச்சல், புண் குணமாகும்.

3. சோற்றுக் கற்றாழையை ஓரிரு சாக்லேட் அளவு வில்லைகளாக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உண்ட உணவு குடலில் தங்கி நஞ்சாகி நமக்குத் துன்பம் தரும் நோய்களைத் துடைக்கும் வகையில் குடலுக்கு பாதிப்பின்றி தேங்கிய நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் வயிற்றிலுள்ள வாயு வெளியேற்றப்படுவதோடு மன இறுக்கமும் stress தணிந்து ஆரோக்கியம் கிடைக்கின்றது.

4. சோற்றுக் கற்றாழையின் இளமடலை தோல் சீவி சோற்றை சுத்திகரித்து உடன் சீரகம், கற்கண்டு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட குருதியும் சீதமும் கலந்த வயிற்றுப்போக்கு குணமாகும்.

5. 100கிராம் கற்றாழைச் சோற்றை எடுத்து கொண்டு அத்தோடு 10கிராம் ஊறவைத்த வெந்தயத்தையும் சிறிதாக அறிந்த ஒரு வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து 350கிராம் விளக்கெண்ணெயில் இட்டு பதமாகக் காய்ச்சி வடித்து பத்திரப் படுத்திக் கொண்டு அந்தி, சந்தி இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் தணிந்து உடல் பெருகும், அழகான தோற்றம் பெருகும்.

6. சோற்றுக் கற்றாழை மடலை நன்கு முற்றியதாகத் தேர்ந்தெடுத்து இரண்டாகப் பிளந்து அதன் இடையே ஒரு ஸ்பூன் வெந்தயத்தை திணித்து கற்றாழையின் மடல்கள் இருபகுதியும் ஒன்றாக சேரும் வண்ணம் நூலால் இறுகக் கட்டி இரவு முழுவதும் வைத் திருந்து மறுநாள் காலையில் எடுத்துப் பார்க்கையில் வெந்தயம் நன்கு முளை விட்டு இருக்கும். அந்த வெந்தயத்தை மட்டும் எடுத்து உள் ளுக்கு சாப்பிட்டு வர தீராத வயிற்று வலி, வாய் வேக்காடு, வயிற்றுப்புண், சிறுநீர்த் தாரைப்புண் ஆகியன குணமாகும்.

7. கற்றாழைச் சோற்றை மோரில் கலந்து அன்றாடம் குடித்து வர உடல் சூட்டினால் ஏற்படும் முகப்பருக்கள், கட்டிகள், வெயிலில் அலைவதால் ஏற்படும் தோலின் கருமை மற்றும் மேல் தோலில் ஏற்படும் கருந்திட்டுக்கள் குணமாகும்.

8. சோற்றுக் கற்றாழையின் வேர்களை சேகரித்து சிறுதுண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து பால்ஆவியில் வைத்து வேகவைத்து எடுத்து வெயிலில் இட்டு உலர்த்தி நன்றாக பொடித்து வைத்துக் கொண்டு தினம் இரவு படுக்க போகுமுன் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை மிகும். விந்துக்களின் எண்ணிக்கையும் பெருகும்.

9. சோற்றுக் கற்றாழைச் சோற்றை சுத்தம் செய்து 10 முதல் 15 கிராம் அளவு எடுத்து நீராகாரத்துடன் (பழையது நீர்) சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சிறுநீரில் இரத்தம் போவது குணமாகும். மூத்திரக்கிரிச்சாம் என்னும் சிறுநீர்த்தாரை எரிச்சல் தணியும்.

10. சுத்திகரித்த கற்றாழைச் சோறு ஒருகப் அளவு எடுத்து இதனோடு 5 சிறு வெங்காயத்தைப் பொடித்து நெய் விட்டு சேர்த்து வதக்கிச் சேர்த்து சுடுக்காய் கொட்டை நீக்கியபின் மூன்று கடுக்காயின் தோலைப் பொடித்துச் சேர்த்து ஒன்று கலந்து சிறிதளவு நீர்விட்டு ஒரு பாத்திரத்தில் வைத்து மூடிவைத் திறந்து அரைமணி நேரம் கழித்துப் பார்க்க அனைத்துப் பொருட்களின் சாரமும் ஒன்றாய்க் கலந்து வடிந்து தெளிவாய் இருக்கும். இதை உள்ளுக்குச் சாப்பிட சில மணித் துளிகளில் சிறுநீர்கட்டு தளர்ந்து தாராளமாக சிறுநீர் வெளியேறும்.

11. சோற்றுக் கற்றாழைச் சாறை தினமும் 2 அவுனஸ் உள்ளுக்கு கொடுப்பதால் இதய ரத்த நாளங்களில் கொழுப்புச்சத்து படிவதால், ஏற்படும் இதய நோய்கள் அச்சம் தரும் உயிர் போக்கி நோய்களைத் தணிக்கிறது.

12. சோற்றுக் கற்றாழையில் உள்ள ஹார்போஹைட்ரேட்டு மெட்டபாலிசம் சர்க்கரை நோய்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இது இரத்தத்தில் உள்ள உணவுக்குமுன் ஆன சர்க்கரை அளவையும், உணவுக்கு பின் ஆன சர்க்கரையின் அளவையும் குறைக்க உதவுகிறது.

13. இதயத்துக்கு போதிய பிராணவாயு கிடைக்க வழிசெய்கிறது. பிராணவாயு சரியான அளவு இதயத்துக்கு கிடைக்காத போது கடும் நெஞ்சுவலி உண்டாகிறது. சோற்றுக் கற்றாழைச் சாறு இப்படி மாரடைப்பு வருவதைத் தடுக்கிறது.

14. சோற்றுக் கற்றாழையில் உள்ள வேதிப் பொருட்கள் பேகொசைட்டோஸிஸ் மற்றும் ஆண்டிபாடீஸ் என்னும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாண்டி ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.

செங்கற்றாழை
செங்கற்றாழை சித்தர்களின் மிக முக்கியமான காய கற்ப மூலிகை, ரசவாத மூலிகை.
RED ALOEகொள்ளவே சிவப்பான கற்றாழை தானுங்
கொண்டுவர மண்டலந்தா னந்தி சந்தி
விள்ளவே தேகமது கஸ்தூரி வீசும்
வேர்வைதான் தேகத்திற் கசியா தப்பா
துள்ளவே நரைதிரை களல்ல மாறுஞ்
சோம்பலேன்ற நேதிரையுங் கொட்டாவி யில்லை
கள்ளவே காமமது வுடம்பி லூறுங்
கண்களோ செவ்வலரிப் பூப்போ லாமே’
என போகர் செங்கற்றாழை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

செங்கற்றாழை கொண்டு செய்யப்பட்ட கற்ப்பத்தை 48 நாட்கள் உண்டு வர வாதம், பித்தம், கபம் சம்மந்தமான நோய்கள் நீங்கும். மீண்டும் 90 நாட்கள் உண்டால் உடலிலுள்ள கெட்ட நீர் உப்பெல்லாம் வெளியேறும். 144 நாட்கள் சாப்பிட்டு வர இறப்பு இல்லையே – என்று தமிழ் சித்தர்கள் கூறுகின்றனர்.

ஆனைக் கற்றாழை/ யானைக் கற்றாழை
ஆனைக் கற்றாழைஇது ஒரு வேலித் தாவரம் ஆகும். கடும் வறட்சியையும் தாங்கி வாடாமல் வளரக் கூடியது. அனைத்து மண்வகைகளிலும் நன்கு வளரக்கூடியது. இதன் மடல்கள் ஐந்தடி நீளம் வரை வளரக்கூடியது. அவற்றின் இரு பக்கமும் ரம்பம் போல முட்கள் இருக்கும். நுனியில் ஒரு கனமான நீளமான முள் இருக்கும்.

இதன் முற்றிய மடல்களை அறுத்துத் தண்ணீரில் ஊறவைத்துச் சில நாட்களுக்குப்பின் எடுத்துத் துவைத்தால் அருமையான வெண்மை நிறமான நார் கிடைக்கும். அந்த நார் மிகவும் வலிமையானதும் நீடித்து உழைக்கக்கூடியதும் ஆகும். முன்னோர் காலத்தில் இதன் நாரைக் கொண்டுதான் விவசாயத்துக்குத் தேவையான கயிறு வகைகள் திரிக்கப்பட்டன.

நாடகம் மற்றும் கூத்துக் கலைஞர்கள் இந்த நாரைப் பயன்படுத்தி வெண்தாடி உடைய கிழவர் வேடம் போடுவார்கள்.

இதன் மடல்களை ஒரு அங்குல அளவுள்ளதாக நீள நீளமாகக் கிழித்துக் காயவைத்து அந்த நாரைக்கொண்டு கூரை வீடுகள், பந்தல்கள், படல் என்று சொல்லக்கூடிய தட்டிகள் ஆகியவற்றை ஓலைகளுடன் இணைத்துக் கட்டப் பயன்படுத்துவார்கள்.

இதன் மடல்களில் இருந்து வெளிப்படும் சாறு உடம்பில் பட்டால் எரிச்சலாகவும் நமைச்சலாகவும் இருக்கும்.

இந்த மடல்களில் மேல் பத்தாகப் பயன்படக்கூடிய மருத்துவப் பண்புகள் உண்டு.

இது பக்கக் கன்றுகளுடன் வாழையடி வாழையாக என்றென்றும் அழியாமல் வளரக்கூடிய தாவரம் ஆகும்.

இதன் அடித்தண்டை ஒட்டியுள்ள கிழங்குப் பாகத்தை முற்காலங்களில் கொடும்பஞ்ச காலங்களில் வெட்டி எடுத்துச் சமைத்து உண்டு உயிர் பிழைத்தார்கள்.

குறிப்பிட்ட வருடங்களுக்குப் பின் கற்றாழையின் மத்தியில் பாக்குமரம் போன்று தோன்றி மரமாக வளரும். குறிப்பிட்ட காலத்தில் அது மட்டும் காய்ந்து விடும். அந்தக் காய்ந்த மரம் உறுதியாகவும் எடை குறைவானதாகவும் இருக்கும். அதனால் விவசாயிகள் தங்கள் குடிசைகளை அமைப்பதற்கும் மாட்டுக் கொட்டகை அமைப்பதற்கும் பட்டிகள் அமைப்பதற்கும், வெங்காயம், சோளத்தட்டுப்போர் போன்றவற்றுக்கு அடியில் பட்டறைகள் அமைப்பதற்கும் இந்த மரங்களைப் பயன்படுத்துவார்கள்.

எடை குறைவான இதன் மரக் கட்டைகளை முதுகில் மிதவையாகக் கட்டிக்கொண்டு சிறுவர்கள் நீச்சல் பழகுவார்கள்.

இதன் அருமையை உணர்ந்திருந்ததால் முன்னர் விவசாயிகள் தங்களின் நிலங்களுக்கு வேலியாக இதை நட்டு வளர்த்தார்கள். அது அவர்களுக்குப் பலவகையிலும் பயன்பட்டதோடு நிலத்தின் பாதுகாப்பு அரணாகவும் விளங்கியது.

ஆனால் இப்போதைய விவசாயத்தில் அதன் பயன்பாடு ஒழிந்துபோனதால் அதை ஒரு தேவையற்ற ஒன்றாகக்கருதி அழித்து ஒழித்து வருவதால் அது அழிந்துகொண்டிருக்கும் தாவரங்களில் ஒன்றாக உள்ளது.

கயிறுகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாகி வரும் நிலையில் இதன் அருமை உணர்வதற்கான வாய்ப்பு சுத்தமாக அடைபட்டு விட்டது!

இந்ததப் பாரம்பரியத் தாவரத்தின் அருமை உணர்ந்த யாராவது தங்களின் நிலத்தைச் சுற்றி வேலியாக இதை வளர்த்தால் இயற்கை அன்னைக்குச் செய்த சேவையாகவே கருதலாம்! அப்படி இல்லாவிட்டால் வருங்காலத்தில் இதன் அழிவைத் தவிர்க்க முடியாது! ஆனால் விவசாயியின் உற்ற துணையாக விளங்கிய இந்தத் தாவரத்தை அழிய விடுவது இயற்கைக்குச் செய்யும் மன்னிக்க முடியாத தீங்கு ஆகும்.

-மூலிகைவளம்
-இயற்கை வைத்தியம்
-pasumaikudil.com

வறட்சியான பகுதிகளில் கற்றாழை சாகுபடி

தொகுப்பு – thamil.co.uk