நாட்டுப்புறக் கலைகள்

நாட்டுப்புறக் கலைகள்-thamil.co.ukமனிதனின் இயற்கையாக வாழ்வில் தோன்றி விதிமுறை வகுப்பின்றி எளிமையாக வளர்ந்து உண்மையான உணர்ச்சிகளின் உறைவிடமாகப் பாமர மக்களைக் கவர்ந்து களிப்படையச் செய்யும் இனிய கலைகளையே நாட்டுப்புறக் கலை என்கிறோம்.

கவிஞனுக்கு மரங்கள் ஒலிக்கும், ஓடைகளில் நூல்கள் மிதக்கும், கற்பனைகளில் காவியங்கள் தெறிக்கும், யாவற்றிலும் நலன்கள் பிறக்கும் என்பது ஆங்கிலக் கவிஞர் சேக்ஸ்பியரின் வாக்கு. சாதாரண மக்களது ஆசாபாசங்கள், இன்ப துன்பங்கள், எழுச்சி, வீழ்ச்சிகள், ஆரவாரங்கள், அவதிகள், ஏக்கம், எக்காளம், வேதனை, விரக்தி, மருட்சி, மகிழ்ச்சி, வெறுப்பு, வேட்கை ஆகிய பலப்பல உணர்ச்சிகளை சிந்தனைக்குச் சுவைக்க சுவைக்க மகிழ்ச்சியூட்டும் கலைகளே நாட்டுப்புறக் கலைகள்.

இன்று தமிழர்களின் அடையாளங்களை வடு தெரியாமல் வலி தெரியாமல் திராவிடம் அளித்தாலும், இம்மண்ணில் தமிழ் தேசிய அரசியல் வளரும் காலத்தில் நாட்டுப்புறக் கலைகள் மீட்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சரி இப்பொழுது நாட்டுப்புறக் கலைகள் சிலவற்றின் பெயர்களை தெரிந்துகொள்வோம்.

01. அம்மன் கூத்து
02. அன்னக்கொடி விழாக் கூத்து
03. அனுமன் ஆட்டம்
04. ஆலி ஆட்டம்
05. இடையன் இடைச்சி கதை
06. இரணிய நாடகம்
07. இருளர் இனமக்களின் ஆட்டங்கள்
08. இலாவணி
09. உடுக்கைப்பாட்டு
10. உறுமி கோமாளியாட்டம்
11. எக்காளக்கூத்து
12. ஒட்ட நாடகம்
13. ஒயில் கும்மி
14. ஒயிலாட்டம்
15. கட்சிப்பாட்டு
16. கட்டைக்குழல்
17. கண்ணன் ஆட்டம்
18. கணியான் ஆட்டம்
19. கதை வாசிப்பு
20. கப்பல்பாட்டு
21. கரகாட்டம்
22. கரடியாட்டம்
23. கருப்பாயி ஆட்டம்
24. கருப்பாயி கூத்து
25. கல்யாணக் காமிக்
26. கழியல் ஆட்டம்
27. கழுவேற்ற விழாக் கூத்து
28. கழைக்கூத்து
29. களரி
30. களமெழுத்தும் பாட்டும்
31. காமாட்டா
32. காமாட்டா கொட்டுதல்
33. காமன் எரிப்பு ஆட்டம்
34. காவடியாட்டம்
35. காளை ஆட்டம்
36. கானாப்பாட்டு
37. கிருஷ்ணனாட்டம்
38. கும்மி
39. குறத்திக்களி
40. குறவன் குறத்தி ஆட்டம்
41. கைச்சிலம்பாட்டம்
42. கையுறைப் பாவைக்கூத்து
43. கொக்கலிக்கட்டை ஆட்டம்
44. கொறத்திக்களி ஆட்டம்
45. கோத்தர் மக்களின் ஆட்டங்கள்
46. கோடாங்கிப் பாட்டு
47. கோணங்கி ஆட்டம்
48. கோலாட்டம்
49. சக்கையாட்டம்
50. சந்தை காமிக்
51. சாமியாட்ட காமிக்
52. சாமியாட்டம்
53. சிம்ம நடனம்
54. சிண்டு நடனம்
55. சிலம்பாட்டம்
56. செலாக்குத்து ஆட்டம்
57. சேர்வையாட்டம்
58. சேவையாட்டம்
59. டப்பாங்குத்து
60. தப்பாட்டம்(பறையாட்டம்)
61. தாதராட்டம்
62. தும்பிப்பாட்டு
63. தெக்கத்தி வெள்ளையம்மா
64. தெருக்கூத்து
65. தேவராட்டம்
66. தோடர் மக்களின் ஆட்டங்கள்
67. தோல்பாவைக்கூத்து
68. நையாண்டி மேளம்
69. பக்கிரிஷாப் பாட்டு
70. பகல்வேடம்
71. பரதவர் கழியல்
72. பஜனைப்பாட்டு
73. பாகவத மேளா
74. பாம்பு நடனம்
75. பின்னல் கோலாட்டம்
76. பிருந்தாவனக்கும்மி
77. புலியாட்டம்
78. பெரிய மேளம்
79. பேயாட்டம்
80. பேயாட்டக் காமிக்
81. பொம்மலாட்டம்
82. பொய்க்கால்குதிரை ஆட்டம்
83. பொன்னர் சங்கர் விழாக்கூத்து
84. போட்டி வேதக் கதைப்பாடல்
85. மயானக்கொள்ளை
86. மயிலாட்டம்
87. மரக்காலாட்டம்
88. மாரடிப்பாட்டு
89. மாவெலிக் கூத்து
90. மோடியாட்டம்
91. ராஜாராணி ஆட்டம்
92. வண்ணான் வண்ணாத்தி கூத்து
93. வழியாட்டம்
94. வாசாப்பு நாடகம்
95. வில்லுப்பாட்டு
96. வீரபத்ரசாமி ஆட்டம்
97. வைந்தானை ஆட்டம்
98. வேதாள ஆட்டம்
99. சிறப்பின் நாடகம்
100. ஜிம்பளா மேளம்

-தமிழ்-தமிழர்கள்