காலக் கணக்கீட்டு

காலக் கணக்கீட்டுஆதிசிவனார் தெய்வீகச் செம்மொழியுமான அருளூறு தமிழ் மொழியில் அருளிய இந்து வேதத்தில் காலக் கணக்கீடு இருக்கின்றது. அதாவது;

(அ) மணீசர்கள் மண் + ஈசர் = மணீசர் –> மண்ணின் தலைவர் = உயிரினங்களுக்குத் தலைமை தாங்கும் மணீசர். விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்த அனாதிக் காலம் = 4,85,920

(ஆ) மணீசர்கள் பதினெண் சித்தர்களின் இந்து வேதத்தால் மனிதர்களாக்கப்பட்ட பிறகு முதல் கடல்கோளினால் பேரழிவு ஏற்படும் வரை இருந்திட்ட முதல் உகம், கீரன் உகம் (கிரேதா யுகம்) = 17,28,080

(இ) முதல் கடல் கோள் அழிவுக்கும் இரண்டாவது கடல்கோள் அழிவுக்கும் இடைப்பட்ட இரண்டாவது உகம் தீரன் உகம் (திரேதா யுகம்) = 12,90,000

(ஈ) இரண்டாவது கடல்கோளுக்கும் மூன்றாவது கடல்கோளுக்கும் இடைப்பட்ட காலம் தூரன் உகம் (துவாபர யுகம்) = 8,64,000

(உ) மூன்றாவது கடல் கோளுக்குப் பிறகு இன்றுள்ள கலியன் உகம் (கலி யுகம்) பிறந்து இன்றைய ஆங்கில ஆண்டு 2014-உடன் உள்ள காலம் = 5,115.

(எ) இந்தக் கலியுகத்தின் கால அளவு = 4,32,000 ஆனால் இன்று 2014 உடன் கலியுகம் ஆண்டுகள் = 5,115 மீதி ஆண்டுகள் = 4,26,885

அதாவது, இந்த உலகம் இன்னும் நான்குஇலட்சத்து இருபத்தாறாயிரத்துத் எண்ணூற்று எண்பது ஐந்து ஆண்டுகள் (4,26,885) கட்டாயமாக இருக்கும்! இருக்கும்!! இருக்கும்!!! இருந்தே தீரும்!. ” இப்படிப்பட்ட அரிய, பெரிய, சீரிய, உயரிய, நேரிய கருத்துக்களைக் காலக் கணக்கீட்டு அடிப்படையில் உலகுக்கு வழங்குகின்ற இந்த இந்துவேதம் அண்ட பேரண்ட அருளுலக ஆட்சி மொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில்தான் இருக்கின்றது.

-ஞானாச்சாரியார் ‘அன்பு சித்தர்’

-induism