சித்தர்களின் சோதிடக் கலை

சித்தர்களின் சோதிடக் கலை-thamil.co.ukமனித வாழ்வில் முன்னெச்சரிக்கையுடன் துன்பங்களைத் தவிர்த்துக் கொள்ளவும், இன்பங்களைப் பெருமளவு தேடித் துய்க்கவும், வாழ்வியலுக்கு உரிய
1. மென்மை
2.அன்பு
3.இனிமை
4.கனிவு
5.நளினம்
6.குழைவு
7. நெளிவு
8. பணிவு
9. பற்று
10. பாசம்
11. உறவு நாடல்
12. நட்புச் செய்தல்
13. தோழமை
14. பெரியாரைப் பேணல்
15. மன்னித்தல்
16. மறத்தல்
17. அருளல்
18. அடைக்கலம் அளித்தல்
19. வீரம்
20. தீரம்
21. உரம்
22. அமைதி
23. அடக்கம்
24. நிம்மதி
25. நிறைவு
26. பொறுப்பு
27. பொறுமை
எனும் ‘விண்மீன் நிலைப் பண்புகள் இருபத்தேழு’ம் பெற்றிடவுமே சோதிடக்கலைகள் பல கண்டுபிடிக்கப்பட்டன.

பதினெண் சித்தர்களால்
1. பிறப்பியல்[சாதகம்]
2. வரியியல் [கைரேகை]
3. எண்ணியல்
4. கனாவியல்
5. பெயரியல்
6. தொடுகுறி
7. புள்ளியியல்
8. பல்லியியல்
9. நிமித்திகம்
10. விரிச்சி
11. ஓச்சு
12. கட்டு
13. முறி
14. அங்கவியல் [உறுப்பிலக்கணம்]
15. மனையியல் [மனையடி சாத்திறம்]
16. சரம்
17. ஏடு பார்த்தல்
18. நாடி சோதிடம் ……
என்று (64) அறுபத்து நான்கு வகையான சோதிடக் கலைகள் கண்டுபிடிக்கப்பட்டும் …. இன்று இப்பதினெட்டுதான் வழக்கில் இருக்கின்றன.

இவற்றின் மூலம்
1. முற்பிறப்பு
2. மறுபிறப்பு
3. இப்பிறப்பு = இல்லறம் = மனைவி கணவன் நிலை
4. உயிர், ஆவி, ஆன்மா = திரு, குரு,கரு= ஊழ்வினை, வினை, விதி
5. உடல் = நோய், பேய், நட்பு, பகை
6. குடும்பம் = பெற்றோர், உடன்பிறப்பு, உறவு
7. தொழில் = கல்வி, கலை
8. செல்வம் = பொருள், அருள், அதிகாரம், ஆள்வலிமை,
சொல்வளம்
9. நடப்பு நிலை விளக்கம்
10. வருங்கால அறிவுரை = பரிகாரம்
எனும் பத்து வகையான செய்திகள் கணிக்கப்படும்.

-ஞானாச்சாரியார் ‘அன்பு சித்தர்’