முடவாட்டுக்கால்

மூலிகையின் பெயர் – முடவாட்டுக்கால்
தாவரவியல் பெயர் – Drynaria Quercifolia
தாவரகுடும்பம் – polypodiaceae
ஆங்கிலப் பெயர் – oakleaf fern
பயன்தரும் பாகங்கள் – கிழங்கு

முடவாட்டுக்கால்.,.வளரியல்பு பாறைகளின் மேலும், மரங்களின் மேலும் படரும் ஒட்டு இனத்தைச் சேர்ந்தது. இவற்றின் வேர்கிழங்குகள் தான் முடவாட்டுக்கால்.

மருத்துவப்பயன்கள்

இதன் வேர் கிழங்கில் கேட்கின், கவுமாரின், பிளேவனாய்டுகள் மற்றும் தாவர ஸ்டீராய்டுகள் ஏராளமாக உள்ளன. இவை மூட்டுகளில் தோன்றும் வீக்கம், இறுக்கம் மற்றும் வலி ஆகியவற்றை நீக்குவதுடன், மூட்டுகளுக்கு வலிமையை தருகின்றன.

இந்த முடவாட்டுக்கால் மூலிகையை குறுக்கில் கால் இஞ்சு அளவிற்கு சிறு துண்டு வெட்டி தோலை சீவி நசுக்கி சிதைத்து தக்காளி சேர்க்காமல், மிளகு ,சீரகம் மற்றும் ஆட்டுக்கால் சூப்பிற்கு சேர்க்கும் பொருட்களை சேர்த்து சூப்பாக வைத்துக் குடிக்க முழங்கால் வலி , கீழ் முதுகு வலி, கை மூட்டு வலி,கழுத்து வலிகள் இவைகள் தீரும். தினமும் இந்த சூப்பை பருகி வர உடலில் உள்ள எல்லா தொல்லைகளும் படிப்படியாகத் தீரும்.

இது ஒரு காளான் வகையைச் சேர்ந்தது. எனவே இதற்கு இலைகள் கிடையாது. இது கொல்லி மலையிலும், கஞ்ச மலையிலும், சதுரகிரி மலையில் சில இடங்களிலும் கிடைக்கிறது. இதை மேற்குறிப்பிட்ட காலாங்கி நாதர் கொல்லி மலை ரகசியம் மரணம் மாற்றும் மூலிகைகள் நூலில் குறிப்பிட்ட முறையில் பூரச்செந்தூரம் செய்து 48 நாட்கள் சாப்பிட தேகம் மரணத்தால் அழியாது காயம் சித்தியாகும்.

முடவாட்டுக்கால்முடவாட்டுக்கால்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Drynaria quercifoliaDrynaria quercifolia.முடவாட்டுக்கால் என்ற காய கல்ப மூலிகை..!

சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுது நாம் மேற்கொள்ளும் பயிற்சிகளும் உட்கொள்ளும் ஊட்டச்சத்தான உணவுகளுமே, பிற்காலத்தில் நமது உடல் வலுவாக மாறுவதற்கு காரணமாக அமைகின்றன. கலை விளையாட்டாகவும், வீர விளையாட்டாகவும் நாம் பின்பற்றி வந்த பலவிதமான விளையாட்டுகள்,நமது முழங்கால் மூட்டுகளுக்கும், குதிகாலுக்கும் வலுவை தருவதாகவே இருக்கின்றன.

நாகரிக வளர்ச்சியின் காரணமாகவும், விளையாட போதுமான இடமின்மை மற்றும் குறுகிய மனப்பாங்கு காரணமாக, இது போன்ற விளையாட்டுகள் குறைந்து, தொலைக்காட்சி, கணினி என்று பூட்டிய அறைக்குள் விளையாடுவதே, பல குழந்தைகளின் உடல் பருமனுக்கும், எதிர்காலத்தில் தோன்றும் மூட்டுவலிக்கும், முக்கியமான காரணம்.

நமது பாட்டி, தாத்தாக்களின் உடல் வலிமை நமக்கு இருக்கிறதா என்பது கேள்விக்குறி தான். பல பெண்கள் நாற்பது வயதிலேயே பெண் தன்மையை இழந்து வருவதும், ஆண்கள், கழுத்துவலி, முதுகுவலி என்று அலுத்துக் கொண்டிருப்பதும் அதிகரித்து வருவதற்கு உடற்பயிற்சி இன்மையும்,மூட்டுகளை சூழ்ந்திருக்கும தசை, தசைநார் மற்றும் சவ்வுகளின் வலிமை குறைவதுமே காரணம். இளம் பிராயத்தில் விளையாடாததால் தான், பிற்காலத்தில் எக்ஸ்ரே, ஸ்கேன் என்று, பல மருத்துவமனைக்கு ஏறி இறங்க வேண்டியுள்ளது.

முழங்கால் மூட்டில் ஏற்படும் பாதிப்பினாலும் சவ்வில் ஏற்படும் வீக்கம் மற்றும் திரவ பற்றாக்குறையினாலும், முழங்கால்வலி உண்டாகிறது.பெண்களுக்கு நொண்டி, பாண்டி, கயிறு தாண்டுவது, கயிறு இழுப்பது போன்றவற்றால், முழங்கால் மூட்டு தசைகள் பலமடைவதுடன், கருப்பை கோளாறுகள் தவிர்க்கப்படுகின்றன.

ஆண்கள், சிலம்பம், கபடி, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கிட்டிப்புல் போன்றவற்றால், மூட்டுகள் நன்கு சுழன்று, திரும்பி வேலை செய்வதுடன், ஆண் ஹார்மோன்கள் அதிகரித்து, போதுமான அளவு சுண்ணாம்பு சத்து சேர்ந்து, எலும்புகளின் பலம் அதிகரிக்கிறது. ஆண் மற்றும் பெண்களுக்கு, நடுத்தர வயதில் தோன்றும் பலவிதமான உடல் மற்றும் மூட்டுவலிகளை நீக்கி, முழங்காலுக்கு வலுவை கொடுக்கும் மூலிகை தான் முடவாட்டுக்கால்.

டிரைனேரியா குர்சிபோலியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட polypodiaceae குடும்பத்தைச் சார்ந்த இந்த புறணிச்செடிகள், பெரிய மரங்களை சார்ந்து வளர்கின்றன. இவற்றின் வேர்கிழங்குகள் தான் முடவாட்டுக்கால். இதன் வேர் கிழங்கில் கேட்கின், கவுமாரின், பிளேவனாய்டுகள் மற்றும் தாவர ஸ்டீராய்டுகள் ஏராளமாக உள்ளன. இவை மூட்டுகளில் தோன்றும் வீக்கம், இறுக்கம் மற்றும் வலி ஆகியவற்றை நீக்குவதுடன், மூட்டுகளுக்கு வலிமையை தருகின்றன.

East Asian Tree Fern Rhizome -குறிப்பிட்ட சில மலையில் ஆயிரக்கணக்கான மூலிகைகள் இருந்தாலும் குறிப்பாக, சிறப்பான மூலிகையான முடவாட்டுக்கால் அதிகம் தென்படுகின்றன. இந்த மூலிகை மண்ணில் வளராது. பாறைகளின் மேலும், மரங்களின் மேலும் படரும் ஒட்டு இனத்தைச் சேர்ந்தது. அதன் இலையே காய்ந்து சுருண்டு அதன்மேலே கவசம்போல் ஒட்டிக் கொள்ளும். இந்த மூலிகை காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி வளரும் தன்மை கொண்டது.

முடவாட்டுக்கால் மூலிகையை மனிதனின் கருவிலிருந்து இறுதிவரை மருந்தாகப் பயன்படுத்தலாம். இதை மருந்தாகப் பயன்படுத்த பக்குவம் தேவை. கருப்பை வளர்ச்சி முதல் சிறுநீரகம் சிறுத்துப் போதல், உள்ளுறுப்புகள் சுருங்காமல் இருக்கச் செய்யும், புற்றுநோயைப் போக்கும். அத்தோடு எல்லாவிதமான வாதம், பித்தம், சிலோத்தும நோய்களைச் சமநிலைப்படுத்தி உடலைப் பக்குவப்படுத்தும்.

நன்றி : டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை.


முடவாட்டுக்கால்சூப் செய்முறை

முடவாட்டுக்கால் மூலிகையைப் பதப்படுத்தி மருந்தாகச் செய்யத் தெரியாதவர்கள் இதை சூப் செய்து சாப்பிடலாம். முடவாட்டுக்கால் மேல்தோலைச் சீவி பொடிப் பொடியாக நறுக்கிச் சிறிது மஞ்சள் பொடியும் உப்பும் போட்டு வேகவைத்து பிறகு வடிகட்டி அந்த மூலிகைச் சாறை (சூப்பாக) தினசரி இரண்டு வேளை குடித்து வந்தால் அனைத்து நோய்களும் நீங்கிவிடும். ராஜ உறுப்புகள் பலப்பட்டு ஆயுள் விருத்தியாகும்.

இந்த முடவாட்டுக்கால் மூலிகையை குறுக்கில் கால் இஞ்சு அளவிற்கு சிறு துண்டு வெட்டி தோலை சீவி நசுக்கி சிதைத்து தக்காளி மற்றும்புளி சேர்க்காமல் மிளகு, சீரகம், பூண்டு, சின்னவெங்காயம், கறிவேப்பிலை, சோம்பு, இஞ்சி, பட்டை,கிராம்பு, கசகசா, தேங்காய் துருவல் மற்றும் ஆட்டுக்கால் சூப்பிற்கு சேர்க்கும் பொருட்களை சேர்த்து லேசாக எண்ணெய் விட்டு வதக்க வேண்டும் பின்பு இதை 1 லிட்டர் நீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

சூப்பாக இதை தினம் ஒரு வேளை வீதம், 10 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி,முழங்கால் சவ்வு பலவீனம், தசை பிறழ்சி ஆகியன நீங்கும்.

குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி,அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை அனைவரும் குடித்துவரலாம்.

-blog.sathuragiriangadi.com
-machamuni.com

தொகுப்பு – thamil.co.uk