ஆடுதீண்டாப்பாளை

ஆடுதீண்டா பாளைமூலிகையின் பெயர் ஆடுதீண்டாப்பாளை
தாவரப்பெயர் – (Aristolochia bracteolata)
பயன்தரும் பாகங்கள் – இலை, விதை மற்றும் வேர் முதலியன.

ஆடுதீண்டாப்பாளை மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு கொடியாகும். தரையில் ஒழுங்கற்ற கொடியாகப் படர்ந்து பல்லாண்டுகள் வாழும். தனித்த இலைகள் நீள்முட்டை வடிவின. இலைக்காம்படி உள்வளைவோடு கூடியதாக மொழுமொழுவென மாற்றடுக்கில் அமைந்திருக்கும்.

ஆடுதீண்டாப்பாளைமருத்துவப்பயன்கள்

உடல் வலுப்பெற
உடல் உழைப்பு குறைந்து போனதாலும், இயற்கையான ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகளை உண்பதாலும் இன்று பலருக்கும் உடல் வலு குறைந்து வருகிறது. இவர்கள் சிறிது கடினமான வேலையை செய்தாலும் உடனே சோர்ந்து விடுவார்கள். இவர்கள் ஆடுதீண்டாப் பாளை இலையை காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும்.

வயிற்றுப் பூச்சிகள் நீங்க
வயிற்றுப் பூச்சிகள் உடலில் பல தொந்தரவுகளை உண்டுபண்ணுகின்றன. இவற்றால் வயிற்றில் புண்கள் உருவாகின்றன. சிறு குழந்தைகள் இந்த வயிற்றுப் பூச்சியினால் அடிக்கடி வாந்திபேதிக்கு ஆளாக நேரிடுகிறது. இவர்களுக்கு ஆடுதீண்டாப் பாளையை நிழலில் உலர்த்தி நன்றாக பொடி செய்து 1 கரண்டி அளவு எடுத்து அதில் தேன் கலந்து கொடுத்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் விரைவில் நீங்கும்.

ஆடுதீண்டாப்பாளை விதையை பொடி செய்து விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்து வந்தால் மலக்குடல் கிருமிகள் குறையும்.

ஆடுதீண்டாபபாளை-thamil.co.ukநீர்மலம் நீங்க
மலமானது நீராக வெளியேறுவதால் உடலில் பல நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகிறது. இந்த நீர்மலம் நீங்க ஆடுதீண்டாப்பாளை இலைகளை உலர்த்தி கஷாயம் செய்து அருந்தி வருவது நல்லது.

பூச்சி கடிகளுக்கு
சில சமயங்களில் வண்டுகள், பூச்சிகள் கடிப்பதால் விஷமுண்டாகி சருமத்தில் தடிப்பு, கொப்புளம் போன்று உண்டாகும். இதற்கு ஆடுதீண்டாப்பாளை இலைகளை எடுத்து அரைத்து பூச்சி கடித்த இடத்தில் பற்று போட்டால் விஷம் முறியும். தடிப்புகள் மேலும் சருமத்தில் பரவாமல் தடுக்கும்.

கரும்படை கரப்பான் நீங்க
ஆடுதீண்டாப் பாளை இலைகளை அரைத்து தோலில் ஏற்படும் கரும்படை கரப்பான் இருக்கும் இடங்களில் பூசி வந்தால் விரைவில் குணமாகும்.

தலைமுடி உதிர்வதைத் தடுக்க
தலையில் முடி கொட்டுகிறது என்ற கவலை உள்ளவர்கள் ஆடுதீண்டாப் பாளை இலைகளை எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி சீயக்காய் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி கொட்டுவது உடனே நிற்கும்.

பெண்களுக்கு
மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் சூதக வலி, வயிற்று வலி, ஓழுங்கற்ற இரத்தப் போக்கு போன்றவற்றால் பெரிதும் அவதியுறுபவர்கள், ஆடுதீண்டாப்பாளை இலைகளை கஷாயம் செய்து அருந்தி வந்தால், மேற்கண்ட பாதிப்புகளிலிருந்து எளிதில் விடுபடலாம்.

மேலும் ஆடுதீண்டாப் பாளை விதைகளை எடுத்து அரைத்து வெந்நீரில் கலந்து கர்ப்பிணிப் பெண்களுக்குக் கொடுத்தால் பிரசவ நேரத்தில் உண்டாகும் வேதனை குறையும்.

ஆடுதீண்டாப்பாளை வேர் 2 கிராம் எடுத்து பொடி செய்து வெந்நீரில் குடித்து வந்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

ஆடுதீண்டாப்பாளை இலையை பொடி செய்து வெந்நீரில் கலந்து குடித்தால் விஷக்கடி குறையும்.

விஷக்கடியை அறிவது எப்படி?
தீண்டிய நச்சுயிர்கள் காணாவிடின் கடியுண்டவனுக்கு சில பொருட்கள் கொடுத்து அதன் சுவை மாற்றத்தின் மூலம் தீண்டியவற்றை அறியலாம்.பாம்புக்கடி பட்டவனுக்கு ஆடுதீண்டாப்பாளை வேரை உண்ணும்படி கொடுக்க;
அதன் சுவை மாறி தித்திப்பின் — நல்லப்பாம்பு,
முதலில் இனித்து பின் துவர்த்தால் — மூக்கன்,
மிகவும் புளித்தால்–வழலைசாதி,
வளவளுத்து புளித்தால் — கருவழலை,
மயக்கத்துடன் காரமாயிருப்பின் — மயக்கரவு,
நினைத்த சுவை தோன்றின் — புடையன்,
முட்கீரை சுவையிருப்பின் — மண்டலி,
புளித்து பின் காரமாயிருப்பின் — பெரு விரியன்,
தலை நடுக்கினால் — விரியன் சாதி,
நா கடுகடுத்தால் — கொம்பேறி மூக்கன்,
நாவு சுருட்டினால் — சுருட்டை,
உள்நாவு சர சரத்தால் — சாரை
கண்மறைத்து நெஞ்சடைப்பின் — கல்நெஞ்சன்,
தூக்கமின்றி நெஞ்சு படபடப்பின் — சவடி,
சுரனயற்று இருப்பின் — இரு தலை மணியன்,
பல் கடுத்தால் — செய்யான்,
சல சலவென மூக்கு எறிந்தால் — எலிச்சாதி,
மேல் நாவு நொந்தால் — நச்செலி,
வாந்தியானால் –அரணை,
கண் காது அடைத்தால் — சில்விடம் முதலியன முறையே தீண்டியுள்ளன எனவும்,
கசந்தால் – ஒருவித நஞ்சுமில்லை எனவும் உணரலாம்.

ஆடுதீண்டாபாளை, ஆகாசக்கருடன், நாகதாளிக்கிழங்கு ஆகியவை இருக்கும் (வைத்திருக்கும்) இடங்களில் நச்சு உயிரிகள் அண்டாது.

சரும கரப்பான் மற்றும் புஞ்சைத் தொற்று நிவாரணி
சிறிது சுக்கு, ஆடுதீண்டாப்பாளை மற்றும் கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் வைத்து நன்றாக அரைக்கவும். உணவிற்கு பிறகு 2 கிராம் வீதம் உட்கொள்ளவும். கை மேல் பலன் விரைவில் கிடைக்கும்.

 

வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், மாத விலக்ககைத் துண்டும் மருந்தாகவும் பேறு கால வலியை மிகுக்கும் மருந்தாகவும் பயன்படும்.

1. 10 மி.லி. இலைச்சாறு காலை மாலை குடித்துவர ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும். விட்டுவிட்டுவரும் காய்ச்சல் குணமாகும்.

2. இலைச்சூரணம் 2 சிட்டிகை வெந்நீரில் கொள்ளப் பாம்பு விஷம், சில் விஷம், மலக் கிருமிகள், கருங்குட்டம், யானைத் தோல் சொறி தீரும்.

3. வேரை அரைத்துக் காலை, மாலை 5 கிராம் கொடுத்துக் கடும் பத்தியத்தில் வைக்க (புதுப்பனையில் உப்பில்லாத பச்சரிசி பொங்கல், 24 மணி நேரம் தூங்க விடக் கூடாது) 3 நாள்களில் எல்லா விதப் பாம்பு நஞ்சும் தீரும்.

4. வேர்ச் சூரணம் 10 கிராம் வெந்நீரில் கொடுக்க மகப்பேறு வேதனை தீர்ந்து சுகப்பேறு ஆகும்.

5. விதைச் சூரணம் 5 கிராம் விளக்கெண்ணெயில் கொடுக்க நன்கு பேதியாகி வயிற்றுவலி, சூதகத்தடை, மலக்கிருமிகள் நீங்கும்.

 

-மூலிகைகள்