அவுரி / நீலி

மூலிகையின் பெயர் – அவுரி
தாவரப்பெயர் – Indigofera tinctoria
தாவரக்குடும்பம் – Fabaceae
வேறுபெயர்கள் – நீலி
பயன்தரும் பாகங்கள் – இலை,காய்கள்.

அவுரி-thamil.co.ukவளரியல்பு – அவுரி எனும் குறுஞ்செடியினம் இந்தியாவில் தென்னாட்டிலும், வங்காளத்திலும் அதிகமாகப் பயிராகும் தாவரம். அவுரிச் செடி சுமார் மூன்று அடி உயரம் வரை வளரும். அதன் இலைகள் ஆவாரம்பூ செடியின் இலையைப் போல இருக்கும். அதன் பூக்கள், வெளிறிய மஞ்சள் நிறமாகவும் காய்கள் முதிர்ச்சி அடையும்போது கறுப்பு நிறமாகவும் இருக்கும்.

அவுரி​யின் இலை மற்றும் காய்கள் மலச்சிக்கல் நோயைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டவை.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன், நெல் அறுவடைக்குப் பிறகு அந்த நிலத்தில் அவுரி பயிரிடுவார்கள். மீண்டும் உழவு ஆரம்பிக்கும்போது, அவுரியையும் சேர்த்து உழுவார்கள். அது ஒரு சிறந்த பசுந்தாள் உரம்.

நீலச் சாயம்அப்படிப்பட்ட அவுரிச் செடியில் இருந்துதான் நீலச் சாயம் தயாரிக்கப்படுகிறது. பருத்தித் துணிகளுக்கு அடர் நீல வண்ணச் சாயம் ஏற்ற அவுரிச் செடியே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் பண்டைக்காலம் தொட்டே இண்டிகோ ஏற்றுமதிப் பொருளாக இருந்திருக்கிறது. கிரேக்கம் மற்றும் ரோம் நகரங்களுக்கு இந்தியாவில் இருந்து இண்டிகோ ஏற்றுமதி செய்யப்பட்டதைப் பற்றிய சரித்திரக் குறிப்புகள் இருக்கின்றன.

ஆயுர்வேதத்தில் இதனை நீலி என்று சொல்வோம்.

மருத்துவப்பயன்கள்

அவுரி-thamil.co.ukகப வாத நோய்களை தீர்க்கும், விஷத்தை போக்கும், முடிக்கு நல்லது, வயிற்று பூச்சிகளை கொல்லும்.

நோய்களில் – உதரம் என்னும் வயிறு வீக்கம், வாதரக்தம், ஆமவாதம், குன்மம், ஜ்வரம், மண்ணீரல் நோய்களை நீக்கும்.

சோஷம் என்னும் உடல் எடை குறைதலில் – அவுரி வேரை பசும் பாலில் கலந்து பருகவேண்டும் (கத நிக்ர ஹம்)

பாம்பு கடியில் –அவுரி வேரை கழனி தண்ணீரில் இடித்து சாப்பிட எந்த விதமான பாம்பு கடியில் ஏற்படும் விஷமும் நீங்கி விடும் (ராஜ நிகண்டு)

பல்லில் உள்ள கிருமிக்கு -நீலியின் வேரை கடித்து துப்ப தீரும் (கத நிக்ர ஹம்)

அவுரி--thamil.co.ukகடைகளில் கிடைக்ககூடிய மருந்துகளில் – நீலி பிருங்காதி தைலம், நீலின்யாதி கிருதம், நீலிகாதி தைலம்.

இந்த அவரி சமூல சாறு -நல்ல பாம்பு விஷத்திற்கு எதிர் மருந்தாக செயல்படும்

தீப்புண், தீயினால் ஏற்பட்ட கொப்புளங்களை சரியாக்க இந்த அவுரி பயன்படும்

நாய்கடி விஷத்தால் ஏற்படும் ஹைடிரோ போபியா க்கு நன்றாக வேலை செய்யும்

சிறந்த சாயமேற்றியாக பயன்படுகிறது

வெளுத்த முடிக்கு இயற்கையாக கருப்பாக்க இந்த நீலி பயன்படும்

அவுரி இலைகள் சாயம் மட்டும் தருவதல்ல, மிகச்சிறந்த மூலிகை குணங்களைக் கொண்டது. இயற்கையாக கிடைக்கும் மிகசிறந்த மலமிளக்கி. 18 வகை விஷங்களை நீக்கும் வன்மை பெற்றது .

‘உரியலவுரித்துழைத்தான் ஓதுபதினெண்
அரிய நஞ்சைத் தின்றவர்க்கும் ஆகும் – தெரிவரிய
வாத வெப்பு காமாலை மைந்தர்குறு மாந்தஞ்
சீதம் அகற்றும் தெரி ‘ – என்கிறது குண பாடம்

மலச்சிக்கலை நீக்கும். விஷங்களைக் கொல்லும் குணங்களைக் கொண்டது. இதன் இலை பதினெண் வகை நஞ்சுகளைப் போக்கும். காமாலை, சீதளம், முப்பிணி, கீல்வாதம் இவைகளைப் போக்கும். உடல் பொன்னிறம் பெறும்.

இதன் குணங்கள் – சோபாநாசினி , விஷநாசகாரி, மலகாரி , உற்ச்சாககாரி

முடி வளர்க்கும் தைலங்களில் கரிசாலை, நெல்லிக்காய், இவைகளுடன் அவுரியும் சேர்க்கப்படுகிறது. கேசத்தின் நிறத்தை மாற்றும் சக்தி உள்ள மூலிகை.

அவுரியின் இலை மற்றும் காய்கள் மலச்சிக்கல் நோயைக் குணப்படுத்த பெரிதும் பயன்படுகின்றது. இலைகளிலும் காய்களிலும் சென்னோஸைடு மூலப்பொருட்கள் அடங்கியுள்ளன. அவுரி ஒன்று மட்டுமே இயற்கை மலமிளக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதன் இலையை அரைத்து கொட்டைப்பாக்கு அளவு வெள்ளாட்டுப் பாலில் கலந்து சாப்பிட நிச்சயமாக மஞ்சள் காமாலை கல்லீரல் நோய்கள் தீரும். தினம் ஒரு வேளையாக மூன்று நாள் சாப்பிடவேண்டும்.

இதன் இலையை அரைத்து தோல் நோய்கள் சிரங்குகளுக்கு பூச குணமாகும்.

இதன் இலையை அரைத்து விளக்கெண்ணையுடன் கலந்து சிறு குழந்தைகளின் தொப்பிளை சுற்றி தடவ மலம் வெளியாகும். இது ஒரு பாதுகாப்பான வைத்தியம் .

அவுரிஇலை சாறு பல விஷங்களை நீக்கும். சர்ப்ப விஷத்துக்குக் கூட தரலாம். அவுரி வேரை நன்றாக அரைத்து நெல்லிக்காய அளவு அரை ஆழாக்கு பசுவின் பாலில் கலக்கி வடிகட்டி தினம் ஒருவேளை என எட்டு நாள் தர சிலந்தி எலி முதலியவையின் விஷம் நீங்கும்.

இதில் நெல்லிக்காய் அளவு என்று சொல்வது பிரமாணம். பசும் பாலில் கலந்து என்பது அனுபானம். சித்த மருந்துகளில் இவை இரண்டும் முக்கியம். மேலும் சுத்தி செய்வது மிக முக்கியம். அத்தகைய சுத்தி செய்வதில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தனிமுறை உள்ளது. ஆனால் அவைகள் தெரியாத நிலையில் அந்த மருத்துவபொருளை நீலி இலை சாறில் ஊறவைத்து பயன்படுத்தினால் மருந்து சுத்தி ஆகும் . அத்தனை சக்தி வாயந்தது இந்த நீலி.

மண் சட்டியில், அவுரி வேரையும் சுக்கையும் சம அளவு நீருடன் கலந்து, சரிபாதியாக ஆகும் வரை காய்ச்சி, மருந்துகளின் வீரியம் உடலில் இருந்து நீங்க தருவது வழக்கம். பொதுவாக நல்லதொரு மருத்துவர் தனது மருத்துவ முறையை ஆரம்பிப்பதற்கு முன்பு, அதுவரை வேறு வைத்தியர்களிடம் உண்டுவந்த மருந்துகளின் வீரியத்தைக் குறைத்து விட்டு, பிறகுதான் தங்களது மருந்தை கொடுக்க ஆரம்பிப்பது தான் வழக்கம்.

இன்னும் கூட சில சிறந்த ரகசிய முறைகள் ஒவ்வொரு வைத்தியரும் வைத்திருப்பார். இப்போது ஆங்கில முறை மருத்துவத்தில் அத்தகைய கவனிப்பு ஒன்றும் இல்லை.உடலை ஒரு சோதனைக் கூடமாக கருதி வேறு வேறு மருந்துகளை தரும் பழக்கம் தான் உள்ளது. ஆனால் சித்தமருத்துவத்தில் முன்னர் கொடுத்த மருந்துகளை முறித்தபின்பே அடுத்தது கொடுக்க ஆரம்பிப்பார் உடலை மிகவும் நேசிப்பார்.

சித்த மருத்துவத்தில் 

‘எல்லா விடங்களுக்கும் ஏற்ற முறிப்பாகும்
பொல்லாச் சுர மூர்ச்சை பொங்கு வெட்டை-நில்லாப்
பவுரி தருங் குன்ம முதல் பண்ண யோழியும்
அவுரி தரும் வேருக் கறி’

எல்லா விஷங்களையும் போக்கும்
மஞ்சள் காமாலை சரியாகும்
மாந்தம் கீல்வாதம் போகும்
உடல் பொன்னிறமாகும்

குணமாகும் நோய்கள் -வலிப்பு, நரம்பு நோய்கள், புண்கள், மூலம்,காமாலை, நீர்சுருக்கு நீக்கும்


Indigoஇயற்கை சாயம்!

‘டை, கலரிங் என்று கெமிக்கல்களுடன் போராடி, உயிருக்கு உலை வைத்துக் கொள்வதைவிட, இயற்கையாகவே சாயத்தைத் தரும் அவுரிச் செடி இலைகளைப் பயன்படுத்தினால்… எந்தக் கவலையும் இல்லாமல், கருகரு முடியோடு கலக்கலாமே!” என்று சொல்லும் கடலூர் அன்னமேரி பாட்டி, அவுரி சாயம் தயாரிக்கும் முறையையும் அழகாக எடுத்து வைத்தார். இதோ அவர் சொல்லும் இயற்கை டெக்னிக்!

அவுரி இலை – 50 கிராம், மருதாணி இலை – 50 கிராம், வெள்ளை கரிசலாங்கண்ணி – 50 கிராம், கறிவேப்பிலை – 50 கிராம், பெருநெல்லி (கொட்டை நீக்கியது) – 10 எண்ணிக்கை… இவை அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும். ஒரு மடல் சோற்றுக் கற்றாழையை மிக்ஸியில் அரைத்து (சிறுசிறு துண்டுகளாகவும் வெட்டி சேர்க்கலாம்). அரைத்து வைத்திருக்கும் அவுரி கலவையுடன் சேர்த்து, ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மிதமான தீயில் காய்ச்ச வேண்டும். கொதிநிலைக்கு வரும்போது இறக்கி வடிகட்ட வேண்டும். இதை பத்திரப்படுத்தி வைத்து, தினசரி தலைக்கு எண்ணெய் பூசுவது போல பயன்படுத்தலாம். நாளடைவில் முடியின் நிறம் மாறுவதோடு புதிதாகவும் முடி வளரும்.

-ஆயுர்வேதமருத்துவம்
-மருத்துவம்

தொகுப்பு – thamil.co.uk