அஸ்வகந்தா/ அமுக்கராக் கிழங்கு

அஸ்வகந்தாமூலிகையின் பெயர் – அஸ்வகந்தா
தாவரப்பெயர் – WITHANIA SOMNIFERA DUNAL
தாவரக் குடும்பம் – SOLANACEAE
வேறு பெயர்கள் – அசுவம், அசுவகந்தி, அசுவகந்தம், அசுவகந்தா, அமுக்குரா, அமுக்கூரம், அமுக்குரவு, இருளிசெவி, இடிச்செவி, வராககர்னி, நகுடவேர் போன்றவை ஆகும் .

வகைகள் – நாட்டு அமுக்கூரம், சீமை அமுக்கூரம், ஜவகர் அஸ்காந்த்-20
நாட்டு அமுக்கூரம், 3 விரல் கனத்தில் கட்டைகளாக கிடைக்கும். கசப்பு சுவை இருக்காது. லேகியங்களில் அதிகமாக சேர்க்கப் படுகிறது. சீமை அமுக்கூரம் கசப்பு சுவை உடையது. சிறு குச்சி போன்று வெளிறிய நிறத்தில் இருக்கும். நாட்டு அமுக்கூரத்தை காட்டிலும் வீரியமிக்கது. சூரணங்களில் அதிகமாக சேர்க்கப்படுகிறது.

அஸ்வகந்தா 1பயன்தரும் பாகங்கள் – முக்கியமாக பயனபடும்பகுதி வேர் மற்றும் இலை, விதை பழமென அனைத்திலும் ஆல்கலாய்டுகள் இருப்பதால் இதனை சித்தா, யுனானி, அலோபதி உட்பட மருந்துக்கெனபயன்படுத்தப்படுகின்றன.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள் – இதன் (Withanine, Somniferine, Amino Acids, Glucose, Choline, Hydroxy Prolin, Glycin, Alanine) உறுப்புகளில் இருந்து புரதங்கள், அமினோ அமிலங்கள், ஆல்கலாய்டுகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. வித்தாபெரின், வித்தானோன், வித்தனோலைடு, சோம்னிடோல், வித்தாசோமினி பெரின், நிகோடைன், டிரோபைன் போன்றவை காணப்படுகின்றன.

வளரியல்பு
அஸ்வகந்தாவின் பிறப்பிடம் வட ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா. பின் பரவிய இடங்கள் மத்தியப்பிரதேசம், பஞ்சாப், சிந்து, ராஜஸ்தான் மற்றும் கர்நாடக, தமிழ்நாடு. இது களர்,தரிசு, உவர் மற்றும் மணல் சாகுபடிக்கு ஏற்ற நிலம். குறைந்த மண் வளமுடைய நீமுச், மன்சூர், மனாசா போன்ற இடங்களிலும் பயிர் செய்யப்படுகிறது. இது ஒரு குறுஞ்செடி 1.5 அடி உயரம் வரை நேராக வளர்க்கூடியது. மத்தியப்பிரதேசத்தில் கிட்டத்தட்ட 4000 ஹெக்டர் பரப்ளவில் பயிரடப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் மைசூர், கோயமுத்தூர், திருநெல்வேலி, ஆகிய இடங்களில் பயிரிடப் படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வட ஆப்ரிக்க மெடிட்டரேனியன் பகுதிகளிலும் இயற்கையாக வளரவல்ல இந்த மூலிகையின் மற்றொரு ரகமும் உண்டு அது 2-4 அடி வரை வல்ல குறுகிய சாம்பல் நிறமுடைய ஒரு குற்று மரம். இதனை பஞ்சாப், சிந்து மற்றும் இதனை ஒட்டிய பிற மாநிலங்களிலும் காணலாம்.

விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது. விதைத்த 150-170 நாட்களில் பயிர் அறுவடைக்குத் தயாராகிவிடும். பிடுங்கி வேர், தண்டுப் பாகத்தைப் பிரித்தெடுக்க வேண்டும். வேர்கள் உலர வைத்து 4 ரகங்களாகப் பிறிப்பார்கள். முதிர்ந்த காய்களிலிருந்து விதைகளைப் பிரித்தெடுப்பார்கள். இவைகள் மருத்துவ குணமுடையவை.

மருத்துவப் பயன்கள்
அஸ்வகந்தா -thamil.co.ukஅஸ்வம் என்றால் குதிரையை குறிக்கும். குதிரை என்று சொன்னாலே முதலில் நமது மனதில் தென்படுவது, அதன் ஓடும் வேகம், சக்தி, பலம், திடமான உடலமைப்பு போன்றவை ஆகும். மேற்கண்ட குணத்தை தரக்கூடிய ஒரு மூலிகை அதுதான் அமுக்கூரம் என்றழைக்கப்படும் அஸ்வகந்தா வேர்.

இதன் சுவை கசப்பு. வாத நோய்கள், நரம்பு தளர்ச்சி, கை கால் நடுக்கம், இருமல், வீக்கம், தூக்கமின்மை, சோர்வு, வயிற்றுப் புண் உடல்வலி, நரம்புவியாதிகள், ஆகிய நோய்களை நீக்கி, ஆண்மை பெருக்கம் உண்டாக்கும். காமம், பித்தநீர்ப் பெருக்கியாகவும், குடல் தாதுவெப்பு அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும் உடலுக்கு நல்ல பலம், அழகு, நீண்ட ஆயுள் போன்றவற்றையும் தருகிறது.

‘கொஞ்சந் துவர்ப்பாங் கொடியகஞ் சூலையரி
மிஞ்சுகரப் பான்பாண்டு வெப்பதப்பு-விஞ்சி
முசுவுறு தோடமும்போ மோகம் அனு லுண்டாம்
அசுவகந் திக்கென்றறி.’

சிறிது துவர்ப்புள்ள அசுவகந்திக் கிழங்கினால் க்ஷயம், வாதசூலை, வாத கரப்பான், பாண்டு, சுரம், வீக்கம், சலதோஷம் இவை நீங்கும், மற்றும் மாதர்மேல் இச்சையும், பசியும் உண்டாகும் என்று உணர்க.

முறை
அசுவகந்திக் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கிப் பசுவின் பாலில் அவித்து உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து சமனெடை சர்க்கரை கூட்டிப் புட்டியில் பத்திரப் படுத்துக. வேண்டும் போது இச்சூரணத்தை வேளைக்கு ஒரு வராகனெடை வீதம் தினம் இரண்டு வேளை பசுவின் பாலில் கலக்கிக் கொடுக்கத் தேக வனப்பை உண்டாக்குவதுடன் தேகத்திலுள்ள துர் நீர், கபம், சூலை, கரப்பான், பாண்டு, மேக அழலை, வெட்டை, வீக்கம், கட்டி, பித்த மயக்கம் முதலியவற்றை நீக்கும்.

இன்னும் அசுவகந்திக் கிழங்குடன் சுக்கு சேர்த்து அரைத்துக் கட்டி வீக்கம் முதலியவற்றுக்குப் பத்துப் போடக் கரையும். இவையுமன்றி இதனுடன் இதர சரக்குகளைக் கூட்டிச் சில அவிழ்தங்கள் செய்வதுண்டு.

அசுவகந்திச் சூரணம்
கிராம்பு 1, சிறு நாகப்பூ 2, ஏலம் 3, இலவங்கப் பட்டை 4, இலவங்கப் பத்திரி 5, சீரகம் 6, தனியா 7, மிளகு 8, திப்பிலி 16, சுக்கு 32, பாலில் அவித்து சுத்தி செய்த அசுவகந்திக் கிழங்கு 64, ஆகிய இவற்றை வராகனெடையாக நிறுத்துக் கொண்டு கல்லுரலில் இட்டுக் கடப்பாறையால் நன்கு இடித்து வஸ்திரகாயஞ்செய்து இவற்றின் மொத்த எடைக்கு நிகரான வெள்ளைச் சர்க்கரை கூட்டிப் புட்டியில் பத்திரப் படுத்துக. வேண்டும் போது வேளைக்கு கால் அரைத் தோலா வீதம் தினம் இரு வேளை 20-40 நாள் கொடுக்க மேகம், அஸ்திசுரம், அஸ்திவெட்டை சுவாசம், ஈளை, பாண்டு, மேக ஊறல் முதலியவை நீங்கும்.

கிராம்பு 5கிராம், சிறுநாகப்பூ 10கிராம், ஏலஅரிசி 20கிராம், மிளகு 40கிராம், திப்பிலி 80கிராம், சுக்கு 160கிராம், சீமை அமுக்கூரா வேர் 320கிராம், சீனி 640கிராம் மேற்கண்ட மருந்துகளை இடித்து பொடித்து கொள்ளவும். ஒரு கரண்டி வீதம் தினம் 3 வேளை பாலில் அல்லது தேனில் சாப்பிட்டு வர, இருமல், உடல் வறட்சி, நரம்பு தளர்ச்சி மாறும். நல்ல பசி உண்டாகும். காக்காய் வலிப்பின் வேகம் குறையும். குழந்தை பெற்ற தாய்க்கு ஒரு வாரத்திற்கு பிறகு கொடுத்துவர பால் சுரக்கும்.

இரவு இரண்டு கரண்டிவீதம் பசும்பாலில் ஆகாரத்திற்கு பின் சாப்பிட உடல் அலுப்பு, உடல்வலி, களைப்பு மாறும். நெய்யில் இருவேளை தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் பருமனாகும். சிக்கன்குனியா காய்ச்சல் உண்டானபின் ஏற்படும் உடல்வலி, சந்துவலி, வீக்கம், அசதி போன்றவற்றிற்கு இச்சூரணத்தை பாலில் தொடர்ந்து தினம் இருவேளை உண்டு வரலாம்.

அசுவகந்தித் தைலம்
சுத்தி செய்த அசுவகந்திக் கிழங்கு பலம் 10, சற்றாமுட்டி வேர் பலம் 10, இவற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கி, இடித்து ஒரு பழகிய தைல பாண்டத்தில் போட்டு 12 படி சலம் விட்டு அதற்குள் 10 பலம் கொம்பரக்குத் தூளைத் தளர்ச்சியாக சீலையில் முடிந்து பாண்டத்தின் அடி மட்டத்திற்கு மேலே 4 விரல் உயரத்தில் நிற்கும் படி தோலாந்திரமாகக்கட்டி அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரிக்கவும்.

இந்த மண்பாண்டத்தில் விட்ட சலமானது நன்றாய்ச் சுண்டி மூன்று படி நிதானத்திற்கு வரும் சமயம் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விட்டு மறு பாண்டத்தில் வடித்து வைத்துக் கொள்க. அப்பால் முன் கியாழமிட்ட பாத்திரத்தைச் சுத்தப்படுத்தி அதனில் நல்லெண்ணெய் படி 2 ததிமஸ்து (பசுவின் தயிரைச் சீலையில் முடிச்சுக் கட்டி வடித்தெடுத்த சலம்) படி 1 முன் சித்திப் படுத்திய கியாழம் விட்டு உறவாகும் படி கலக்கி அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரிக்குந் தறுவாயில் சிற்றரத்தை, நன்னாரி, தேவதாரம், பூலாங்கிழங்கு, பூஞ்சாத்துப் பட்டை, கடுக்காய், தான்றிக்காய், நெல்லி வற்றல், கண்டந்திப்பிலி வகைக்கு பலம் அரைக்கால் வீதம் இடித்து வஸ்திரகாயம் செயுது பால் விட்டு அரைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறிக் கொடுக்கவும்.

தைலமானது நன்றாய் கொதித்து வண்டல் மெழுகு பதம் வருஞ்சமயம் கீளே இறக்கி ஆற விட்டு வடித்து சீசாவில் அடைத்துத் தானிய புடம் வைத்து எடுத்துக் கொள்க. வாரம் ஒரு முறை தலைக்கிட்டுக் குழிக்க கப சம்பந்தமான ரோகம், சுரம் குணமாகும், தேகம் இறுகும், கண் தெளிவடையும். இதற்குப் பத்தியம் பகல் நித்திரை, அலைச்சல், தேக உழைப்புக் கூடாது.

ஆண்மைபெருக்கம் உண்டாக
பூனைகாலி விதை 100கிராம், சீமை அமுக்குரா வேர் 100கிராம் இவற்றை இடித்து பொடியாக்கி, 2 கரண்டி வீதம் தினம் இருவேளை பசும்பாலில் உண்டுவர ஆண்மை பெருக்கம் உண்டாகும்.

நுரையீரல் நோய்க்கு மருந்து
இதன் இலைகள் கசப்பானவை, வயிற்றுப்பூச்சிகளுக்கு எதிரானவை. காய்ச்சல் போக்குவி, வேர் மற்றும் இலைகள் இணைந்து நுரையீரல் நோய்களுக்கு மருந்தாகின்றன. கசக்கிய இலைகளும் அரைத்த வேரும் மேல்பூச்சாக சொறி, வலியுடைய வீக்கங்கள், மற்றும் புண்கள் மீது பூசப்படுகிறது.

நரம்பு தளர்ச்சிக்கு
சீமை அமுக்கூரம் வேர் நன்கு இடித்து தூளாக்கி கொள்ளவும். இதனை 2 கரண்டி (5கி) வீதம் இரவில் ஆகாரத்திற்கு பிறகு பசும்பாலில் உண்ண நல்ல தூக்கம் வரும். மேற்படி அளவு மருந்தை காலை, மாலை பசும்பாலில் தொடர்ந்து உண்டுவர கைகால் நடுக்கம், இரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி மாறும். நரம்பு வலிமை நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை, மாலை சாப்பிட்டு விட்டு, அரை அல்லது ஓர் ஆழாக்கு பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி குறையும்.

அஸ்வகந்தா-thamil.co.ukநினைவாற்றலை அதிகரிக்கும் வேர்
அசுவகந்தாவின் வேர் வலுவேற்றுவியாக செயல்படுகிறது. இது இருமல், விக்கல், மாதவிடாய் கோளாறுகளை குணப்படுத்த வல்லது. ஞாபக சக்தியினை ஊக்குவித்து மறதியை போக்கும். மூப்பு பலவீனத்தை போக்கும். இதன் கசாயத்தில் பால் அல்லது நெய் சேர்த்து கொதிக்க வைத்த தயாரிப்பு ஊட்டத்தினை அதிகரிக்கும். முதுகுவலி மற்றும் மூட்டுவலிகளுக்கு மருந்தாகிறது.

வேரின் மருந்து உடல் உறுப்புகளின் செயலியல் மாற்றங்களைச் சரிப்படுத்துகிறது. இவை பால் உணர்வு ஊக்குவி, தாய்ப்பால் சுரப்பு ஊக்குவி, மூளை செயல்பாட்டினைத் தூண்டுகிறது. நரம்பு மண்டலத்தினை வலுப்படுத்தும், விந்து எண்ணிக்கையினை அதிகரிக்கும். வேரின் பொடி சமஅளவு நெய் மற்றும் தேனுடன் உட்கொண்டால் மலட்டுத்தன்மை அல்லது விந்து பலவீனத்தை நீக்கும்.

அதிமதுரம் பொடி 100கிராம், சீமை அமுக்கூரம் பொடி 100 கிராம் இதனை கலந்து ஒரு கரண்டி வீதம் தினம் 3 வேளை ஆகாரத்திற்கு முன் அல்லது பின் சாப்பிட்டு வர வயிற்றுவலி, வயிற்றுபுண் மாறும்.

இலையை மென்மையாய் அரைத்துப் பற்றுப்போட அரசபிளவை, எரிகரப்பான், பாலியல் நோய்ப்புண் ஆகியவை குணமாகும்.

2 கிராம் உலர்ந்த கிழங்குப் பொடி தேனில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வர உடல் பலவீனம், காசம், பசியின்மை, மூட்டு அழற்சி, செரிமானக் குறைவு, இருமல், உடல் வீக்கம், முதுமைத் தளர்ச்சி ஆகியவை நீங்கும்.

இலை வேர் ஆகியவற்றைச் சமஅளவு எடுத்து மையாய் அரைத்துப் பற்றுப் போட அரசபிளவை, ஆறாத புண்கள், மூட்டு அழற்சியினால் ஏற்படும் வீக்கம் ஆகியவை தீரும்.

காயை அரைத்துப் படர்தாமரையில் தடவிவரத் தீரும்.

வேர்ச்சூரணம் 5 கிராம் தேனில் காலை, மாலை கொள்ளச் சளி கரைந்து (நிமோனியா) கபவாதச் சுரம் தீரும்.

சூரணத்தைப் பாலில் கலந்து வீக்கம், படுக்கைப்புண் ஆகியவற்றிற்குப் பூச ஆறும்.

வேர்ச்சூரணம் தூதுவேளை சமன் கலந்து 5 கிராம் நெய் அல்லது பால் அல்லது வெண்ணெயில் தினம், மூன்று வேளை பத்தியத்துடன் கொடுத்து வரச் சிலேத்துமக் காய்ச்சல், பக்கச் சூலைக் காய்ச்சல் தீரும்.

அமுக்கரா சூரணம் 10 கிராம், கசகசா 30 கிராம், பாதாம் பருப்பு 10 கிராம், சாரப்பருப்பு 5 கிராம், பிஸ்தாப்பருப்பு 5 கிராம் ஊற வைத்துத் தோல் நீக்கி அரைத்து 200 மில்லி பாலில் கலந்து சர்க்கரைச் சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் மட்டும் 90 நாள்கள் சாப்பிட இழந்த இளமையைப் பெறலாம்.

இரத்த அழுத்தத்தை குறைத்தல், நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்குதல், வலி நிவாரணி, உடல் சூட்டை குறைத்தல், மனநிலை பாதிப்பை சரிசெய்தல், இதயபடபடப்பை குறைத்தல், நுரையீரல் ஊக்கியாக செயல்படல் போன்ற செய்கைகளை கொண்டுள்ளது. மேற்கண்ட நோய்களை தீர்க்க, அமுக்கூரம் வேரை இடித்து பொடியாக்கி, 2 கரண்டி (சுமார் 5கி) வீதம் தினம் இருவேளை பசும்பாலில் சாப்பிடவேண்டும்.

சுத்திமுறை
ஒரு வாய் அகன்ற சட்டியில் பசும்பாலும், நீரும் கலந்து வைத்து அதன்மேல் அமுக்குரா வேரை அத்துணியின் மீது பரப்பி, மேல்சட்டியால் மூடி அவிக்கவும். பால் ஆவியால் அமுக்கூரம் வேக வேண்டும் (சுமார் 1/2 மணிநேரம்) பின்னர், அதனை உலர்த்தி இடித்து பயன்படுத்தலாம். இப்படி, பால் ஆவியில் வேகவைத்த அமுக்கூரத்தை மேற்படி மருந்துகளில் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பக்கவிளைவுகள்
2 கரண்டிக்கு மேல் (5கிராம்) உண்ணும்போது சிலருக்கு (முதியவர்களுக்கு) கழிச்சல் ஏற்படலாம். கழிச்சல் ஏற்பட்டால் அளவை குறைத்தால் போதும். இது குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை பயன்படுத்தலாம்.

பிள்ளைபெற்ற பெண்கள், பால் கொடுக்கும் காலங்களிலும் பயன்படுத்தலாம். வேறு பக்கவிளைவுகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

நினைவுத்திறன் என்பது மனிதர்களுக்கு அவசியமானது. ஞாபகசக்தி குறைந்தால் எண்ணற்ற இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும். மனிதர்களின் நினைவுத்திறனுக்கும் ஆரோக்கியத்திற்கும் அசுவகந்தி என்னும் மூலிகைத்தாவரம் முக்கிய பங்கு வகிப்பதாக ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவப் பயன்கருதி இது தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது.

பத்தியம்: எலுமிச்சம் பழம், புளிப்புப் பதார்த்தங்கள் நீக்கவும்.

 

Ashwagandha7 Interesting Facts of Ashwagandha

As the wellness movement grows, you will likely hear more and more about this special herb. When you do, you’ll be armed with these 7 interesting facts:

Something smells…horse-y? The Sanskrit translation of ashwagandha is “the smell of a horse,” which, thankfully, is not literal. The term is meant to indicate that the herb will give one the vigor and strength of a stallion, and, rest assured, it smells simply like a dried herb, not a carriage house.

Brain and body benefits. Ashwagandha is one of the most important herbs in Ayurveda, and is used to treat a wide variety of ailments. It not only supports the immune system, but also may stabilize blood sugar and lower cholesterol. It is most commonly used for its effects on mental health. It promotes a sense of calm and relaxation while nourishing the nervous system, which can get overworked when we’re stressed.

An ancient stress-buster. Ashwagandha is an adaptogenic herb, which means it promotes homeostasis in your body and enhances its ability to deal with stress. When we are stressed, we pump out more of the hormone cortisol, and studies show that ashwagandha can reduce the amount of it by as much as 26%. This is great news, because chronically elevated cortisol levels increase inflammation and degenerative processes in the body.Another study showed that ashwagandha was able to significantly reduce the number of cells damaged by chronic stress. Using animals, researchers determined that 85% of their cells showed signs of degeneration when they were chronically exposed to stress. Adding ashwagandha to their diet caused that number to drop to just 5%.

Very ancient, that is. The use of ashwagandha dates all the way back to 6000 BC. The roots of the plant are traditionally dried and ground into a powder, which is how you’ll still find it today. It was typically mixed with water in a tea, with ghee (clarified butter), or with honey. A more modern option is to add it to a smoothie!

An “Indian ginseng”? “Indian ginseng” has become a pseudonym for ashwagandha because of its rejuvenating properties (although ashwagandha is actually part of the nightshade family, and is more closely related to the tomato). Taking this herb was customary after an illness to improve the immune system. In addition, ashwagandha is also used to enhance sexual potency for both men and women.

A worldwide herb. While it is typically associated with the Indian wellness system of Ayurveda, ashwagandha, also called winter cherry, grows naturally in both North America and Africa.

An athletic enhancer. Animal tests suggest that supplementing with ashwagandha may significantly improve athletic performance. A study of rats found that they were able to swim twice as long as they normally could when they were given the herb. This could translate to humans as increased endurance.

-thirukkovilragu.
-curejoy.com