மூலிகைகள் : ஒரு அறிமுகம்

மூலிகைகள்-thamil.co.ukமூலிகைகள் – ஒரு அறிமுகம் 
மூலிகைகளைக் கொண்டு நோயை நீக்கிக் கொள்வது மனிதர்கள் மட்டுமல்ல மிருகங்களும்தான். மருத்துவ மூலிகைகளைக் கொண்டு நோயை நீக்கிக் கொள்வது, மிகப் பழங்காலத்திலிருந்தே உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வரும் செயல். இது மனிதர்கள் மட்டுமல்லாமல் மிருகங்களும் தானாகவே பின்பற்றும் செயல் என்றும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

“புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது” என்பது பழமொழி. ஆனால் வயிற்றுக் கழிச்சல், ஒவ்வாமை போன்ற குறைபாடு ஏற்பட்டால், புலி இரையைத் தேடாமல் சில குறிப்பிட்ட தாவரங்களை மட்டும் தேடி உண்டு விட்டு குறை தீரும் வரை உபவாசம் இருப்பதாக அறிந்துள்ளார்கள்.

பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளான சித்த, ஆயுர்வேத முறைகள், சீன மற்றும் திபெத்திய மருத்துவ முறைகளில் மருத்துவ மூலிகைகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த உலகில் எவ்வாறு உயிரினங்களின் தேவைக்காக உணவு படைக்கப்பட்டதோ, அதேபோல அவைகளுக்கு ஏற்படக் கூடிய நோய்களுக்கு மருந்துகளும் படைக்கப்பட்டுள்ளன என்பது எல்லா பாரம்பரிய மருத்துவ முறைகளின் அடிப்படைக் கருத்தாகும். அவ்வாறு கண்டறியப்பட்ட சில பொதுவான மூலிகைகளின் பட்டியல் கீழே உள்ளது.

மூலிகைகளை உபயோகிக்கும் முறைகள்:
இந்த மூலிகைகளை நேரடியாக உபயோகிக்கும் முன்பாக, சில விபரங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

சித்த, ஆயுர்வேத முறைகளில் தாவரங்களில் உள்ள குணாதிசயங்கள் மட்டுமல்லாமல், சில குறிப்பிட்ட கால நேரங்களில் கிரக நிலைக்கேற்ப இந்த தாவரங்களில் பொதிந்து விலகும் ‘எல்லைக்கு அப்பாற்பட்ட சக்தி’களும் மிக முக்கிய பண்பாகக் கருதப்படுகிறது. ஆகவே இந்த தாவரங்களை மருத்துவத்திற்க்காக சேகரிக்கும் காலங்களும், சேகரிப்பவரின் உடல் சுத்தம், உள்ளச் சுத்தம், சேகரிக்கும் போதும் மருந்து தயாரிக்கும் போது உச்சரிக்க வேண்டியவை முதலியவற்றை தேர்ந்த வல்லுநரிடமே அறிந்து கொள்ள வேண்டும்.

பல மூலிகைகளில் உள்ள நற்பயன்களைப் பெறும் முன்பு, அதில் உள்ள எதிர் தன்மைகளை நீக்க வேண்டும், அப்போது தான் அந்த நற் பயன்களை தேவையான அளவில் நேரடியாக பெற முடியும். உதாரணமாக, மிளகை நாம் சாதாரணமாக உணவில் பயன்படுத்துகிறோம். ஆனால் மருத்துவத்திற்கு பயன்படுத்தும் முன்பு அதில் உள்ள எதிர் தன்மைகளை (மருத்துவக் கூற்றுப்படி – நச்சுத் தன்மைகளை) நீக்க மிளகை புளித்த மோரில் 3 மணி நேரம் ஊறவைத்து உலர்த்த வேண்டும்.

மூலிகைகள் சாதாரணமாக பக்க விளைவுகள் இல்லாதவை. மேலும் பல மூலிகைகளை நாம் தினசரி உணவிலும் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் மருத்துவ முறைகளில் உபயோகிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய பல நுணுக்கங்கள் இருப்பதால், மூலிகைகளின் முழுப்பயனை அடைய தேர்ந்த வல்லுநரின் வழிகாட்டலின் படி நடப்பதே சிறந்தது.

01: அதிமதுரம் – Glycyrhiza Glabra
தீரும் நோய்கள்: இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்.

02: அமுக்கராக் கிழங்கு/அஸ்வகந்தா – Withania Somnifera
உடல் எடை அதிகரிக்க, உடல் அசதி, மூட்டுவலி, தூக்கமின்மை.

03: அசோகு – Saraca Indica
கருப்பை நோய்கள், சூதக வலி, மாதவிடாய் போக்கு, வெள்ளைப்படுதல்.

04: அம்மான் பச்சரிசி – Euphorbia Hirta
முகப்பரு, முகத்தில் எண்ணெய்ப் பசை, கால் ஆணி, பித்த வெடிப்பு, இரைப்பு, தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க.

05: அருகம்புல் – Cynodon Dactylon
இரத்தம் சுத்தமாக, வியர்வை நாற்றம், உடல் அரிப்பு, நமைச்சல், வெள்ளைப்படுதல்.

06: அரிவாள்மனை பூண்டு – Sida Acuta
காயங்கள், புண்களுக்கு களிம்பு செய்து பூச.

07: அவுரி (நீலி)– Indigofera Tinctoria
பாம்புக்கடிக்கு முதலுதவி, காமாலை, தோல் நோய்கள், ஒவ்வாமை (அலர்ஜி).

08: ஆடாதோடை – Adhatoda Zeylanica
சளி, இருமல், தொண்டைக் கட்டு.

09: ஆடுதீண்டாபாளை – Aristolochia Bracteolata
தோல் நோய்கள், சிரங்கு, கரப்பான், வண்டுக்கடி ஆகியவைகளுக்கு மேல் பூச்சு.

10: ஆரை – Marsilia Quadrifolia
சிறுநீர்க்கட்டு, சிறுநீர் எரிச்சல்.

11: ஆவாரை – Cassia Auriculata
நீரிழிவு, மேக நோய்கள், நீர்கடுப்பு, உள்ளங் கால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல்.

12: இஞ்சி – Zingiber Officinale
பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல்.

13: இம்பூரல் – Oldenlandia Umbellata
இரத்த வாந்தி, மாதவிடாய் போக்கு கட்டுபடுத்த.

14: உத்தாமணி (வேலிப்பருத்தி) – Pergularia Daemia
குழந்தைகளுக்கு செரியாமை (அஜீரணம்), மாந்தம், வயிற்றுப் பொருமல் ஆகியவைகளுக்கு.

15: உத்திராட்சம் – Elaeocarpus Scarius
குழந்தைகளுக்கு தொண்டைக்கட்டு, இடைவிடாத விக்கல், கோழை.

16: ஊமத்தை – Datura Metel
புண்களுக்கு வெளிப்பூச்சு மட்டும்.

17: எருக்கன் – Calotropis Gigantea
தேள், குளவி, பூச்சிகளின் விஷக்கடி, கட்டிகளுக்கு மேல் பூச்சு.

18: எள் – Sesamum Indicum
உடற்சூடு, தலைப் பாரம் குறைய.

19: ஏலக்காய் – Elettaria Cardamomum
அஜீரணம், குமட்டல், வாந்தி.

20: ஓதியன் – Lannea Coromandelica
வாய்புண், குடல்புண், இரத்தக்கழிச்சல், பேதி.

21: ஓமம் – Carum Roxburghianum
மூக்கடைப்பு (Running nose), பீனிசம்.

22: ஓரிதழ் தாமரை – Hybanthus Enneaspermus
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வெள்ளைப்படுதல்.

23: கசகசா – Papaver Somniferum
தீரும் நோய்கள்: பேதி.

24: கண்டங்கத்திரி – Solanum Xanthocarpum
சளி, இருமல், சுவாசப் பாதை நோய்கள்.

25: கல்யாண பூசணி – Cucurbita Moschata
உடல் பருக்க, உடல்சூடு குறைய.

26: கற்பூரவள்ளி – Coleus Aromaticus
குழந்தைகளுக்கு கோழை வெளியேற்ற.

27: கடுகு– Brassica Juncea
கட்டிகளுக்கு பூச.

28: கடுக்காய் – Terminalia Chebula
வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், கருப்பை புண்கள்.

29: கரியபோளம் (மூசாம்பரம்) குமரி – Aloe Barbadensis
சூதகவலி, சுளுக்கு.

30: கரிசலாங்கண்ணி – Eclipta Prostrata
நாள் பட்ட சளி, கோழை

31: கறிவேப்பிலை – Murraya Koenigii
சுவையின்மை, நீண்ட நாள் தொடர்ந்து சாப்பிட நரை மாறுதல், கண்பார்வை தெளிவு.

32: கஸ்தூரி மஞ்சள் – Curcuma Aromatica
சொறி, சிரங்கு, வியர்வை நாற்றத்திற்கு மேல் பூச்சு.

33: காசுக்கட்டி – Acacia Catechu
வயிற்றுப் போக்கு, மலத்தில் இரத்தம்.

34: கிராம்பு – Syzygium Aromaticum
பல்வலி, தேள்கடி, விஷக்கடி, கோழை.

35: கீழாநெல்லி – Phyllanthus Amarus
மஞ்சள் காமாலை, சர்க்கரை நோய், சிறுநீர்க்கட்டு.

36 :குங்கிலியம் – Shorea Robusta
மூட்டுவலி, இளம்பிள்ளை வாதம்.

37: குடசப்பாலை (கருப்பாலை) – Holarrhena Pubescens
சீதக்கழிச்சல்.

38: குப்பை மேனி – Acalypha Indica
கோழை. மேல் பூச்சாக உடல் அரிப்பு, சொறி, சிரங்குக்கு.

39: கொத்துமல்லி – Coriandrum Sativum
வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல்.

40: கோரைக் கிழங்கு – Cyperus Rotundus
மூட்டுவலி, தசைவலி, வயிற்றுக் கோளாறு.

41: கோவைக்காய் – Coccinia Grandis
சூடு, உதடு வெடிப்பு, வயிற்றுப் புண்.

42: சடமாஞ்சில் – Nardostachys Jatamansi
கூந்தல் தைலத்திற்கு.

43: சதகுப்பை – Anethum Sowa
குழந்தைகளுக்கு பால் செரியாமை, வயிற்று உப்புசம்.

44: சந்தனம் – Santalum Album
உடல் வெப்பம், சிறுநீர் எரிச்சல், சிறுநீர்க்கட்டு, உடல் இளைக்க.

45: ஜாதிக்காய் – Myristica Fragrans
காது இரைச்சல், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, சீதபேதி, நல்ல தூக்கம் வர.

46: சிறுகண் பீளை (பூலாச்செடி, கண்ணுப்பீளை) – Aerva Lanata
சிறுநீரகக்கற்கள், சிறுநீர் எரிச்சல், சிறுநீரில் இரத்தம், வெள்ளைப்படுதல்.

47: சிறுகீரை – Amaranthus Tricolor
உடல் பலம், சிறுநீர் நன்கு பிரிய.

48: சிறுசெருப்படை – Coldenia Procumbens
நீர்க்கடுப்பு, சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல்.

49: சிற்றாமுட்டி – Pavonia Zeylanica
மூட்டு வலி, வாதம் ஆகியவைகளுக்கு மேல் பூச்சு.

50: சீதா – Annona Squamosa
பழம் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த, தலைப் பேன்களுக்கு விதைகள் / இலைகளை மேல் பூச்சாக.

51: சீரகம் – Cuminum Cyminum
சுவையின்மை, பசியின்மை, வயிற்றுப் பொருமல்.

52:சுண்டை – Solanum Torvum
சுவாசப் பாதை நோய்கள், வயிற்றுப் புழுக்கள், பேதி கட்டுப்படுத்த.

53: செம்பருத்தி– Hibiscus Rosasinensis
படபடப்பு, நெஞ்சுவலி, இரத்த சோகை

54:சாத்தாவாரி/ தண்ணீர்விட்டான் கிழங்கு – Asparagus Racemosus
உடல் பருக்க, வயிற்று எரிச்சல், நீர்க்கட்டு, தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க.

55: தவசு முருங்கை – Justicia Tranquebarensis
குழந்தைகளுக்கு சளி தீர.

56: தழுதாழை – Clerodendrum Phlomides
மூட்டுவலி, இளம்பிள்ளை வாதம்.

57: தாழை -Pandanus Odoratissimus
வெட்டை நோய், உடல் எரிச்சல்.

58: தாளிசபத்திரி – Taxus Buccata
இருமல், இரைப்பு, பெரும்பாலான நோய்களுக்கு துணை மருந்து.

59: தான்றிக்காய் – Terminalia Bellerica
தொண்டை வலி, தொண்டைக்கட்டு.

60: திப்பிலி – Piper Longum
தொண்டைக்கட்டு, காய்ச்சல், கோழை, சளி.

61: துத்தி – Abutilon Indicum
மூலம், வெள்ளைப்படுதல்.

62: தும்பை -Leucas Aspera
குழந்தைகளுக்கு கோழை வெளியேற்ற.

63: துளசி – Ocimum Sanctum
சளி, இருமல், வறட்டு இருமல், காய்ச்சல்.

64: தூதுவளை – Solanum Trilobatum
இருமல், சளி, ஜீரண சக்தி அதிகரிக்க.

65: தேற்றான்‍கொட்டை – Strychnos Potatorum
மூலம், சிறுநீர்க்கட்டு, வெள்ளைப்படுதல்.

66: நஞ்சறுப்பான் – Tylophora Asthmatica
ஆஸ்துமா.

67: நந்தியாவட்டை – Ervatamia Divaricata
கண் நோய்கள்.

68: நன்னாரி – Hemidesmus Indicus
உடல் சூடு, மேல் பூச்சாக தோல் நோய்களுக்கு.

69: நாயுருவி – Achyranthes Aspera
உடல் பலம், பற்பொடி.

70: நாவல் – Syzygium Cumini
சிறுநீர் எரிச்சல், சிறுநீர்க்கட்டு.

71:  நித்யகல்யாணி – Catharanthus Roseus
நீரழிவு, சிறுநீர்த்தாரை, வெள்ளை இரத்தப்புற்று நோய்.

72: நிலவேம்பு – Andrographis Paniculata
காமாலை, காய்ச்சல், கல்லீரல் குணமடைய.

73: நிலாவிரை – Cassia Senna
மலச்சிக்கல்.

74: நீர்முள்ளி – Hygrophila Auriculata
நீர்சுருக்கு, சிறுநீர்க்கட்டு.

75: நுணா – Morinda Coreia
மாந்தம், கழிச்சல்.

76: நெருஞ்சி – Tribulus Terrestris
நீர்கடுப்பு, வெள்ளைப்படுதல்.

77: நெல்லி – Phyllanthus Emblica
உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க.

78: நொச்சி – Vitex Negundo
ஜலதோஷத்திற்கு ஆவி பிடிக்க.

79: பப்பாளி – Carica Papaya
கண்பார்வை தெளிவு.

80:  பற்படாகம் – Mollugo Cerviana
குழந்தைகளுக்கு பேதி, ஜுரம் கட்டுப்படுத்த.

81:  பிரண்டை – Cissus Quadrangularis
குழந்தைகளுக்கு எலும்பு வளர்ச்சி, எலும்பு முறிவுகள் விரைவில் குணமடைய, பசியின்மை, செரியாமை, சுவையின்மை

82: புதினா – Mentha Sativa
வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை.

83: பேரரத்தை– Alpinia Galanga
சளி, இருமல், தொண்டைக்கட்டு, தசைவலி, மூட்டுவலி.

84: பொடுதலை – Phyla Nodiflora
பொடுகு, முடி உதிர்தல் கட்டுப்பட.

85: மஞ்சள் – Curcuma Longa
இருமல், தொண்டைக்கட்டு, புண்கள் ஆற, கண் நோய்களுக்கு வெளிப்பூச்சு, கிருமி நாசினி.

86: மணத்தக்காளி – Solanum Nigrum
வாய்ப்புண், ஜுரம்.

87: மருதோன்றி (மருதாணி) – Lawsonia Inermis
இளநரை மாற, கண்கள் குளிர்ச்சி, நல்ல தூக்கம் வர.

88: மல்லிகை – Jasminum Sambac
பால் சுரப்பு நிற்க, மார்பக வீக்கம் குறைய.

89: மிளகு -Piper Nigrum
சளி, கோழை, இருமல், விஷமுறிவு.

90: முடக்கறுத்தான் – Cardiospermum Halicacabum
மூட்டுவலி, கை கால் வலி.

91: முட்சங்கன் – Azima Tetracantha
தேள்கடி, பூச்சிக்கடி விஷம் குறைய.

92: முருக்கன் – Butea Monosperma
வயிற்றுப்புழுக்கள்.

93: மூக்கிரட்டை – Boerhavia Diffusa
ஆஸ்துமா, சிறுநீர் நன்கு பிரிய.

94: வசம்பு – Acorus Calamus
குழந்தைகளுக்கு நாக்குத் தடுமாற்றம், வாந்தி, பேதி, வயிற்றுவலி.

95: வல்லாரை – Centella Asiatica
ஞாபக சக்தி அதிகரிக்க, சளி குறைய.

96: வாதநாராயணன் – Delonix Elata
வாதவலி, வீக்கம், அடிபட்ட இடத்தில் வைத்து கட்ட.

97: வெட்டுக்காய் பூண்டு – Tridax Procumbens
புண்கள், வெட்டுக் காயத்தின் மீது வைத்துக் கட்ட, வெட்டுக் காயத்தில் இரத்தம் வெளியேறுவது.

98:  வெள்ளெருக்கு – Calotropis Procera
ஆஸ்துமா, கோழை.

99: வெற்றி‍லை – Piper Betle
வயிற்றுக் கோளாறு, கோழை இளக, ஜீரண சக்தி அதிகரிக்க.

100: வேம்பு-Azadirachta Indica
வெண் குஷ்டம், பித்த நோய்கள், தோல் நோய்கள், கிருமி நாசினி.

-களஞ்சியம்