பூக்கோவா : இதயநோய்க்கு சிறந்தது

காலிஃப்ளவர்-thamil.co.ukகாய்கறி இனத்தைச் சேர்ந்த பூக்கோவா/ காலிஃப்ளவர் (Cauli flower) ஒருவகையான பூ வகையைச் சேர்ந்தது. இதில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் மூலிகையாகவும் கருதலாம். முட்டைக்கோஸும், காலிப்ளவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை.

இது சாதாரணமாக வெள்ளையாகவோ, இளம் மஞ்சளாகவோ காணப்படும். காலிப்ளவரில் பொட்டாசியம், விட்டமின் B6 ஆகியவை உள்ளன. இதில் விட்டமின் C மிக அதிகமாக உள்ளது. ஒரு கப் நறுக்கிய பூவில் கலோரி 24, புரதம் 2 கிராம், மாச்சத்து 5 கிராம், விட்டமின் C 72 மில்லி கிராம், ஃபோலாசின் 66 மைக்ரோ கிராம், பொட்டாசியம் 355 மில்லி கிராம் அடங்கி உள்ளது.

இந்தக் காய்கறியை அதிகமாக வேகவைக்க கூடாது. சத்துக்கள் கரைந்துவிடும். இதில் ஒருவித தாவர அமிலம் உள்ளது. வேகும் போது கந்தகக் கலவையாக மாறி வாசனை வருகிறது. அதிக நேரம் வேக வைத்தால் வாசனை அதிகமாகும். சத்தும் வீணாகும். அலுமினியம், இரும்பு பாத்திரத்தில் வேக வைக்கக்கூடாது. இதிலுள்ள கந்தகக் கலவை அலுமினியத்துடன் சேர்ந்தால் பூ மஞ்சளாகிவிடும். இரும்பு இதை மண்ணிறமாக்கி விடும்.

காலிஃப்ளவரில் உள்ள விட்டமின் C யும், மக்னீசியமும் உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகும். மேலும் ஊட்டச்சத்து அதிகம் கொண்ட காலிஃப்ளவரை, உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலை தாக்கும் புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

இதைத் தண்ணீரில் வேகவைப்பதை விட நீராவியில் வேகவைக்கலாம். விட்டமின் C சத்து அதிகரிக்கும். மேலும் காலிஃப்ளவர் கொழுப்பு சத்து இல்லாத காய்கறி. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் இதயநோய்க்கு இதமான காய்கறி இது.

காலிப்ளவருக்கு புற்று நோயை தடுக்கும் சக்தி உள்ளது. பூ வேகும் போது Isothiocyantes என்னும் இரசாயனம் வெளிவருகிறது. இது உடலினுள் சென்று உடல் தானாக உற்பத்தி செய்யும் phase II என்ற புற்றுநோய் தடுக்கும் பொருளை அதிகமாக சுரக்கச் செய்கிறது. இது இடுப்பில் ஏற்படும் கருப்பு தழும்புகளைப் போக்கவல்லது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இது நார்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறியாகும். நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், சமிபாட்டிற்கு உதவுகின்றது. ஒரு கப் காலிஃப்ளவருக்கு, சுமார் 3.35 அளவில் நார்சத்து உள்ளது. நார்சத்து உடலுக்கு மிகவும் தேவை. ஏனெனில் இவையே சமிபாட்டை சரி செய்கின்றது. எனவே காலிஃப்ளவரை உணவில் சேர்த்து, சமிபாட்டை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

காலிஃப்ளவர் குறைவான கலோரிகள் கொண்டது. ஒரு கப் காலிஃப்ளவரில் 28-52 அளவு கலோரிகளே உள்ளது.இதை உட்கொள்வதால் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்வதில்லை. மேலும் உடல் எடையையும் குறைத்துக் கொள்ள முடியும்.

காலிஃப்ளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும், விட்டமின் K யும் நிறைந்துள்ளதால், இது உடலில் ஏற்படும் அழற்சியை நீக்குகின்றது. தினமும் இதை உணவில் சேர்த்துக் கொண்டால் கீல்வாதம், உடல் பருமன், நீரிழிவு நோய், அல்சரேட்டிவ் கொலிட்ஸ் (ulcerative colitis) மற்றும் குடல் பிரச்சனைகள் போன்ற அழற்சித் தரும் நோய்களை தடுக்க முடியும்.

காலிஃப்ளவரில் குளுக்கோசினோலேட்-Glucosinolates என அழைக்கப்படும் பைட்டோ சத்துக்கள் பெருமளவில் உள்ளதால், உடலின் நச்சுத் தன்மையை நீக்கி, புற்றுநோய் போன்ற நோய்கள் நெருங்காமல் பார்த்துக் கொள்கின்றது.

அன்டி-ஒக்ஸிடண்ட் -antioxidants மற்றும் அழற்சி நீக்கும் காரணிகள் உள்ளதால், காலிஃப்ளவர் இதய நோய்களை தடுக்க உதவுகின்றது. இதில் அல்லிசின் அதிகமாக இருப்பதால், இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், பக்கவாதம் மற்றும் பல இதய கோளாறுகள் தீண்டாமல் காத்துக் கொள்ள முடியும்.

காலிஃப்ளவரில் உள்ள பொட்டாசியம் சத்து, உடல் செயல்பாடுகளை சீராக்குவதுடன், நீர் அருந்துதலை அதிகப்படுத்தி, உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல், உடலை காக்க உதவுகின்றது.

காலிஃப்ளவரிடம் இருக்கும் மற்றொரு ஆரோக்கியமான செய்தி என்னவென்றால், இதில் இருக்கும் போலேட்(folate) மற்றும் விட்டமின் B சத்துக்கள் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் நரம்பு குழாய் சம்பந்தப்பட்ட குறைபாடுகளை நீக்கி, குழந்தை ஆரோக்கியமாக பிறக்க உதவுகின்றது.

காலிஃப்ளவரில் சல்போராபேன்- sulforaphane மற்றும் இண்டோல்-3-காஃபினோல்- indole 3 carbinol போன்ற கலவைகள் இருப்பதால், இது புற்றுநோயை எதிர்க்கும் சக்தி கொண்டுள்ளது. அதிலும் கர்ப்பப்பை வாய்,பெருங்குடல், மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய்களை எதிர்த்து, ஆரோக்கியமாக வாழ வழி செய்கின்றது.

-Meera Tharshan