தைராய்டு – Thyroid

தைராய்டு-thamil.co.ukதைராய்டு பிரச்சினை பெரும்பாலும் பெண்களையே அதிகம் பாதிக்கிறது. அதுவும் இளம்பெண்களை இந்த தைராய்டு பாடாய்படுத்துகிறது. கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கமே இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது.

தைராய்டு பெண்களின் தலையாய பிரச்சினையாக மாறி வருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது பெரும்பாலும் நோய்க்கிருமிகளால் தாக்கப் படுவதில்லை. அயோடின் குறைவே இதற்கு காரணம். தைராய்டு பாதிக்கப்பட்டால் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப்போகலாம். சில பெண்கள் குறைந்த வயதிலேயே பருவடையும் நிலையும் ஏற்படும். இந்த நோய் எல்லா வயது பெண்களையும் பாதிக்கிறது.

இரத்த தைராக்சின் ஹார்மோன் குறைந்த அளவு இருப்பதால் நோய் பாதிப்பு உண்டாகிறது. உடல் பருமன் அதிகரிப்பு, உடல் சோர்வடைதல், அதிக தூக்கம், முடி உதிர்தல், குளிர் தாங்க முடியாத தன்மை, இதயத்துடிப்பு குறைந்து கொண்டே போவது, மாதவிடாய் அதிகமாக உள்ள நிலை, ஞாபகசக்தி குறைதல், சருமம் வறட்சியாக காணப்படுதல் ஆகியவை இதன் அறிகுறியாகும். இந்த நோய் உள்ளவர்கள், பொதுவாக தைராக்சின் மாத்திரையை வாழ்நாள் முழுவதும் உட்கொள்ள வேண்டும். ஆண்டிற்கு ஒருமுறை இரத்த பரிசோதனையின் முலம் தைராக்சின் அளவை அறிய வேண்டும்.

பொதுவாக தைராய்டு சுரப்பி பெரிதாவதை ‘காய்டர்‘ என்று அழைக்கப்படுகிறது. பல காரணங்களால் இந்த கட்டி ஏற்படுகிறது. 5 முதல் 10 சதவீதம் பெண்களிடம் காணப்படுகிறது. தைராய்டு கட்டிகள் புற்றுநோய் அல்லது புற்றுநோய் இல்லாத கட்டிகளாக உருவாகிறது. புற்றுநோய் இல்லாத கட்டிகள் மெதுவாக பெரிதாகும். இதனால் இதர உடல் உறுப்புகளையும் பாதிக்கும் அபாயம் ஏற்படலாம். இதை கண்டுபிடிக்க அல்ட்ரா ஸ்கேன் மற்றும் திசுப்பரிசோதனை ஆகியவற்றின் மூலம் தைராய்டு கட்டியின் தன்மையை எளிதில் கண்டறியலாம்.

தைராய்டு thamil.co.ukபாரா தைராய்டு நாளமில்லா சுரப்பி:

நமது உடலில் மொத்தம் 4 பாரா தைராய்டு சுரப்பிகள் உள்ளன. இந்த சுரப்பிகள் தைராய்டு சுரப்பியின் பின்புற கழுத்தில் உள்ளது. இந்த சுரப்பிகள் பாரா தைராய்டு ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் இரத்தத்தில் கல்சியம் அளவினை கட்டுப்படுத்தும். சரியானளவு கல்சியம் இரத்தத்தில் இருப்பது மிகவும் அவசியமானது. இதில் ஏற்படும் சிறு மாற்றங்களினால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடலில் பல்வேறு விதமான செயல்பாடுகளுக்கு கல்சியத்தின் அளவு மிக முக்கிய பங்களிக்கிறது, முக்கியமாக நரம்பு, தசை, இருதய செயல்பாடுகளுக்கு கல்சியம் மிகவும் அவசியமானது. உடலில் 99 சதவீதம் கல்சியம் எலும்பில்தான் உள்ளது.

அறிகுறிகள்
தைராய்டு சுரப்பி குறைவாக இருக்கும் பெண்களுக்கு தொடக்கத்தில் மாத விலக்கில் மாற்றம் ஏற்படலாம். (அதிகமாக அல்லது குறைவாக இருக்கும்) இளம்பெண்களுக்கு கருமுட்டையில் நீர் கட்டிகள் (பாலி சிஸ்டிக் ஓவரியன் டிஸஸ்) இருக்கலாம்.

சில பெண்களுக்கு குழந்தை பிறப்புக்கு பிறகு தைராய்டு சுரப்பி குறைவாக இருக்கும். குழந்தை பிறப்புக்கு பிறகு உடல் குண்டாகி, முகம் பருமனாகிவிடும். கைகளில் வீக்கம், கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்படலாம். கை, கால்கள் உளைச்சல், மூட்டுவலி, ஞாபக மறதி, மனச்சோர்வு அதிகமாகும். சிலருக்கு குரல் மாறும். எச்சில் விழுங்கும்போது வலி ஏற்படும். சருமம் வறண்டு பொலிவு இழந்து காணப்படும். கரு முட்டைகள் சரியாக வளர்ச்சியடையாது. உடல் பருமன் காரணமாக குழந்தை பிறப்பு தடுக்கும்.

சாப்பிடக்கூடியவை
தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்ய வேண்டுமென்றால் அயோடின், செலினியம் மிக முக்கியமாகும். செலினியம் அதிகம் உள்ள உணவு வகைகளான இறைச்சி, மீன், காளான், சோயாபீன்கள், சூரியகாந்தி விதைகள் ஆகியவையும் அவசியம். உணவில் பசலைக்கீரை, எள், பூண்டு ஆகியவை சேர்த்து சாப்பிடுவது நல்லது. உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக வைக்கும்போது தண்ணீரை வடித்து விட்டு பயன்படுத்தலாம்.

முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்.

சிகிச்சை
தைராய்டால் ஏற்படும் குரல் பிரச்னைக்கு ஆளானவர்கள் அக்ரகாரம், அதிமதுரம், கரிசலாங்கண்ணி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

உடல் சோர்வின்போது, அகில் கட்டையை பொடி செய்து அதை நெருப்பில் தூவி வரும் புகையை முகரலாம்.

அசோக மரப்பட்டையை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து தினமும் மூன்று வேளையும் ஒரு கரண்டி அளவுக்கு குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப்போக்கு குணமாகும்.

தூதுவளைக் கீரைச்சாறு 30 மிலி அளவில் தினமும் காலையில் குடித்து வருவதன் மூலம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு கரையும்.

தும்பை இலையை அரைத்து கழுத்துப் பகுதியில் பற்று போட்டால் கழலைகள் குணமாகும்.

-Meera Tharshan

Expert Interview with Lee Dennis, ND: How to Care for Your Thyroid?
■Expert Q&A by Lee Dennis, ND – Mar 3, 2014

Dr. Lee Dennis, NDDr. Lee Dennis is a licensed Naturopathic physician in the state of Oregon and an associate Naturopathic physician at Namaste Natural Healing Center in Portland, Oregon. He strongly believes in the core tenets of Naturopathic medicine and in striving for a holistic and balanced approach to patient care. In a candid interview with CureJoy, Dr. Dennis acquaints us with one of the largest and the most important endocrinal glands in the human body, the thyroid, and how its smooth functioning is critical for our general well being.

Q: Dr. Dennis, why is the health of the thyroid gland critical to a person’s wellbeing?
The thyroid gland is a butterfly shaped gland that is situated in the front of the neck just below the Adam’s apple. It produces two types of thyroid hormone known as T3 and T4. These hormones help to regulate an enormous number of metabolic processes in the body. In fact, the thyroid acts very similar to a thermostat. When it’s turned up, the body warms up and everything works a little faster and more efficiently. But, if you turn it up too high or down too low, then a number of unpleasant symptoms can begin to develop. It is much more common to have an underactive thyroid (a thermostat turned too low), than an overactive one. This underactive thyroid is known as hypothyroidism, whereas an overactive thyroid is known as hyperthyroidism.

Q: What, according to you, are the common causes of hypothyroidism and hyperthyroidism?
One of the most common causes is autoimmunity. This occurs when the body’s immune system makes antibodies against the thyroid gland. When the attack results in hypothyroidism, it’s known as Hashimoto’s disease. On the other hand, if autoimmunity leads to hyperthyroidism, it’s known as Grave’s disease. Which disease manifests depends on the type of antibody produced and where/how it affects the thyroid gland.

Another cause of thyroid problems is nutrient deficiencies. Iodine deficiency tends to be more of a problem world-wide than in the United States. Since iodine is a part of thyroid hormone, a deficiency in this nutrient can lead to hypothyroidism. Other nutrient deficiencies may also be involved with thyroid problems.

Q: How can one detect if they are suffering from hypothyroidism or hyperthyroidism? Are there any classic symptoms? What tests can corroborate our observations?
Symptoms of hypothyroidism can vary from person to person, but an individual with low thyroid function will often feel more tired than usual, have dry skin, dry/brittle hair, feel achy and have joint pain. As processes in the body slow down, they may begin to feel cold more often, have weight gain (or difficulty losing weight), experience more constipation, poor concentration or mental “fogginess” as well as depression. Though other symptoms can manifest, these are some of the more common ones we see.
The symptoms of hyperthyroidism are essentially the opposite of what you see in hypothyroidism. An individual with hyperthyroidism may experience nervousness or anxiety, feel their heart pounding in their chest, likely be warm, sensitive to heat and may have excessive sweating. They may also be hyperactive, have trouble sleeping and find themselves losing weight unintentionally.

To confirm a suspected thyroid problem, your doctor will typically check your TSH (thyroid stimulating hormone) levels. This is the hormone produced by your pituitary gland that tells your thyroid gland when to release more thyroid hormone. It will generally be elevated in a low functioning thyroid and depressed in an over functioning thyroid. Naturopathic physicians will also often test your free T3 and T4. There are also additional tests can be used to identify the cause of the problem.

Q: Once diagnosis proves that one suffers from hypothyroidism, what are treatment alternatives one can opt for?
There are many treatment options available for hypothyroidism. Most commonly patients are treated with a synthetic thyroid hormone replacement or dessicated pig thyroid. Some patients respond better to dessicated pig thyroid even though it’s not as commonly used anymore. While either of these can help to effectively treat the symptoms of hypothyroidism, it doesn’t get to the cause.

Nutrient deficiencies can often be a contributing or causative factor in hypothyroidism, therefore nutrient supplementation can be helpful. These may include iodine, selenium, zinc, copper, vitamins A, E, C, B­2, B3 & B6, tyrosine and essential fatty acids. Eliminating allergenic foods can also be helpful. The most common culprit in cases of Hashimoto’s disease tends to be gluten.

Additional supplements that can improve hypothyroidism include DHEA for Hashimoto’s, guggul (Commiphora mukull) for mild cases and bladderwrack (Fucus vesiculosis) when iodine deficiency is present. Physical activity can also help to improve thyroid function and maintain a healthy metabolic rate.

Q: What are the remedies available for people suffering from hyperthyroidism?
Hyperthyroidism can be treated symptomatically with drugs and herbs. Drugs such as methimazole or propylthiouracil can help because they prevent the thyroid from making thyroid hormone and thereby decrease symptoms of hypothyroidism. Other drugs such as beta-blockers or calcium channel blockers can also help to relieve symptoms. Some herbs can be used to relieve the symptoms of hyperthyroidism as well. Common herbs include lemon balm (Melissa officinalis), bugleweed (Lycopus virginianus) and motherwort (Leonurus cardiaca). It is important to avoid stimulants, such as caffeine, which could make symptoms worse. Additionally, stress management is huge for preventing and treating hyperthyroidism. This could include healthy sleep patterns, meditation, progressive relaxation, breathing exercises and avoidance of stress triggers. Homeopathy can sometimes be curative in cases of hyperthyroidism. Which remedy is used is going to depend largely on the individual being treated and their specific symptom picture. It is not uncommon to see the iodum family of remedies indicated in cases of hyperthyroidism.

Hyperthyroidism can have some dangerous complications, so if it doesn’t resolve or cannot be well managed, ablative therapy may be indicated. This involves using medications or surgery to destroy all or part of the thyroid gland. Individuals that have ablative therapy performed subsequently need to take thyroid hormone for the rest of their lives in most cases.

Q: Thanks Dr. Dennis for providing these valuable pointers. What would you recommend our readers to follow to maintain a healthy thyroid balance?
Diet, physical activity and stress management are important factors for overall health, including maintaining healthy and balanced thyroid function. Nutrients such as iodine, selenium and zinc are some of the more common deficiencies involved in thyroid problems, so eating foods high in these nutrients will be helpful. These may include sea vegetables (kelp, nori, hijiki, arame, wakame), meat, brazil nuts and pumpkin seeds among others. Daily physical activity is good for maintaining a healthy metabolism and healthy thyroid and good stress management can help prevent problems as well.

Energetically speaking, the 5th chakra, located at the base of the throat, may also influence thyroid function. This chakra has to do with faith and communication. Singing and chanting are beneficial to the 5th chakra as is connecting with your own inner truth and having the freedom to speak that truth.

-curejoy.com