புடலங்காய்

புடலங்காய்..புடலங்காய் நம் தமிழர்கள் வீட்டில் நிச்சயம் சமைக்கும் காய். புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொறியல், புடலங்காய் குழம்பு என்று நம் மக்கள் தங்களது கைவண்ணத்தில் சமையலில் அசத்துவர். இந்த காய் நம் முன்னோர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த காய். இதன் பயன் அறிந்துதான் சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். இது ஓர் அற்புதமான சத்துள்ள உணவு. கிடைக்கும் போது வாங்கி சாப்பிடுங்கள். புடலன்காயில் நன்கு முற்றிய காயை உண்பது நல்லதல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி உள்ள காயையே பயன்படுத்த வேண்டும். இதனை மெல்லியதாக இருக்கும் போதே பயன்படுத்த வேண்டும். அதிலுள்ள விதைகளை நீக்கிவிட்டு சமைத்தல் அவசியம்.

புடலங்காயில் பன்றிப்புடல், கொம்புப்புடல், பேய்ப்புடல் என வேறுவகைப் புடலங்காய்களும் உண்டு. புடலங்காய் மேற்புறத்தில் மென்மையான தோலை உடையதாகும். உள்ளே நீரோடும் சற்று பிசுபிசுப்பும் கூடிய சதைப்பற்று. சற்று கசப்புச் சுவையுடைதாக இருப்பினும் சமைக்கும்போது இதன் கசப்புத்தன்மை போய்விடுகின்றது.

100கிராம் புடலங்காயில் 94 சதவிகிதம் உணவாகும் பகுதி ஆகும். ஓரளவு விட்டமின் C சத்தும் அடங்கியுள்ளன. புடலங்காயில் ஆல்கலாய்ட்ஸ் கிளைகோஸைட்ஸ், டேனின்ஸ் ப்ளேவனாய்ட்ஸ், பெனால்ஸ் மற்றும் ஸ்டிரால்ஸ் ஆகிய மருத்துவ வேதிப்பொருட்கள் மிகுந்துள்ளன.

புடலங்காய்  சர்க்கரை நோய்க்கான ஓர் மருந்தாகிறது. மாரடைப்பைத் தடுக்க வல்லது. கருத்தடைக்கு உதவுவது. பால்வினை நோயான எச்.ஐவிக்கு எதிரானது. முறைக் காய்ச்சலை போக்கக் கூடியது.

இதயத்துக்கு பலமும் நல்ல செயல்பாட்டையும் தரக்கூடியது. அதிக உடலுழைப்பு, பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றால் இதயத்துடிப்பும், பெருமூச்சும் ஏற்பட்டு இதயம் பலவீனமடைவது இயற்கையாகும். காலையில் எழுந்து புடலைக் கொடியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து சுத்தம் செய்து சாறாகப் பிழிந்து வைத்துக் கொண்டு ஒரு வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் அந்தி சந்தி என இரண்டு வேளைகள் சாப்பிடுவதால் இதயத்துடிப்பு சமநிலை பெறுவதோடு இதயமும் பலம்பெறும். இதய நோயாளிகள் 48 நாட்கள் சாப்பிட நலம் பெறுவர். இது இரத்தத்தை சுத்திகரிக்கக் கூடியது.

புடலங்காய் thamil.co.ukதோல் நோய்களை விரைவில் குணப்படுத்த வல்லது. கிருமிகளை அழிக்கவல்லது. பசியைத் தூண்டக்கூடியது. இதில் நார்சத்து அதிகம் இருப்பதால் மலத்தை இளக்கி வெளியேற்றி மலச்சிக்கலைத் தவிர்க்க உதவுவது.

பித்தநோய்களைத் தணிக்கக்கூடியது. ஈரலைப் பலப்படுத்த வல்லது. வயிற்றுப் புழுக்களைக் கொல்லக்கூடியது.

குடல் புண்ணை  ஆற்றும். வயிற்றுப் புண் , தொண்டைப் புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேற்கொண்ட நோயின் பாதிப்பு பெருமளவு குறையும். மூலநோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல மருந்தாக இருக்கிறது.

விட்டுவிட்டு காய்ச்சல் தொடரும் போது, புடலங்காயை வாங்கி கொட்டைகளை நீக்கி, கறியாக சமைத்து சாப்பிட்டால் போதும்.

விந்துவை கெட்டிப்படுத்தும், ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது புடலங்காய். காமத்தன்மை பெருகும் வல்லமையும் புடலங்காய்க்கு உண்டு.

தேகம் மெலிந்து இருபவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேகம் பருமன் அடையும்.

நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து  சக்தியை அதிகரிகிறது. கண்பார்வையை அதிகரிக்க செய்யும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைபடுதலையும், கருப்பைக் கோளாறையும் குணப்படுத்தும்.

இதில் அதிகம் நீர்சத்து இருப்பதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும். வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களைப் போக்கும்.

-உணவே மருந்து
-மாலை மலர்