துளசி பன்றிக்காய்ச்சலை குணப்படுத்தும்

துளசி-thamil.co.ukபன்றிக்காய்ச்சலை துளசி குணப்படுத்தும்

உலகை மிரட்டிக் கொண்டிருக்கும் அதி பயங்கர நோய்களுள் பன்றிக்காய்ச்சலும் ஒன்று. இந்தக் காய்ச்சல் மிக வேகமாக பரவும் தன்மை உடையதால் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மக்கள் முக கவசம் அணிந்து வெளியில் செல்கிறார்கள்.

இப்படிப்பட்ட பன்றிக்காய்ச்சலை துளசி இலைகள் ஒன்றிரண்டு நாட்களில் விரட்டி அடித்து விடும் என்கிறார்கள் இந்தியாவின் புகழ் பெற்ற ஆயுர்வேத நிபுணர்கள்.

பிரபல ஆயுர்வேத நிபுணர் டாக்டர் யு.கே.திவாரி கூறும் போது, வைரஸ் மூலம் பரவும் தொற்று நோய்களை “துளசி” மூலம் எளிதில் குணப்படுத்த முடியும். இதே போல் பன்றிக்காய்ச்சலை குணப்படுத்துவதும் எளிது.

துளசி இலைகள் சாப்பிட்டால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலில் உள்ள தொற்று நோய் கிருமிகளும் அடியோடு ஒழியும் என்றார்.

குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உள்ள குஜராத் ஆயுர்வேத பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் புபேஸ் பட்டேல் கூறும்போது:

“துளசி” இலைகள் மூலம் பன்றிக் காய்ச்சலை மிக எளிதாக குணப்படுத்தி விடலாம். இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 20 அல்லது 25 துளசி இலைகளை தினமும் 2 தடவை சாப்பிட வேண்டும்.

இந்த இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும். நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் எந்தவித தொற்றுக் கிருமியாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது என்றார்.

 

உடலின் நோய்த் தொற்று நீக்கும் துளசி 

எங்கும் எளிதாகக் கிடைக்கும் துளசி இலையில் மகத்துவங்கள் ஏராளம். ஆரோக்கியமாக வாழ துளசிச் இலையை தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் ஏதும் வராது. ஜீரண சக்தியும், நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் உடலில் ஏற்பட்ட படைச்சொரி மறையும்.

சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து சாப்பிட்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம்.

துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது.

உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.
-உணவே மருந்து