சாம்பிராணி மரம்

மூலிகையின் பெயர் – சாம்பிராணி
தாவரப்பெயர் – Boswellia serrata
தாவரக்குடும்பம் – Frankincense
வேறு பெயர்கள் – குமஞ்சம், குங்கிலியம் மரத்துவெள்ளை, பறங்கிச்சாம்பிராணி, வெள்ளைக்கீரை
பயன்தரும் பாகங்கள் – இலைகள், மரம், மரத்திலிருந்து வடியும் பால்

Boswellia serrata.வளரியல்பு – சாம்பிராணிச் செடியானது சிறிய செடியாக எளிதில் உடையும் தண்டுடன் இருக்கும். இதன் இலைகள் வெளிர்பச்சையாக வெற்றிலை வடிவத்தில் இருக்கும். இலை இரண்டு மில்லிமீட்டர் கனம் உள்ளதாக இருக்கும். இலையின் மேலும், கீழும் நுண்ணிய துணை இலைகள் படர்ந்திருக்கும்.

இந்த இலையைக் கசக்கினால் நல்ல வாசனை வரும். இந்தியா முழுவதும் குறிப்பாக ராஜஸ்தான், தென்னிந்தியாவிலும், காடுகளிலும் வளர்கிறது. வீடுகளிலும் விரும்பி மருந்திற்காக வளர்க்கப்படுகிறது. சதைப்பற்று மிக்க, மணமிக்க காம்புகளையுடைய சிறிய புதர்ச்செடி இது.

சாம்பிராணி மரம்இதன் இலைகள் மருத்துவத்தில் அதிகம் பயன்படுகின்றன. கை வைத்தியமாகவும், மக்களால் பயன்படுத்தப்படுகிறது. பித்தப்பை கல் உண்டாவதைத் தடுக்கும் குணம் கொண்டது. தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். நாள்பட்ட இருமல், செரிமானக்கோளாறு, வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு நல்ல மருந்தாக இலைச்சாறு பயன் தருகிறது.

கண் அழற்சிக்கு இதன் சாறு மேல் பூச்சாக தடவ பயன்படும். மருத்துவத் துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரி செய்யவும், சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக் கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.

தேமல் உள்ள இடங்களில் காலையும், மாலையும் வெந்நீரால் கழுவிச் சுத்தம் செய்து அதன் மேல் சாம்பிராணி இலைச் சாற்றைத் தேய்த்து வந்தால் தேமல் மறையும். தலைவலி தோன்றிய நேரத்தில் சாம்பிராணி இலையைக் கசக்கி அதன் சாறை நெற்றிப் பொட்டில் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குணமாகும்.

இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட சாம்பிராணி இலைகளை நீரில் போட்டு ஊறவைத்துக் குளித்தால் ஜலதோசம், இருமல், சளி, தலைவலி ஆகிய நோய்கள் அண்டாது என்பதுடன் குளித்தபின் நல்ல வாசனையாகவும் இருக்கும்.

மேலும் தேமல் போன்ற தோல் நோய்களும் குணமாகும் என்பதால் தான் ஔவையார் சாம்பிராணி இலைகளை ஊறப்போட்ட நீரில் நாள்தோறும் குளிக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். சாம்பிராணி இலைகள் அடித்தட்டு மக்களாலும் வாங்கப் படக்கூடியது என்பது செய்தி.

சாம்பிராணிபண்டைய காலம் முதல் மதவழிபாட்டிற்கும் மருத்துவ பயன்பாட்டிற்கும் சாம்பிராணி பயன்பட்டு வருகிறது. சாம்பிராணி ஆனது மரத்திலிருந்து வடியும் பால் ஆகும் இது மிக மெதுவாக கடினமாகி ஒளிபுகும் தன்மையும் எளிதில் எரியும் தன்மையுடைய சாம்பிராணி ஆக மாறுகிறது. இச்சாம்பிராணியை எரித்தால் மிகுந்த மணத்தைப் பரப்பும்.

சாம்பிராணி தூபம்சாம்பிராணி மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில் குஜராத், அஸ்ஸாம், ராஜஸ்தான், பீகார், ஒரிஸா, மற்றும் தமிழ்நாட்டில் அதிமாக காணப்படுகிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் 500 மீ – 700 மீ உயரத்தில் காணப்படுகிறது. மரமானது உறுதியானது ஆனால் எளிதில் அறுக்கவும், இழைக்கவும் முடியும். இவ்வகை மரங்கள் தீக்குச்சிகள் தயாரிக்க பெரிதும் பயன்படுகின்றன. நவம்பர் மாதம் முதல் ஜூலை வரையிலான காலங்களில் பால் அதிகமாக வடியும் ஒரு மரத்திலிருந்து ஆண்டு ஒன்றிற்கு 1 கி.கி வரையில் சாம்பிராணி பெற முடியும்.

சாம்பிராணி மருத்துவ பயன்கள்
ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) மரத்திலிருந்து கோந்தும் பெறப்படுகிறது இவையும் சாம்பிராணி போலத்தான் கோந்தை நீருடன் சேர்த்து பெண்டோஸ் சர்கரைகள் தயாரிக்கப்படுகிறது. இது இருமல், காமாலை, நாள்பட்டபுண்கள், சொறி, சிரங்கு, படர்தாமரை போன்றவற்றிற்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

சாம்பிராணியை ஆவியாக்கி போஸ்வெல்யா எண்ணை, டர்பெண்டைன் எண்ணை போல எண்ணை எடுக்கிறார்கள். இதிலிருந்து வார்னிஷ் தயாரிக்கப்படுகிறது. சாம்பிராணி எண்ணை ஆனது சோப்பு தயாரித்தலிலும் பயன்படுகிறது.