காடைக்கண்ணி/ ஓட்ஸ் – OATS

காடைக்கண்ணி-thamil.co.ukகாடைக்கண்ணி அல்லது புல்லரிசி என்னும் “ஓட்ஸ்”- OATS

காடைக்கண்ணி என்பது நெல்வகையா? பயறு வகையா என்று கேட்கும் காலம் வந்துவிட்டது. 70 நாட்களில் விளையக்கூடிய பயறு வகைகளைப் பார்த்திருக்கிறோம். அறுபதே நாளில் விளையக்கூடிய தானியம் தான் காடைக்கண்ணி எனப்படும் ஓட்ஸ்.

நெல்லைப் போன்ற புற்செடித் தாவரம் ஓட்ஸ். இதன் தாவரவியல் பெயர் அவைனா சடைவா (Avina sativa).

ஓட்ஸ் கூழ் / ஓட்ஸ் கஞ்சி (Oatmeal Porridge) ஓர் ஆரோக்கிய உணவாக உட்கொள்ளப்படுகிறது. ஓட்ஸ் ஈரட்டி (OAT COOKIES) ஒரு பிரபலமான இனிப்பு வகை ஆகும். இது கொழுப்புச்சத்து குறைவானது. ஓட்ஸின் பாரம்பரிய தமிழ் சொல் “காடைக்கண்ணி” ஆகும்.

ஓட்ஸ் மனிதன் உணவாக உட்கொள்ள ஏதுவான தானியம் ஆகும். கரையக் கூடிய நார்ச்சத்து இருப்பதனால் ஓட்ஸ் ஜீரணமாக நேரம் ஆகிறது. எனவே இதில் ஆற்றலானது நீண்டநேரம் மெதுவாக வெளியாவதால் உடல் அளவிலும் மூளை அளவிலும் நீண்ட நேரம் ஆற்றல் அளிக்கக்கூடியது.

ஓட்ஸ் கஞ்சி தயாரிக்க வெந்நீர் அல்லது குறைந்த கொழுப்புச் சத்து கொண்ட பாலுடன் சேர்த்து சமைத்து அதனுடன் பழங்கள், கொட்டை வகைகள் மற்றும் வாசனை பொருட்கள் சேர்த்து உட்கொள்ளலாம். ஓட்ஸ் மற்ற பொருட்களுடன் சேர்த்தும் சப்பாத்தி, பரோட்டா அல்லது தோசை, இட்லி அல்லது ஊத்தப்பம் மாவுடன் சேர்த்தும் சமைக்கலாம்.

ஓட்ஸ் இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக துண்டு செய்யப்பட்டு வேக வைக்கப்படுகிறது. இதை ஸ்காட்ச் ஒட்ஸ் என்றழைக்கப்படுகிறது. இது வழவழப்பு தன்மையாக இருக்கிறது.

1.உருட்டப்பட்ட ஓட்ஸ்
தோல் நீக்கப்பட்ட ஓட்ஸ் ஆவியில் வேக வைக்கப்பட்டு பெரிய உருளைகளினால் தட்டையாக்கப்படுகிறது. இது 15 நிமிடங்களில் வேகும் தன்மை கொண்டுள்ளது.

2.விரைவாக வேகும் தன்மை கொண்ட ஓட்ஸ்
தோல் நீக்கப்பட்ட ஓட்ஸானது சிறு துண்டுகளாக நறுக்கப்பட்டு ஆவிசியல் வேக வைக்கப்பட்டு உருளைகளினால் உருட்டப்பட்டு அவல் ஆக்கப்படுகிறது. இது வேக வைக்க ஐந்து நிமிடம் ஆகிறது.

3.உடனடி ஓட்ஸ்
உடைத்த ஓட்ஸானது வேக வைக்கப்பட்டு காய வைத்து பின்பு தட்டையாக்கப்படுகிறது. வேக வைக்கப்படுவதால் ஓட்ஸானது மென்மையாகிறது. இதனுடன் நீர் சேர்த்து இந்த கலவை அடுமனை பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் பெறுவது ஓட்ஸ் ஆகும். இந்த ஓட்ஸ்சில் பொதுவாக நார்சத்து அதிகம், ஓட்ஸ் நமது உடலின் ஆரோக்கியத்தை பராமரிப்பதுடன் , சர்க்கரை நோய், இதய நோய் போன்ற பல நோய்களுக்கு எதிராக நமது உடலை பாதுகாக்கிறது. ஓட்ஸில் ‘பீட்டா-குளூ கான்’ எனும் ஒருவகை சிறப்பு நார்ச் சத்து அடங்கி உள்ளது. இந்த நார் சத்து நமது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கிறது மேலும் நல்ல கொழுப்பின்_அளவு மாறாமல் அப்படியே இருப்பது தான் இதன் சிறப்பு அம்சம்.

ஓட்ஸ்-thamil.co.ukபிரச்சனைகளும் நோய்களும் இருந்தாலும் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். இது உண்மையில் நடக்கிற காரியமா? நடக்கிற காரியம் தான் என்று கடந்த 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்களும், கடந்த 100 ஆண்டுகளாக சீனர்களும் நிரூபித்துள்ளனர்.

இதற்கு ஒரே வழி, ஓட்ஸ் சாப்பிடுங்கள். ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன. நீரழிவு, இரத்தக் கொதிப்பு, உயரும் உடல் அம்சங்கள், கொழுத்த சரீரம், உயர் இரத்தக் கொலஸ்ட்ரால் (இது ஆண்மைக் குறைவையும் ஏற்படுத்துகிறது), புற்றுநோய் முதலிய நோய்களையும், தாம்பத்திய வாழ்வில் ஈடுபாடு இல்லாத தன்மைகளையும் மிச்சம் சொச்சம் இல்லாமல் ஓட்ஸ் குணப்படுத்தி விடுகிறது.

மனித மூளையில் உள்ள விம்பிக் சிஸ்டம் என்ற அமைப்பு சரிவரச் செயல்பட்டால் போதும். ஆண்மைக் குறைவும், பெண்மைக் குறைவும் ஏற்படாது. அதற்கு எளிய உணவு மருந்து ஓட்ஸ் உணவுதான் என்று சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள ‘அட்வான்ஸ் ஸ்டடி ஆப் ஹியூமன் செக்ஸுவாலிட்டி’ என்ற அமைப்பு கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது. ‘லிபிடோ’ என்று சொல்லப்படும் உணர்ச்சி உந்துதல் குறைவாக இருந்தால் அதுதான் பல மனக்கவலைகளை உருவாக்கிவிடுகிறது. எதிர்காலத்தின் மீது பயத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஓட்ஸ் இந்தக் குறையை மிக எளிதாக நிறைவு செய்துவிடுகிறது. காரணம் என்ன? ஓட்ஸில் உள்ள மருத்துவக் குணம் உடலில் தொற்று நோய் பரவுவதை தடுக்கிறது. தமனி இறுக்கம் குறைந்து மூச்சு விடுவதில் சிரமத்தை குறைக்கிறது. உடல் பலவீனத்தை குறைத்து திசுக்களுக்கு புத்துணர்ச்சியை அளித்து லிபிடோவை அதிகரிக்கச் செய்கிறது. எனவே, உற்சாகமாக வாழ தயாராகி விடுகின்றனர். இத்தன்மை ஓட்ஸ் உணவில் நேரடியாகக் கிடைக்கிறது.

11,12 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து மக்கள் ஓட்ஸ் சாப்பிட்டார்கள். அதன் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாகத்தான் இவர்கள் சீனர்களைப் பார்த்து ஓட்ஸ் சாப்பிட ஆரம்பித்தார்கள். சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த பண்டைய மக்களே ஓட்ஸ் சாப்பிட்டு வந்ததை தொல்பொருள் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இன்றும் உலகில் ஓட்ஸ் அதிகம் சாப்பிடுகிறவர்கள் சுவிஸ் மக்கள் தான். இவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நல்ல வருமானத்துடன் சேமிப்புடன் வாழ்கின்றனர். அதற்கு ஓட்ஸ் உணவு கொடுக்கும் உற்சாகம் தான் என்பதையும், குதிரையின் நரம்பு மண்டலத்தைப் போல மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தையும் இது கிளர்ச்சியுடன் வைத்திருக்கிறது என்பதிலிருந்து கண்டுபிடித்துள்ளனர். அதனால் இவர்கள் செயல் நோக்குடன் தொடர்ந்து வாழ்கின்றனர். எனவே ஓட்ஸ் மீல் உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாப்பிடுங்கள்.

குளங்களில் மீன் வளர்ப்பவர்கள் ஓட்ஸ்சை அதிகளவில் உணவாகப் போட்டால் நிறைய மீன்கள் கிடைக்கும்.

பெண்கள் அழகாக, இளமையாகத் தோன்ற ஓட்ஸ் உணவுடன் 50கிராம் வெங்காயத்தை பச்சையாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வரவும்.

கோதுமையும் பாதாம் பருப்பையும் ஓட்ஸ் சாப்பிடும் போது சேர்த்துச் சாப்பிடவும். இதனால் கோபமும், கவலையும் பறந்து போகும்.

இதுபோன்ற பல நன்மைகளை தரும், என்றும் இளமை காக்கும் ஓட்ஸ் தினமும் ஓரு வேளை உணவில் சேர்க்க இன்றே முடிவு செய்யுங்கள், நோயின்றி ஆரோக்கியமாக வாழப் பழகுங்கள்.

அடங்கியுள்ள சத்துக்கள்
ஓட்ஸ் பி – குளுக்கான் என்பது கரையக் கூடிய நார்ச்த்து ஆகும். இது வழவழப்பான பாலி சாக்ரைடு இது சர்க்கரை டி-குளுக்கோன்ஸ் ஆனது. ஆனால் இது கரையாது. 1-4-பி-டி பிணைப்பானது. கரையாதது பி-குளுக்கான் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு மாதிரியாக அமைந்துள்ளது. ஓட்ஸ் தவிடு 5.5 சதவீதம் அதிகமாக உருட்டிய ஓட்ஸ் – 23 சதவீதம் உள்ளாக, முழுமையான ஓட்ஸ் 4 சதவீதம்.

கரையக்கூடிய நார்சத்து
ஓட்ஸ் ஒட்டியுள்ள மேலுறை (தவிடு) இது சாப்பிடும்போது (குறைந்த அளவு) குறைந்த அடர்த்தியுள்ள கொழுப்புச்சத்து கொண்ட கொழுப்பு இதில் உள்ளதால் இதய நோய் குறைகக்க கூடியது. முழுமையான ஓட்ஸில் 0.75 கிராம் கரையக் கூடிய நார்ச்சத்து ஒரு முறை உண்ணும்போது நமக்கு கிடைக்கிறது. பி-டி குளுக்கோன் என்னும் பாலி சாக்கரைடானது முழு ஓட்ஸில் கரையக்கூடிய நார்சத்து கொண்டதாகும்.

பி-டி குளுக்கோன் பொதுவாக பி-குளுக்கோன்ஸ் கரையாத பாலி சர்க்கரையாக தானியத்திலும், பார்லி, ஈஸ்ட், பாக்டீரியா, ஆல்கா மற்றும் காளனிச் உள்ளது. ஓட்ஸ், பார்லி மற்ற தானியங்களில் இது பொதுவாக என்டோஸ்பெர்ம் ஒட்டியுள்ள செல் சுவரில் உள்ளது.

சத்துக்கள்
ஆற்றல் கி.கலோரி – 390
கார்போநைட்ரேட் (கி)- 66
நார்ச்சத்து (கி)- 11
கொழுப்பு- 7
புரதம் (கி)- 17
பென்தோதனிர் அமிலம் (மி.கி) – 1.3
போலேட் (மை.கி) -56
இரும்பு (மி.கி) -5
மக்னீசியம் (மி.கி) -117
பி குளுக்கான் (கரையக்கூடிய நார்) (கி) -4

தானியங்களில் ஓட்ஸில் மட்டிலும் குளோபுருன் / அவினலின் புரதங்கள் அமைந்துள்ளது. குளோபுளின் நீரில் கரைக்கூடியது. தானிய புரதமாக குருட்டன் மற்றம் ஜீன் புரதமினாக உள்ளது. சிறிய அளவிளான புரதம் புரோலமைன் மற்றும் அவினின் உள்ளது.

ஓட்ஸ் புரத சத்தானது சோயாவிலுள்ள புரதத்திற்கு சமமானது. உலக சுகாதார நிறுவனமானது ஓட்ஸை மாமிசம், முட்டை மற்றம் பாலுக்கு நிகராக புரதசத்தை கொண்டுள்ளதாக கூறியுள்ளது. ஓட்ஸ் சக்கை மாவு ரொட்டி தயாரிக்க ஏற்றது அல்ல. இந்தியாவில் ஓட்ஸ் சக்கையில் அடங்கியுள்ள சத்துக்கள் ஈரப்பதம் – 10, புரதம் – 13.6, கொழுப்பு – 7.6, கார்போஹைட்ரேட்-62.8 மற்றும் சாம்பல் சத்து – 1.8 சதவீதம் தானியமானது. போதிய அளவு பி வைட்டமின் நிறைந்தாக உள்ளது.

அதிக நார்ச்சத்து நிறைந்தது – முக்கிய அமினோ அமிலங்களைக் கொண்டது. லினொலியிக் அமிலம் மற்றும் ஒலியிக் அமிலம் (குறைந்த மற்றும் அதிக கொழுப்பு)
தாது உப்புகள் : மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் (உறுதியான எலும்பு வளர்ச்சிக்கு)
விட்டமின்கள் : பொலாசின், போலிக் அமிலம் (இதய வலிமைக்கு)
ஆன்டி ஆக்ஸிடென்ட் : அவரைரெமைட்ஸ் ஓட்ஸில் தனித்துவம் வாய்ந்த ஆன்டி ஆக்ஸடென்ட் ஆகும். அதிக ஆற்றல் கொண்டது

கரையக் கூடிய நார்ச்சத்து இருப்பதனால் ஓட்ஸட ஜீரணமாக நேரம் ஆகிறது. எனவே இதில் ஆற்றலானது நீண்டநேரம் மெதுவாக வெளியாவதால் உடல் அளவிலும் மூளை அளவிலும் நீண்ட நேரம் ஆற்றல் அளிக்கக்கூடியது.

இதய நோயிலிருந்து பாதிப்பு குறைவு
இதில் கரையக்கூடிய நார்ச்த்து இருப்பதால் இதில் குறைந்த அளவே LDL (குறைந்த அடர்த்தி லிப்போ புரதம்) தீங்கு விளைவிக்கக் கூடிய கொழுப்பு உள்ளது. குறையாத HDL அதிக அடர்த்தி கொண்ட லிப்போ புரதம் (நன்மை செய்யும் கொழுப்பு) உள்ளதால் இது இதய நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உதவுகிறது. ஓட்சுடன் அதிக அளவு பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்தளவு கொழுப்பு சத்து கொண்ட பால் பொருட்கள் உட்கொள்வதால் இரத்த அழுத்த பாதிப்பில் இருந்து விலகலாம்.

இன்சுலின் அளவை கட்டுப்படுத்துகிறது
கரையக்கூடிய நார்சத்து இருப்பதால் உணவு உண்டவுடன் உயரக்கூடிய குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துகிறது. இதனால் சர்க்கரை வியாதி சமாளிக்க ஏற்றதாகும்.

ஓரே மாதிரி உருவ அமைப்பு/ உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க
ஓட்ஸில் கரைக்கூடிய நார்ச்த்து இருப்பதால் இது நீரை உறிஞ்சு அளவில் பெரிதாகின்றன. எனவே இதனை உட்கொண்டால் வயிறு நிறைந்து காணப்படுவதுடன் நீண்ட நேரம் வராமல் சமாளிக்கப்படுகிறது.

ஓட்ஸ் கஞ்சி தயாரிக்க வெந்நீர் அல்லது குறைந்த கொழுப்புச் சத்து கொண்ட பாலுடன் சேர்த்து சமைத்து அதனுடன் பழங்கள், கொட்டை வகைகள் மற்றும் வாசனை பொருட்கள் சேர்த்து உட்கொள்ளலாம். ஓட்ஸ் மற்ற பொருட்களுடன் சேர்த்தும் சப்பாத்தி, புரோட்டா அல்லது தோசை, இட்லி அல்லது ஊத்தப்பம் மாவுடன் சேர்த்தும் சமைக்கலாம்.

உடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன என்று கடந்த 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்களும், கடந்த 100 ஆண்டுகளாக சீனர்களும் கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்கர்களும் நிரூபித்துள்ளனர்.

சர்வரோக நிவாரணி
ஓட்ஸ் உணவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் விட்டமின் E, துத்தநாகம், செலினியம், காப்பர், இரும்புச்சத்து, மக்னீசியம், மங்கனீஸ் போன்றவை காணப்படுகின்றன. இதில் அதிக அளவு புரதமும் உள்ளது.

நீரிழிவு நோயாளிகளும், கொழுப்பு சத்து, உடல்பருமன் கொண்டவர்களும், உயர் இரத்த அழுத்தம் உடையவர்களும் தினசரி ஒரு கப் ஓட்ஸ் உட்கொள்வதன் மூலம் இந்த நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

தினசரி காலை ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி பருகுவதன் மூலம் அதில் உள்ள நார்ச்சத்து புற்றுநோய் செல்களை அகற்றுகிறதாம். இதில் உள்ள இரசாயனம் புற்றுநோய் செல்களை எதிர்த்து அவற்றை அழிக்கின்றன.

கெட்ட கொழுப்புகளை நீக்குகிறது.
நீரிழிவு நோயாளிகள் ஓட்ஸ் பருகுவதன் மூலம் அவர்களுக்கு ஜீரணம் மெதுவாக நடைபெற்று இரத்தத்தில் சர்க்கரை உடனே கலப்பது தடுக்கப்பட்டது.

ஓட்ஸ் சக்கை மற்றம் உருளை ஒட்ஸ் பொதுவாக விலங்குகளுக்கு தீவனமாக வழங்கப்படுகிறது. ஓட்ஸ் நிறைய பயன்களை கொண்டது. பொதுவாக ஒட்ஸானது உருட்டப்பட்டு அல்லது கசக்கி ஒட்ஸ் சக்கை அல்லது அரைத்து மாவாக பயன்படுத்தப் படுகிறது. ஓட்ஸ் சக்கையானது கூழாகவும், அடுமனை பொருட்கள் தயாரிக்கவும் அதாவது ஓட்ஸ்கேக், ஓட்ஸ் சக்கை பிஸ்கட் மற்றம் ஓட்ஸ் ரொட்டி சத்தான உணவாக பார்க்கப்படுகிறது.

-tamilula.com