ஜாதிக்காய் Nutmeg : Mace Spice

மூலிகையின் பெயர் – ஜாதிக்காய்
வேறுபெயர்கள் கிழக்கிந்திய ஜாதிக்காய், மேற்கிந்திய ஜாதிக்காய்
தாவரப்பெயர் Myristica Fragran Ce, Myristicaceae, Myristice Faeglos

ஜாதிக்காய் மரங்கள்-thamil.co.ukவளரும் தன்மை மொலுக்கஸ் தீவில் தோன்றிய ஜாதிக்காய் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சுமார் 3000 எக்டர் பரப்பளவில் பயிர் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் 1000 தொன்கள் விளைவிக்கப் படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இது செம்புறைமண், தோமிலிமண், களிமண் கலந்த தோமிலிமண் பயிர் செய்ய ஏற்றது.

ஜாதிக்காய்-thamil.co.ukஜாதிக்காய் ஈரப்பதம் அதிகமுள்ள வெப்ப மண்டலப் பகுதிகளான தென்மேற்கு மலை ஓரங்களில் கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் முதல் 1000 மீட்டர் வரை உயரமுள்ள பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. இதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள மண் உகந்தது. மண்ணின் அங்ககப் பொருட்கள் அதிகமாக இருந்தல் மிகவும் அவசியம்.

இது அடர்த்தியாக வளரக்கூடிய பசுமைமாறா மரம். இவை சுமார் 10-20 மீட்டர் உயரம் வரை வளரக் கூடிய பளபளப்பான இலைகளை உடையவை. இவற்றின் பூக்கள் இளமஞ்சள் நிறத்தில் மிகச் சிறியதாகக் காணப்படும். ஜாதிக்காயில் ஆண் மரம், பெண்மரம் என தனித்தனியாகக் காணப்படும். இதை 6 வருடங்கழித்து அவை பூக்கும் போதுதான் காண முடியும்.

ஜாதிக்காய்--thamil.co.ukவிதைகளின் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. விதை முளைக்க 6 வாரம் ஆகும். பின் ஆறு மாத கன்றுகளைத் தொட்டிகளுக்கு மாற்றி, ஒரு வருடம் முடிந்தவுடன் நடவுக்குப் பயன்படுத்தலாம்.

விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ஜாதிக்காய் மரங்கள் 7-8 வருடங்களில் அறுவடைக்கு வருகின்றன. 10-12 வருட மரங்கள் ஒரு மரத்திலிருந்து 2000-3000 காய்கள் கிடைக்கும். ஒட்டுக் கன்றுகள் நட்டபின் 4வது வருடத்திலிருந்து அறுவடைக்கு வருகின்றன.

பயன்படும் உறுப்புகள் ஜாதிக்காயின் விதையைச் சுற்றி இருக்கும் சிகப்பு நிறமான பூ போன்ற பகுதிக்கு ஜாதிப்பத்திரி என்று பெயர். இரண்டையும் தன்னடக்கியுள்ள சதைப்பற்றான பகுதிக்கு ஜாதிக்காய் அப்பிள் என்று பெயர். மேல் ஓடு வெடிக்கும், அதுவும் பயன்படும்.

ஜாதி பத்ரி-thamil.co.ukபயன்கள்
ஜாதிக்காயிலிருந்து பெறப்படும் “மேசின்” என்ற வேதிப்பொருள் மருந்துப் பொருள்களிலும், வாசனைத் திரவியங்கள், முகப்பூச்சு, பற்பசை மற்றும் வாய் கொப்பளிக்கும் தைலங்களில் பயன்படுத்தப் படுகின்றன. ஜாதி எண்ணெயில் அடங்கியுள்ள “மிரிஸ்டிசின்” என்ற வேதியல் பொருள் பலவிதமான நோய்களைக் குணமாக்கவும், காமப் பெருக்கியாகவும் பயன்படுத்தப் படுகின்றது. ஜாதிக்காயிலிருந்து பிரித்து எடுக்கப்படும் “ஒலியோரேசின்” கொழுப்பு, வெண்ணை போன்றவை வாதம் மற்றும் தசை பிடிப்பிற்கு மருந்தாகவும் பாக்டீரியா மற்றும் கரப்பான் கொல்லியாகவும் பயன்படுகிறது.

“சதை தரும் பத்திரிக்குத் தாபச் சுரம்
ஓதுகின்ற பித்தம் உயருங்காண் – தாகுவிருத்தி
யுண்டாங் கிரகணியோ டோதக்கழிச்சலும்
பண் டாங் குறையே பகர்”

ஜாதிப்பத்திரி-thamil.co.ukஅகத்தியர் குணவாகட பாடல் குறிப்பிடுவது போல் ஜாதிப் பத்திரியானது தாப சுரம், பேதி, நீர்க் கழிச்சல், வாதம், தலைவலி, இருமல், வயிற்றுவலி, மாந்தம் போன்றவற்றைக் குணமாக்கும் தன்மையுடையது.

ஜாதிக்காய் பொடியை அரைகிராம் அளவாக பாலில் கலந்து நாளைக்கு 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்றுப் போக்கு தீரும், விந்திறுகும், உடல் வெப்பகற்றும், இரைப்பை, ஈரல் ஆகியவற்றை பலப்படுத்தும், மன மகிழ்ச்சியை அளிக்கும். நடுக்கம், பக்கவாதம், ஓக்காளம் ஆகியவற்றைப் போக்கும். சிறு அளவில் உண்டுவரச் செரிமானத்திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்படையும்.

எண்ணையில் இட்டு காய்ச்சி இவ்வெண்ணையை காதுக்கு 2 துளி விட்டால் காது நோய், காது வலி தீரும்.

10 கிராம் ஜாதிக்காய் பொடியுடன் புதிய நெல்லிக்காய்ச் சாறு ஒரு மேஜைக் கரண்டியளவு கலந்து சாப்பிட்டால் அதிமறதி, விக்கல், தூக்கமின்மை, ஒழுங்கற்ற இருதயத்துடிப்பு ஆகியவை குணமாகும்.

ஜாதிக்காய் பொடி-thamil.co.ukஜாதிக்காய் தூள் சுமார் 10 கிராம் எடுத்து அப்பிள் ரசம் அல்லது வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு தீர்ந்து விடும்.

ஜாதிக்காய் பாதியளவு உடைத்து ஒரு டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி அதில் ஒரு அவுன்ஸ் தண்ணீர் வீதம் கலந்து குடிக்க காலரா முதலிய வாந்தி பேதி நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும்.

ஜாதிக்காயை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் போது அவை போதையை உண்டாக்கும்.

ஜாதிக்காய் வெப்பமுண்டாக்கி, அகட்டுவாய்வகற்றி, மூர்ச்சையுண்டாக்கி, மணமூட்டி, உரமாக்கி போன்ற மருத்துவப் பண்புகளைப் பெற்றுள்ளது. இதன் தைலம் பல்வலி, வாதம், வாயு, கழிச்சல் போன்றவற்றையும் கட்டுப்படுத்துகிறது.

விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும் மூலிகை

ஜாதிக்காய்‘தாது நட்டம் பேதி சருவாசி யஞ்சிர நோய்
ஓது சுவா சங்காசம் உட்கிரணி-வேதோ
டிலக்காய் வரும் பிணி போம் ஏற்ற மயல் பித்தங்
குலக்கா யருந்துவர்க்குக் கூறு ‘

விந்து முந்துதலை தவிர்க்க மூலிகைகள் பல உள்ளன,அதில் மிக எளிதாக மிகவும் பயனுள்ள மூலிகை ஜாதிக்காயும், ஜாதி பத்ரியும்.

ஜாதிக்காய் சூரணத்தை கால் பங்கு எடுத்து அதனுடன் மற்றுமுள்ள ஆண்மை பெருக்கும் மூலிகைகளின் பொடியோடு இரவில் பாலில் கலந்து சாப்பிட விந்து முந்துதல் நிற்கும்.ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

முகத்தை அழகாக்கும்
ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும்; முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது.

அம்மை கொப்புளங்கள் சரியாகும்
அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.

தசைப்பிடிப்பை நீக்கும்
ஜாதிக்காயின் விதை வாந்தியை தடுக்கக் கூடியது. ஜீரணத்தை தூண்டவல்லது. தசை வலியினைப் போக்குகிறது. விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூட்டுவலி பக்கவாதம் ஆகியவற்றிற்கு பயன்படுகிறது. காலரா நோயின் பொழுது ஏற்படும் தசைப்பிடிப்பு வலியினை போக்க மேல் பூச்சாக உதவுகிறது. இதனுடைய வடிநீர் காலரா நோயாளிகளின் தண்ணீர் தாகத்தினைச் சரிப்படுத்தும். ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும்.

ஜாதிக்காயின் விதைகளின் மேல் சூழ்ந்துள்ள சிவப்பு நிற திசு ஜாதிபத்ரி எனப்படுகிறது. ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்ரி வயிற்றுப் போக்கு, உப்புசம், குடல்வலி, ஆகியவற்றினை போக்க உதவுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் ஏற்படாமல் இருக்க ஜாதிக்காய் விதையை அரைத்து குடிக்க கொடுப்பார்கள். ஜாதிக்காய், சுக்கு மற்றும் ஓமம் மூன்றின் பொடி ஜீரணத்திற்கு சிறந்த மருந்தாகும்.

-மூலிகைவளம்
-pannaiyar.com

 

NutmegNutmeg the Feel Good Wonder Spice. 16 Reasons Why.

Origins of Nutmeg:
Botanically known as Myristica fragrans, the nutmeg tree originated in Indonesia. The English word nutmeg comes from the latin nux, meaning nut, and muscat, meaning musky.

The earliest references to the nutmeg tree trace its origins to the Banda Islands (Spice Islands) in the Moluccas, the Indonesian rainforest. Nutmeg trade was mostly controlled by Portuguese and Dutch traders till World War II. The British East India Company brought the nutmeg tree to Penang, Singapore, India, Sri Lanka, the West Indies, and Grenada, where it is the national symbol and emblazoned on the country’s red, yellow, and green flag.

Nutmeg: Two Spices in One

Nutmeg is actually a fruit with a single seed (a drupe). It’s intertwined with a softer substance- mace, another valuable spice harvested at the same time. As the seed matures, the nutmeg kernel splits from the mace in a sort of lace pattern.

TOP 16 HEALTH WONDERS OF NUTMEG

 • Brain Tonic: Nutmeg’s natural organic compound Myristicin, inhibits a brain enzyme that contributes to neurodegenerative disease Alzheimer’s. Nutmeg’s anti-inflammatory and protective effects can effectively promote brain tissue growth, stimulate your brain cells, improve memory and concentration, and eliminate fatigue, stress, anxiety and depression.
 • Sedative: Nutmeg’s essential oil is used to treat inflammation, abdominal pain, aching joints, muscle pain, arthritis, sores, and other ailments. Nutmeg oil, when mixed with almond oil, is used to relieve rheumatic pain.
 • Sleep Inducer: Nutmeg aids sleep by soothing and relaxing the nervous system. Drink a glass of warm milk with a dash of nutmeg–the perfect sleep-inducing cocktail.
 • Anti Anxiety and Anti Depressant: Nutmeg’s constituent compounds, myristicin and elemicin, offer mild sedative, anti anxiety and pain-relieving benefits, by virtue of activation of the neurotransmitters serotonin and dopamine.
 • Aphrodisiac: Sex therapists have long recommended cooking with nutmeg to increase sexual desire. Nutmeg has a long ancient history of being an integral part of herbal medicines, to cure impotency and increase libido.
 • Liver and Kidney Detox: Nutmeg cleanses the liver and kidney of toxins, strengthening their functions, dissolves kidney stones, revs up blood circulation, and treats kidney infections and liver disease.
 • Skin Care: A scrub made from nutmeg powder and orange lentil powder can help you remove blackheads. Honey or milk, work with nutmeg’s anti-inflammatory effects, to reduce marks/scars, alleviate acne, and reduce the redness and puffiness of blemishes.
 • Immunity Booster: Nutmeg contains many plant-derived chemical compounds that are known to have anti-oxidant, disease preventing, and health promoting properties.
 • Dental Relief: Nutmeg oil contains eugenol, when combined with cinnamon makes a powerful antiseptic, antimicrobial paste, protecting against cavity-causing bacteria. Nutmeg oil can directly be applied to the gums around an aching tooth and can also treat halitosis or bad breath.
 • Indigestion Relief: Freshly prepared decoction of Nutmeg essential oil and honey relieves digestion-related problems like diarrhea, constipation, bloating, flatulence- by removing the excess gas from your intestines, aids digestion and boosts appetite.
 • Cancer Prevention: Nutmeg Essential oil acts as an antioxidant and inhibits oxidation of the essential fatty acid, linoleic, and significantly reduces new blood vessel growth that feeds tumors. Myristicin, a component of nutmeg essential oil, inhibits the growth of colon cancer cells.
 • Digestive Health: Nutmeg has long been used as a remedy for digestive disorders such as nausea, vomiting, indigestion and diarrhea, managing symptoms of Crohn’s disease, and in regulating yourgastrointestinal tract.
 • Soothes Eczema: A nutmeg paste, made by grinding nutmeg seeds with water, and smeared over red scaly patches of eczema, significantly reduce the eruptions.
 • Respiratory Soother: A poultice of nutmeg powder, flour and water, when applied to the chest, cures chest cold. Studies have shown that nutmeg can help combat asthma symptoms.
 • Minerals Store: Nutmeg is a super store of minerals like copper, potassium, calcium, manganese, iron, zinc and magnesium. Potassium is an important component of cell and body fluids that helps control heart rate and blood pressure. Manganese and copper are used by the body as co-factors for the antioxidant enzyme, superoxide dismutase. Iron is essential for red blood cell production and as a co-factor for cytochrome oxidases enzymes.
 • Vitamins Store: Nutmeg is rich in many vital B-complex vitamins, including vitamin C, folic acid, riboflavin, niacin, vitamin A and many flavonoid anti-oxidants like beta-carotene and cryptoxanthin that are essential for optimum health.

Precautions:

 • Nutmeg and mace are UNSAFE in doses larger than amounts found in foods. In pregnant women, they may cause miscarriages or birth defects.
 • Not enough is known about the safety of using nutmeg and mace during breast-feeding. Stay on the safe side and avoid use.
 • Overuse of nutmeg, because of its active agent myristicin, is known to cause lack of concentration, palpitations, body pain, sweating, hallucination and delirium, so do use this wonder spice in moderation.

-curejoy.com

தொகுப்பு – thamil.co.uk