சுரை‌க்கா‌ய்

சுரைக்காய்-thamil.co.uk

மனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பரியது. காய்கள் அனைத்துமே எளிதில் சமிபாடடையும் தன்மை கொண்டவை. சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள். அது வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவைபோன்ற காயையும் கொண்டிருக்கும். சுரையின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

சுரை‌க்கா‌ய் ‌நீ‌ர்‌ச்ச‌த்து ‌மிகு‌ந்தது. இ‌தி‌ல் வி‌ட்ட‌மி‌ன் ‌B 2, இரு‌ம்பு‌ச்ச‌த்து, சு‌ண்ணா‌ம்பு‌ச்ச‌த்து, புரத‌ம் ஆ‌கியவை உ‌ள்ளன. நீர்ச்த்து 96.07 %, இரும்புச்சத்து 3.2%, தாது உப்பு 0.5 %, பாஸ்பரஸ் 0.2%, புரதம் 0.3%, கார்போஹைட்ரேட் 2.3% போன்ற சத்துகளை கொண்டுள்ளது சுரைக்காய்.

சுரை‌க்காயை சமை‌த்து உண்டு வந்தால் உட‌ல் ‌வீ‌க்‌க‌ம் குறையு‌ம். ‌சிறு‌நீ‌ர் ‌அ‌திகமாக இற‌ங்கு‌ம்.

இதை க‌ர்‌ப்‌பி‌ணி‌ப் பெ‌ண்க‌ள் பாதவீ‌க்க‌ம் குறைய சமை‌த்து உ‌ண்ணலா‌ம். சுரை‌க்கா‌ய், துள‌சி, ஆடாதோடை ஆ‌கியவ‌ற்றை ஒ‌ன்‌றிர‌ண்டாக நறு‌க்‌கி, அவ‌ற்றுட‌ன் சு‌க்கு, ‌தி‌ப்‌பி‌லி, ப‌ற்படாக‌ம், கோரை‌க் ‌கிழ‌ங்கு சே‌ர்‌த்து கஷாய‌மி‌ட்டு குடி‌த்து வர கு‌ளி‌ர் கா‌ய்‌ச்ச‌ல் குணமாகு‌ம்.

சுரை‌க்கா‌ய்--thamil.co.ukசுரை‌க்கொடியை பூ‌ண்டுட‌ன் சே‌ர்‌த்து சமை‌த்து உ‌ண்டு வ‌ந்தாலோ அ‌ல்லது கொடியை ‌நீ‌ர்‌வி‌ட்டு‌க் கா‌ய்‌ச்‌சி கஷாயமா‌க்‌கி‌க் குடி‌த்து வ‌ந்தாலோ, உட‌லி‌ல் த‌ங்‌கிய ‌நீர் வெ‌ளியா‌‌கி, உட‌ல் ‌‌வீ‌க்க‌த்தை குறை‌க்கு‌ம். சுரை‌க்கொடி இலையை ஒ‌ன்‌றிர‌ண்டாக நறு‌க்‌கி ‌நீ‌ர்‌வி‌ட்டு‌க் கா‌ய்‌‌ச்‌சி ச‌ர்‌க்கரை சே‌ர்‌த்து குடி‌த்து வர காமாலை குணமாகு‌ம்.

இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதனால்தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது.

மனித உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள இரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது. சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்து.

சுரைக்காயின் சதைப்பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வர சீறுநீரக கோளாறுகளிலிருந்து குணம் பெறலாம்.

சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு, ஆகிய நோய்களுக்கு சிறந்தது. அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிடலாம். கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும். கை, கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைபகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும்.

உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள விரும்பினால் சுரைக்காயை பயன்படுத்தலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி தாகம் ஏற்பட்டு உடல் எடையும் குறையும். இதை தவிர்க்க சுரைக்காயின் சதைப்பகுதியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சாம்பார் செய்து சாப்பிட்டு வந்தால் தாகம் அடங்கும். மேலும் நீரிழிவு உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி பயன்படுத்தி வர இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.

வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும். சுரைக்காய் மற்றும் அதன் விதைகளுக்கு ஆண்மையை பெருக்கும் சக்தி உண்டு. சுரைக்காயின் சதைப் பகுதியுடன் விதைகளையும் சேர்த்து சர்க்கரையுடன் கலந்து ஒரு மாதம் உண்டு வந்தால் பலன் கிடைக்கும்.

உடல் சோர்வு உள்ளவர்கள் சுரைக்காயை அன்றாடம் உணவில் எடுத்துக்கொண்டால் அசதி, சோர்வு நீக்கி விடும். நீர்சத்து அதிகம் கொண்டிருப்பதால் கர்ப்பிணி பெண்கள் இதை சமைத்து சாப்பிட்டால் உடல் வீக்கம் குறையும். தேவையற்ற தண்ணீர் சிறுநீர் வழியாக வெளியேறும்.

உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது. சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.

சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

உடலை வலுப்படுத்தும்.

பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

குடல் புண்ணை ஆற்றும்.

மலச்சிக்கலைப் போக்கும், மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.

சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.

சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.

சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் கொடுக்கலாம்.

ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

கருஞ்சுரைக்காய் என்று ஒரு வகை இருக்கிறது. அது குளுமை செய்வதுடன் தாகத்தை அடக்கும். அத்துடன் சீதளத்தையும் பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கி விடும்.

சுரைக்காய் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை உண்டாக்கும். இதனுடைய விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மையை இழந்தவர்கள் அதை மீண்டும் பெறுவார்கள். சுரைக்காய் பித்த வாயுவை உண்டு பண்ணும் சக்தி உடையது. ஆகையால் அடிக்கடி சாப்பிட வேண்டாம்.

-இன்று ஒரு தகவல்
-இயற்கை மருத்துவம்

தொகுப்பு – thamil.co.uk