செளசெள ஆச்சரியப்படுத்தும் உடல்நல நன்மைகள்

செளசெள-thamil.co.uk

பெங்களூர் கத்தரிக்காய் என்று பரவலாக அழைக்கப்படும் செளசெளவின் பூர்விகம் மத்திய அமெரிக்கா. லத்தீன் அமெரிக்க மக்களின் விருப்பமான காய்கறியான இதன் சுவையை ரசித்த ஐரோப்பியர்கள் மற்ற நாடுகளில் பரப்பினர். இந்தியாவிலும் அவர்கள் மூலமாகவே அறிமுகமானது. குறிப்பிட்டு சொல்ல முடியாத இந்தக் காயில் இனிப்பு, காரம், புளிப்பு என வெவ்வேறு சுவையுள்ள சமையலை உருவாக்க முடியும். அதனால்தான் இந்தக் காய் அறிமுகமான எல்லா நாடுகளிலும் விரும்பப்படுகிறது. கொடி வகையைச் சேர்ந்த செடியான இது, மெல்லிய குளிர் பிரதேசங்களில் வளரக்கூடியது என்பதால் பெங்களூர், மைசூர் பகுதிகளில் அதிக இது பயிரப்படுகிறது. அதனாலே பெங்களூர் கத்தரிக்காய் என்ற காரணப் பெயரும் வந்தது. செளசெள பொதுவாக ஒரு காய்கறி போன்றே தயார் செய்யப்படுகிறது என்றாலும், அது உண்மையில் ஒரு பழம் ஆகும். இதில் மிகவும் முறுமுறுப்பான சதைப்பற்று இருப்பதால் சமைத்தும் சாப்பிடலாம், பச்சையாகவும் சாப்பிடலாம். செளசெள  இதய நோயாளிகளுக்கு நல்லது, மற்றும் புற்றுநோய் வராமல் காக்கும்.

இளம் காயே சமைப்பதற்கு ஏற்றது. இளம் காயின் தோல் மென்மையாக, தோலில் ஆங்காங்க இருக்கும் முள் போன்ற சொரசொரப்பு தன்மை அற்றதாக இருக்கும். இதுவே சமைக்க ஏற்றது. கரடுமுரடான தோலைக் கொண்ட காய் முற்றியிருக்கும், இது சமைக்க கடினமாக இருக்கும்.

செளசெள(100கிராம்)இல் கார்போஹைட்ரேட் 4.9 கி, புரதம் 0.82 கி, நார்ச்சத்து 1.7 கி ,கொழுப்பு 0.13 கி,சர்க்கரை 1.66 கி அளவில் உள்ளன. இவை தவிர கல்சியம், இரும்பு, பொட்டாசியம், மக்னீஷியம், ஜிங்க் போன்ற கனிம சத்துக்களும் விட்டமின் C, விட்டமின் E, விட்டமின் K, விட்டமின் B காம்பளக்ஸ் போன்ற விட்டமின் சத்துக்களும் உண்டு.

1. இதயத்திற்கு நல்லது
Homocystein ஒரு அமினோ அமிலம் ஆகும், இது இரத்தத்தில் அதிகமா இருந்தால் இதயநோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன, இப்படிப்பட்ட அமினோ அமிலம் வளர்வதை விட்டமின் B தடுக்கிறது. இந்த Folate எனப்படும் விட்டமின் B செளசெளவில் நிறைந்து இருக்கிறது.

2.புற்றுநோயை தடுக்க உதவுகிறது(விட்டமின் C)
விட்டமின் C, ஒரு சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்ஸிடெட்ஸ்(antioxidants) ஆகும். நம் உடலில் ஏற்படும் திசு சிதைவுகளை சரிசெய்யும் அது மற்றும் இன்றி இந்த ஆண்டி-ஆக்ஸிடெஸ் மெதுவாக அல்லது சாத்தியமான வகையில் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. செளசெளவில் விட்டமின் C (17%) ஒரு நல்ல மூலமாகும்.

3. உடலின் ஆற்றல்/சக்தி உற்பத்தியை அதிகரிக்கும் (Manganese)
செளசெள முட்டை போடிமாஸ்யை காலை உணவாக உண்ணுங்கள், நாள் முழுவதும் உங்கள் உடல் ஆற்றல் / சக்தியுடன் இருக்கும். இதில் மங்கனீசு உள்ளடக்கம் அதிகம் உள்ளதால் அந்த நாளில் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் புரதம் மற்றும் கொழுப்பை சக்தியாக மாற்றும்.

4. மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது (Fiber)
குடல்பகுதியை முறைப்படுத்தி ஊக்குவிக்க, உங்கள் உணவில் செளசெளவை தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

5. தைராய்டு(thyroid) ஆரோக்கியமாக வைத்திருக்கும்(Copper)
தைராய்டு வளர்சிதையை கட்டுப்படுத்த அயோடின், தாமிரம்(Copper) உதவுகிறது. அயோடின் என்பது தைராய்டு வளர்சிதை பரிணாமத்துடன் குறிப்பாக ஹார்மோன் உற்பத்தியில் மற்றும் உட்கிரகிப்பிற்கும் சம்பந்தப்பட்டு இருக்கும் ஒரு தாது.

6. ஆண்மை அதிகரிக்க மற்றும் முகப்பரு தடுக்க உதவுகிறது (Zinc)
செளசெள துத்தநாகம் ஒரு நல்ல மூலமாகும். தோல் எண்ணெய் உற்பத்தி கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை ஊக்குவிக்கும். ஆண்மை அதிகரிக்க மற்றும் மலட்டுத் தன்மையை போக்கும்.

7. எலும்பு இழப்பு தடுக்க உதவுகிறது (Vitamin K)
உங்கள் வீட்டில் இருக்கும் வயதானவர்களை செளசெள சாப்பிட சொல்லுங்கள், அதில் இயற்கை விட்டமின் K இருக்கிறது. விட்டமின் K மற்றும் எலும்பு இடையே ஒரு தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

8. இரத்தஅழுத்தம் குறைக்க உதவுகிறது (Potassium)
செளசெள உங்கள் உடலின் தினசரி பொட்டாசியம் தேவையை பூர்த்தி செய்யும், இந்த தாது இரத்தஅழுத்த அளவுகளை குறைக்க உதவுகிறது.

9. மூளை வளர்ச்சிக்கு நல்லது (Vitamin B6)
ஆய்வின் பங்கேற்பாளர்கள் சில குறிப்பிட்ட வயதில் உள்ளவர்களுக்கு மூளை நினைவக திறனை ஊக்குவிக்கும் என்று நம்புகிறார்கள்

10. கால் தசைப்பிடிப்புக்களை தடுக்க உதவுகிறது (Magnesium)
ஒரு எலக்ட்ரோலைட் மற்றும் கனிமம் தசைப்பிடிப்பை தடுக்கும் உதவும்.

– இன்று ஒரு தகவல்