தூக்கத்தில் நடத்தல்

தூக்கத்தில் நடக்கும் வியாதி பற்றிய தகவல்கள்

சிலருக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுவதை கேள்விப்பட்டிருப்போம். இரவு வந்தவுடன் படுக்கைக்கு செல்லும் ஒருவர் தூங்கத் தொடங்குவார். தூங்கும் போது மனது கனவு காணத் தொடங்கும். அப்போது கனவில் மூழ்கி இருக்கும் அந்த நபர் படுக்கையை விட்டு எழுந்து நடக்கத் தொடங்கி விடுவார்.

ஆனால் தான் இவ்வாறு எழுந்து நடந்து செல்வதை பற்றிய சரியான உணர்வு நிலை அந்த நேரத்தில் அந்த நபருக்கு இருப்பதில்லை. இதைத் தான் கனவு நிலையில் தூக்கத்தில் நடக்கும் வியாதி என்கிறது மருத்துவ உலகம். தூக்கத்தில் நடக்கும் பழக்கம் உள்ளவர்கள் அப்படி தூக்கத்தில் நடக்கும் போது பல மைல் தூரத்திற்கு எல்லாம் நடந்து போவதில்லை.

அதிகபட்சமாக தான் படுத்து தான் படுத்து உறங்கும் அறையில் இருந்து பக்கத்து அறை வரை மட்டுமே நடந்து போவார். அனைவருக்குமே கனவு வருவது இயல்பு தான் என்றாலும் சிலருக்கு மட்டும் கனவில் இது போல் நடப்பது என்ற பிரச்சனை இருக்கிறது.

பொதுவாக கனவு என்பது நம் மனதில் தேங்கிக் கிடக்கும் நிறைவேறாத ஆசை, துக்கம், எண்ணங்கள் போன்றவற்றை வடிகால் என்பது தான் உளவியல் அறிஞர்களின் கருத்தாக உள்ளது. சாதாரணமாக நாம் நடப்பது போல் கனவு கண்டால் அது கனவில் மட்டுமே நடந்து கனவிலேயே முடிந்து விடும்.
10154284_605180176217225_416915055_n
ஆனால் தூக்க நடைக்காரர்களுக்கு கனவில் நடப்பது போல் கனவு வந்தால் உண்மையிலேயே நடப்பார்கள். அப்படி அவர்கள் தூக்கத்தில் நடக்கத் தொடங்கும் போது அந்த நடையை தடுக்கும் விதமாக ஏதாவது தடை (வீட்டின் கதவு,சுவர்,மேஜை) ஏற்பட்டால் அவர்களது கனவு தடைப்பட்டு நடப்பதை நிறுத்தி விடுவார்கள்.

பின்னர் எதுவுமே நடவாதது போல் மீண்டும் படுக்கைக்கு போய் படுத்துக் விடுவார்கள். பொதுவாக ஒருவருக்கு ஆழ்மனதில் ஏற்படும பாதிப்பு தான் இது போன்ற தூக்கத்தில் நடக்கும் வியாதி ஏற்படுவதற்கான காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

# பிணி இல்லா பெருவாழ்வுக்கான உணவுமுறைகளும்,உடற்பயிற்சிகளும்.