மாரடைப்பை தடுக்கும் அக்ரூட் walnut

மூலிகையின் பெயர் – அக்ரோட்(நாட்டு) NAATTU AKROTTU
தாவரவியல் பெயர் – ALEURITES TRILOBA (BELGAUM)
ஆங்கிலப் பெயர் – FRUT OF BENGAL WALNUT
பயன்தரும் பாகங்கள் – பழம், விதை, எண்ணெய்

அக்ரூட்

 

 

வளரியல்பு – இது மலேயா, ஆர்ச்சி பெல கோவிற்குரியது, ஆயினும் பொதுவாக இந்தியாவிலும் கேரளா வயனாட்டிலும் வளர்க்கப்படுகிறது இது மர வகுப்பைச் சேர்ந்தது.

மருத்துவப்பயன்கள்

செயல் :  பருப்பு – காமம் பெருக்கி APHRODISIAC, குளிர்ச்சியுண்டாக்கி COOLING
எண்ணைய் – பெருமலம் பெருக்கி LATHARTIC

அக்ரூட்பேதியாகும், பித்த நீரை அதிகரித்து வெளியேற்றும். மூல வேதனையை தனிக்கும், பருப்பில் இருந்து எடுக்கும் இந்த எண்ணெய் வயிற்று வேதனை இன்றி சாந்தமாய் பேதியாகும். இதனால் ஆமணக்கு எண்ணெய்க்கு பதில் தரலாம். ஒன்று முதல் இரண்டு மேசைக்கரண்டி அளவு கொடுக்கலாம். இது மலத்துடன் பித்த நீரை அதிகமாக வெளியேற்றும். இந்த எனேயை ஒரு பஞ்சில் நனைத்து ஆசனத்தில் சொருகி வைக்க மூல வேதனை குறையும். பூச்சிகளை கொல்லும்.
(The vernacular names given to this plant in enemy book which treats of it , are those properly belonging to juglan regia (walnut) and to convert them in to those of aleuritis lrilobia (belgam walnut) it is necessary the word country wild Indian (or) belgam should beaded to than)

அக்ரோட்டுப் பருப்பினால் உடற்கொழுமை உண்டாகும்.

இதன் வேர்ப்பட்டையால் தொண்டைப் புண் ஆறும்.

வயிற்றிலுண்டானக் கிருமிகளையும், பெண்களுக்குண்டாகும் பாற்சுரப்பையும் நீக்கும்.

உபயோகிக்கும் முறை
அக்ரோட்டு மரப்பட்டையை பஞ்சுபோல் நறுக்கி, அதில் ஒரு பலம் அளவிற்கு ஒரு மட்குடுவையிலிட்டு ஒரு படித் தண்ணீர்விட்டு கால் படியாகச் சுண்டக்காய்ச்சி ஆறவிட்டு வடிக்கட்டி வேளைக்கு ஒரு அவுன்சு வீதம் தினம் இரண்டு அல்லது மூன்று வேளை கொடுத்துவர பேதி, சீதபேதி, தட்டைக்கிருமித் தொல்லைகள் போகும்.

மேற்சொன்னக் கியாழத்தை வாயிலிட்டுக் கொப்பளித்தால் வாய்விரணம், தொண்டைப்புண் ஆறும்.

பெண்களுக்கு முலைப்பாலை வற்றடிக்கவேண்டியக் காலத்தில் இந்தக் கியாழத்தைக் கொடுக்க நன்மை உண்டாகும்.

அக்ரோட்டுப் பருப்பைச் சிறிது கற்கண்டுக் கூட்டிச் சாப்பிட்டுவந்தால் விந்து தடிப்பேறி போகசக்தியை அதிகப்படுத்தும்.

மேலும் இது இதயத்திற்கும் தீனிப்பைக்கும் வன்மையைத் தரும்.

நிறையத் தின்றால் மலம் இளகலாகப் போகும்.

அக்ரோட் சேர்ந்த ஒரு தாது விருத்தி லேகியம் – யுனானி முறை. இதில் உள்ள மருந்து பொருள்கள் யுனானி மருந்து விற்கும் கடைகளில் கிடைக்கும்.
பாதாம்பருப்பு – 150 gm
பிஸ்தா பருப்பு  –  60 gm
சில்கூஜாபருப்பு  –  35 gm
அக்ரோட்டு பருப்பு – 35 gm
பிந்தக் பருப்பு  – 35 gm
கசகசா  –  20 gm
சுரைக்காய் பருப்பு  –  60 gm
பருத்தி பருப்பு  –  35 gm
முள்ளங்கி விதை – 25 gm
துஃமே சல்ஜம்  – 30 gm
நீர்முள்ளி விதை  – 35 gm
குறுபாவிதை  –  25 gm
சத்தாவர்  – 25 gm
மூஸ்லி  –  25 gm
முசிலிசியா –  25 gm
துஃமோச்சரஸ்  – 35 gm
சாலமிச்ரி  – 75 gm
ஷிக்காகுல் மிசிரி  –  50 gm
சுக்கு –  25 gm
ருமிமஸ்தகி  –  35 gm
குந்தர்  –  20 gm
தபாஷீர்  –  20 gm
தூதாரி சுபேத்  –  20 gm
பூநித்தாள் – 20 gm
பிகேபன் –  15 gm
தார்சின்னி  –  20 gm
காரேகுஸ்க்  – 20 gm
துஃமேக விஞ்ச – 25 gm
இவற்றில் பருப்பு இனங்களை தனியாக எடுத்து வெந்நீரில் ஊறவைத்து ஒரு மணிநேரம் கழித்து மிக்சியில் போட்டு பால் விட்டு நைசாக அரைத்து பால் பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும் இதில் அபினியை கரைத்து விட்டு இதில் நாட்டுச் சர்க்கரை 1400 gm சேர்த்து அடுப்பில் வைத்து எரித்து கம்பி பதத்தில் எடுத்து அதில் மற்ற மருந்துகளின் பொடியை போட்டுக் கிளறி 350gm நெய் விட்டு கலந்து எடுத்துக் கொள்ளவும். வேலைக்கு 5 -6 கிராம் அளவு வீதம் சாப்பிட்டு வர நீர்த்த இந்திரியம் கட்டுப்பட்டு இரத்த விருத்தியும் உடல் உறவில் அதிக இன்பமும் கிடைக்கும்.

குறிப்பு – இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்

 

மாரடைப்பை தடுக்கும் அக்ரூட்- walnut

அக்ரூட்வால்நட் எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து இதயநோய்களை தடுக்கிறது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணமாகும். உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

‘வால்நட்’ எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது.

இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம்.

இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து ஆரோக்கியத்துக்கு வகை செய்யும். உடலில் கொழுப்புச்சத்து அளவாக இருப்பது அவசியம். உணவு முறைகளே உடலில் கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணம். அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

-இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்