உஷ்ணக் கோளாறுகளை குணமாக்கும் பாசிப்பயறு

பாசிப்பயறு-thamil.co.uk

பாசிப்பயறு இந்தியாவில் விளையக்கூடிய சத்தான பயறுவகை உணவாகும். பண்டைய காலம் முதலே இது இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. இதன்பின்னர் தெற்கு சீனா, இந்தோ – சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த நூற்றாண்டுகளில்தான் மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விளைவிக்கப்படுகிறது.

பயறுகளும், தானியங்களும் பல மருத்துவ குணங்கள் கொண்டவை. பயறு வகைகளில் அமினோ அமிலங்களும், சல்பர் குறைவாகவும் லைசின் மிக அதிக அளவுகளில் காணப்படுகின்றது. ஆனால், தானியங்கள் லைசின் குறைவாக கொண்டவை. பயறு வகைகளில் அதிகமாக விட்டமின் B காம்ப்ளெக்ஸ், ரிபோபிளேவின் அதிகம் அடங்கியுள்ளது. எனவே, பயறு வகைகள் விட்டமின் B பற்றாக்குறையை தவிர்த்திடும்.

பாசிப்பயறில் அதிக அளவு கல்சியமும், பொஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.

100 கிராம் பயறில் 24.5 கிராம் புரதம், 140 மிகி. கல்சியம், 30 மி.கி. பொஸ்பரஸ், 8.3 மி.கி. இரும்புச்சத்து, 0.5மி.கி. தயாமின், 0.3மி.கி. ரிபோபிளேவின், 2.0மி.கி. நியாசின் போன்றவை உள்ளது. சராசரியாக பயறு வகைகளில் 345 கிலோ எரி சக்தியும் உள்ளன.

கர்ப்பிணிகளுக்கு ஏற்றது
கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயற்றை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வயிற்றுக் கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.

காய்ச்சல் குணமாகும்
சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயறு ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.

நினைவுத் திறன் கூடும்
மணத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும்.

அழகு சாதனப்பொருள்
குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக் குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

முளைக்கட்டிய தானியம்முளைக்கட்டிய தானியம்
பயறுகள் முளைவிடும் தருவாயில் அஸ்கார்பிக் அமிலமான விட்டமின் C அதிகம் காணப்படுகின்றது. முளைக்கட்டிய பயறுகளில் அதிகமாக விட்டமின்கள் காணப்படுகின்றன. முளை  வளரவளர இவை கூடிக் கொண்டே போகிறது.

முளைக் கட்டிய கொண்டைக் கடலையில் isoflavone ஐசோபிளோவின் பையோ கேனின் canine எனும் ஹோர்மோன் அதிகமாக காணப்படுகின்றது. இந்த ஹோர்மோன் ஒரு சிறப்பான குணத்தைக் கொண்டது. அதனால் இந்த ஹார்மோன் உடலில் உள்ள கொழுப்பு கொலஸ்ட்ரால் சத்தை குறைக்கவல்லது. இது உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும், இரத்த நாளங்களில் உட்புறம் படிந்துள்ள கொழுப்பை உருக்கி வெளியேறும். மேலும் கொழுப்பு இரத்த நாளங்களில் படியாத வகையில் உதவிடும்.

ஜீரண சக்தி குறைவு மற்றும் வயிற்று உபாதைகள் உள்ளவர்கள் பயறு வகைகளை குறைத்து உட்கொள்வது அவசியம்.

இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு துணை புரியும் பாசிப்பயறு மா

இரத்த அழுத்த நோயினால் அல்லல்படுவோர் நாள்தோறும் அரைக்கப்பட்ட 15 கிராம் பாசிப்பயறு மாவை வென்னீரில் கரைத்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். தொடர்ச்சியாக 3 மாதங்கள் குடித்து வந்தால் லேசான இரத்த அழுத்த நோயாளியின் நோய் நிலைமை குறையும்.

அதிக இரத்த அழுத்த நோயினால் அல்லல்படுவோர் தொடர்ச்சியாக இன்னொரு 3 மாதங்களுக்கு பாசிப்பயறு மாவை பச்சையாக வென்னீருடன் கலந்து குடிக்க வேண்டும். இதனால் உடம்புக்கு பக்க விளைவு எதுவும் வராது. தினந்தோறும் தொடர்ச்சியாக குடிக்க வேண்டும். ஒரு நாள் கூட நிறுத்தக் கூடாது.

-tamil.cri.cn
-உணவே மருந்து