சந்தன மரம்

சந்தனமரம்-thamil.co.ukமூலிகையின் பெயர்  சந்தனம்
தாவரப் பெயர்  – SANTALUM ALBUM
தாவரக்குடும்பம்  –  SANTALACEAE
வேறு பெயர்கள்  –  முருகுசத்தம்
ரகங்கள்இதில் வெள்ளை, மஞ்சள், சிவப்பு என மூன்று வகைகைள் உள்ளன. அதில் செஞ்சந்தனம் மருந்தாகப் பயன்படுகிறது.
பயன்தரும் பாகங்கள்  –  சேகுக்கட்டை மற்றும் வேர்.

வளரியல்புதென் இந்தியாவில் இலையுதிர் காடுகளில் அதிகம் காணப்படும் சிறு மரம். சந்தன மரம் தமிழகக் காடுகளில் தானே வளரக்கூடியது. இது துவர்ப்பு மணமும் உடையது. தமிழகத்தில் தனிப் பெரும் மரமாகும். மாற்றடுக்கில் அமைந்த இலைகளையுடைய மரம். இலைகளின் மேற் பகுதி கரும்பச்சை நிறமாயும் அடிப் பகுதி வெளிறியும் காணப்படும். கணுப்பகுதியிலும் நுனிப் பகுதியிலும் மலர்கள் கூட்டு மஞ்சரியாக காணப்படும். உலர்ந்த நடுக் கட்டை தான் நறுமணம் உடையது. மருத்துவப் பயனுடையது. இதை காடில்லாத மற்ற இடங்களில் வளர்த்தால் அரசு அனுமதி பெற்றுத்தான் வெட்ட வேண்டும். இதன் விலை மிகவும் அதிகம். இது நன்கு வளர்வதற்கு பக்கத்தில் ஒரு மரம் துணையாக இருக்க வேண்டும். 2-3 ஆண்டுகளில் பழம்விட ஆரம்பிக்கும். இந்தப் பழத்தைப் பறவைகள் உட்கொண்டு அதன் எச்சம் விழும் இடத்தில் விதை மூலம் நாற்றுக்கள் பரவும். விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தான் முழுப் பலன் கிடைக்கும்.

நற்சந் தனமரத்தா னல்லறிவு மின்பமெழிற்
பொற் செந்திருவருளும் பூமிதத்துண் – மெச்சுஞ்
சரும வழகுந் தனிமோ கமுமாம்
மிருமுநோ யேகும் பறழ்ந்து –பதார்த்த குணபாடம் – பாடல் (209)

பொருள் – நல்ல சந்தன மரக்கட்டையை முறைப்படி பயன்படுத்துவோருக்கு அறிவும், மனமகிழ்ச்சியும், உடல் அழகும் கூடும், பெண்களுக்கு வெள்ளை, வெட்டை நோய்கள் நீங்கும்.

சந்தன மரம்-thamil.co.ukமருத்துவப்பயன்கள்
சந்தனம் சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயற்படும். வியர்வையை மிகுவிக்கும், வெண்குட்டம், மேக நீர், சொறி, சிரங்கைக் குணப்படுத்தும். சிறுநீர் தாரை எரிச்சல் சூட்டைத் தணிக்கும், விந்து நீர்த்துப்போதலைக் கெட்டிப்படுத்தும் குளிர்ச்சி தரும். உடல் வெப்பத்தை குறைக்கவும், தோல் நோய்களை நீக்கவும் நறு மணத்திற்காகவும் இதன் எண்ணெய் பயன்படுகிறது.

முகப்பூச்சு, நறுமணத் தைலம், சோப்புக்கள், ஊதுவத்திகள், அலங்கார பொருட்கள், மாலைகள் என மருத்துவம் சாராத பகுதிகளில் பயன் படுத்தப்பட்டாலும், கிருமி நாசினி செய்கை, உடல் அழற்சியை குறைக்கும் தன்மை உடையது.

கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்துத் தடவ முகப்பரு, தவளைச் சொறி, சொறி, படர் தாமரை, வெண்குட்டம், கருமேகம் வெப்பக்கட்டிகள், தீர்ந்து வசீகரமும் அழகும் உண்டாகும்.

பசும் பாலில் உரைத்துப் புளியங் கொட்டையளவு காலை, மாலை சாப்பிட்டு வர வெட்டைச் சூடு, மேக அனல், சிறுநீர்ப் பாதை ரணம், அழற்சி ஆகியவை தீரும்.

சந்தனத்தூள் 20 கிராம், 300 மி.லி. நீருல் போட்டுக் காய்ச்சி 150 மி.லி.யாக்கி வடிகட்டி 3 வேளையாக 50 மி.லி. குடிக்க நீர்க் கோவை, காய்ச்சல், மார்புத் துடிப்பு, மந்தம், இதயப் படபடப்பு குறையும். இதயம் வலிவுறும்.

சந்தனம்-thamil.co.ukசந்தனத்துண்டுளை நீரில் ஊற வைத்து மையாய் அரைத்து சுண்டைக்காயளவு பாலில் கலந்து இரவு மட்டும் 20 நாள் கொள்ள பால் வினை நோய், தந்திபேகம், பிரமேகம், கனோரியா, பெண் நோய் என்று பல பெயர் பெறும் இவை யாவும் குணமாகி உடல் தேறி, நோய் தீரும்.

மருதாணி விதை, சந்தனத்தூள் கலந்து சாம்பிராணிப் புகைபோல் போட பேய் பிசாசு விலகும்.

நெல்லிக்காய்ச்சாறு 15 மில்லியில் சுண்டைக்காய் அளவு சந்தன விழுதைக் கலந்து 40 நாள் குடித்து வர மதுமேகம் தீரும்.

சந்தன எண்ணெய்-தைலம் -‘எசன்ஸ்’ 2-3 துளி பாலில் கலந்து குடிக்க உடல் குளிர்ச்சி பெறும். நெல்லிக்காய்ச்சாறு, அல்லது கசாயம் 50 மி.லி. யுடன் அரைத்த சந்தனம் 5-10 கிராம் கலந்து 48 நாள் காலை, மாலை குடிக்க நீரிழிவு குணமாகும்.

யாழ்ப்பாணத்தில் சந்தன மரம்-thamil.co.ukயாழ்ப்பாணத்தில் சந்தன மரம் : நவக்கிரி மூலிகைத் தோட்டத்தில் சாதனை

யாழ்ப்பாணத்திலும் சந்தனை மரத்தை நாட்டி வளர்க்க முடியும் என்று நவக்கிரியில் அமைந்துள்ள சுதேச மருத்துவ திணைக்களத்தின் மூலிகைத் தோட்டத்தில் மூலிகை மரங்களை நாட்டிவரும் வைத்தியர்கள் நிரூபித்துள்ளனர். பொதுவாக யாழ்ப்பாணத்துக்கு தட்ப வெப்பநிலைக்கு சந்தன மரம் நாட்டி வளர்ப்பது சிரமமானது என்று நம்பப்படுகிறது. எனினும், மாதுளை மரம் ஒன்றை அருகில் நாட்டி ஒன்றரை வருட சந்தன மரத்தை வளர்த்து சாதனை படைத்துள்ளனர் நவக்கிரி மூலிகைத் தோட்ட மருத்துவர்கள்.

தனம் என்றாலே செல்வம் என்று பொருள்படும். பெயருக்கேற்றால்போல், சந்தன மரம் அதிக விலை போகும் ஒரு மர வகையாக இருப்பதால், அதனை யாழ்ப்பாணத்தில் நாட்டி வளர்ப்பதன் மூலம் பெருந்தொகை நிதி வருமானத்தைத் தேடிக்கொள்ளலாம் என்று நவக்கரி தோட்ட மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சந்தன மரத்தை வடபகுதியில் நட்டால் வளராது, வராது என்றுதான் அனைவரும் சொல்லுவார்கள் ஆனால் அவர்கள் சொல்லுவது எல்லாம் உண்மைக்கு புறம்பானது என நிரூபித்திருக்கின்றார் வைத்திய கலாநிதி கனகசுந்தரம்.

ஒரு குருவிச்சை எப்படி நிலத்தில் உள்ள நீரை நேரடியா உறிஞ்சத் தெரியாமல் பாலை, முதிரை, மாதுளை போன்ற மரங்களில் ஒட்டிக்கொண்டு அதனுடைய சத்துக்களை உறிஞ்சி வாழ்கிறதோ அதே போல்தான் சந்தனமரமும். சந்தனமரம் செம்பாட்டு மண்ணிலிருந்து நேரடியாக தனது வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை உறிஞ்சக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கவில்லை என குறிப்பிட்டார்.

எனவே நீங்கள் மிகவும் இலகுவாக ஒட்டுண்ணித் தாரவங்களால் உறிஞ்சக் கூடிய மாதுளம் கன்று ஒனறை சந்தன மரத்திற்கு பக்கத்தில் நட்டு விடுங்கள் பிறகு பாருங்கள் எப்படி வேகமாக வளருகிறது சந்தன மரம் என்று.

ஏன் எனில் மாதுளை மரத்தில் இருந்து இலகுவாக சந்தனமரம் தனது வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை பெற்றுக் கொள்ளுவதால் மாதுளையின் வளர்ச்சி என்பது சிறிதாக இருக்கும் போது சந்தன மரத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என குறிப்பிட்ட அவர் தான் வளர்த்த சந்தன மரத்தையும் எங்களுக்கு காண்பித்தார்.

நவக்கிரிப் பகுதியில் 3 1/2 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைத் தோட்டத்தை பார்வையிட சென்ற போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இந்த மூலிகைத்தோட்டத்தில் மூலிகைக் கன்றுகள் மட்டும்லாது வடபகுதியில் பயிரிட முடியாது என தெரிவிக்கப்பட்ட பல மூலிகைக் கன்றுகள் மற்றும் தாவரங்கள் அரிய வகை மூலிகைக்ள் பல வெற்றிகரமாக இங்கு நாட்டப்பட்டுள்ளன.

அதிக வருவாயைத் தேடித்தரக்கூடிய சந்தன மரத்தை நாட்டி வளர்ப்பதன் மூலம், சீதனம் சேர்க்கும் பழக்கமுள்ள யாழ்ப்பாணத்தவர்கள் இலகுவாகச் செல்வம் சேர்க்க முடியும் என்றும், தமது வளவுக்குள் ஒரு சில சந்தன மரங்களை நாட்டி வளர்த்துவிட்டால், பெண்பிள்ளைகளுக்குத் தேவையான சீதனத்தை அவர்கள் வளரும்பொது இலகுவாக சேர்த்துவிடலாம் என்றும் நவக்கிரி தோட்டத்துக்கு பொறுப்பாக இருக்கும் மருத்துவர் கனகசுந்தரம் தெரிவித்தார்.

வருவாய் கொடுக்கும் சந்தன மரம்

“ஒரு ஏக்கரில் சந்தன மரம் வளர்த்தால், 15வது ஆண்டில், குறைந்தபட்சம் 1.5 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்” என, தலைமை வனப்பாதுகாவலர் (ஆராய்ச்சி) பசவராஜூ தெரிவித்தார்.

வனத்தில் மரம் வெட்ட தடை விதித்துள்ளதால், வனமரங்களை நம்பியிருந்த தொழிற்சாலைகள், பொதுமக்களுக்கு, தேவைக்கேற்ப மரங்கள் கிடைப்பதில்லை. சுற்றுச்சூழலால் புவி வெப்பமடைவதை தடுக்கவும், மக்களின் மரத்தேவையை பூர்த்தி செய்யவும், வனத்திற்கு வெளியே, தனியார் நிலத்தில் மரம் வளர்க்கும் திட்டத்தை, தமிழக அரசு தொடங்கியுள்ளது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கியின் நிதியுதவியுடன், தமிழகத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப் படுகிறது. வரும் 2019 வரையிலும், எட்டாண்டு திட்டத்தின் மூலம், தமிழகத்தின் பசுமை பரப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வறட்சி, பாசன வசதியுள்ள பகுதிகளில் வளரக்கூடிய மரங்கள் பற்றிய ஆராய்ச்சியில், வனத்துறை ஈடுபட்டுள்ளது. தனியார் நிலத்தில், மரம் வளர்க்கும் திட்டம் மூலம், 10 கோடி மரக்கன்றுகள் 1.43 லட்சம் ஹெக்டர் பரப்பில், வரும் ஐந்தாண்டுகளில் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மாநிலத்தில், 30 மாவட்டங்களில் தரிசு நிலம் அதிகமுள்ள ஐந்தாயிரம் கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தரிசு நிலங்களில் மரங்களை தொகுப்பாகவும், பாசன நிலத்தில் வரப்பு ஓரங்களிலும், வளர்க்க வேண்டும். இந்த திட்டத்தில், வனத்துறை ஆராய்ச்சிப் பணிகள் 2,163 ஹெக்டர் பரப்பில் 5.55 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகின்றன.

நெடுநாள் மற்றும் மத்திய கால மரங்கள், எரி மரங்கள், வேளாண் வானிலை, மூங்கில், உயிர் உரம், மர வர்த்தகம், மரம் சாரா வன உற்பத்தி தொடர்பாக ஆராய்ச்சி பணிகள் நடக்கவுள்ளன. விவசாயிகள் சவுக்கு, கத்தி சவுக்கு, யூகலிப்டஸ் போன்ற குறுகிய கால மரங்களையும், தேக்கு, பெருமரம், மலை வேம்பு, மூங்கில், ஈட்டி, வாகை மற்றும் வேம்பு போன்ற நீண்ட கால மரங்களையும், புங்கன், பூச்சான், இலுப்பை, கடுக்காய் மற்றும் நெல்லி போன்ற மரம் சாரா வனப்பொருட்கள் தரும் மரப்பயிர்களை சாகுபடி செய்யலாம்.

வனமரங்களில் விலை உயர்ந்த மரமான, சந்தன மரத்தை, விவசாயிகள் பயிர் செய்ய வேண்டும். ஒரு ஏக்கரில், 15 ஆண்டுக்கு, சந்தன மரம் வளர்த்தால் குறைந்தபட்சம் 1.5 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். சந்தன மரம் சோப்பு, ஊதுவர்த்தி, மருந்துகள் தயாரிக்க பயன்படுவதால், மவுசு குறையாத மரமாக உள்ளது.

15 ஆண்டுகளில் 40 செ.மீ., சுற்றளவுக்கு வளர்ந் ததும், விற்பனை செய்யலாம். சந்தனமரம் ஒட்டுண்ணி வகையை சேர்ந்ததால், தனியாக வளராது.  அதனால், சந்தன மரத்தின் அருகில் எலுமிச்சை, வாகை போன்ற மரங்களை, வளர்க்க வேண்டும். அந்த மரத்தின் வேர்களில் இருந்து சத்தை எடுத்து, சந்தன மரங்கள் வளரும். ஊடுபயிர் எலுமிச்சை மூலம், நிரந்தர வருவாய் கிடைக்கும். சந்தன மரத்தின் வருவாயை போனாசாக பெறலாம்.

-மூலிகைவளம்
-Sikaram
-dinamalar