‘எபோலோ’ வைரஸ்

எபோலோ-thamil.co.uk‘எபோலோ, வைரஸ்!!  -நோயிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி?

பன்றி காய்ச்சல் உலகை வலம் வந்து ஓய்ந்திருக்கும் வேலையில் மேலும் ஒரு வைரஸ் காய்ச்சல் உலகை உலுக்க வந்திருக்கிறது. அதுதான் எபோலா எனும் உயிர்கொல்லி வைரஸ்.

1976 இல் ஆப்பிரிக்காவில் பல உயிர்களை வாங்கிய ஒரு கொடிய உயிர்க்கொல்லி நோய் தான் எபோலா வைரஸ். இந்த வைரஸ் மேற்கு ஆப்பிரிக்காவில் காங்கோவில் உள்ள எபோலா ஆற்றங்கரையில் தோன்றியதால் இந்த நோய்க்கு, ‘எபோலா வைரஸ்’ என, பெயர் வந்தது.

“காற்றின் மூலம் பரவாது”
எபோலா என்பது மனிதனின் இரத்த அணுக்களை தாக்கும் ஒருவித கொடிய வைரஸ் கிருமி. இந்த வைரஸ் காற்றின் மூலம் பரவாது எனினும் வியர்வை, எச்சில், இரத்தம் மற்றும் உடலில் இருந்து வெளியேறும் அனைத்தின் மூலமாகவும் இந்த வைரஸ் பரவும்.

எபோலா வைரஸ் தாக்கப்பட்ட நபரை வெகு விரைவாக பலமியக்க செய்யும். இந்த வைரஸ் கிருமியை குணப்படுத்த முடியாது.

எபோலா வைரஸின் ஆரம்ப அறிகுறிகள்
* எபோலா வைரஸ் தாக்கியிருந்தால், முதலில் காய்ச்சல் வரக்கூடும்.
* காய்ச்சலைத் தொடர்ந்து உடல் எப்போதும் மிகவும் சோர்வுடன் வலிமை இல்லாமல் இருக்கும்.
* குறிப்பாக தலைவலி வரும்.
* வைரஸ் தாக்குதலால் தொண்டையில் புண் ஏற்படும்.
* கடுமையான தசை மற்றும் மூட்டு வலி வந்து, பெரும் தொந்தரவைத் தரும்.

நோய் முற்றிய நிலையில்
* எதை சாப்பிட்டாலும் வாந்தி வரக்கூடும்.
* வயிற்று வலி வந்தால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் எபோலா வைரஸ் தாக்கியிருந்தால் கடுமையான வயிற்று வலி வரும்.
* அதிகளவு வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும்.
* அதைத் தொடர்ந்து சருமத்தில் அரிப்புகளும், கட்டிகளும் ஏற்படும்.
* குறிப்பாக சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழக்க ஆரம்பிக்கும்.
* சிலருக்கு நெஞ்சு வலி வரும்.
* மூச்சு விடுவதில் கூட சிலருக்கு சிரமம் ஏற்படும்.
* உடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் இரத்தம் வழிய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி கண்கள் சிவப்பாகவும், அடிக்கடி விக்கல் ஏற்படும்.

எபோலா நோய் பரவுவதை தடுக்கும் வழிகள்
* நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் அதிகம் செல்வதை தவிர்க்க வேண்டும்.
* முக்கியமாக அந்நோயால் பாதிக்கப்பட்டால், அவர்களின் அருகில் செல்லும் போது கையுறை மற்றும் முகத்திற்கு மாஸ்க் அணிந்து கொண்டு அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களின் இரத்தம் உங்கள் மீது பட்டாலும் உங்களுக்கும் இந்நோய் தொற்றிக் கொள்ளும்.
* எப்போதும் எந்த ஒரு பொருளை உட்கொள்ளும் முன்னர் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவி விட வேண்டும்.
* வெளிப்புற உணவுகளை தவிருங்கள். வீட்டிலேயே சுகாதாரமாக தயார் செய்து உண்ணுங்கள்.
* வீட்டை சுத்தமாகவும், சூரிய வெளிச்சம் அனுமதிக்குமாறும் காற்றோட்டமாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.

குறிப்பு
இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், உடலில் அந்த வைரஸை எதிர்த்துப் போராடும் வண்ணம் மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை தொடர்ந்து எடுத்து வந்தால், இந்த உயிர்க்கொல்லி நோயின் தாக்குதலில் இருந்து வெளிவரலாம்.

தாக்கினால் என்ன செய்வது?
உடனடியாக தலைமை மருத்துவமனையை நாடுங்கள்.

-சித்தர்கள் – Tamil Scientists