இலைக்கோவா – லெட்டூஸ் – Lettuce

லெட்டூஸ்-thamil.co.ukBotanical name : Lactuca sativa
common name : lettuce

கீரை வகைகளில் சிறந்த உணவாக லெட்டூஸ் கருதப்படுகிறது. இது இலைக் கீரையாகும். இதனை பச்சடிக்கீரை, சாலட்டுக் கீரை என்றும் கூறுவர். இதன் பிறப்பிடம் இந்தியாதான். இந்தியர்களை விட இக்கீரையை ஐரோப்பியர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்தக் கீரையானது இமயமலைச் சாரலில் ஏராளமாக தன்னிச்சையாக வளரக் கூடியது. எகிப்து நாட்டில் 4500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறைகளில் இக்கீரையின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களைப் போலவே பண்டைய கிரேக்கர்களும், மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

அமெரிக்கா உட்பட பல நாடுகளில் லெட்டூஸ் கீரையைப் புத்தாண்டு தினத்தன்று தவறாமல் சேர்த்துக் கொள்கின்றனர். அன்றைய தினம் இக்கீரை இடம் பெறுவது தனிச் சிறப்பு என்று கருதுகின்றனர்.

பூப்பதற்கு முன்னுள்ள இலைகளே உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது. இலைகள் நீண்ட முட்டை வடிவமுள்ளதாய் இருக்கும். சில வகைகள் சுருள் சுருளான இலை அமைப்பை பெற்றிருக்கும். இலைகள் தடிப்பாக இருக்கும். சாறு நிறைந்து மிக மென்மையாக இருக்கும். பச்சை நிறம் கீரைவகையைச் சார்ந்தது. சாலட்டுகளில் அழகுக்காக சேர்க்கப்படுவது எனினும் விட்டமின் E சத்தும், அதிகப்படியான தாது உப்புக்களும் நிறைந்து காணப்படுகின்றன.

புற ஊதாக்கதிர் மற்றும் சூரியக்கதிர் தாக்கத்திற்குட்படும் சருமத்திற்கு நிவாரணமளிக்கிறது. புரதம், தாது உப்புகள், வெப்ப ஆற்றல் முதலியன மிகுந்த கீரை, சிவப்பு அணுக்களைத் தோற்றுவிக்கும் ஒருவித சத்து இக்கீரையில் இருக்கிறது. சமையலில் இனிய மணத்துக்காகவும், சுவைக்காகவும் பலர் இதனை விரும்பி உண்கின்றனர். முதிர்ந்த இலைகளைக் கால்நடைகள் விரும்பி உண்கின்றன.

இக்கீரை உடலுக்கு குளிர்ச்சியையும், உற்சாகத்தையும் தரவல்லது. முச்சிரைப்பு நோயான ஆஸ்துமாவைக் கண்டிக்க வல்லது. இதிலுள்ள மாச் சத்து காரணமாக உடல்பருமனைக் குறைப்பதற்கு இந்தக் கீரையை உணவுடன் சேர்த்துக் கொள்வார்கள். நிரிழிவு நோய்க்கு நல்ல பத்திய உணவு இக்கீரை.

லெட்டூஸ் கீரை எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதில் கார்போஹைடிரேட் அடங்கியுள்ளதால் இது காய்கறி போன்றே பயன்படுகிறது.

கரப்பான் ஏற்படாமல் தடுக்கும் கீரை இது. சாதாரண உணவு போல் பயன்படும் இக்கீரையில் உயர்ந்தரக ஆரோக்கியச் சத்துகள் அடங்கியுள்ளன. காரப்பொருள், முக்கியமான பொருளாகவும், அதே நேரத்தில் அதிகமாகவும்  இருக்கிறது.

லெட்டூஸ் கீரையில் ஈரப்பதம் அதிகம் உள்ளது. இதில் கல்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மக்னீசியம், விட்டமின் C தயாமின், ரிபோஃப்ளோவின், நிக்கோடினிக் அமிலம் போன்றவை காணப்படுகிறது. விட்டமின் E, K போன்றவையும் அடங்கியுள்ளன. இதில் கொழுப்பு, நார்ச்சத்து, மாச்சத்து போன்றவையும் அடங்கியுள்ளன.

நீண்ட நாள்களாக உள்ள மலச்சிக்கல், ஆஸ்மா, தூக்கமின்மை, நீரிழிவு, தாய்ப்பால் சுரப்புக் கோளாறு, இரத்த சோகை ஆகிய வியாதிகளைக் குணமாக்குவதில் லெட்டூஸ் கீரை தலைசிறந்து விளங்குகிறது.

இதயத்தை காக்கும்
மருத்துவக் குணங்கள் நிரம்பிய இக்கீரை உடலில் உள்ள அனைத்து பகுதிகளையும் தரமான முறையில் புதுப்பிக்கிறது. இக்கீரையை சாப்பிடுவதன் மூலம் இரத்தம் சுத்தமாகிறது. இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகிறது. மூளை சுறுசுறுப்பாகிறது. உடலும் தொடர்ந்து ஆரோக்கியத்துடன் இருக்கும்.

இக்கீரையில் அதிக அளவு மக்னீசியம் உள்ளதால் மூளையின் இயக்கம், நரம்புகளின் இயக்கம், தசைகளின் இயக்கம், இதயத்தின் இயக்கம் ஆகியவற்றிற்கு மக்னீசியம் தேவை. எனவே, நன்கு பச்சையாக உள்ள கீரைகளை அரைத்து சூப் போல குடித்தால் மூளை மற்றும் நரம்பு மண்டலம் பலம்பெறும். இதே சாறு நுரையீரல்களையும் பலப்படுத்தும். மனத்திற்கு உற்சாகத்தையும், உடலுக்குக் குளிர்ச்சியையும் இக்கீரை தருவதால் காலையில் இக்கீரைச்சாற்றை அருந்துவது நல்லது.

சமைத்து சாப்பிடலாம்
இக்கீரையை சிறுசிறு துண்டுகளாக வெட்டி பச்சையாகவே சாப்பிடலாம். நன்கு பச்சை நிறத்தில் உள்ள கீரைகள்தாம் சிறந்தவை. தேவைக்கு ஏற்ப இலைகளைப் பறித்து உடனே சமைத்தால் அதிக அளவு விட்டமின்கள் நமக்குக் கிடைக்கும். கீரையை நன்கு கழுவிய பிறகே சமைக்க வேண்டும். தண்ணீர் சேர்க்காமல் சமைக்க வேண்டும். அதைப் பொரியல் செய்து சாப்பிடலாம். பருப்பு வகைகள் சேர்த்து பச்சடியாகச் சமைக்கலாம். இந்தக் கீரை கால் வேக்காடு வெந்தாலே போதும். அதற்கு மேல் வேக வைத்தால் தாது உப்புகளும், விட்டமின்களும் அழிந்துவிடும். எனவே, பத்து நிமிடத்துக்குள்ளேயே கீரையை அடுப்பிலிருந்து இறக்கிவிட வேண்டும். ஆஸ்மா, மூச்சுத்திணறல், வாய்வுத் தொந்தரவு ஆகியன நீங்க இத்துடன் பருப்புச் சேர்த்துச் சமைத்து உண்ணவேண்டும்.

நீரிழிவு குணமாகும்
இக்கீரையில் செலுலோஸ் அதிக அளவில் இருக்கிறது. அதனால் உணவு, குடற்பகுதிக்குள் செல்ல எளிதில் வழி கிடைக்கிறது. குடலும் சுத்தப்படுத்தப்பட்டு மலச்சிக்கல் பூரணமாக நீங்குகிறது. நீண்டகாலமாக மலச்சிக்கலால் அவதிப்படுவோர் ஒரு வாரத்துக்கு இக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் அதிக அளவு நன்மைகளைப் பெறுவார்கள். மேலும் உடலிலும், மனத்திலும், புத்துணர்ச்சி பெற்று சுறுசுறுப்பாய்ச் செயல்படுவார்கள். இதில் மாச்சத்து குறைவாய் இருப்பதால் நீரிழிவுக்காரர்களுக்கு எந்த ஒரு தீங்கும் செய்யாத உணவு இது.

ஆழ்ந்த தூக்கம்
இரவில் தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் லெட்டூஸ் கீரைச் சாற்றை அருந்தினால் போதும். இக்கீரையில் ‘லெக்ட்டு கேரியம்’ என்னும் பொருள் இருக்கிறது. இது தூக்கத்தை வரவழைக்கக் கூடியது.

தலைவலி ஏற்பட்டால் ரோஜா எண்ணெயுடன் இக்கீரைச் சாற்றைக் கலந்து நெற்றியில் தடவினால் ஐந்து நிமிடங்களில் குணமாகிவிடும்.

கர்ப்பிணிகளுக்கு ஏற்றது
இதில் உள்ள இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்கிறது. அதிக அளவில் இரும்புச்சத்து உள்ள லெட்டூஸ் கீரை இரத்தசோகை நோயாளிகளுக்கு மிக உயர்ந்த டானிக் ஆகும். கீரை உடனே செரிமானம் ஆகிவிடுவதால் இரத்த சோகை நோயாளிகளுக்கு இரத்தவிருத்தி ஏற்படுகிறது.

கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் இரத்த சோகையையும் லெட்டூஸ் கீரை குணப்படுத்துகிறது. கர்ப்பம் தரிப்பது முதல் தாய்பால் தரும் வரை இக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. இதனால் கர்ப்பக்கலைவு ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு ஏற்படுகிறது.

Lettuce

லெட்டூஸ் வகைகள்  

லெட்டூஸ் வகைகள்-thamil.co.uk1. Romaine – romaine lettuce has large, crisp leaves that provide a crunchy texture sharp flavour making it the perfect selection for Caesar salads.

2. Arugula – arugula lettuce has a peppery, pungent flavour that goes great with milder greens as a contrast flavour.

3. Radicchio – radicchio has a beautiful purple color with a bitter, peppery flavor when eaten alone but goes well mixed in with milder greens.

4. Watercress – watercress is a peppery green that goes great in salads, sandwiches, and in soups. It also makes a great garnish for any meal. Watercress is highly perishable so it is recommended that you use it as soon as you buy it.

5. Butter – Butter lettuce (or butterhead lettuce) consists of both Bibb and Boston lettuces. These lettuces have soft tender loose leaves that can be used in salads, on sandwiches, or as a bed for other dishes. Bibb lettuce tends to be smaller, more flavourful, and more expensive than Boston lettuce.

6. Leaf lettuce – leaf lettuce comes in both green and red tip varieties that can be used interchangeably. Leaf lettuce has a tender, sweet, mild flavor that makes them versatile for any salad.

7. Mizuna – mizuna lettuce is a Japanese green that has tender leaves with a pleasant peppery flavor. Mizuna lettuce is commonly seen in spring green mixes.

8. Endive – endive lettuce is a category that includes Belgian endive, curly endive, and escarole. Belgian endive has crunchy, bitter leaves usually used to make hors d’oeuvres but can also be chopped up and added to salad. Curly endive (frisee) is a also a crisp bitter green that can be used in salads or as a side dish. Curly endive is often seen on salads to add visual interest over flavour. The outer leaves are more bitter than the more pale, tender, and mild inner leaves. Escarole has sturdy bitter leaves that are best cooked as a side dish or used in soups. Young escarole leaves are more mild and can be used in salads.

9. Iceberg – Iceberg lettuce is known for its crisp texture and long shelf life in the refrigerator. However, iceberg lacks most of the flavour and nutrients that other lettuce varieties contain.

-eatchicchicago.com

தொகுப்பு – thamil.co.uk