பப்பாளி

பப்பாளி-thamil.co.ukமூலிகையின் பெயர் – பப்பாளி
தாவரப்பெயர் -CARICA PAPAYA
தாவரக்குடும்பம் – CARUCACEAE
பயன்தரும் பாகங்கள் -இலை, காய், பால், மற்றும் பழம்

வளரியல்பு – பப்பாளி தமிழகமெங்கும் பரவலாக வளர்க்கப்படுகிறது. எல்லாவகை மண்களும் ஏற்றது. நீண்ட குழல்வடிவ காம்புகளில் பெரிய அகலமான கைவடிவ இலைகளை உச்சியில் மட்டும் கொண்ட மென்மையான கட்டையுடைய பாலுள்ள மரம். கிளைகள் அரிதாகக் காணப் பெறும். பெரிய சதைக் கனியை உடையது, பழம் உருண்டையாகவும், நீண்டும் இருக்கும். ஆண் மரம் பெண் மரம் என்று உண்டு. அயல் மகரந்தச் சேர்க்கையில் அதிக பழங்கள் விடும். பல்லாண்டுப் பயிர்.

ஒரு ஏக்கருக்கு 1000 நாற்றுக்கள் தேவைப்படும். இது நடும்பொழுது 8 அடிக்கு 8அடி இடைவெளி விட்டு 2 X 2 X 2 அடி ஆழக் குழிகள் வெட்டி உரமிட்டு நட வேண்டும் வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 10 மாதத்தில் பலன் கொடுக்கும். இது 700 கிலோ இலைகள் 5000 கிலோ காய்கள் கிடைக்கும். இலைப்புள்ளி நோய், இலைக் கருகல் நோய் வந்தால் மருந்தடிக்க வேண்டும். பதப்படுத்த நிழலில் 4 நாட்கள் உலர வைக்க வேண்டும். பப்பாளிக் காயிலிருந்து கீறி விட்டு பால் எடுத்து அதைப் பக்குவப் படுத்தி மருந்துக்குப் பயன்படுத்துகிறார்கள்.

இதில் முக்கிய வேதியப்பொருள்கள் கார்பன், கார்போசைடு மற்றும் பப்பேன் உள்ளன. இதில் விட்டமின் A மற்றும் E உள்ளன. வருட செலவு ரூ.30,000 ஒரு வருடத்திற்கு வரவு ரூ.70,000 ஆக வருட வருமானம் ரூ.40,000. கோவையில் செந்தில் பப்பாயா நிறுவனம் நாற்றுக் கொடுத்து அதன் பாலை விலைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். விவசாயிகள் நல்ல பயன் அடைகிறார்கள்.

பப்பாளி.thamil.co.ukமருத்துவப் பயன்கள்
பப்பாளி வயிற்றுப்புழு கொல்லுதல், தாய்ப்பால் பெருக்குதல், மாதவிலக்கைத் தூண்டுதல், நாடி நடையை உயர்த்தி உடலுக்கு வெப்பம் தருதல், மலத்தை இளக்கி மலச்சிக்கலைப் போக்குவது. சிறுநீர் பெருக்குவது கொழுப்பைக் கரைத்து உடலை இளைக்க வைப்பது.

பப்பாளி பாலை விளக்கெண்ணையில் கலந்து கொடுக்க வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.

பெரியோர் 30 துளி விளக்கெண்ணெய் + 60 துளிப் பால்
இளைஞர் 60 துளி விளக்கெண்ணெய் + துளிப் பால்.
சிறுய குழந்தை 15 துளி விளக்கெண்ணெய் + துளிப் பால்.

வயிற்றை இழுத்துப் பிடித்து வலிப்பது குன்மம் எனப்படும். காயின் பாலை சேகரித்துக் காய்ச்சினால் பொடித்து உப்பாகி விடும். இந்த உப்பில் ஒரு கிராம் அளவு நெய் கலந்து சாப்பிட பித்த குன்மம், பிறவயிற்றுவலி, வாய்வு, வயிற்றுப் புண் குணமாகும்.

இதன் பாலை தேங்காய் நெய்யில் கலந்து தடவ வாய்புண், உதட்டுப்புண் குணமாகும். இப்பாலுடன் பொரித்த வெங்காரம் சேர்த்துத் தடவ வேர்க்குரு குணமாகும். மண்டைக்கரப்பான், சொறிக்கு படிகாரத்துடன் இப்பாலை மத்திதுப் போட குணமடையும்.

பப்பாளிக்காயைச் சமைத்து வாரம் மூன்று நாள் உண்டு வரத் தடித்த உடம்பு குறையும். பழம் நாளும் ஒரு துண்டு சாப்பிடலாம். தாய்ப் பால் பெருகும்.

மாத விலக்கில் தடை இருந்தால் பப்பாளிப் பழம் சாப்பிட்டால் நீங்கும். ஓரிரு மாதக்கருவும் கலையும். விதையைத் தூள் செய்து 5 கிராம் வெல்லத்தில் சாப்பிட கரு கலையும். தடைபட்ட விலக்கு வெளியைறும்.

புலால் செய்வோர் 2-3 துண்டு பப்பாளிகாயைப் போட்டு வேக வைத்தால் எளிதில் வேகும். பதமாகவும் சுவையாகவும் இருக்கும்.

நாள்தோறும் 1 துண்டு பப்பாளிப் பழம் சாப்பிட்டு வர கல்லீரல், மண்ணீரல், வீக்கம் குறையும். செரிபாற்றல் பெருகும் குன்மம், ரணம், அழற்சி, வயிற்றுப் பூச்சி, மலச்சிக்கல், சிறுநீர்பாதை அழற்சி ஆகியவை தீரும்.

பல்லரணையால் வீக்கம் ஏற்பட்டு வலி இருந்தால் பாலைத் தடவ கரைந்து குணமடாயும். பழம் அதிக அளவில் சாப்பிட்டால் வயிற்றுக்கடுப்பு வரும்.

பப்பாளி பலன்கள் ஏராளம்

உணவை இயற்கையான முறையில் செரிமானமடைய வைக்கும் பப்பாயின் நொதி papain enzyme, பப்பாளிப் பழத்தில் உள்ளது. அதனால் செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்ய இப்பழம் உதவும்.

பப்பாளியில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடண்ட்ஸ் antioxidant காரணமாக உடலில் மூப்பு சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கிறது. இளமையான தோற்றத்தைத் தக்கவைக்கிறது.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற பழம் இது. இதில் குறைந்த அளவு கலோரியும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தும் உள்ளதால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களின் விருப்பத் தேர்வாக இருக்கிறது.

நார்ச்சத்து மிக்கது, உடலில் கொழுப்பின் அளவை குறைக்கும். கொழுப்பு ஆக்சிஜனேற்றம் அடைவதைத் தடுக்கும் என்சைம்களைக் கொண்டிருப்பதால், மாரடைப்பு வராமல் தடுக்கிறது.

விட்டமின் A, விட்டமின் C போன்ற சத்துகள் நிறைந்துள்ளதால், உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும். காய்ச்சல், சளி, நாள்பட்ட காய்ச்சலுக்கு இது சிறந்த நிவாரணி.

டெங்கு நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்குப் பப்பாளி இலைச் சாறைப் பருகக் கொடுத்து நடத்தப்பட்ட ஆய்வில், டெங்கு நோயாளிகளின் உடலில் நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட இரத்த அணுக்கள் பெருகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பப்பாளிப்பழத்தில் இருக்கும் அழற்சியைத் தடுக்கும் நொதிகள் மூட்டு வலியைக் குறைப்பதற்கு உதவுகின்றன. இதிலிருக்கும் மேலும் சில நொதிகள் புற்றுநோய் வருவதைத் தடுப்பதிலும் உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

கல்லீரலில் உருவாகும் புற்றுநோய் கலங்களின் பெருக்கத்தைப் பப்பாளி பழம் கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பெருங்குடலில் உள்ள சளி, சீழைப் பப்பாளி ஜூஸ் குணப்படுத்தும்.

பப்பாளி பழத்தின் விதைகளிலும் மருத்துவக் குணங்கள் நிறைய உள்ளன. குடல் புழுக்களை அகற்றுவதில் பப்பாளி விதைகள் பெரும் பங்காற்றுகின்றன.

பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீரான இடைவெளிகளில் வருவதற்குப் பப்பாளி பழம் உதவுகிறது.

சிலர் காலையில் எழுந்ததுமே மிகவும் சோர்வாக உணர்வார்கள். பொதுவாகக் கர்ப்பிணிப் பெண்களுக்கு இது போன்ற சோர்வு இருக்கும். இவர்கள் தினமும் சில துண்டு பப்பாளிப் பழத்தைச் சாப்பிட்டுவந்தால், புத்துணர்ச்சியோடு இருக்கலாம்.

பப்பாளிப்பழத்தில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கும் என்சைம்கள், சிறுநீரகத்தில் படிந்திருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதில் பெரும் பங்காற்றுகின்றன.

பேன், பொடுகைப் போக்கும் திறன் பப்பாளிக்கு உண்டு. அதனால் தான் பெரும்பாலான ஷாம்புகளில் பப்பாளி பயன்படுத்தப்படுகிறது.

சருமத்தின் வறட்சித்தன்மையைப் போக்கும் திறன் கொண்டது பப்பாளி பழம். தோலின் மயிர்க்கால்களில் படிந்திருக்கும் கண்ணுக்குப் புலப்படாத அழுக்குகளைப் பப்பாளியில் உள்ள நொதிகள் அகற்றிச் சுத்தப்படுத்தும்.

பப்பாளிப் பழத்தின் தோல், சதைப் பகுதிகளை மசித்து முகத்தில் பூச்சாகப் பயன்படுத்தினால் கரும்புள்ளிகள், கருவளையங்கள் போன்றவை மறைந்து, முகம் பளிச்சிடும். நாள்பட்ட காயங்கள், தொற்றுகளைக் கொண்டவர்கள் பப்பாளிப் பழத்தை மசித்துப் பூசிவந்தால் சருமம் புத்துணர்வையும் பளபளப்பையும் பெறும்.

What Are The Health Benefits Of Papaya And Its Seeds?
Refreshingly sweet in taste, papayas are bright, pear-shaped, exotic fruits that you’ll easily find in the market throughout the year. Papayas have a number of health benefits, especially if you hold of a good non GMO papaya. Here’s why you must consider including papayas in your diet:

Health benefits of Papayas:
1. Lowers Cholesterol levels: Papayas help inhibit the harmful LDL cholesterol and prevent any damage to the blood vessels and circulation that can lead to a heart attack or a stroke. Hence, including papayas in your diet can be great for your cholesterol!

2. Promotes Digestive Health: Your diet should be rich in dietary fiber, if you want your bowels to be healthy and moving. One serving of papaya can satisfy a quarter of the recommended intake of dietary fiber for a day. Papaya also re balances your intestinal flora after an aggressive course of antibiotics. Since the digestive enzyme papain helps to ease the burden of the complicated process of digestion, papaya is known to promote digestive health.

3. Boosts Immune System: The flesh of papaya contains generous amounts of both Vitamin C and Vitamin A, which strengthen your immune system and help fight infections.

4. Lowers Inflammation: Papaya contains two protein-digestive enzymes called Chymopapin and papain. These enzymes can help lower the body’s inflammatory reaction. Since rheumatoid arthritis is an auto-immune disease that presents as an inflammation of the joints, eating papaya can assist with symptom control. Also, papaya can reduce your chances of developing arthritis in the first place.

5. Protects your Eyesight: Papayas contain beta carotene and vitamin A, which help protect sight and can improve vision. Three helpings of fruit a day are recommended, and papaya is a very suitable due to its nutritional content.

The other benefits of papayas are that they are great for the skin, reduces stress, helps prevent blood clots, contains anti-cancer activity and they are great sources of vitamins and minerals.

What can you do with papaya seeds?
Now, papaya seeds are rich in fat and protein and contain plenty of calcium, magnesium and phosphorus. Instead of discarding them, make use of them for the good of your health. Papaya seeds are great for getting rid of intestinal parasites. A recent study showed that people who were taking honey together with papaya seeds, cleared their stool of parasites in 23 out of 30 cases. They are also known to contain anti-cancerous properties. Papaya seeds have a distinct, slightly peppery flavor. They can be eaten as they are, or you can sprinkle them over salads and other dishes, just as you would use pumpkin seeds. You could use them while cooking, or even make a smoothie!

-மூலிகைவளம்
-இயற்கை மருத்துவம்
-curejoy.com