வினாகிரி Vineger

வினாகிரிவினாகிரி / வினிகர் என்பது எத்தனால் என்ற நீர்மத்தை நொதிக்க வைப்பதினால் உருவாக்கப்படும் நீர்மப் பொருளாகும். பழச்சாறு அல்லது காய்கறிச்சாறு ஆகையவற்றை நொதிக்கவிடுவதன் மூலமும் இது கிடைக்கும். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் வினிகரில் சிறிய அளவில் தார்த்தாரிக் அமிலம், சித்திரிக் அமிலம் முதலியன இருக்கின்றன.

சமையலில் வினிகர்
வெள்ளரியையும் தக்காளியையும் மெல்லியதாக வட்டவட்டமாக வெட்டிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தையும் மெல்லியதாக அரிந்து கொள்ளவும். இக் கலவையில் சிறிது உப்பு போடவும். மல்லி இலைகளை மேலே தூவி விடவும். பின்பு சிறிது வினிகரையும் ஒலிவ் எண்ணெயும் கலக்கவும். பின்பு பரிமாறவும். வேண்டுமானால் சிறிது மிளகு, சீரக கலவையையும் இத்துடன் சேர்க்கலாம். வினிகர் கலந்த இந்த சாலட்டின் ருசி அருமையாக இருக்கும்.

வினிகர் சோப்பதால் உடம்பிலுள்ள கொழும்பு குறைக்கிறது. தவிர Anti inflammation வராமல் தடுக்கிறது. எதுவாயினும் அளவோடு சேர்ப்பது நல்லது.

Apple Cider Vinegar என்ற வினிகரை எலுமிச்சை சாறு அல்லது தேனில் விட்டுத் தண்ணீர் கலந்து குடித்துவர உடல் எடை குறையும்.

ஊறுகாய் கெடாமல் பாதுகாக்க வினிகர் பயன்படும்.

முட்டை வேகவைக்கும் தண்ணரீல் சில துளிகள் வினிகர் சேர்ப்பதால் வெண்கரு பிரியாமல் இருக்கும்.

பச்சைப்பட்டாணி வேகவைக்கும் போது, அதன் உண்மையான பச்சை நிறம் போகமலிருக்க, நான்கு துளி வினிகர் ஊற்றி வேக வைத்தால் பச்சை நிறத்தை பாதுகாக்கலாம்.

கீரையோ, காயோ வாடியிருதால் அது மூழ்குமளவு நீர் ஊற்றி ஒரு பாத்திரத்தில் வைத்து ஒரு கரண்டி அளவு வினிகர் ஊற்றி வைத்து விடுங்கள். பதினைந்து நிமிடத்தில் காய், கீரை எதாக இருந்தாலும் சோர்வு நீங்கி மலர்ந்த முகத்தோடு புதியது போல் காட்சி தரும்.

இறைச்சி வகைளை சமைக்கும் போது வினிகர் சிறிது கலந்து ஊறவைத்து பின் சமைத்தால் இறைச்சி மெத்தென்று பஞ்சுபோல் வேகும்

பனீர் செய்ய எலுமிச்சைசாறு இல்லாவிட்டால் கொதிக்கும் பாலில் கொஞ்சம் வினிகர் சேர்த்துக் கிளறி பனீர் பரிந்ததும் வழக்கம் போல வடிக்கட்டிக் கொள்ளவும்.

சரும, முடி பாதுகாப்பில் வினிகர்
உங்கள் சருமம் உலர்ந்த சருமமாக இருந்தாலோ, அல்லது வெடிப்புள்ள சருமமாக இருந்தாலோ வினிகரை தடவினால் குணமாகும்.

வினிகர் கலந்த நீரில் பாதம் மூழ்கும் வரை அரைமணி நேரம் ஊறவைத்து பின்பு நன்றாக கழுவினால், கால்விரல் நகங்களில் உள்ள அழுக்குகள் போய்விடும், நகங்கள் சொத்தையாக இருந்தாலும் சில நாட்களில் சரியாகி விடும்.

அரைகப் வினிகர் எடுத்து, குளிக்கும் நீரில் (Warm Water) கலந்து குளித்தால் சருமம் மிருதுவாகும்.

ஒரு தேக்கரண்டி வெள்ளை வினிகர், 3 தேக்கரண்டி பன்னீர் ஆகியவற்றை ஒரு கப் தண்ணீரில் கலக்கவும். மிகச் சிறந்த சமச்சீரான PH சரும டோனர் தயார். முகத்தில் இதைத் தெளித்துக் கொண்டால், புத்துணர்வைப் பெறலாம்.

வேகவைத்த உருளைக்கிழங்கு, துளி உப்பு, துளி கிளிசரின், 2 துளி வினிகர் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசினால் மாசு மருவற்ற சருமத்தைப் பெறலாம்

ஷாம்பூ போட்டு தலை குளித்த பின் சிறிதளவு வினிகர் கலந்த நீரினால் அலசினால் முடிபட்டுப் போலாகும்.

பொடுகுத் தொல்லை இருந்தால் ஒரு மேசைக்கரண்டி வினிகரை தலையில் தடவி, சில நிமிடங்கள் கழித்து நன்கு அலசிக் குளித்தால் பொடுகு போய்விடும்.

சுத்தப்படுத்தலில் வினிகர்
தரையில் முட்டை விழுந்து உடைந்தால் துர்நாற்றம் வீசும் அதைப் போக்க சிட்டிகை அளவு உப்பு, வினிகர் இரண்டும் கலந்து துடைத்துவிட்டால் துர்நாற்றம் மறையும்.

மீன் கழுவும்போது சிறிதளவு உப்பு, வினிகர் இரண்டும் சேர்த்து கழுவினால் அந்த மீனின் கெட்ட வாடை நீங்கிவிடும். மீனை உடனேயே சமைக்கவில்லை என்றாலும் வினிகர் ஊற்றி நன்றாக மூடி ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் மீன் இரண்டு நாட்கள் கெடாமலிருக்கும்.

குழந்தைகளின் பால் போத்தலை தினசரி கழுவும்போது துளி வினிகர் விட்டுக் கழுவினால் சுத்தமாகிவிடும். பிளாஸ்க்கில், சொட்டு வினிகர் விட்டால் போதும் துர்வாடையற்ற பிளாஸ்க் பயன்படுத்த ரெடி.

உங்கள் வீட்டு எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடிப் பாத்திரங்கள், கண்ணாடி டம்ளர்கள் ஆகியவற்றை வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்துமே பளிச் பளிச் என்றுதான் இருக்கும்.

பித்தளைச் சாமான்கள் பளிச்சிட சிறிது வினிகரை உருளைக்கிழங்கு வேகவைத்த தண்ணீருடன் கலந்து அந்தப்பொருட்களின் மேல் அழுத்தித் தேய்க்கவும், ஆனால் எந்தப் பொருளை சுத்தப்படுத்த வினிகரைப் போட்டாலும் அதிக நேரம் ஊறவைக்காது உடனே கழுவி விடுங்கள்.

பித்தளை தட்டு, பாத்திரங்கள் பச்சையாக நிறம் மாறிவிட்டால், வினிகருடன் உப்பு சேர்த்து, சற்று ஊற வைத்து அழுத்தித் தேய்த்தால் பளிச்தான்.

வினிகர் கலந்த நீரில் நல்ல மிருதுவான துணி அல்லது பஞ்சினை நனைத்து சாப்பாட்டு மேசையை துடைத்தால் துர்வாடை போய் புதுசு போல பளபளக்கும்.

அலுமினிய குக்கரின் உட்புறம் கறுப்பாக இருந்தால் சிறிது வினிகரைப் பூசி 15 நிமிடம் வைத்திருக்கவும். பின்னர் சிறிது நீர் ஊற்றிக் கொதிக்க விட்டால் குக்கரின் கறை நீங்கிப் பளிச்சிடும்.

வினிகரில் நனைத்துப் பிழிந்த துணியில் சீஸ் கட்டியை சுற்றி ஃபிரிட்ஜில் வைத்தால் ஃப்ரெஷ் ஆக இருக்கும்.

ஃப்ரிட்ஜில் காய்கறிகளின் வாடை, பால் வாடை, மாவு வீச்சம் என இருப்பின் வாரம் ஒரு முறை வினிகர் கலந்த நீரினால் ஃபிரிட்ஜை துடையுங்கள்.

குழந்தைகளின் வெள்ளை யுனிஃபார்ம் துணிகளை வாரத்திற்கு ஒரு முறை நீலம் போடுவதற்கு முன் ஒரு பக்கெட் நீரில் இரண்டு கரண்டி வினிகர் கலந்து அதில் துணிகளை முக்கி எடுத்து விட்டுப் பிறகு நீலம் போட்டு அலசுங்கள். துணிகள் தும்பைப் பூவைப் போல் வெண்மையாக இருக்கும்.

வெற்றிலைக் கறை துணியில் பட்டால், அந்த இடத்தில் வினிகர் ஊற்றி தேய்த்து கழுவினால் போய்விடும்.

குளியலறையில் உள்ள மாபிள் தரையை சுத்தமாக்க ஒரு கப் வினிகரை ஒரு கப் சுடுநீரில் கலந்து கறைகளின் மீது தடவி, சிறிது நேரம் கழித்து சோப்புக் கரைசலைப் பல்துலக்கும் தூரிகையில் நனைத்து தரையைத் தேய்த்தால் மாபிள் பளபளக்கும்.

கார், கண்ணாடி இவற்றை வினிகர் கலந்த நீரினால் சுத்தமாகக் கழுவினால் பளபளக்கும்.

ப்ரஷர் குக்கரில் துருபிடித்து கெட்டியாகி விட்ட ஸ்க்ரூவின் மேல், இரண்டு சொட்டு வினிகர் விட்டு, சற்று நேரம் கழித்துத் திருகினால் சுலபமாலக எடுக்க வரும்.

சமையலறையில் உள்ள அலமாரியில் பூச்சிகள் தொல்லை ஏற்படாமலிருக்கு, வினிகர் கலந்த நீரால் வாரம் இருமுறை துடைக்க வேண்டும்.

தொகுப்பு – thamil.co.uk