மிளகாய்ப் பூண்டு

மூலிகையின் பெயர் – மிளகாய்ப் பூண்டு
தாவரப் பெயர் – CROTON SPARSIFLORUS
தாவரக் குடும்பப் பெயர் -EUPHORBIACEAE
வேறுபெயர்கள் – எலி ஆமணக்கு
பயன்தரும் பாகங்கள் -இலை, விதை, வேர்.

மிளகாய்ப்பூண்டு-thamil.co.ukவளரியல்பு
மிளகாய்ப் பூண்டு தமிழகமெங்கும் தானே வளர்கிறது. எல்லா மண் வளத்திலும் வளரக்கூடியது. மிளகாய் இலை வடிவில் மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும், நீள் குச்சியில் இருமருங்கும் வெண்ணிறப் பூக்களையும், ஆமணக்குக் காய் வடிவில் சிறு காய்களையும், உடைய மிகச்சிறு செடி. 2 அடி உயரம் வரை குட்டாக வளரும். இதை எலி ஆமணக்கு என்றும் குறிப்பிடுவதுண்டு. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள்

மிளகாய்ப் பூண்டு மலமிளக்கியகவும் உடல் தாதுக்களை அழுகாது தடுக்கவும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.

மிளகாய்ப் பூண்டு-thamil.co.ukஇதன் இலையைக் கீரை போல் வதக்கிச் சோற்றில் பிசைந்து சாப்பிட மலச்சிக்கல் தீரும்.

இதன் இலையைக் குடிநீர் 3, 4 வேளை 1 முடக்கு வீதம் குடித்து வரக் கட்டிகள் கரையும். கை, கால் இடுக்குகளில் நெறி கட்டிய சுரம் தீரும்.

40 கிராம் வேரை 250 மி.லி. நீரில் போட்டு 100 மி.லி. யாகக் காய்ச்சி தினம் 2 துளி சர்கரையில் காலை, மாலை சாப்பிட்டு வரப் பாரிச வாயு, பக்கச் சூலை, இழுப்பு, இளம்பிள்ளை வாதம், முக வாதம் ஆகியவை தீரும்.

-மூலிகைவளம்