ஆபத்தின் முழு உருவம் அஜினோமோட்டோ

அஜினோமோட்டோ-thamil.co.ukவீடுகளில் தயாராகும் உணவுகளில் கூட நாமே ருசிக்காக விஷத்தை சேர்க்கிறோம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அஜினமோட்டோ. சுவை கூட்டும், அனைவரையும் சுண்டி இழுக்கும், என்றெல்லாம் விளம்பரத்தில் சித்தரிக்கப்படும் இந்த அஜினமோட்டோ, ஒரு ஆலகால விஷம்.

மோனோசோடியம் குளூட்டமேட்(MSG) என்ற இந்த இரசாயனம் தான் அஜினோமோட்டோ. இதன் பிறப்பிடமான சீனாவே, இதை தடை செய்யப்பட்ட இரசாயனமாக அறிவித்தது.

காரணம் அஜினோமோட்டோ சேர்க்கப்பட்ட உணவால் மோசமான சிறுநீரக செயலிழப்பு (kidney failure) நோயால் அங்குள்ள மக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். சீனா இந்த வேதிப்பொருளை தங்களை விட்டு விரட்டி பலகாலங்கள் ஆனாலும், ஒரு நாட்டின் கழிவுப் பொருளை உணவாக ஏற்றுக்கொண்டு, அதனை பெருமையாக நினைத்து கொண்டாடும் நாம் வழக்கம் போல இந்த விஷத்தையும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

இந்தியாவில் பெரும்பாலும் உணவுப் பொருட்களில் சுவையைக் கூட்டவே இந்த இரசாயனப் பொருள் சேர்க்கபடுகிறது. திருமணம் போன்ற விருந்து நிகழ்ச்சிகளில் கூட உணவுப் பொருட்களில் சுவைக்காக இதனை இப்போது கலக்க ஆரம்பித்து விட்டனர். இதனால் விருந்து உண்ட உடனே வாந்தி மற்றும் வயிற்று உபாதையால் அவதிப்படுகிறார்கள்.

பிரயாணி, ஃபிரைட் ரைஸ், சூப், நூடுல்ஸ், சிக்கன், மட்டன், மீன் ஃபிரை, பர்கர், பீசா இன்னும் நம் வாய்க்குள் நுழையாத fast food உணவகங்களில் கிடைக்கும் அனைத்து பொருட்களிலும் இதன் தாக்கம் உண்டு.

பேக்கரியில் தயாராகும் (பிரட், பிஸ்கட், சமோசா, ஃபப்ஸ், கேக்) மைதாவால் ஆன அனைத்து உணவுப் பொருட்களிலும் சுவைக் கூட்ட கலக்கப்படுவதில் முதலிடம் வகிப்பது விஷத் தன்மை வாய்ந்த அஜினோமோட்டோ தான்.

உருளைக்கிழங்கு சிப்ஸ், ஐஸ்க்ரீம், சாக்லேட்டில் கூட கலக்கப்படுகிறது என்பது தான் மிகவும் கொடுமையான விஷயம்.

விலை மலிவு, ஆனால் சுவை கூடுதல் எனக் கூறி சாம்பார், ரசம் போன்றவற்றில் கூட இதைக் கலக்கலாம் என விளம்பரம் வேறு வந்துகொண்டு இருக்கிறது.

இதனால் நமக்கு கிடைக்கும் கெடுபலன்கள் கணக்கில் அடங்காதவை.

MSGன் வாசனை மூளையின் ஹைபோதாலமஸ் பகுதியை தூண்டுகிறது. ஹைபோதாலமஸ் இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்தும். இதனால் அதிகமாகவும் அடிக்கடி உணவு உண்ண வேண்டும் என்ற உணர்வு தூண்டப்படும். இதனால் பலர் அடிக்கடி மற்றும் அளவில்லாமல் உண்கின்றனர். இதன் பக்கவிளைவு உடல் எடை கூடுவது.

MSG சேர்க்கப்படும் துரிதவகை உணவுகளால் துத்தநாகம் குறைபாடு ஏற்பட்டு ஞாபக சக்தி குறைவு, கவனக் குறைவு, திட்டமிட்டு செயல்படும் திறன் குறைவு என பல பிரச்சினைகள் ஏற்படும்.

தலைவலி, மனச்சோர்வு, உடல் சோர்வு , உடல் எடை அதிகரிப்பு, உணவுக்கு ஏங்குதல் போன்ற வியாதிகளும் உண்டாகும்.

பிறப்புக் கோளாறு, அல்சர், கேன்ஸர், தீராத தலைவலி, ஒற்றை தலைவலி, மைக்ரேன் இப்படி பட்ட தலைவலிக்கு எல்லாம் மூலம் அஜினோமோட்டோ மட்டுமே.

அதிக வியர்வை, உடலில் திட்டு திட்டாக சிவந்துபோதல், முகவாதம் மற்றும் முகத்தில் உள்ள தசைகள் இறுகிப் போதல், மரத்துபோதல், பற்கள், கண்கள் கூசுதல், முகம், கழுத்து மற்றும் கை, கால்களில் எரிச்சல், வேகமான இதயத்துடிப்பு, அடிக்கடி உண்டாகும் படப்படப்பு, நெஞ்சுவலி, தூக்கமின்மை, உடல் வலுவிழந்து போதல், உறுப்புகளில் வளர்ச்சியற்றத் தன்மை, முடிகொட்டுதல், ஆஸ்துமா, பக்கவாதம், அல்சிமர்ஸ் என்ற முதுமை நோய், சிறுநீரக கற்கள், இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளிலும் அழற்சி, சர்க்கரை நோய் என அஜினோமோட்டோ எனும் விஷம் நோய்களை அள்ளி தெளிக்கும் அமுதசுரபியாக திகழ்கிறது.

ஆரோக்கிய வாழ்வு வேண்டும் என்று விரும்புவோர் அவசியம் தவிர்க்க வேண்டியவைகள்
1. அஜினோமோட்டோ
2.வெள்ளைச் சீனி
3.மைதா-வெள்ளை மா

பல மருத்துவ ஆராய்ச்சிகள் மனிதர்களுக்கு அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு இது பலவித ஆபத்துகளை உருவாக்கும் என்று நிரூபித்துள்ளன.

குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாக குறைந்து உடல் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் குறைகிறது. எடை கூடுகிறது. அலர்ஜி போன்ற பிரச்சனைகளினால் இப்போது பல குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

அஜினோமோட்டோ எனும் இந்த விஷம் மூளையில் ஆர்குவேட் நுக்ளியஸ் என்னும் பகுதியைப் பாதிப்பதால் உடல் எடை கட்டுக்குள் வராமல் அதிகரித்துக் கொண்டே போகும்.

-சித்தர்கள்- Tamil Scientists