தண்டுக்கீரை – முளைக்கீரை

தண்டுக்கீரைநோய் தொற்றுகளில் இருந்து உடலை காக்கும் தண்டுக்கீரை

உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை நிற்பவை கீரைகள். பல வகை கீரைகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப் பட்டாலும், தண்டுக்கீரைக்கு தனி மகத்துவம் உண்டு. இதில் செங்கீரை, வெண்கீரை என்று இரண்டு வகை உண்டு.

விதை, தண்டு, இலை என எல்லா பாகங்களும் ருசிக்கப்படும் ஒரே கீரைவகை இதுதான். சமைத்த தண்டுக் கீரையில் விட்டமின் A மற்றும் விட்டமின் சத்துக்கள் கணிசமாக நிறைந்துள்ளன.

Bகுழும விட்டமின்களான தயமின் thiamine, நியாசின் niacin மற்றும் ரீபோபிளேவின் riboflavin போன்றவை அதீத அளவில் உள்ளன. இவை உடலுக்கு சக்தியை அளிப்பதுடன் உடலில் தங்கும் தேவையற்ற கொழுப்புப் பொருட்களை வெளியேற்ற உதவுகின்றன.

கல்சியம், இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், மங்கனீசு போன்ற அத்தியாவசிய தாது உப்புகளும் இதில் உள்ளன. இவை உடலை நோய் காரணிகளிடமிருந்து காப்பதுடன், பல்வேறு சத்துக்களை வழங்கி உடல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

தண்டுக்கீரை.-thamil.co.ukலியூசின் leucine, திரியோனைன் threonine போன்ற அமினோ அமிலங்கள் தண்டுக் கீரையில் காணப்படுகின்றன. இவை உடலில் புரதப் பொருளை சீரான விகிதத்தில் அதிகரிக்கச் செய்கின்றன.

உடலின் பருமனை அதிகரிக்கச் செய்யும் காரணிகளான சர்க்கரை மற்றும் காபோவைதரேற்று குறைவான அளவுகளிலே உள்ளன. இதனால் தண்டுக் கீரையை தினசரி உணவோடு சேர்த்துக் கொள்வதால் மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் கட்டுப்படுத்தப் படுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் பல்வேறு ஆன்டி ஆக்ஸிடெண்ட்- antioxidants பொருட்கள் இதில் இருக்கின்றன. இவை இரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களை வளப்படுத்துவதன் மூலநோய் தொற்றுகளில் இருந்து உடலை காக்கின்றன.


முளைக்கீரைமுளைக்கீரை

முளைக்கீரை உடல் வலிமை தரும் கீரையாகும். இதனை சிறுவர் முதல் பெரியவர் வரை உண்ணலாம். தண்டுக்கீரையின் இளம் செடியே இளஞ்செடியே முளைக்கீரையாகும். இதனால் இளங்கீரை என்ற மற்ற பெயரும் இதற்கு உண்டு.

முளைக்கீரை உணவுச் சத்துக்கள் மிகுந்த ஒரு கீரையாகும். இக்கீரையை சமையல் செய்துண்ண நாவுக்கு ருசியைத்தரும். வருடம் முழுவதும் வளரக்கூடிய முளைக்கீரை அனைத்துப் பகுதிகளிலும் தடையின்றி வளரும் தன்மை கொண்டது. கல்சியம் சத்து நிறைந்துள்ள இந்த கீரையில் விட்டமின்கள் A , B அதிகம் காணப்படுகின்றன.

எலும்புகள் வலுவடையும் முளைக் கீரையில் சுண்ணாம்புச் சத்து அதிகம் இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கும், வாலிபர்களுக்கும் அதிகம் கொடுக்கலாம். இதனால் எலும்பு வலுவடைவதோடு உடல் வளர்ச்சி அதிகரிக்கும். வயதானவர்கள் இந்த கீரையை தினசரி உண்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் தேவையான சக்தியை அளிக்கும். மாலைக்கண் நோய் குணமடையும்

முளைக்கீரை ஒன்றே எல்லா வகையான தாதுக்களையும் உள்ளடக்கியுள்ளது. இக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்தத்தை சுத்தம் செய்து, உடலுக்கு அழகும் மெருகும் ஊட்டவல்லது. இதில் அடங்கியுள்ள மணிச்சத்து மூளைவளர்ச்சி மற்றும் எலும்பினுள்ளே ஊண் அல்லது மேதஸ் என்னும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.

நூறு கிராம் முளைக் கீரையில் 9000 / IU ( அகில உலக அலகு ) வைட்டமின் A உள்ளது. இது மாலைக்கண் நோய்க்கு சிறந்த மருந்தாகும். முளைக் கீரை சாப்பிடுவதால் சொறி சிரங்கு மறையும், மூக்கு தொடர்புடைய வியாதிகள் குணமடையும், பல்நோய் குணமடையும். நரம்பு தளர்ச்சி பலமடையும். பலவீனத்தை போக்கி பலம் உண்டாகும். பசியை தூண்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். கண்பார்வையை தெளிவுபடுத்தும். சோம்பலை ஒழித்து சுறுசுறுப்பை உண்டு பண்ணும். அறிவை கூர்மையாக்கும்.

இக்கீரையை கடைந்து உண்டால் உட்சூடு, இரத்த கொதிப்பு, பித்த எரிச்சல் முதலிய நோய்கள் குண்மாகும். அத்துடன் கண் குளிர்ச்சியை பெறும். சொறி, சிரங்கு முதலிய நோய்கள் இக்கீரையை உண்பதனால் குணமாகும்.

இக்கீரையில் உள்ள சத்துக்கள் – 100கிராம் அளவு

சுண்ணாம்பு சத்து – 397 மில்லி கிராம்
மக்னிசியம் – 247 மில்லி கிராம்
ஆக்ஸாலிக் அமிலம் – 772 மில்லி கிராம்
மணிச்சத்து – 83 மில்லி கிராம்
இரும்பு சத்து – 25.5 மில்லி கிராம்
சோடியம் – 230 மில்லி கிராம்
பொட்டாசியம் – 341 மில்லி கிராம்
தாமிரசத்து – 0.33 மில்லி கிராம்
கந்தக சத்து – 61 மில்லி கிராம்
குளோரின் சத்து – 88 மில்லி கிராம்

ஆக்ஸாலிக் ஆசிட் இதில் மிகவும் அதிகம். சிறுநீரகப் பிரச்னை, கல் அடைப்பு, அலர்ஜி இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.

-mathan
-tamil.boldsky.com

தொகுப்பு – thamil.co.uk