தைம் THYME

LemonThyme

LemonThyme

மூலிகையின் பெயர் – தைம் THYME
தாவரப்பெயர் – THYMUS VULCARIS (LINN)
தாவரக் குடும்பம்- N.O.LABIATAE
பயன்தரும் பாகம் – இலை, தண்டு,  பூ

வளரியல்பு
தைம் மலைப் பாங்கான இடங்களில் நன்கு வளரும். தண்ணீர் தேங்கக்கூடாது. வடிகால் வசதி இருக்க வேண்டும். கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரத்தில் வளரக்கூடியது. இதன் தாயகம் ஸ்பெயின், தெற்கு ஐரோப்பாவில் இருந்தது. ரோமானியர் அதிகம் பயிரிட்டனர். இதன் வேர்கள் அதிகமாக இருக்கும். பக்கக்கிழைகள் அதிகம் உண்டாகும். அடர்த்தியான புதர் போல் காணப்படும். இதன் உயரம் 4 முதல் 8 அங்கும் வரை வளரும். இலைகள் சிறிதாக இருக்கும். நீளம் 1/8 அங்குலமும் அகலம் 1/16 அங்குலமும் இருக்கும். இலைகள் பச்சையாக அடர்த்தியாக இருக்கும். பூ இரு பாகமாக இருக்கும். மேலே 3 இதழ், கீழே 2 இதழ் போன்று அமைந்திருக்கும். விதைகள் உருண்டையாக இருக்கும்.

Caraway Thyme

Caraway Thyme

தைமில் மூன்று வகை உண்டு. LEMON THYME, CARAWAY THYME, & WILD THYME. இதற்கு 3 ஆண்டுகள் வரை முளைப்புத் தன்மை இருக்கும். இலைகள் நறுமணம் கொண்டவை. இதிலிருந்து எண்ணெய் எடுப்பார்கள். இது மருத்துவ குணம் உடையது. இவை மே மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை பூக்கும். தைம்மை கிரேக்கப் பெண்கள் வீரத்தின் சின்னமாக வீரர்களுக்குக் கொடுப்பார்கள். அரண்மனையை சுத்தம் செய்ய இதன் இலைகளை ஊறவைத்து அதன் நீரில் சுத்தம் செய்தார்கள். இதைப் பயிரிட 2 அடி நீளத்திற்கு இடைவெளிவிட்டு விதைகளை பண்படுத்திய நிலத்தில் நடுவார்கள். இதை கட்டிங் மூலமாகவும் பயிரிடலாம். இதன் வேர்களைப் பிரித்தெடுத்து அதையும் நடுவார்கள். மார்ச் மாதத்தில் ஈரப்பதம் இல்லாத மண்ணில் நட்டுப் பின் நீர் விடுவார்கள். இது வருடாந்திரப் பயிர்.

தைமின் மருத்தவப்பயன்கள்
மூலிகைப் பயிரான தைம் ஓர் நல்ல மருத்துவ குணமுடைய மூலிகை. தைமின் தைலம் காரத்தன்மையுடையது. நறுமணம் கொண்டது. இனிப்பு சுவை கொண்டது. நரம்புத் தளர்ச்சியைக் குணப்படுத்தும். மனவளர்ச்சியைப் பெருக்கும். நச்சுப்புழுக்களைக் கொல்லும். நெஞ்சுவலி, காசநோய், மார்புச்சளி, முதலிய சிகிச்சைக்கு இந்த எண்ணெய்  உதவும்.

wild thyme

wild thyme

பித்த நீரையும், இரத்தத்தையும் இளக்கும். சிறுநீரகம், கண் முதலியவற்றின் சிகிச்சைக்கும், இரத்தத்தைச் சுத்தி செய்வதற்கும் பயன்படும். சரும நோய்களின் சிகிச்சையில் குடற் பூச்சிகளைக் கொல்லும்.

தைம் தலைப் பொடுகைப் போக்கும். ஏழு தேக்கரண்டியளவு வறண்ட தைம் இலைப்பொடியை இரண்டு கப் நீரில் பத்து நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி அதை குளித்த தலை முடிக்குத் தடவி தேய்த்து விட்டால் பொடுகு குணமாகும்.

தைம் எண்ணெயை சிறிதளவு வாயில் விட்டுக் கொப்பளிக்க தொண்டை வலி குணமாகும்.

இந்த எண்ணெயால் இருமல், வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு, தோல் அறிப்பு, சிறுநீர் தாரைசுத்தம், டான்சில் வீக்கம், வாய்ப்புண், வாய் நாற்றம் முதலியன குணமாகும். இது இரத்தம் உறைவதை குணப்படுத்தும் தன்மையுடையது. இதற்குப் பாக்டீரியா தடுப்பு சக்தி கொண்டது. இந்த எண்ணெயுடன் மற்றொரு எண்ணெய் சேர்த்து பற்கள் சுத்தமாகவும் விழாமல் இருக்கவும் பயன்படுகிறது.

ஆண்களுக்ககுச் சக்தியைத் தூண்ட இந்த மூலிகையைப் பயன்படுத்துகிறார்கள்.

பிரசவமான பெண்கள் உதிரப்போக்கு வராமல் தடுக்க இந்த தைம் மூலிகையைப் பயன்படுத்துகிறார்கள்.

மூலிகை சூப் மற்றும் உணவு தயார் செய்வதிலும் தைமை உபயோகிக்கிறார்கள்.

தைம் சோப்புத் தயார் செய்யவும், அழகு சாதனங்கள் தயாரிக்கவும், பற்பசை தயாரிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.

இந்த இலையை இரவில் தூங்கும் போது தலையணையுடன் சேர்த்து வைத்துத் தூங்கினால் கெட்ட சொப்பனங்கள் வராது என்ற நம்பிக்கை ரோமானியர்களிடம் இருந்துள்ளது.

இதன் காய்ந்த இலையில் தேநீர் போட்டுக் குடிப்பதால் ஆஸ்த்துமா, குளிர், இருமல் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். உடம்பு சூட்டால் கண்ணிலும், மூக்கிலும் அதிகமான நீர் வடிதலை தைம் குணப்படுத்தும். தைமோல். (THYMOL) ஆயில் ஏண்டிசெப்டிக் (ANTISEPTIC) மற்றும் ஏண்டி ஃபங்கல் (ANTI-FUNGAL) குணமுடையது. தைமில் விட்டமின் பி (B) காம்ளக்ஸ், ஏ (,A) கே, (K) ஈ, (E) சி (C) மற்றும் போலிக் ஏசிட் (FOLIC ACID) உள்ளது.

100 கிராம் புதிய பச்சை தைம் இலையில்  38% of dietary fiber,  27% vitamin B-6 (Pyridoxine),  266% of vitamin C,  158% of vitamin A ,  218% of iron,   40% of calcium,   40% of maganasium,  75% of manganese,  No cholesterol அடங்கயுள்ளது.

-மூலிகைவளம்