சருமத்தை பாதுகாக்கும் பழங்கள்

சருமத்தை பாதுகாக்கும் பழங்கள்விட்டமின் A  நிறைந்த பப்பாளிப் பழத்தின் தோலைசீவி அதை நன்கு கூழ்போல ஆக்கி முகத்தில் ‘பற்று’போலப் போட சருமத்தின் நிறம் கூடும். சருமம் பட்டுப்போல மென்மையாகும்.

ஆப்பிள் பழம் விட்டமின் நிறைந்தது. இதையும் தோல்சீவி கூழ்போல ஆக்கி முகத்தில் ‘பற்று’போல போட முகத்தில் வரும் கரும்புள்ளிகள் நீங்கும்.

சாத்துக்குடி பழமும் C விட்டமின் செறிந்தது தான். இதன் மேல்தோல், உள்தோல் இரண்டையுமே உரித்து அதை நன்கு பிசைந்து அதை முகத்தின் மீது அப்படியே வைக்கலாம். அல்லது இதன் சாற்றை முகத்தில் தடவலாம். முகத்தில் அதிகம் உள்ள எண்ணெய் பசையை இது நீக்கி சருமத்தைப் பாதுகாக்கும்.

ஆரஞ்சு(கமலாபழம்) பழமும் விட்டமின் C நிறைந்தது. இதை சாத்துக்குடியைச் செய்வது போலச் செய்யலாம். இதன் சாறு சருமத்திற்கு பளபளப்பு தரும்.

கொய்யாப்பழமும் விட்டமின் C அதிகம் கொண்டது. இதை நன்கு கூழ்போல ஆக்கி முகத்தில்போட முகம் பளபளக்கும். நிறம் மேம்படும்.

எல்லா காலங்களிலுமே கிடைக்கும். வாழைப்பழம் உலர் சருமத்திற்கு மிகவும் நல்லது. இதை கூழ்போல ஆக்கி முகத்தில் பேக் போலப் போட வேண்டும். உலர் சருமம் உடையவர்களும், 40 வயது தாண்டியவர்களும் இதைப் பயன்படுத்தலாம்.

இந்த ‘பேக்கு”களை பருக்கள் இருக்கும் போது கூட பயன்படுத்தலாம். இதைப் போட்ட பின்பு சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறி பின்பு வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவலாம்.

பழங்களைப் போலவே நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளையும் கூட நாம் சருமத்திற்குப் பயன்படுத்தலாம்.

-இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்