அதிசய பலன்கள் நிறைந்த அருகம்புல்

அருகம்புல்-thamil.co.ukமூலிகையின் பெயர்– அருகம்புல்
வேறு பெயர்கள் – அருகு, பதம், மூதண்டம், தூர்வை, மேகாரி.

எல்லாவிதமான மண்ணிலும் வளரும் இந்த அருகு சல்லிவேர் முடிச்சுகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இனவிருத்தி செய்கிறது. சில நேரங்களில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போய் விடும். ஆனால், சில ஆண்டுகளுக்கு பிறகு அந்த இடத்தில் நீர் பட்டால், உடனே செழித்து வளரத் தொடங்கி விடும்.

இந்த புல் உள்ள நிலம் மண் அரிப்பில் இருந்தும், வெப்பத்தில் இருந்தும் காக்கப்படுகிறது. அதனால், நெல் சாகுபடி செய்யும் போது அருகம் புல்லால் வரப்பு அமைக்கப்படுகிறது.

மங்கள நிகழ்ச்சிகளில் சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அதில் அருகம்புல் சொருகி வைக்கப்படுகிறது. சாணத்தில் சாதாரணமாக இரு நாட்களில் புழுக்கள் உருவாகிவிடும். ஆனால் புல் செருகப்பட்ட சாணம் காயும் வரை அதில் புழு, பூச்சிகள் உருவாவதில்லை. இந்த அதிசயத்தை யாரும் உற்றுக் கவனிப்பதில்லை.

புல் வகைகளின் தலைவர் என்று அருகுவை சொல்லலாம். அதனால்தான் மன்னர்கள் பட்டாபிஷேகம் செய்யும்போது, அருகம்புல்லை வைத்து மந்திரம் சொல்வார்கள்.

‘அருகுவே! புல் வகைகளில் நீ எப்படி சிறந்து விளங்குகிறாயோ, அதேபோல் மன்னர்களில் நானும் சிறந்தோன் ஆவேன்..’ என்று முடிசூடும் போது மன்னர்கள் கூறுவது அந்த காலத்து வழக்கம். கிரகண நேரத்தில் குடிக்கும் நீரில் அருகம்புல்லை போட்டு வைக்கும் பழக்கம் இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது.

அது மூட நம்பிக்கை அல்ல, கிரகண நேரங்களில் ஊதாக்கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். அதனால் ஏற்படும் பாதிப்புகளை நீக்கவே அருகை நீரில் போட்டு வைக்கிறார்கள். ‘அருகை பருகினால் ஆரோக்கியம் கூடும்’ என்கிறது சித்த மருத்துவம். இதை ‘விஷ்ணு மூலிகை’ என்றும் சொல்கிறார்கள்.

பொதுவாக அருகம்புல் அசுத்தமான பகுதிகளில் வளராது. இதனை சித்தர்கள் விஷ்ணு மூலி என்று அழைக்கின்றனர். சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற இந்த அருகின் மருத்துவக் குணங்களை அகத்தியர் பாலவாகடத்திலும், வர்ம நூல்களிலும் தெளிவாக விளக்கியுள்ளார். பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் ஏற்ற மருந்து என்பதால், இதை ‘குரு மருந்து’ என்றும் அழைக்கிறார்கள்.

அருகம்புல் பச்சையத்தில் அதிக அளவு கரோட்டினாய்டுகள் என்ற வேதிபொருள் உள்ளன.

அருகம்புல்லை பிள்ளையார் புல் என்று அழைப்பார்கள். வீடுகளில் அருகை சாணம் அல்லது மஞ்சளில் நட்டு வைத்து வணங்குவார்கள். அருகம்புல்லை சித்தர்கள் ஆரோக்கியப் புல் என்றும் காகாமூலி என்றும் அழைக்கின்றனர்.

அருகம்புல் முழுத்தாவரமும் இனிப்புசுவையும், குளிர்ச்சித் தன்மையும் உடையது. உடல் வெப்பத்தை அகற்றும்,சிறுநீர் பெருக்கும், குடல் புண்களை ஆற்றும், இரத்தத்தை தூய்மையாக்கும், உடலை பலப்படுத்தும், கண் பார்வை தெளிவுபெறும்.

நோய்கள் அனைத்தையும் அழிக்கும் குணமுள்ளதால் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தில் இது முதலிடம் வகிக்கிறது.

அருகம் புல்அருகம்புல்லின் சமூலத்தை (இலை,வேர், தண்டு) எடுத்து சுத்தம் செய்து சாறு எடுத்து பாத்திரத்தில் உறையவைத்தால் மா போன்று வெண்மையாக உறையும். இந்த மாப்பொருள் பாலைவிட வெண்மையாகக் காணப்படும்.

அருகம்புல்லின் தண்டுப் பகுதி மற்றும் வேர்ப்பகுதி ஆகியன பாரம்பரியம்மிக்க நாட்டு மருத்துவத்தில் இதயக் கோளாறுகளைப் போக்க உபயோகித்து வரப்படுகிறது. குறிப்பாக மாரடைப்பு , இதய காளங்களின் அழற்சியைத் தடுப்பதாகவும் உள்ளது.

ஞாபக மறதியைப் போக்கினால் மனிதனின் அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். ஞாபக சத்தியைத் தூண்ட அருகு சிறந்த மருந்தாகும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

அதிக குளிர்ச்சி தன்மை கொண்டது. நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அருகம்புல் சாறு எடுத்து தினமும் உணவுக்குப் பின் அருந்தி வந்தால் கை கால் நடுக்கம், வாய் குளறல் போன்ற பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

கண் பார்வை தெளிவடையவும், கண்ணின் சிவப்புத் தன்மை மாறவும் அருகம்புல் சாறு சிறந்த மருந்தாகும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும். மெலிந்த உடல் தேறவும், புத்துணர்வு பெறவும் இது சிறந்த மருந்தாகும்.

அருகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தோலில் உண்டான சொறி, சிரங்கு, ஆறாத புண்கள் மீது தடவினால் விரைவில் குணமாகும்.

நீர் கடுப்பு, நீர்ச் சுருக்கைக் குணப்படுத்தும்.

அருகம்புல்லை தயிர்விட்டு அரைத்து குடித்துவந்தால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் குணமாகும்.

உடல் இளைக்க தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம். அருகம்புல்லை நீரில் அலசி சுத்தப்படுத்தி தண்ணீர் சேர்த்து இடித்தோ, அரைத்தோ சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது நல்லது. தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம். அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்

1. நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
2.இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
3. வயிற்றுப் புண் குணமாகும்.
4. இரத்த அழுத்தம் குணமாகும்.
5. நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
6. சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
7. நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
8. மலச்சிக்கல் நீங்கும்.
9. புற்று நோய்க்கு நல்ல மருந்து.
10. உடல் இளைக்க உதவும்
11.இரவில் நல்ல தூக்கம் வரும்.
12. பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
13. மூட்டு வலி நீங்கும்.
14. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
15. நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.

அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்கள் பஞ்சு போலாகி விடும்.

அருகு சாறு குடித்தால், இரவில் நல்ல தூக்கம் வரும். அருகம்புல் குணப்படுத்தும் நோய்களின் பட்டியல், அதன் வேர்களை போலவே மிகவும் நீளமானது. அருகம்புல் சாறு குடித்தால் சோர்வே தெரியாது. வயிற்றுப்புண் குணமாகும். சளி, சைனஸ், ஆஸ்துமா, தோல் வியாதி, மலச்சிக்கல், பல் ஈறு கோளாறுகள், கர்ப்பப்பை கோளாறுகள், மூட்டுவலி ஆகியவை கட்டுப்படும். புற்று நோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது.

இதன் அருமையை நம்மை விட வெளிநாட்டினர் தான் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஜெர்மனியில் அருகம்புல் சாறு கலந்து ரொட்டி தயாரித்து உண்கிறார்கள். நாமும் தோசை, சப்பாத்தி, ரொட்டி ஆகியவைகளில் அருகம்புல் சாறை சேர்த்து தயாரித்து உண்ணலாம்.

இலங்கையில் குழந்தைகள் முதன்முதலில் பள்ளிக்கு செல்லும்போது, பாலில் அருகம்புல்லை கலந்து புகட்டுவார்கள். பால் அரிசி வைத்தல் என்ற பெயரில் இந்த சம்பிரதாயம் செய்யப்படுகிறது. குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானத்தையும் அருகம்புல்லில் தயாரிக்கலாம்.

தளிர் அருகம்புல்லை கழுவி, விழுது போல் அரைத்து பசும்பாலில் விட்டு சுண்டக்காய்ச்சி, இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு உட்கொண்டு வந்தால் எவ்வளவு பலவீனமான உடலும் விரைவில் தேறி விடும்.

30 வகையான நோய்களை குணப்படுத்தும் அருகம்புல்

அருகம்புல்லின் தண்டுப் பகுதி மற்றும் வேர்ப்பகுதி ஆகியன பாரம்பரியம்மிக்க நாட்டு மருத்துவத்தில் இதயக் கோளாறுகளைப் போக்க உபயோகித்து வரப்படுகிறது. குறிப்பாக மாரடைப்பு , இதய காளங்களின் அழற்சியைத் தடுப்பதாகவும் உள்ளது.

அருகம்புல்லின் துளிர் இலைகள், அதன் கட்டைகள் (தண்டு), வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்களை உடையன ஆகும். அறுகம்புல் தோலின் மேல் ஏற்படும் வெண்புள்ளிகளை குணப்படுத்த வல்லது.

மேலும் சிறுநீரகக் கோளாறுகள் (சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் உட்பட), ஆஸ்துமா என்னும் மூச்சு முட்டல், உடலில் ஏற்படும் துர்நாற்றம், நெஞ்சுச்சளி, தீப்புண்கள், கண்களில் ஏற்படும் தொற்று நோய்கள், உடற்சோர்வு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை சத்து அதிகப்படுதல், வயிற்றுப் போக்கு ஆகிய நோய்களையும் போக்க வல்லது.

மேற்கூறிய நோய்கள் மட்டுமின்றி பின்வரும் பெயர்களுடைய ஏராளமான நோய்களையும் அறுகம்புல் வேரறுக்க வல்லது. அவை பின்வருமாறு:-

1.புற்று நோய்க்கு எதிரானது.
2.சர்க்கரை நோயை சீர் செய்ய வல்லது.
3.வயிற்றுப் போக்கை குணப்படுத்துவது.
4. குமட்டல், வாந்தி இவற்றை தணிக்கக் கூடியது.
5.நுண்கிருமிகளைத் தடுக்க வல்லது.
6.உற்சாகத்தைத் தரவல்லது. (ரத்தத்தில் பிராணவாயுவை அதிகப்படுத்த வல்லது).
7.மூட்டுவலிகளைத் தணிக்கக் கூடியது.
8.கிருமித் தொற்றினைக் கண்டிக்க வல்லது.
9.வற்றச் செய்வது.
10.அகட்டு வாய் அகற்றி.
11.கருத்தடைக்கு உகந்தது.
12.குளிர்ச்சி தரவல்லது.
13.மேற்பூச்சு மருந்தாவது.
14.சிறுநீரைப் பெறுக்க வல்லது.
15.கபத்தை அறுத்து வெளித்தள்ளக் கூடியது.
16.ரத்தத்தை உறையவைக்கும் தன்மை உடையது.
17.மலத்தை இளக்கக் கூடியது.
18.கண்களுக்கு மருந்தாவது.
19.உடலுக்கு உரமாவது.
20.ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த கூடியது.
21. காயங்களை ஆற்ற வல்லது.

அருகம்புல்லில் அடங்கியுள்ள மருந்தும் பொருள்களும் ஒரு நீண்ட பட்டிலை உடையது. அருகம்புல்லில் பின்வரும் மருத்துவ வேதிப் பொருட்கள் அடங்கியுள்ளன. அவையாவன:

1.மாவுச்சத்து (புரோட்டீன்).
2.உப்புச்சத்து (சோடியம்)
3.நீர்த்த கரிச்சத்து
4.அசிட்டிக் அமிலம்
5.கொழுப்புச் சத்து
6.ஆல்கலாய்ட்ஸ்
7.அருண்டோயின்
8.பி.சிட்டோஸ்டர்
9.கார்போஹைட்ரேட்
10.கவுமாரிக் அமிலச் சத்து
11.ஃபெரூலிக் அமிலச் சத்து
12.நார்ச் சத்து (ஃபைபர்)
13.ஃப்ளேவோன்ஸ்
14.லிக்னின்
15.மெக்னீசியம்
16.பொட்டாசியம்
17.பால்மிட்டிக் அமிலம்
18.செலினியம்
19.டைட்டர் பினாய்ட்ஸ்
20.வேனிலிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி சத்து ஆகியன பொதிந்துள்ளன.

 

அருகம்புல்லின் மருத்துவப் பயன்கள்:

சர்க்கரையை குறிப்பாக ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கும் தன்மையுடையது. அருகம்புல்லில் அடங்கியுள்ள மேனிட்டால் மற்றும் சேப்போனின்ஸ் சத்துக்கள் சிறுநீரைப் பெருக்க அல்லது வெளித்தள்ள உதவுகிறது. ஆயுர்வேத மருத்து நூல்கள் அருகம்புல் சற்று காரமுடையது, கசப்புடையது, உஷ்ணத் தன்மை உடையது.

பசியைத் தூண்டக் கூடியது, காயங்களை ஆற்றவல்லது. வயிற்றிலுள்ள பூச்சிகளை, புழுக்களை வெளியேற்ற வல்லது. காய்ச்சலைத் தணிக்க வல்லது, ஞாபக சக்தியைப் பெருக்க வல்லது. மேலும் அருகம்புல் வாய் துர்நாற்றத்தையும் உடலில் ஏற்படும் கற்றாழை வாடை உட்பட ஏற்படும் வேண்டாத நாற்றத்தையும் போக்க வல்லது. வெண்குட்டம் என்னும் தோல் நோய்க்கு மருந்தாவது.

நெஞ்சகச் சளியைக் கரைக்கக் கூடியது. மூலத்தை குணப்படுத்த வல்லது. ஆஸ்த்துமாவை அகற்ற வல்லது. கட்டிகளை கரைக்க வல்லது. மண்ணீரால் வீக்கத்தைக் குறைக்க வல்லது என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது.

மேலும் ஆயுர்வேதப்படி அருகம்புல் பித்த மேலீட்டால் ஏற்படும் வாந்தியையும், தாகம் என்னும் நாவறட்சியையும், பாதங்கள், கைகள் மற்றும் உடலின் எந்தப் பகுதியில் எரிச்சல் கண்டாலும் அதைப் போக்குவதற்கும், வாயில் எப்பொருளைச் சுவைத்தாலும் சுவையை உணர இயலாத நிலையைப் போக்குவதற்கும், நம்மை அறியாமல் உணரும் ஏதோ ஓர் உருவம், ஸ்பரிசம், சப்தம், நாற்றம் சுவை ஆகிய நிலையில் அருகம்புல் தெளிவைத் தரும்.

அடிக்கடி காக்காய் வலிப்பு வந்து உணர்விழந்து போகுதல் அல்லது உடல் உறுப்புகள் கோணித்து போதல் என்கிற நிலையில் அருகம்புல் அருமருந்தாகிறது. ஒருவித இனம்புரியாத மயக்கநிலை மறைக்க உதவுகிறது. தொழுநோய்க்கு நல்ல மருந்தாகிறது. சொறி, சிரங்கு, படை போன்ற எவ்வித தோல் நோயானாலும் அருகம்புல் குணம் தரவல்லது.

உள்ளுக்கும் கொடுத்து மேலுக்கும் உபயோகிப்பதால் இப்பயன் நிச்சயமாக கிடைக்ககூடியது ஆகும். அருகம்புல் உள்ளுக்கு உபயோகிப்பதால் சீதபேதி ரத்தம் கலந்து வருவதாயினும் சீதம் என்னும் சளி கலந்து வருவதாயினும் குணப்படும். மூக்கில் திடீரென ரத்தம் கொட்டுதல் இதை (சில்லி மூக்கு) நோய்க்கும் கைவந்த மருந்தாகவும் உடனடி நிவாரணியாகவும் அருகம்புல் அமைகிறது.

அருகம்புல் யுனானி மருத்துவத்தில் எரிச்சல் எங்கிருப்பினும் அதைப் போக்கவும், நுகர்வு உணர்வை மேம்படுத்தவும், மலமிளக்கியாகவும் இதயம் மற்றும் மூளைக்கு உரம் ஊட்டவும் வியர்வை தூண்டவும் ஞாபக சக்தியை பெருக்கவும், வாந்தியை தடுக்கவும், தாய்ப்பாலை பெருக்கவும்,

கோழையை அதாவது அடர்ந்த கெட்டிப்பட்ட சளியை உடைத்து கரைத்து வெளியேற்றவும் வயிற்றில் சேர்ந்து வலியை தருகிற காற்றை வெளியேற்றவும், குழந்தைகளுக்கு வந்து அடிக்கடி துன்பம் தருகிற சளியோடு கூடிய காய்ச்சலை போக்குவதற்கும், உடலில் எங்கு வலிஏற்பட்டாலும் ஏற்பட்ட வலியை தணிப்பதற்கும், வீக்கத்தை கரைப்பதற்கும், பல்நோயை குணப்படுத்துவதற்கும், ஈரல் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

-இயற்கை உணவும் நோயற்ற வாழ்வும்
-Karthickeyan Mathan