பனங்காய்ப் பணியாரம்

பனங்காய் பணியாரம்பனங்காய்ப் பணியாரம்
பிளிந்தெடுத்த பனம்பழக்களியுடன் கோதுமை மா சேர்த்து கொதிக்கும் எண்ணெயில் பாக்களவு உருண்டையாக விழுதாக விட்டுப் பொரித்தெடுப்பது. மிக வாசமாகவும் சுவையாகவும் இடுக்கும். சுமார் ஒரு வாரகாலம் எந்த விசேட பாதுகாப்புமின்றி வைத்துச் சாப்பிடக் கூடியது.

தேவையான பொருட்கள்
பனம்பழம் – 02
கோதுமை மா – 1/2 கிலோ கிராம்
சீனி – 400 கிராம்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – 1/2 லீற்றர்

செய்முறை
பனம்பழம்பனம்பழத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதில் உள்ள பனங்களியை நன்றாகப் பிழிந்தெடுக்க வேண்டும்.  அதன் பின்னர் பனங்களியை ஒரு பாத்திரத்தில் இட்டு அதனுடன் சீனி, தேவையான அளவு உப்பு சேர்த்து, பனங்காயின் பச்சை வாடை போகும் வரை நன்றாக காய்ச்ச வேண்டும்.

காய்ச்சிய பனங்களி நன்றாக ஆறியதும், கோதுமை மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து கையில் ஒட்டாத பதம் வரும் வரை நன்றாகக் குழைக்க வேண்டும்.

அடுப்பில் ஒரு தாச்சியை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் விட்டு, எண்ணெய் சூடானதும் அதில் பனங்களிக் கலவைவையை சிறு சிறு உருண்டைகளாகப் போடவேண்டும். பனக்காய்ப் பணியாரம் பொன்னிறமாக வரும்போது வடித்து இறக்குங்கள்.

ஆரோக்கியமான, சுவையான பனங்காய்ப் பணியாரத்தை ஆறவைத்துப் பரிமாறுங்கள்.

குறிப்பு :பனங்காய்ப் பணியாரத்தை நன்றாக சூடு ஆறிய பின்னர் உண்ண வேண்டும். காரணம் என்னவெனில் பனங்காய்ப் பணியாரத்தை சூடாகச் சாப்பிட்டால் ஒருவித கசப்புத்தன்மை இருக்கும். அதுமாத்திரமல்லாமல் வயிறு சம்பந்தமான நோய்களும் ஏற்படும்.

-Rasiah Sharatha