கடுகு மருத்துவ குணங்கள்

கடுகு-

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதுபோல ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது கடுகு. திரிகடுகம் என்னும் (சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றின் சேர்க்கை) மருத்துவ பொருட்களில் முதல் இடம் கடுகிற்குத்தான் உண்டு. அதனால்தான் எல்லா குழம்புகளிலும் கடுகை தாளித்து சேர்க்கிறார்கள்.

கடுகு விதைகளில் உடலுக்கு அவசியமான எண்ணைச் சத்து உள்ளது. மேலும் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளது. கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில் 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது.

போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் போன்ற B- காம்பிளக்ஸ் விட்டமின்கள் இதில் உள்ளன. நொதிகளின் செயல்பாடு, நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில் இவை பங்கெடுக்கக் கூடியதாகும்.

நியாசின் (விட்டமின் B-3) இரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும். கல்சியம், மங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாதுஉப்புக்களும் கடுகில் உள்ளது.

கல்சியம் எலும்புகளின் உறுதிக்கும், மங்கனீஸ் சிறந்த நோய் எதிர்பொருளாகவும், தாமிரம், இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு கலங்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் இரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன.

கோடை காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கட்டியின் தொடக்கத்தில் அரைத்துப் பூசினால் ஏற்படும் இறுக்கத்தால் கட்டி அழுந்திப் போய்விடுகிறது. கட்டி பெரியதான பின்பு அரைத்துப் பூசினால் இறுக்கத்தால் கட்டி உடைந்து அதிலுள்ள சீழ் வெளியேற உதவுகிறது.

விஷத்தை கட்டுப்படுத்தும். தற்கொலை எண்ணத்தோடு விஷம், பூச்சிமருந்து, அருந்தியவர்களுக்கு இரண்டு கிராம் கடுகை நீர்விட்டு அரைத்து கொடுத்தால் உடனடியாக வாந்தி ஏற்படும். இதனால் விஷத்தின் தாக்கம் கட்டுப்படும்.

தினமும் காலையில் கடுகு, மிளகு, உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து உட்கொள்ள வேண்டும். பின்னர் ஒருடம்ளர் வெந்நீர் அருந்த பித்தம், கபம் போன்றவற்றால் ஏற்படும் உபாதைகள் நீங்கும்.

கடுகு ஜீரணத்திற்கு உதவுகிறது.

அடிபட்டு இரத்தம் ஏற்பட்ட இடத்தில் கடுகை அரைத்து பற்றுபோட இரத்தக்கட்டு மறையும்.

கை, கால் மூட்டுக்களில் வலி ஏற்பட்டால் கடுகுபற்று நிவாரணம் தரும். கை, கால்களில் சில்லிட்டு விறைத்துப் போனால் அந்த இடங்களில் கடுகை அரைத்து பற்றுப் போட வெப்பம் உண்டாகி இயல்பு நிலை ஏற்படும்.

கடுகுடன் பெருங்காயம் சேர்த்து அரைத்து வலியிருக்கும் இடத்தில் பற்று போட வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் ஒரு வேளை பற்று போட்டு வந்தால், வலி பறந்தே போய்விடும்.

கடுகு எண்ணையை சிறிது கரண்டியில் எடுத்து லேசாக சூடுபடுத்தி வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால், வலி விரைவில் குணமாகும்.

தேனில் கடுகை அரைத்து கொடுக்க ஆஸ்மா, கபம் குணமடையும்.

கடுகு, மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிக் காதில் சில சொட்டுக்கள் விட தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

வெந்நீரில் கடுகை ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் நீங்கும்.

கடுகை பொடியாக்கி அரை தேக்கரண்டி பொடியுடன் தேன் கலந்து காலை, மாலை என இரண்டு நாள் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமடையும்.

கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு. கடுகு விதையில் இருந்து எடுக்கப்படும் சமையல் எண்ணெய் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

கடுகு பக்டீரியாக்கள் போன்ற கிருமிகளை அழிக்கும் மருத்துவக் குணம் உடையது, எனவே கடுகை ஊறுகாய், தொக்கு போன்றவற்றிலும் சேர்க்கிறார்கள். இதனால், இவை கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படும்.

ஒரு தேக்கரண்டி கடுகை, நீர் சேர்த்து அரைத்து, குடிக்கக் கொடுத்தால் வாந்தியுண்டாகும், குடிபோதை மாறும்.

வெள்ளைக்கடுகு காரச்சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டவை. குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்களை போக்கும், முடக்குவாத நோயை கட்டுப்படுத்தும்.

வெள்ளைக்கடுகு பூச்சிக் கடி விஷத்தைக் குறைக்கும். விஷத்தை உட்கொண்டவர்களுக்கு வெள்ளைக்கடுகை நீரில் ஊறவைத்து, நெல்லிக்காய் அளவு அரைத்துக் கொடுக்க, குமட்டல் இன்றி வாந்தியை உண்டாக்கி நஞ்சை வெளியேற்றும்.

வெள்ளைக்கடுகை அரைத்து, பருத்தித் துணியில் தடவி, கீல்வாயு, இரத்தக்கட்டு உள்ள இடங்களில் பற்றாகப் போட அவை குணமாகும்.

¼ தேக்கரண்டி அளவு வெள்ளைக் கடுகைத் தூளாக்கி, தேனில் குழைத்து உள்ளுக்குள் சாப்பிட இரைப்பு, இருமல், சுவாச நோய்கள் குணமாகும்.

DIGITAL CAMERAகடுகு எண்ணெய் நெடியும் விறுவிறுப்பும் கொண்டதாகும். தோல் நோய்களை குணமாக்கும். கிரந்திப்புண், தோல் நோய்கள் குணமாக கடுகு எண்ணெயை பாதிக்கப்பட்ட இடத்தில் மேல் பூச்சாகப் பூசிவர வேண்டும்.

கடுகு எண்ணெய் பெண்கள் தங்கள், முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க உதவும். லேசாக சூடுபடுத்திய கடுகு எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் விரைவில் முடிகள் மறைந்துவிடும்.

கடுகு எண்ணெயுடன் நன்கு அரைத்த மஞ்சள் கலந்து முகத்தில் பூசிவந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும்.

கடுகுக்கீரை Mustard greens  

கடுகுக்கீரைகடுகுக்கீரை

 

 

 

 

 

            

கடுகுக்கீரை செடி வகையை சேர்ந்தது. கடுகு செடி சுமார் 4 அடி உயரம் வரை வளரக்கூடியது. இக்கீரை பசுமை நிறத்துடனும் மென்மையாகவும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

கல்சியம், பொஸ்பரஸ் நார்ச்சத்துகள் நிறைந்த இக்கீரை பசியை தூண்டக் கூடியது.

வயிற்றுப் பொருமல், மந்தம் முதலியவற்றை போக்கும் ஆற்றல் கொண்டது. இக்கீரை சீரணசக்தியை அதிகப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

கடுகுக் கீரையில் பெரும்பாலான பைட்டோ phyto வேதிப் பொருட்கள் இருக்கின்றன. சளி, மூட்டுவலி, மனஅழுத்தம் போன்றவற்றுக்கெல்லாம் இந்தக் கீரை நல்ல மருந்து. குளிர் காலத்தில் கடுகுக் கீரை அதிகம் விரும்பி சாப்பிடப்படுகிறது.

 

கடுகுMustard seeds

Mustard seeds have been highly prized medicinal as well as culinary spice being in use since ancient times. The seeds are obtained from mustard plant belonging to Brassica family which also includes cabbage, broccoli, brussels-sprouts, etc. Scientific name: Brassica juncea.

Mustards are native to Asia Minor, but now cultivated as a main commercial crop in Canada, India, China, and temperate climates of European regions.

Mustards are winter crops. The plant reaches about 4-5 feet in height and bears golden yellow colored flowers. Its tiny, round seeds measuring about one mm in diameter is encased inside a fruit pod in a similar fashion like green pea pod.

In general, three main varieties of mustard are grown worldwide for use.
White mustard seeds (Brassica alba): The seeds are light straw yellow colored and are slightly larger than the other two varieties. White seeds exhibit mild pungency.
Black mustards (Brassica nigra): The seeds are commonly seen in South Asia. The seeds are sharp and more pungent than other two varieties.
Brown mustards (Brassica juncea): The seeds are native to sub-Himalayan plains of Northern India.

Health benefits of mustard seeds
Generally perceived as health benefiting spice, mustard seeds are indeed very rich in phyto-nutrients, minerals, vitamins and anti-oxidants.

Being one of the chief oil seeds, mustards are indeed very high in calories; 100 g of seeds provide 508 calories. Nonetheless, the seeds are made of quality proteins, essential oils, vitamins, minerals, and dietary fiber.

The seeds are high in essential oils as well as plant sterols. Some of important sterols include such as brassicasterol, campesterol, sitosterol, avenasterol and stigmasterol. Some of glucosinolate and fatty acids in the seeds include sinigrin, myrosin, erucic, eicosenoic, oleic, and palmitic acids.

Mustard seeds are an excellent source of essential B-complex vitamins such as folates, niacin, thiamin, riboflavin, pyridoxine (vitaminB-6), pantothenic acid. These vitamins are essential in the sense that body requires them from external sources to replenish. These B-complex groups of vitamins help in enzyme synthesis, nervous system function and regulating body metabolism.

100 g of mustards provide 4.733 mg of niacin (vitamin B-3). Niacin is a part of nicotinamide co-enzymes, helps lower blood cholesterol and triglyceride levels.
Mustard seeds contain flavonoid and carotenoid antioxidants such as carotenes, zea-xanthin, and lutein. In addition, the seeds compose a small amount of vitamin anti-oxidants such as vitamin A, C, and vitamin K.

The seeds are an excellent source of vitamin E, gamma tocopherol; contain about 19.82 mg per 100 g (about 132% of RDA). Vitamin E is a powerful lipid soluble antioxidant, required for maintaining the integrity of cell membrane of mucus membranes and skin by protecting it from harmful oxygen-free radicals.
Mustards are rich source of health benefiting minerals. Calcium, manganese, copper, iron, selenium and zinc are some of the minerals especially concentrated in these seeds. Calcium helps build bone and teeth. Manganese is used by the body as a co-factor for the antioxidant enzyme superoxide dismutase. Copper is required in the production of red blood cells. Iron is required for the red blood cell formation and cellular metabolism.

Medicinal uses
Mustard seeds and its oil has traditionally been used to relieve muscle pain, rheumatism and arthritic pain.
In India, mustard oil is applied over scalp and is believed to stimulate hair growth.
Its ground seeds act as a laxative, stimulant to gastric mucosa and increase intestinal secretion.

-Baskar Jayaraman
-பிணி இல்லா பெருவாழ்வுக்கான உணவுமுறைகளும்,உடற்பயிற்சிகளும்
– இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்
-daivivarnashram.com

தொகுப்பு – thamil.co.uk