ஆண்மை இழப்பை தடுக்கும் பழங்கள்

பொதுவாக ஆண்மை இழப்பானது 50 வயதிற்கு மேல்தான் ஏற்படும். ஆனால் தற்போது 50 வயதிற்கு உட்பட்டவருக்கும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. அதிலும் திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கும் ஆண்கள் விறைப்புத்தன்மை குறைபாட்டினால் பெரிதும் அவஸ்தைப்படுகிறார்கள். இப்படி ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்பட்டால், அது அவர்களது ஈகோவை பாதிக்கும். ஆண்கள் எப்போதும் வலுவுடனும், ஆரோக்கியமான ஆண்மைத் தன்மையுடனும் இருக்க விரும்புவார்கள். ஆனால் அப்படி நினைத்தால் மட்டும் போதாது, ஆண்மை இழப்பு ஏற்படாதவாறு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன், சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும்

குறிப்பாக ஆண்களுக்கு இப்படி ஆண்மை இழப்பு மற்றும் விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணம், தற்போதைய வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறைதான். இதனால் மன அழுத்தம் அதிகரித்து, நிம்மதி போய், எதிலும் அவசரமாக இருப்பதால், உடலை ஆரோக்கியமாக பேணிப் பாதுகாக்க முடியவில்லை.

ஆகவே எப்போதும் ஆண்மை இழப்பு ஏற்படாமல் இருக்க, உண்ணும் உணவில் ஒருசில பழங்களை சேர்த்து வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்களால், விறைப்புத்தன்மை குறைபாடு மற்றும் ஆண்மை இழப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். இங்கு ஆண்களுக்கு ஆண்மை இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் பழங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பழங்களை சாப்பிட்டால், விறைப்புத்தன்மை குறைபாடு, ஆண்மை இழப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம்.

grapefruitபம்பரமாசு grapefruit
இந்த பழத்தில் லைகோபைன் lycopene என்னும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் phytonutrients  இருக்கிறது. இவை இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதுடன், ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளான ஆண்மை இழப்பு மற்றும் விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படுவதை தடுக்க வல்லது.

அன்னாசி.Thamil.co.ukஅன்னாசி pineapple
அன்னாசிப்பழம் ஆண்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் விட்டமின் C வளமாக இருப்பதால், அது ஆண்குறிக்கு இரத்த ஓட்டத்தை சீராக செல்ல உதவும். மேலும் இதில் மக்னீசியம் இருப்பதால், இது நன்கு சுறுசுறுப்புடன் செயல்பட உதவியாக இருக்கும்.

தர்பூசணி-thamil.co.ukதர்பூசணி குமட்டிப்பழம் watermelon
தர்பூசணி ஒரு வயாகரா. ஆகவே இந்த பழத்தை ஆண்கள் சாப்பிட்டால், அதில் உள்ள அமினோ ஆசிட்டுகளானது ஆண்களின் பிறப்புறுப்பில் உள்ள இரத்த நாளங்களை ஓய்வடையச் செய்து, அவர்களுக்கு ஆண்மை இழப்பு ஏற்படாமல் தடுக்கும்.

கொய்யாகொய்யாப்பழம் guava
கொய்யாப்பழத்திலும் விட்டமின் C அதிகம் இருக்கிறது. இதுவும் விறைப்புத்தன்மை குறைபாட்டை நீக்க வல்லது. எனவே ஆண்கள் தினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிட்டால், அவர்களுக்கு ஆண்மை இழப்பு மற்றும் விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படாமல் தடுக்கலாம்.

வாழைப்பழம் --thamil.co.ukவாழைப்பழம் banana
வாழைப்பழத்தில் இயற்கையாகவே விறைப்புத்தன்மை குறைபாட்டை தடுக்கும் பொருள் உள்ளது. ஆகவே தினமும் வாழைப்பழத்தை சாப்பிட்டு வருவது, ஆண்களின் தாம்பத்ய வாழ்க்கைக்கு எந்த பிரச்சனையையும் விளைவிக்காமல் இருக்கும்.

ஸ்ட்ராபெர்ரி-thamil.co.ukசெம்புற்றுப்பழம் ஸ்ட்ராபெர்ரி strawberry
ஸ்ட்ராபெர்ரியும் ஒரு இயற்கை வயாகரா. அதிலும் இந்த இயற்கை வயாகராவை ஆண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் சக்தியானது அதிகரிக்கும். அதிலும் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடும் 1 மணிநேரத்திற்கு முன், இதனை சாப்பிட்டால், நன்கு செயல்பட முடியும்.

கோஜி பெர்ரிகோஜி பெர்ரி goji berry
பாலுணர்வைத் தூண்டும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் கோஜி பெர்ரி. இந்த பழத்தில் மற்ற பழங்களை விட அதிக அளவில் பீட்டா கரோட்டீன்  beta carotene உள்ளது. இதனால் இது ஆண்மை இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் பழங்களில் மிகவும் சிறந்தவையாக கருதப்படுகிறது.

கிவி-thamil.co.ukகிவி kiwi பசலிப்பழம்
கிவி பழத்தில் அர்ஜினைன் arginine என்னும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் அமினோ அமிலம் உள்ளது. இவை இரத்த அழுத்தத்தைக் குறைப்பதுடன், ஆண்குறிக்கு இரத்தம் செல்வதை அதிகரிக்கும்.

-இயற்கை வைத்தியம்