வியர்வை எவ்வாறு வருகிறது

வியர்வை எவ்வாறு வருகிறது

மனித உடலில் கிட்டத்தட்ட நாற்பது லட்சம் வியர்வை சுரப்பிகள் உள்ளன. இவை சருமத்தின் அடிப்பகுதியில் கானப்படும். இந்த சுரப்பிகள் உடலின் நிலையையும் வெளிப்புற தட்பவெப்பத்தையும் பொறுத்து சுரக்கும். உடல் வளர்ச்சி அடையும் பருவங்களில் வியர்வை நாற்றம் அதிகமாக இருக்கும். தோலில் தினம் தினம் ஆயிரக்கணக்கான பழைய செல்கள் இறந்து புதிய செல்கள் வளர்கின்றன. இறந்த பழைய செல்கள் தோலோடு இருந்தால் அவை வாடை அடிக்கும்.

இதனால் உடலில் வியர்வை என்பது இயற்கையானதே. உண்மையில் தூய்மையான உடலில் இருந்து வரும் வியர்வையில் நாற்றம் அதிகம் இருக்காது. ஆனால் உடலில் ஏதாவது நோய் இருந்தாலும், உணவு ஜீரணம் சரியாக இல்லாவிட்டாலும், மலஜலம் சரியாக வெளியேறாமல் இருந்தாலும் வரக்கூடிய வியர்வையில் நாற்றம் அதிகம் இருக்கும்.

குளிக்கும் முன் அரைமணி நேரத்திற்கு முன் ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து நசுக்கி அதன் சாறை உடலெங்கும் நன்றாக தேய்த்து விட்டு காத்திருக்கவும். அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். இவ்வாறு தினம் செய்து வாருங்கள். இவ்வாறு குளிக்கும் போது சோப்பு தேவையில்லை. சோப்பு அழுக்கை மட்டுமல்ல எலுமிச்சையின் சக்தியையும் நீக்கிவிடும். இவ்வாறு எலுமிச்சை சாறு தேய்த்து குளித்து வந்தால் உடல் நாற்றம் நாளடைவில் நீங்க ஆரம்பிக்கும். எலுமிச்சை சாற்றை தலையிலும் தேய்க்கலாம். எந்த கெடுதலும் இல்லை.

ஜவ்வாது என்ற ஒரு பொருள் நாட்டு மருந்து கடைகளிலும் காதிகிராஃட் கடைகளிலும் கிடைக்கும். அதில் மிகவும் சிறிய அளவு எடுத்து நீர்வி்ட்டு குழைத்து தேகத்திலும் உள்ளே ஆடையிலும் தடவி விட்டால் வியர்வை நாற்றம் வந்தாலும் ஜவ்வாது வாசனையில் நாற்றம் தெரியாது. இது மிகப்பண்டைய நாற்றம் போக்கும் வாசனை முறை.

மாதத்திற்கு ஒரு நாளாவது வெறும் பழங்களையும் நீர் ஆகாரத்தையும் மட்டும் உண்டு பழகவும். இதனால் உடல் உணவுப்பாதை சுத்தமாகும். சளி இல்லாதவர்கள் உணவில் மோர் தயிர் அதிகம் சேர்க்கவும்.

சாதாரண நீர் அருந்துவதை விட சிறிது சீரகம் போட்டு சூடாக்கி ஆற வைத்தோ அல்லது சிறிது துளசி இலை போட்டு வைத்த குளிர்ந்த நீரையோ அருந்துவது மிகவும் நல்லது.

வியர்வை மிக அதிகமாக இருந்தால் தினம் இருமுறை குளிப்பதை வழக்கமாக கொள்ளவும். பல ஊர்களில் வாரம் ஒருமுறை மட்டுமே தலைக்கு குளிக்கும் பழக்கம் உள்ளது. இது மிகவும் தவறு. நமது நாடு வெப்ப மண்டல மத்திய பகுதியில் இருப்பதால் தினமும் தலைக்கு குளிப்பது மிக நல்லது.
குளிப்பதோடு பழைய உடைகளை மாற்றிவிட்டு தூய்மையான புது உடைகளை போட்டுக்கொள்ளவும்.

சாதாரண சோப்பை நிறுத்திவிட்டு மெடிமிக்ஸ், டெட்மசால் (மருந்து கடைகளில் கிடைக்கும்) போன்ற ஆண்றி பாக்ரீரியல் சோப்புகளை மட்டும் கொஞ்ச காலத்திற்கு பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

கடைசியாக நீங்கள் புகைபிடிக்கும் பழக்கம் உடைய ஆளாக இருந்தால் அதை உடனடியாக நிறுத்துங்கள்.

அடிக்கடி நீண்ட நேரம் குளிந்த நீரில் குளித்து உடல் சூட்டை தணிக்க முயலவும். வீட்டில் குளிப்பதை விட ஆறு, குளம், கடல் அருவி இவைகளில் குளிக்கும் போது இயற்கையாகவே உடல் சீக்கிரமாக தணிய ஆரம்பிக்கும்.

FBபிணி இல்லா பெருவாழ்வுக்கான உணவுமுறைகளும்,உடற்பயிற்சிகளும்.