கண்ணில் பிரஸர் குளுக்கோமா

குளுக்கோமா1-thamil.co.ukபார்வை பறிபோகும் குளுக்கோமா Glucoma உங்களுக்கும் மறைந்திருக்குமா?

காரிருளில் சப்தமின்றி கன்னமிடும் திருடன் போல நோயாளிக்கு எந்தவித அசுமிசமும் காட்டாது படிப்படியாகப் பார்வையைப் பறிப்பதுதான் குளுக்கோமா நோயாகும்.

உலகளாவிய ரீதியில் கண்பார்வை இழப்பிற்கு இரண்டாவது முக்கிய காரணம் குளுக்கோமாதான். முதற் காரணம் வெண் புரை என்று சொல்லப்படும் கற்றரக்ட் cataract ஆகும்.

கற்றரக்ட்டால் ஏற்படும் பார்வை இழப்பை சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். ஆனால் குளுக்கோமாவின் பார்வை இழப்பு மாற்ற முடியாதது ஆகும்.

இது கண்ணின் பார்வையைக் கொடுக்கும் பார்வை நரம்பைப் (optic nerve) பாதிப்பதால் பார்வை இழப்பைக் கொண்டு வருகிறது. நரம்பைப் பாதிப்பதால் பார்வை இழந்தால் அதை சிகிச்சைகள் மூலம் திரும்பக் கொண்டுவருவது இயலாத காரியமாகும்.

கண்ணில் உள்ள நுண்ணிய வடிகால் குழாய்கள் சற்று தடைபடுவதால் கண்ணின் திரவமான அக்வஸ் கியூமர் (aqueous humour) தேங்குகிறது.

இதனால் கண்ணினுள் உள்ள திரவத்தி்ன அழுத்தம் (fluid pressure) அதிகரிக்கிறது. இந்த அழுத்தத்தை கண் பிரஷர் (Intraocular pressure) என்பர்.

ஆரம்ப நிலைகளில் வெளிப்படையான எந்த அறிகுறிகளும் இல்லாதிருப்பதே இதன் மிக ஆபத்தான அம்சமாகும்.

எனவேதான் இந்த நோயைக் கண்டு பிடிப்பதற்கு ஒழுங்கான கண் மருத்துவப் பரிசோதனை அவசியமாகிறது. இந்நோய் வருவதற்கான சாத்தியம் உள்ளவர்கள் குறைந்தது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கண் மருத்துவப் பரிசோதனை செய்வது அவசியமாகும்.

யாருக்கு குளுக்கோமாவிற்கான கண்பரிசோதனை அவசியம்

பரம்பரையில் குளுக்கோமா நோய் உள்ளவர்கள்
அதே போல 45 வயதிற்கு மேல் சாத்தியம் மிக அதிகம்.
வெள்யைர்களைவிட கறுப்பு இனத்தவரிடையே அதிகம்.
நீரிழிவு இருந்தாலும் வாய்ப்பு அதிகம்.
ஸ்டிரோயிட் வகை மருந்துகளை மாத்திரைகளாக, ஊசியாக அல்லது கண்துளிகளாக அதிகம் உபயோகித்தவர்களுக்கும்.
கண்ணில் ஏதாவது அடிகாயங்கள் ஏற்பட்டிருந்தாலும் வாய்ப்பு அதிகம்.
ஆரம்பத்தில் கண்டு பிடித்தால் கண்ணுக்குள் விடும் துளி மருந்துகளுடன் நோய் மோசமாவதைத் தடுக்க முடியும்.

கடுமையான பாதிப்பு ஏற்படுமாயின் சத்திர சிகிச்சை, லேஸர் சிகிச்சை போன்றவை தேவைப்படும்.

கண்ணில் பிரஸர் குளுக்கோமா Glucoma

பிரஸர் என்பது உயர்இரத்த அழுத்தம். இது பற்றி எல்லோருக்கும் தெரியும். ஐ(கண்) பிரஸர் பற்றி அப்படியல்ல.

ஐ(கண்) பிரஸர் என்று பலரும் சொல்லுவது குளுக்கோமா (Glucoma) என்ற நோயைத்தான். பொதுவாக கண்ணினுள்ள திரவத்தின் அழுத்தம் (பிரஸர்) 21 mm Hg ற்குள் இருக்க வேண்டும். அதற்கு மேலே அதிகரிக்கும்போது அந்த அழுத்தமானது பார்வை நரம்பைப் (Optic Nerve) பாதிக்கிறது.

கண்ணினுள் அழுத்தம் அதிகரிப்பதே குளுக்கோமா நோய்க்கு முக்கிய காரணமாக இருந்த போதும் இதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இது அமைதியாக ஆர்ப்பாட்டமின்றி, நோயாளி தனது பார்வை பறிபோகின்னறது என்பதை நோயாளி உணராமலே அவரது பார்வையைப் பறிக்கின்ற ஒரு ஆபத்தான நோயாகும்.

பார்வை நரம்பு பாதிப்புறவதால் பார்க்கும் திறன் பாதிக்கப்பட்டு படிப்படியாக அதிகரித்து முழுமையாகக் குருடாக்கும்.

பார்வை நரம்பு என்பது நாம் பார்க்கும்போது எமது விழித்திரையில் விழுகின்ற விம்பங்களை மூளைக்குக் கடத்துகின்ற நரம்பாகும். நரம்பு என ஒருமையில் சொல்லப்பட்டபோதும் இது ஒரு மில்லியனுக்கு அதிகமான நுண்ணிய பார்வை நாரம்புகளைக் (Optic Fibers) கொண்டதாகும்.

குளுக்கோமாவில் பல வகைகள் இருந்தாலும் மிக அதிகமானது திறந்த கோண குளுக்கோமா (Open angle Glucoma) தான்.

யாருக்கு வரும்

நெருங்கிய குடும்பத்திரிடையே இருந்திருந்தால் வருவதற்கான சாத்தியம் அதிகம்.
அதேபோல 45 வயதிற்கு மேல் சாத்தியம் மிக அதிகம்.
வெள்யைர்களைவிட கறுப்பு இனத்தவரிடையே அதிகம்.
நீரிழிவு இருந்தாலும் வாய்ப்பு அதிகம்.
ஸ்டிரோயிட் வகை மருந்துகளை மாத்திரைகளாக, ஊசியாக அல்லது கண்துளிகளாக அதிகம் உபயோகித்தவர்களுக்கும்.
கண்ணில் ஏதாவது அடிகாயங்கள் ஏற்பட்டிருந்தாலும் வாய்ப்பு அதிகம்.
அறிகுறிகள் படிப்படியாக நீண்ட காலத்தில் ஏற்படுவதால் நோயாளி அதை உணர்ந்து கொள்ள மாட்டார். அதுவும் இப்பார்வை இழப்பானது வெளிப்புறத்தில் (Side Vision) ஏற்படுவதால் உணர்ந்து கொள்வது கடினம்.

குளுக்கோமா-thamil.co.ukபக்கப் பார்வை இழப்பு எனச் சொல்லாம்.

அதாவது நீங்கள் நேரே கணனியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது பக்கவாட்டில் ஏதாவது அசைந்தால் கூட அந்த அசைவை உங்களால் காண முடியும்.

ஆனால் குளுக்கோமா நோயாளிகளுக்கு அவரது பார்வையின் பரப்பானது வெளிப்புறத்திலிருந்து குறைந்து கொண்டு வரும். ஆனால் நேர் பார்வை வழமைபோல தெளிவாக இருக்கும்.

இதனால்தான் அவருக்கு தனது பார்வை இழப்பை உணர்ந்து கொள்ள முடியாதிருக்கிறது.

இதனைக் கவனிக்காது விட்டால் பார்வை மேலும் குறைந்து வரும். சிலகாலத்தின் பின்னர் ஒரு குழாயினூடாகப் பார்ப்பது போல நேரே இருப்பவை மட்டுமே தெரியும். இறுதியில் முழுப் பார்வையும் பறிபோகும் அவலம் நேரும்

தடுப்பது எப்படி?

நோயின் தாக்கம் பார்வையில் சேதத்தை ஏற்படுவதற்கு முன்னரே நோயைக் கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையைச் செய்வதுதான் ஒரே வழி.

கண் மருத்துவரிடம்

இந்நோய் வரக் கூடிய சாத்திய உள்ளவர்கள் கண் மருத்துவரை அணுகி தமது கண்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது பாதிப்பு இல்லாவிட்டாலும் அவர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது கண் மருத்துவரிடம் போவது அவசியம்.

கண்ணில் பார்வைக் குறைவு ஏற்பட்டால் நீங்களாக கடையில் மூக்குக் கண்ணாடி வாங்கி அணிவதைத் தவிர்க்க வேண்டும். அச் சந்தர்ப்பத்தை கண் மருத்துவரைச் சந்திப்பதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்துங்கள். அவர் உங்கள் கண்களின் உட்பகுதியை விசேடமான கருவிகள் மூலம் பரிசோதிக்கும்போது குளுக்கோமா ஆரம்ப நிலையில் இருந்தாலும் கண்டுபிடிக்க முடியும்.

1. ரோனோ மீற்றர் (Tonometer) என்ற கருவி உங்களது கண்ணினுள் இருக்கும் அழுத்தத்தை அளவிட உதவும்.
2. கண் பார்வையின் பரப்பை அளவிடும் (Visual field test) பரிசோதனை இது உங்கள் பார்வையின் பரப்பளவில் பாதிப்பு ஏற்கனவே ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய உதவும்.
3. (Dilated eye Exam) இது கண்ணின் ஒளி புகும் பாதையை விரிவித்து அதனூடாக விழித்தரையையும், பார்வை சரம்பையும் பிம்பம் பெருக்குவிக்கும் கண்ணாடி ஊடாகப் பார்த்து அவற்றில் பாதிப்பு இருக்கிறதா எனக் கண்டறிவதாகும்.

சிகிச்சை: நோயின் நிலைக்கு ஏற்ப சிகிச்சை முறைகளில் மாற்றம் ஏற்படலாம்.

1. துளி மருந்துகள்
அதிகமானோருக்கு இவை மட்டுமே கண்ணின் பிரசரைக் குறைத்து, பார்வை பறிபோகாமல் தடுப்பதற்குப் போதுமானது. பிரஸர் சரியான நிலைக்கு வந்தாலும் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும். தினமும் ஒரு முறை உபயோகிக்கும் மருந்துகள் உள்ளன. பலமுறை விட வேண்டியவையும் உண்டு. இது அவரவர் நோயின் தன்மையைப் பொறுத்தது. அவற்றை மருத்துவர் கூறுவதுபோல சரியான முறையில் கண்ணில் சரியான நேர இடைவெளிகளில் விட வேண்டும்.
2. மாத்திரைகள்
தனியாக துளி மருந்துகளை உபயோகித்து கண் பிரசரைக் குறைக்க முடியாவிட்டால் மாத்திரைகளும் தேவைப்படலாம்.
3. சத்திர சிகிச்சை
இப்பொழுது லேசர் முறையிலேயே பெரும்பாலும் செய்யப்படுகிறது. கண்ணில் மேலதிகமாக நீர் தேங்காது தடுத்து கண் பிரசரைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.

குளூக்கோமா ஏற்படுவதற்கு மரபணுக்களும் காரணம்

குளூகோமா என்பது, கண்களில் அழுத்தம் காரணமாக, “ஆப்டிக் நரம்பு’ பாதிக்கப்படுவதாகும். இதில், நரம்பு விரிவடைவதுடன், கண் பார்வை திறனும் குறையும். குளூகோமாவில் கண்களின் அழுத்தம் அதிகமாக இருக்கும். சாதாரணமாக இருக்கும் கண்களில் அழுத்தம் 11 முதல் 21 ட்ட்ஏஞ் வரை இருக்கும். ஆனால், குளூகோமா வந்துவிட்டால், கண் அழுத்தம் அதிகம் ஏறும். கண் பார்வை குறைவதால் கண் வலி, ஒரு பகுதியில் பார்வை மங்குதல் ஆகிய பிரச்னைகள் வரும். கண் வலியுடன் சிவப்பாக மாறுதலும் வரலாம்.

சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், இதய நோய் ஆகிய உடல் பிரச்னைகள் உடையோருக்கு, குளூகோமா வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பெரும்பாலும் 50 வயது மேல் உள்ளவர்களுக்கு வரும். கண்களில் ஏற்படும் பிரச்னைக்கு, “ஸ்டிராய்டு’ மருந்து அதிகமாக பயன்படுத்தினாலும், குளூகோமா வரலாம். பெற்றோருக்கோ அல்லது சகோதரர்களுக்கோ குளூகோமா இருந்தால், பரம்பரை நோயாகவும் இது வரும். முதலில் கண் பார்வை குறைபாடு இருக்காமல், கண்களில் அழுத்தம் மட்டும் அதிகம் இருக்கலாம். மேலும், நரம்பின் சில பகுதிகள் செயல்பாட்டை இழக்கும். இதன் காரணமாக, பார்வை மெதுவாக குறைய துவங்கும்.

நரம்பின் எல்லா பகுதியும் செயல்பாட்டை இழக்கும் நிலையில், கண் பார்வை முழுவதுமாக குறையும். எனவே, இதை முதலிலேயே கண்டுபிடித்து, தகுந்த சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். இப்பிரச்னைகள் யாருக்கு இருந்தாலும், அவர்கள் கண் பார்வை, கண் அழுத்தம், நரம்பு பகுதி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும், கண்களின், “ஆப்டிக்’ நரம்பின் நிலையை மருத்துவர்கள் பரிசோதித்து குளூகோமா இருக்கிறதா என்று தீர்மானிப்பர். கண் அழுத்தம் இருந்தால், சொட்டு மருந்துகள் மூலம் முதல் நிலையிலேயே சரி செய்யலாம். சொட்டு மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியாத நிலையில், அறுவை சிகிச்சை செய்யப்படும். குளூகோமாவின் ஒரு வகையில், லேசர் சிகிச்சையும் தரப்படும்.

குளூகோமா நோயை முதலிலேயே கண்டறிந்து, சிகிச்சை பெற வேண்டும். முற்றிய நிலையில் சிகிச்சை செய்தாலும் பலன் முழுவதுமாக கிடைப்பதில்லை. இதற்கு, “ஆப்டிக்’ நரம்பின் தன்மையே காரணம். ஒருமுறை, “ஆப்டிக்’ நரம்பின் பகுதி செயல் இழந்து விட்டால், அது மீண்டும் சரி செய்யப்பட முடிவதில்லை. எனவே, முதல் நிலை குளூகோமா சிகிச்சை பெரிதும் உதவும். குளூகோமா அறுவை சிகிச்சை, 15 முதல் 20 நிமிடங்களில் முடிந்து விடும். மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. இருப்பினும், சொட்டு மருந்துகளும், மாத்திரையும் சரியாக பின்பற்ற வேண்டும். நோயின் தன்மையை பொறுத்து, ஒரு மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை குளூகோமா நிபுணர்களிடம் கண்களை பரிசோதித்து கொள்ள வேண்டும்.

பிறந்த குழந்தைக்கும் குளூகோமா நோய் வரலாம். இதை, “கன்ஜெனிடல் குளூகோமா’ என்பர். கண்களின் கருவிழி பெரிதாக இருக்கும். கண்களும் பெரிதாக இருக்கும். கருவிழியில் வெள்ளை நிறம் படிதல், நீர் வடிதல் ஆகிய மாற்றங்கள் ஏற்படும். இவ்வாறு இருந்தால், குழந்தையை அருகில் உள்ள கண் மருத்துவமனையில் உடனே காண்பிக்க வேண்டும். சிறுவயதில் குளூகோமா பிரச்னை வந்தால், அது பார்வையை அதிவேகத்தில் பாதிக்கும். சரியான கண் அழுத்தம் உள்ளவர்களுக்கும், குளூகோமா வரலாம். இதை, “நார்மல் டென்ஷன் குளூகோமா’ என்பர். இதற்கும் சிகிச்சைப் பெற வேண்டும்.

இப்போதுள்ள நவீன ஓ.சி.டி., – ஸ்வாப், பில்டி டெஸ்ட் போன்ற பரிசோதனைகள் மூலம் கண்களின், “ஆப்டிக் நரம்பு’ எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்று விரிவாக தெரிந்து கொள்ளலாம். இந்த பரிசோதனைகள் ஓ.பி.டி., முறையில் செய்யப்படும். அறுவை சிகிச்சைக்கு முன்னும், பின்னும் சிகிச்சை வேலை செய்கிறதா, இல்லையா என்பதை கண்டறியவும் இதை பயன்படுத்தலாம்.

குளூகோமா நோய் முதலிலேயே அறியவும், இந்த வகை பரிசோதனைகள் பயன்படும். குளூகோமா நோய் முழுமையாக வருமுன், பரிசோதனை செய்து சிகிச்சையை துவங்க, இந்த வகை பரிசோதனை முறைகள் உறுதுணையாக இருக்கின்றன.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.