ஊமத்தை

வெள்ளை ஊமத்தை-thamil.co.ukமூலிகையின் பெயர்–  ஊமத்தை
தாவரப்பெயர் – DATURA METEL.
தாவரக்குடும்பம் – SOLANACEAE.
வகைகள் – வெள்ளை ஊமத்தை, கருஊமத்தை, பொன்னூமத்தை எனும் வகைப்படும்.
வேறுபெயர்கள் – ஊமத்தம் உன்மத்தம், இந்தியம் டாட்யூரா, துர்த்தா, கனகா ஆகியவை.

வளரும் தன்மை- எல்லா வகை நிலங்களும் ஏற்றது.வளர்ச்சுயைத் தாங்கி வளரும்.பற்களுள்ள அகன்ற இலைகளையும், வாயகன்ற நீண்ட குழலுமான புனல் வடிவ மவர்களையும் முள்நிறைந்த காயையும் உடைய குறுஞ்செடிகள். மலர்கள் வெள்ளை, மஞ்சள், கருஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். இவை விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது. நட்ட ஒரு மாதத்தில் பூக்கள் விட ஆரம்பிக்கும். கருஊமத்தையே மருத்துவக் குணம் மிக்கதாகக் கருதப்படுகிறது.

கருஊமத்தை-thamil.co.ukபயன்தரும் பாகங்கள்– செடியின் எல்லா பாகங்களும் மருத்துவ பயனுடையவை.

பயன்கள் – பொதுவாக நோய்தணிப்பானாகவும், சிறப்பாக இசிவு நோய் தணிப்பானாப்பானகவும் செயற்படும். அறுவை சிகிச்சைக்கும் மகப்பேறுக்கு மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது.

இலையை நல்லெண்ணெயில் வதக்கி, இதமான சூட்டில் ஒத்தடமாகக் கொடுத்து, கட்டி வந்தால் வாதவலி, மூட்டுவலி, வாயுக்கட்டிகள், அகண்ட வாயு, தாய்ப்பால் கட்டிக்கொண்டால் மார்பகங்களில் ஏற்படும் வலி ஆகியவை குறையும்.

இலையைக் காயவைத்து பொடியாக்கி குண்டுமணி அளவு தேனில் கொடுத்தால் சுவாசகாசம் குணமாகும்.

இலையை நீர் விடாது அரைத்து நல்லெண்ணெயில் வதக்கி நாய்கடிப் புண்ணில்கட்ட ஆறும். மூன்று துளிச் சாறு வெல்லம் கலந்து காலை, மாலை 3 நாள் மட்டும் கொடுக்க நஞ்சு தீரும். கடும் பத்தியம்- புளியை நீக்கி, பகலில் தயிர் சோறும் இரவில் பால் சோறும் உப்பில்லாமல் சாப்பிடவும்.பொன்னூமத்தை-thamil.co.uk

இலைச் சாற்றுடன், அதே அளவு தேங்காய் எண்ணெயும் கலந்து பதமாகக் காய்ச்சிய பிறகு, சிறிதளவு மயில் துத்தம் தூளாக்கி போட்டு வடிகட்டிய பின் மேலாக பூசி வந்தால் புரையோடிய புண், சதை வளரும் புண், ஆறாதபுண் எனும் புண் பிளவையும் கூட குணமாக்கும்.

இலையுடன், சம அளவு அரிசி மாவு சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து களிபோலக் கிளறி, இதமான சூட்டில் பற்று போல போட்டு வந்தால், மூட்டு வீக்கம், வலியுள்ள கட்டிகள், வெளிமூலம் போன்றவை குணமாகும்.

இலைச்சாற்றுடன் சமன் நல்லெண்ணெய் கலந்துகாச்சி, இளஞ்சூட்டில் 2-3 துளி காதில் விடச்சீதளத்தால் வந்த காது வலிதீரும்.

இலை, பூ, விதை, மூன்றையும் பிட்டவியலாக்கி அவித்து உலரவைத்து, ஒன்றிரண்டாக இடித்து அதில் சிறிது அளவு ஒரு இலையில் வைத்து சுருட்டாக்கி புகைத்தால் மூச்சுத் திணறல் குணமாகும்.

ஊமத்தை மயக்கத்தை உண்டாக்கும். விடத்தன்மையுடையது. இதன் விடம் முறிய தாமரைக்கிழங்கை அரைத்து பாலில் இருவேளை மூன்று நாள் கொடுக்கலாம். இக்காய் பில்லி, சூன்யம் ஆகியவற்றை அகற்றும், முறிக்கும்.

சித்தம் பிரமை- ஊமத்தம் பூவை இரவு தண்ணீரில்போட்டு ஊறவைக்கவும். மறு நாள் காலை தலைக்குத் தேய்த்துக் குளிக்க வைக்கவும். 5-7 நாள் இவ்வாறு குளிக்க வைத்தால் இந்தப் பிரமை உன்மத்தம், பைத்தியம் குணமாகி விடும்.

பேய்குணம்- இதன் காய்,விதையும், மருதாணிப் பூவும், உலர்த்திய தூள் புகைக்க பேய் குணம் விலகும்.

பொன்னூமத்தை1-thamil.co.ukகாய் : வாதநோய், கரப்பான், கிரந்தி, சொறி நீக்கும். பித்த மயக்கத்தை உண்டாக்கும்.

பிஞ்சு : இதன் பிஞ்சை எச்சிலில் அரைத்துத் தடவி வர புழுவெட்டு தீரும்.

ஊமத்தைப் பிஞ்சை அவரவர் உமிழ் நீரில் மையாய் அரைத்துத் தடவ புழுவெட்டு தீரும், புழு இறந்து முடி வளரும்.

விதை : இதன் விதையை நெய்யில் அரைத்து மூல முளையில் பூசி வந்தால் குணமாகும்.

50 கிராம் அளவு விதையை ஒன்றிரண்டாய் இடித்து சுமார் 400 மிலி அளவு நல்லெண்ணெயில் இட்டு 7 நாட்கள் பொறுத்து அரைத்து, வெயிலில் வைத்து வடிகட்டி வைத்திருந்து, அடிவயிற்றில் தடவி வந்தால் சூதக வயிற்று வலியும், நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். கன்னம், முகம், காது என அனைத்து பகுதிகளிலும் ஏற்படும் குடைச்சல் நோய்க்கு தடவி வந்தால் குணமாகும்.

வேர் : விதை மற்றும் வேர் வயிற்றுப் போக்கை தடுக்கிறது. காய்ச்சலைப் போக்கி, கிருமிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது. தனது நிலையை மறந்தவர்களுக்கு மருந்தாகிறது. தோல் வியாதிகளைப் போக்குகிறது

ஆச்சார்யர் சரகர் இந்த ஊமத்தையை விஷ சிகிச்சையிலும் தோல் வியாதி சிகிச்சையிலும் கூறுகிறார் .  ஆசார்யர் சுஸ்ருதர் முக்கியமாக அலர்க விஷம் என்னும் -நாயகடியால் ஏற்படும் ரேபிஸ் நோயில் கூறுகிறார் . ஹிரித சம்ஹிதையில் மூல நோய்க்கான சிகிச்சையில் கூறுகிறார் .

பயன்பாடுகளில் -ஜ்வரம், தோல் நோய்கள், புண், அரிப்பு, கிருமி, விஷ ரோகம், நீர் கடுப்பு.

நாய் கடிகளில் (அலர்க்க விஷம் ) – ஊமத்தை , வெள்ளை சாரணை வேர் இரண்டும் சேர்ந்து நாய்கடி விஷத்தை போக்கும்.

கிருமி – ஊமத்தை இலை சாறு சூடேற்றி தேய்க்கும் போது பேன், ஈறு தொல்லை நீங்கும்.

பிடக ஆமாய – வேனல் கட்டிகளில் – வல்லாரை இலை சாறு+ஊமத்தை வேர் -வேனல் கட்டிகளுக்கு, கட்டிகளை கரைக்க வெளிப் பிரயோகமாக உதவும்.

மருந்து கடைகளில் கிடைக்கும் மருந்துகளில் – கனகாசவம், சூத சேகர ரசம், மகா விஷ கர்ப்ப தைலம், உன்மத்த ரசம்.

ஆஸ்மா குணமாக -கனகாசவம் உதவும்.

அட்ரோபின் என்னும் ஆங்கில மருந்துக்கு இது தாய்- தற்கொலைக்கு விஷம் சாபிட்டவர்களின் உயிர்களை இந்த அட்ரோபின் காப்பாற்றியுள்ளது எனவே -ஆயுர்வேத சித்த மருந்தில் குறிப்பிட்டது போல் விஷ வைத்தியத்தில் உதவுகிறது.

அட்ரோபின் கண்ணின் விழிபார்வையை விரிக்க உதவும். இந்த கண் சொட்டு மருந்து இல்லாமல் கண் விழித்திரையை எந்த கண் மருத்துவரும் பார்க்கமுடியாது.


பொன்னூமத்தை2-thamil.co.ukபொன்னூமத்தை மூலிகை மருத்துவம் – ரசவாதமும் -மிருக வசியம்.

சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் போன்றோர் காடுகளிலும், மலைகளிலும், வனங்களிலும் குடில் அமைத்தும், குகைகளிலும் தவம் இயற்றி வாழ்ந்து வரும் காலங்களில் கொடிய மிருகங்கள் மற்றும் விஷ ஜந்துக்களின் இடர்பாடுகளில் இருந்து காத்துக் கொள்ள, கட்டுக்குள் கொண்டு வர பல அதிசய மூலிகைகளையும், சூட்சும மந்திரங்களையும் கையாண்டு வந்துள்ளனர்.

அவைகளில் ஒன்றுதான் “பொன் ஊமத்தை” என்ற மூலிகை ஆகும். இம் மூலிகையைப் பற்றிய அகத்தியர் பெருமான் பாடல்…

காணவே பொன்னி னூமத்தை மூலி
கருவான மூலியடா கந்தர் மூலி
பாணமாம் பச்சையது தழையினாலே
பாருலகில் சொர்ணமதைக் காணலாகும்
தோணவே சாரதனைப் பிழிந்துமல்லோ
தோராமல் ரவிதனிலே காயவைத்து
மாணவே செம்புருக்கி கிராசமீய
மன்னவனே பசுமையடா தங்கந்தானே

தங்கமா மூலியது தழைதானாகும்
சாங்கமுடன் சொர்ணமென்ற பீசமாகும்
சிங்கமதைத் தான்மயக்குந் தழை தானாகும்
புகழான காயாதி இதற்கொவ்வாது
எங்கேனுந் தேடியுழைந் தலைந்திட்டாலும்
என்மகனே விதியாளி காண்பான் தானே

காண்பானே தழையினது மகிமையாலே
காவனத்தில் வசிக்கின்ற மிருகமெல்லாம்
ஆண்பான மதமடங்கி தன்முன்னாக
அப்பனே எதிர் வணங்கி பணியும் பாரு
சாண் பாம்பே யானாலு முந்தனுக்கு
சட்டமுடன் ஏவலுக்கு முன்னாய் நின்று
வீண்பாக முறையாம லடிவணங்கி
வித்தகனே முறைபாடாய் நடக்கும் பாரே

இந்த அதிசய பொன்னூமத்தை மூலிகை கந்தர் முருகனின் மூலிகை ஆகும். இம்மூலிகையால் ரசவாதம் செய்யலாம். இம்மூலிகையை இடித்து பிழிந்து சாறெடுத்து ரவி என்ற வெயிலில் காயவிடவும். பின்பு தாமிரம் என்ற செம்பை உருக்கி இதில் சாய்க்க வேண்டும்.

இந்த செம்பை மீண்டும் உருக்கி சாய்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் புதுச்சாறு ஊற்ற வேண்டும். இதுபோல் பதினொரு முறை உருக்கி சாய்க்க பசுமையான தங்கமாகும்.

இம் மூலிகையின் வாசனையால் சிங்கம் மயங்கும், யானை முதல் அனைத்து மிருகங்களும் வசியமாகும். எதிர் வந்தாலும் அடிவணங்கி பணியும். பாம்பு போன்ற ஜந்துக்கள் நம் சொல்லுக்கு கட்டுப்படும்.

-தமிழ் தந்த சித்தர்கள்